அத்தியாயம் –37

 

 

“சொல்லுங்க…” என்றவள் அவன் மீது சலுகையாய் சாய்ந்திருந்தாள்.

 

 

“என்ன சொல்லணும் சொல்லு??” என்றவன் அவள் கன்னத்தோடு கன்னம் வைத்து இழைந்தவாறே கேட்டான்.

 

 

“கொஞ்சம் தள்ளிப்போங்க…” என்றவள் கொஞ்சம் விலகி “இப்போ சொல்லுங்க… என்கிட்ட ஏன் சொல்லவே இல்லைன்னு சொல்லுங்க??”

 

 

“இப்படிதள்ளிப்போனா எல்லாம் என்னால பதில் சொல்ல முடியாது” என்று சண்டித்தனம் செய்தான் அவன்.

 

 

“நீங்கபேசிகிட்டு இருக்கும் போது சும்மாவே இருக்க மாட்டேங்குறீங்க” என்று குறை படித்தாள் அவள்.

 

 

“புருஷன்னா அப்படி இப்படின்னு கையை போடத்தான் செய்வான்” என்று தொடர்ந்தான்.

 

 

மனோபாரதி எதுவும் சொல்லாமல் அவனை சற்று நெருங்கி உட்கார்ந்தாள். “இது சரியா வராது, இன்னும்” என்று அவன் கூறவும் அவனை இடித்துக் கொண்டு அமர்ந்தாள்.

“இதுவும் பத்தலை இன்னும்…” என்றான்

 

 

“இதுக்கு மேலன்னா நான் உங்க மடி மேல தான் ஏறி உட்காரணும்” என்றுசந்தோசமாய் சலித்தாள் அவன் குறும்புத்தனம் கண்டு.

 

 

“வை நாட்!! ஐ டோன்ட் ஹாவ் எனி ஆப்ஜெச்ஷன்!!” என்றவன் இரு கைகளையும் விரித்துக்கொண்டு அவன் மடியில் அமருமாறு கூற “எனக்கென்ன உங்களுக்கு தான் வலிக்கும்” என்றுவிட்டு சந்தோசமாய் அவன் மடியில் அமர்ந்தவளை இறுக அணைத்துக் கொண்டான்.

 

 

“இப்போவாச்சும் சொல்லுங்களேன்…” என்றாள்.

 

 

“சரி சொல்றேன்…” என்றவன்“நான்தான் பார்த்த மாப்பிள்ளைன்னு சொல்லியிருந்தா அப்போ நீ அதைநம்பி இருப்பியா??” என்றான் அவள் முகத்தை திருப்பி அவன் கண்களை நோக்கியவாறே.

 

 

“தெரியாது??” என்று மறைக்காமல் சொன்னாள்.

 

 

“உன்கிட்ட சொல்லக் கூடாதுன்னு எல்லாம்நான் நினைக்கலை ரதி. உங்கப்பாகிட்ட நான் சொன்னது இது தான் உனக்கு பிடிச்சா தான் நீ சரின்னு சொன்னா தான் நடக்கும்ன்னு சொன்னேன்”

 

 

“அதான் நான் நீங்க என்கிட்ட என்னை கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேட்டப்போ சரின்னு சொன்னேன்ல… அதுக்கு அப்புறமாச்சும் சொல்லியிருக்கலாமே!!”

 

 

“அதுக்கு கொஞ்ச நாள் முன்னாடி நீ பண்ணது எல்லாம் மறந்து போச்சா உனக்கு…”

 

 

“என்ன பண்ணேன் நானு??”

 

 

“எங்கப்பா பார்த்த மாப்பிள்ளைன்னு நீ யாரை சொன்னே!! அப்படி ஒரு நிலைமையில அது நான்னு வேற உன்கிட்ட சொல்லணுமா சொல்லு!! அப்படிசொல்லியிருந்தா தான் நீ நம்பியிருப்பியா!!”

 

 

“ஏன் சொல்லியிருக்க கூடாது?? சொல்லணும்ன்னா எப்படி வேணா நீங்க சொல்லியிருக்கலாம். நான் நம்புறனோ இல்லையோ நீங்க சொல்லியிருக்கலாம் தானே!!” என்றாள் குறையாய்.

 

 

“ஆனா இது மட்டும் காரணமில்லைநீங்க என்கிட்ட சொல்லாததுக்கு!! உண்மையை சொல்லுங்க வேற ஏதோ காரணம் இருக்கு தானே??” என்று தொடர்ந்து கேட்டவளை வியப்பாய் பார்த்தான்.

 

 

‘சரியாகத்தான் யோசிக்கிறாள்’ என்று எண்ணிக்கொண்டவன் அவளையே பார்க்க “இப்படிபார்த்திட்டே சொல்லாம விட்டிரலாம்ன்னு நினைக்காதீங்க… சொல்லுங்க…” என்றாள்.

 

 

“நீ நினைச்சது சரி தான்… உன்கிட்ட சொல்லாம விட்டதுக்கு வேற காரணமும் இருக்கு. அது என்னன்னு உன்னால புரிஞ்சுக்க முடியுதா??” என்றான் கேள்வியாய்.

 

 

“நான் ரொம்ப புத்திசாலி இல்லைன்னு நினைச்சு தானே எங்கப்பா என்னோட பொறுப்பை உங்ககிட்ட கொடுத்தார். சோ நீங்களே சொல்லுங்க” என்றாள்.

 

 

“ஹேய்… ஹேய்… உங்கப்பா ஒண்ணும் அப்படி எல்லாம் நினைச்சு இருக்க மாட்டார்… அவரை பொறுத்தவரை நீ குழந்தை அப்படி தான் நினைச்சிருப்பாரு உன்னை” என்று விளக்கம் கொடுத்தான்.

 

 

“அட ராமா எங்கப்பா பத்தி எனக்கு தெரியாதா… நீங்க சொல்லணுமா எனக்கு… எப்படி கேட்டாலும் வாயே திறக்க மாட்டேங்குறீங்களே!!” என்று குறைபட்டாள்.

 

 

“ஹா… ஹா…” என்று வாய்விட்டு சிரித்தவன் “சரி நானே சொல்றேன்… முதல்ல உங்கப்பா கேட்டப்போ சந்தோசமா பீல் பண்ணேன்”

 

 

“ஆனாஅவர் நினைக்கிற அளவுக்கு எனக்கு தகுதி இருக்கான்னு நினைச்சு தான் அவர்கிட்ட அன்னைக்கு அவ்வளவு மறுத்துபேசினேன்”

 

“கடைசியா உனக்குபிடிச்சா மட்டும் தான் எல்லாம்ன்னு சொன்னேன்…”

 

 

“அதை தான் அப்போவே சொல்லிட்டீங்களே!!”

 

 

“இரும்மா என்னை சொல்ல விடு!!” என்று அவன் கூற “சரி சரி சொல்லுங்க!!” என்றாள்.

 

 

“உங்கப்பா என்கிட்ட பேசின அடுத்த சில நாள்ல அவர் உயிரோட இல்லை… நான் அந்த சூழ்நிலையில இதை எப்படி உன்கிட்ட சொல்ல முடியும் சொல்லு”

 

 

“நீ துக்கத்துல இருக்கற நேரத்துல இதெல்லாம் பேச சரியான சந்தர்ப்பம் இல்லைன்னு தோணிச்சு.உன்னோட துக்கத்துல ஆதாயம் தேட எனக்கு விருப்பமுமில்லை”

 

 

“நீ நீயா இருக்கற நேரத்துல தான் அதை பத்தி பேசணும்ன்னு நினைச்சேன். அதுக்கு அப்புறம் நீ சரவணன் மாமா பத்தி என்கிட்ட சொன்னப்போ ரொம்ப கோவம் வந்துச்சு உன் மேல”

 

 

“உங்கப்பாக்கு பிடிச்ச மாப்பிள்ளைநான் தான்டின்னுசத்தம் போட்டு சொல்லணும் போல இருந்துச்சு”

 

 

“ஆனாலும் மனசுக்குள்ள ஒரு பயம் நான் சொல்றதை நீ நம்புவியா!! மாட்டியான்னு!! நான்எப்போ என்னபேசினாலும் நீ  தான் என்னை போட்டு தாக்குவியே!! அதனால வேற யோசிச்சேன்”

 

 

“எல்லாமும் விட நான் யாருன்னு தெரிஞ்சு உனக்கு என்னை பிடிக்கறதை விட தெரியாம பிடிக்கணும்ன்னு நினைச்சேன்”

 

 

“உங்கப்பா பார்த்த மாப்பிள்ளை அப்படிங்கறதுக்காக நீ என் கூட வாழ்ந்திருக்கலாம். ஆனா உனக்கு பிடிச்சு நாம வாழறது தானே முக்கியம் அதுக்காக தான் நான் காத்திருந்தேன்”

 

 

“உனக்கு என்னை பிடிக்கும்ன்னு தெரியும், ஆனா அதை எப்படி வெளிய கொண்டு வர்றதுன்னு தெரியாம தான் முழிச்சுட்டு இருந்தேன்”

 

 

“ஒரு துக்கத்துல இருந்து மீண்டு வந்திருக்கற உன்னை எந்தவிதத்துலயும் தொந்திரவு செய்யக் கூடாதுன்னு நினைச்சேன்”

 

 

“நாம ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க ஒரு நல்ல சந்தர்ப்பமா ஆஸ்திரேலியா பயணம் அமைஞ்சது”

 

 

“அங்க என்னால என்னை கண்ட்ரோல் பண்ணவே முடியலை. அதுவும் இல்லாம அன்னைக்கு லட்டு பாப்பா போல நமக்கும் ஒரு பாப்பா வேணும்ன்னு நீ கேட்டப்போ எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை”

 

“அதுக்கு அப்புறம் தான் நீயா என்கிட்ட நெருக்கம் காமிச்சே!! எல்லாகிரெடிட்டும் சான்ட்ராவுக்கே!!” என்று அவன் கண்ணடித்து சிரிக்கவும் “ஓ!! இன்னும் நீங்க அவளை மறக்கலையா!!” என்று முறைத்தாள் அவன் மனைவி.

 

 

“ஆமாடா ரதி சான்ட்ராவை என்னால மறக்க முடியலை!! அவ கொடுத்த முத்த… ஆ….ஆஆஆஆ…” என்று அவன் கூற அவளோ அவன் கன்னத்தை கடித்து வைக்க “ஏன்டி கன்னத்தை கடிக்கிற??”

 

 

“இனி அவ கொடுத்த முத்தம் பத்தி பேசினீங்க இப்படி தான் கடி வாங்குவீங்க!!”

 

 

“வர வர நீ மோசமாகிட்டே ரதிம்மா!! ஆஸ்திரேலியால இருக்க வரை நான் சான்ட்ரா முத்தம்ன்னு சொன்னாலே போதும் நீ நான் அதை மறக்கற அளவுக்கு முத்தம் கொடுப்பே!!”

 

 

“இதெல்லாம் சரியில்லை சொல்லிட்டேன்!! அப்புறம் சான்ட்ராக்கு டிக்கெட் போட்டு இங்க வரவைச்சுடுவேன் சொல்லிட்டேன் ஆமா” என்று அவன் சொல்லவும் “ஓ!! செய்வீங்க செய்வீங்க” என்றவள் மீண்டும் அவன் கன்னத்தை கடிக்க போக அதை லாவகமாய் தடுத்தவன் அவள் இதழ்களை தன் வசப்படுத்திக் கொண்டான்.

 

 

நீண்டதொருமுத்தம் கொடுத்தவன் தானாய் அவளை விடுவிக்க மனோபாரதி இப்போது அமைதியாகியிருந்தாள்.

 

 

“மேடம் அமைதியாகிட்டீங்க போல” என்று அவள் காதில் கிசுகிசுத்தான்.

 

 

“அவ்வளவு சீக்கிரம் எல்லாம் அமைதியாகி உங்களை விட்டிற மாட்டேன்… என் எனக்கு நெறைய கேட்கணும்” என்றாள்.

 

 

“கேளு” என்றான் அவனும்.

 

 

“அப்போ நீங்க என்னை லவ் பண்ணீங்க தானே!! எனக்குஅப்போல இருந்து அதே சந்தேகம் தான்!! அன்னைக்குநான்கேட்டப்போ கண்டுப்பிடின்னு சொல்லிட்டு போயிட்டீங்க”

 

 

“ஆமா சொன்னேன்… கல்யாணத்துக்கு அப்புறம் தான் நான் உன்னை லவ் பண்ண ஆரம்பிச்சேங்கற மாதிரி இருந்துச்சு உன் எண்ணம், அதனால தான் ஒழுங்கா கண்டுப்பிடின்னு சொன்னேன்”

 

 

“ஹ்ம்ம் அப்படியா சங்கதி… ஆனாலும் நீங்க இவ்வளவு அழுத்தாம இருந்திருக்க வேணாங்க… நீங்க தான் எங்கப்பா பார்த்த மாப்பிள்ளைன்னு சொல்லலை… நீங்க என்னை விரும்பினதை சொல்லலை”

 

“எப்படி அமுக்குணி மாதிரி இருந்திருக்கீங்க நீங்க… நானாச்சும் படபடன்னு கொட்டி தீர்த்திருக்கேன் உங்ககிட்ட”

 

 

“இவ்வளவும் மனசுல வைச்சுட்டு நான் படுத்துற பாட்டையும் பொறுத்துட்டு, எல்லா பிரச்சனையும் சமாளிச்சுட்டுஎப்படிங்க உங்களால இருக்க முடிஞ்சுது” என்றவளுக்கு அவனன்பில்விழிகள்ஈரத்தில்நனைந்தது.

 

 

“இங்க பாரு சும்மா சும்மா இப்படி வாட்டர் பால்ஸ் ஓபன் பண்ணாதே!! எனக்கு கஷ்டமா இருக்கு”

 

 

“உன்கிட்ட சொல்லாம இருந்தது எவ்வளவு கஷ்டமாயிருந்துச்சு தெரியுமா!! ஆனாலும் உனக்கும் என்னை பிடிக்கும்ன்னு ஷாலினி சொன்ன பிறகு தான் நான் நம்ம கல்யாணத்தை பத்தியே யோசிக்க ஆரம்பிச்சேன்”

 

 

“ஷாலினி மட்டும் எதுவும் சொல்லாம இருந்தா உன் கல்யாணத்தை நிறுத்தியிருப்பேனே தவிர நான் மாப்பிள்ளை ஆகணும்ன்னு யோசிக்கவேயில்லை ரதிம்மா” என்றவன் அவனுக்கும் ஷாலினிக்குமான உரையாடலை பற்றி சொன்னான்.

 

 

“எனக்கு உங்க மேல ப்ரியம் இருக்குங்கறதை உணரக்கூட எனக்கு அவகாசம் இல்லைங்க… எனக்கு அந்த நிலையில எதையும் யோசிக்க முடியலை”

“ஆனா இந்த ஷாலினி இவ்வளவு பேசியிருக்காளா!! எனக்காக!!”

 

 

“ஆமா உனக்காக என்கிட்ட பேசினது அவ தான்… உனக்கு அவ ஒரு நல்ல பிரண்டு ரதிம்மா”

 

 

“ஹ்ம்ம் ஆமாங்க!! ஆனா நான் அவளை ரொம்ப மிஸ் பண்றேன்… அவளோட பேசி எவ்வளவு மாசம் ஆகுது தெரியுமா”

 

 

“மாசமா வருஷம்ன்னு சொல்லு” என்றவன்“இப்போ உனக்கு அவகிட்ட பேசணுமா!!” என்று கேட்டான்.

 

 

“ஹ்ம்ம் ஆமா ஆனா அவ தான் வெளிநாட்டுல இருக்காளே!!”

 

 

“சென்னைக்கு வந்து ஒரு நாலு மாசம் ஆச்சு… அவளுக்கு குழந்தை பிறந்திருக்கு… நான் அப்புறம் அவளுக்கு போன் பண்ணித் தர்றேன் நீ பேசு” என்றான்.

 

 

“உங்களுக்கு ஏன் என்னை பிடிச்சுது?? நான் தான் உங்ககிட்ட எப்போ பார்த்தாலும் சண்டை போட்டுட்டே இருந்தேனே!! அப்போ கூட உங்களுக்கு என்னை பிடிச்சுதா!! எப்படி!!” என்று சிறுகுழந்தையாய் கேட்டாள்.

 

 

“நீ வளர்ந்தும் குழந்தையாய் இருந்த மாதிரி எனக்கு தோணிச்சு”

அவனை பார்த்து முறைத்தவள் “அப்போ நான் வளரலைன்னு சொல்றீங்களா!!” என்றாள்.

 

 

வாய்விட்டு சிரித்தவன் “நீ சமயத்துல சிறுபிள்ளைத்தனமா இருந்தே அதை தான் அப்படி சொன்னேன். உன்னை எப்போ பிடிச்சுதுன்னு சரியா சொல்லட்டும்மா” என்று சொல்லி அவன் நிறுத்த ஆர்வமாய் அவன் முகம் பார்த்தாள்.

 

 

“நம்ம ஆபீஸ் கெட்டுகெதர்ல இருந்து உன்னை கூட்டிட்டு போனேன் தெரியுமா!! வழியில கூட ஒரு இடத்துல நிறுத்தி கணேஷ் லவ் ஏன் அக்செப்ட் பண்ணலைன்னு கேட்டேன் ஞாபகமிருக்கா!! அதுக்கு நீ என்ன பதில் சொன்னேன்னு தெரியுமா!!”

 

 

ஓரிரு நிமிடம் யோசித்தவள் “என்ன பெரிசா சொல்லியிருப்பேன் எங்கப்பா பார்க்கற பையனை தான் கட்டிப்பேன்னு சொல்லியிருப்பேன்” என்றாள்.

 

 

“அதுவும் நீ சொன்னே ஆனா இன்னொண்ணும் சொன்ன!!” என்று அவன் கூற “ஹ்ம்ம்” என்று யோசித்தவள் “ஞாபமில்லையே எனக்கு!! என்ன சொன்னேன் நானு”

 

 

“ஒரு பொண்ணுக்கிட்ட இப்படி தான் வன்மையா விருப்பத்தை சொல்லுவாங்களான்னு நீ சொன்னே!! அதுக்கப்புறம் எனக்கு என்ன தோணிச்சு தெரியுமா!!”

 

“நான் மென்மையா  காதலை சொன்னா நீ ஏத்துக்குவியான்னு தோணிச்சு!! அந்த நிமிஷம் தான் எனக்கு உன்னை பிடிச்சுதுன்னு என்னால உணர முடிஞ்சுது” என்று அவன் சொல்லி முடிக்கவும் தள்ளி அமர்ந்திருந்தவனை அருகிழுத்து அவன் கன்னத்தில் அழுத்தமாய் ஒரு முத்தம் வைத்தாள்.

 

 

“வேணாம் ரதி இதெல்லாம் செய்யாதே!! அப்புறம் என்னால சும்மா இருக்க முடியாது”

 

 

“என்ன செய்வீங்களாம்” என்றாள் கள்ளப்பார்வையோடு.

 

 

“வேணாம் உனக்கு நல்லதில்லை சொல்லிட்டேன்…”

 

 

“நான் உங்களை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்லங்க!!”

 

 

“ஆஹா திரும்பவும் ஆரம்பிக்கறியா!!”

 

 

“ஆரம்பிக்கலை சொல்றேன்… எப்படி எதுவுமே தெரியாம இருந்திருக்கேன் நானு. எங்கப்பா ரொம்ப கிரேட்ல!!”

 

 

“அவர் இருக்க வரை என்னை யாரும் கிட்டக் கூட நெருங்காம பார்த்திக்கிட்டாரு!! எந்த பிரச்சனையும் என்னை அண்டாம பாதுக்காத்திருக்காரு!!”

 

 

“என்னமோ அவருக்கு தோணியிருக்கு என்னோட ரொம்ப நாள் இருக்கப் போறதில்லைன்னு. போறதுக்கு முன்னாடி கூட என்னைப்பத்தியே யோசிச்சிருக்காரு”

 

 

“அவரை மாதிரியேன்னு சொன்னா தப்பாகிடும்… அவருக்கும் மேலஎன்னை பார்த்துக்கற உங்ககிட்ட என்னை ஒப்படைச்சுட்டு போயிருக்கார்!! நான் என்ன புண்ணியம் பண்ணேன்னு தெரியலை”

 

 

“ஹேய் போதும் இந்த சினிமா டயலாக் எல்லாம்!! ஓவர் செண்டிமெண்ட் உடம்புக்கு ஆகாது!! போனதெல்லாம் போகட்டும் சரியா!! கண்டதையும் நினைச்சு மனசை போட்டு குழப்பிக்காதே!!”

 

 

“இன்னும் ஒரு விஷயம் என்னை போட்டு உறுத்துதுங்க”

 

 

“என்னம்மா??”

 

 

“அந்த கணேஷ்க்கு ஏங்க அப்படி எல்லாம் தோணிச்சு… நான் அவன்கிட்ட நின்னு பேசினது கூட இல்லை!! அப்புறம் அந்த இடத்துக்காக அப்பாவும் பிள்ளையும் சேர்ந்து எங்கப்பாவை….” என்று சொல்லும் போதே அவள் அழுகை கேவலாக ஆரம்பித்தது.

 

 

“ரதி போதும்ன்னு சொன்னேன்… திரும்ப திரும்ப இதெல்லாம் பேசிட்டு இருக்காதே!! கணேஷ் பத்தின பேச்சை இதோட விட்டிரு!!”

 

“நாமநம்மை பத்தி பேசுவோம்… நம்ம குழந்தைங்க பத்தி பேசுவோம்…” என்று அவளிடம் வேறு பேச்சு பேச ஆரம்பித்து அவள் எண்ணத்தை மாற்றினான்.

 

 

அப்போதுவாசலில்அழைப்பு மணி அடிக்க பிரணவ் தான் சுதாரித்து எழுந்தான். அணைத்திருந்த மனைவியை விட்டு மெதுவாய் விலகியவன் “நீ இரு நான் பார்த்திட்டு வர்றேன்” என்று எழுந்து போனான்.

 

 

“உள்ள வரலாமா!! பூஜை வேளை கரடின்னு சொல்லிட போறீங்க அதுக்கு தான் ஒரு வார்த்தை கேட்டுக்கறேன்” என்று சொன்னது நம் முகுந்தன் தான்.

 

 

“டேய் கொஞ்சம் வாயை மூடுடா!! எதாச்சும் பேசிட்டு” என்று அவனை கடிந்தார் அவன் அன்னை.

 

 

முகுந்தன் அவன் குடும்பம் சகிதமாக வந்திருந்தான். அவர்களின் குரல் கேட்டு மனோபாரதி எழுந்து வந்திருந்தாள்.

 

 

“என்னம்மா எல்லாரும் ஒண்ணா வந்திருக்கீங்க!! எங்களுக்கு முறையா பத்திரிகை கொடுக்கவா!!” என்று சரியாய் சொன்னாள்.

 

 

“பாருடா என் தங்கச்சியை புத்திசாலித்தனம்ன்னா என்னன்னு அவகிட்ட கத்துக்க” என்று நண்பனை ஓட்டினான் முகுந்தன்.

 

“இவளோட புத்திசாலித்தனத்தை மெச்சி இவளுக்கு ஆஸ்கார் அவார்ட் வேணா கொடுப்போமா!!”

 

 

“உனக்கு பொறாமைடா” என்று நண்பனை மீண்டும் வாரினான் அவன்.வந்தவர்கள் முகுந்தன் மீராவின் திருமணத்திற்காய் அவர்களுக்கு அழைப்பு கொடுத்துவிட்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு அங்கிருந்து கிளம்பினர்.

 

 

மாலதியும் வெங்கடேசனும் வெளியில் சென்றிருந்ததால் அவர்கள் வந்த பின்னே வந்து ஒரு முறை சொல்லுவதாக சொல்லிவிட்டு சென்றார் முகுந்தனின் அன்னை.

 

____________________

 

 

“அடேய் கல்யாணம் எனக்குடா… என்னை பார்க்கச் சொன்னா நீ எங்கடா பார்க்குற”

 

 

“என் கல்யாணத்துல தான் என் பொண்டாட்டியை ஒழுங்கா பார்க்கலை… அதான்டா இப்போ பார்க்குறேன், டிஸ்டர்ப் பண்ணாதேடா” என்றான் பிரணவ் முகுந்தனிடம்.

 

 

“இங்க ஒருத்தன் டென்ஷன்ல இருக்கேன், நீ சைட் அடிச்சிட்டு இருக்கே”

 

 

“எதுக்கு இப்போ டென்ஷன் உனக்கு??”

“தெரியலையே…” என்றான் மற்றவன்.

 

 

“அடேய் கடன்ங்காரன்களா என்னங்கடா பண்றீங்க ரெண்டு பேரும்… அய்யர் எவ்வளவு நேரமா மந்திரம் சொல்லிட்டு இருக்காரு இவன் என்னமோ உன் காதை கடிக்கிறான்”

 

 

“நீ என்னமோ அவன்கிட்ட சொல்றே, என்னன்னு என்கிட்டயும் கொஞ்சம் சொல்லுங்கடா” என்று அருகே வந்திருந்தான் நம் RR என்னும் ராகவ். அவனும் தன் மனைவி குழந்தை சகிதமாய் வருகை தந்திருந்தான்.

 

 

“ஹ்ம்ம் சார்க்கு டென்ஷனா இருக்காமா??” என்றான் பிரணவ்.

 

 

“எதுக்குடா??” என்று முகுந்தனை பார்த்து கேட்டான் ராகவ்.

 

 

“அது தெரியாதாம்!!” என்று அதற்கும் அவனே பதில் கொடுத்தான்.

 

 

“எல்லாருக்கும் கல்யாணத்தன்னைக்கு இருக்கற டென்ஷன் தான்டா… விடுறா!! விடுறா!!” என்று ஆறுதல் சொன்னான் ராகவ்.

 

 

“ஏன்டா உன் கல்யாணத்துக்குல நீ மட்டுமா டென்ஷனா இருந்தே!! எப்போடா உங்கப்பா வந்திருவாருன்னு நாங்க எல்லாரும் தானேடா ரொம்ப டென்ஷனா இருந்தோம்” என்று நண்பனை வாரினான் முகுந்தன்.

 

 

“போதும்டா சாமி உங்ககிட்ட வாயை கொடுத்தா ரெண்டு பேரும் எனக்கு தான் பல்ப் கொடுக்கறீங்க” என்று சலித்தான் ராகவ்.

 

 

“நம்ம ரெண்டு பேரையும் சார் தலையால தண்ணி குடிக்க வைப்பாருடா… இவருக்கு எனக்கும் மேல” என்றுபிரணவை சுட்டிக்காட்டினான் முகுந்தன்.

 

 

அதற்குள் பிரணவின் கைபேசி கொஞ்சி அழைக்க அருகிருந்த அவன் நண்பர்கள் இருவரும் கடுப்பாய் பார்த்தனர் பிரணவை.

 

 

நீயும் நானும் சேர்ந்தே செல்லும் தூரமே
நீலம் கூட வானில் இல்லை
எங்கும் வெள்ளை மேகமே
போக போக ஏனோ நீளும் தூரமே
மேகம் வந்து போகும் போக்கில்
தூறல் கொஞ்சம் தூருமே

 

 

“எப்படிடா இவன் மட்டும் இப்படி பாட்டு ஓட்டிக்கிட்டே இருக்கான்… தினமும் ஒரு பாட்டு வைக்குறான் இவன் தொல்லை தாங்கலை சாமி” என்று வெளிப்படையாய் சலித்தான் முகுந்தன்.

 

 

“ஏன்டா நீயாச்சும் இப்போ தான் இதை அனுப்பவிக்கிற நான் தினம் தினம் இவனோட இந்த தொல்லையை அனுப்பவிச்சனே அதை என்னன்னு சொல்ல… எப்படின்னு சொல்ல” என்று சோக கீதம் வாசித்தான் ராகவ்.

 

 

“இவனுக்குன்னு எங்க இருந்து தான் இந்த பாட்டெல்லாம் கிடைக்குதோ தெரியலை” என்று சேர்ந்தே நொந்தார்கள் நண்பர்கள் இருவரும்.

 

 

மீராவை அழைத்து வந்திருக்க முகுந்தன் அவள் கழுத்தில் மங்கலநாண் பூட்டி தன் மனையாளாக்கிக் கொண்டான்.

 

 

பின்தம்பதியருடன் நண்பர்கள் பட்டாளம் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள அந்த இடம் அமளிதுமளிப்பட்டது.

 

 

“என்ன கிரண் நம்ம பையன் என்ன சொல்றான்?? ஒழுங்கா இருக்கானா நான் பக்கத்துல இல்லைன்னு அப்பப்போ ஜொள்ளு விடுறது எல்லாம் செய்யறானா!!” என்றான் பிரணவ்.

 

 

“இவர் என்னைக்கு தான் திருந்தியிருக்கார்?? இவர் எப்பவும் இப்படி தானே அண்ணா…” என்று ராகவை முறைத்துக்கொண்டே சொன்னாள் அவள்.

 

 

“ஹேய் கிரண் பரவாயில்லையே சூப்பரா தமிழ் பேசறே!!” என்று ஆச்சரியப்பட்டது முகுந்தனே.

 

 

“நான் நல்லா தமிழ் பேச கத்துக்கிட்டேன் அண்ணா… உங்க பிரண்டுக்கு தான் இன்னும் ஹிந்தி வரலை”

 

 

“நான் சொல்ற இந்த திருக்குறளை ஒழுங்கா சொல்லச் சொல்லுங்க பார்ப்போம்” என்றவள்

 

‘துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை’

 

அழகாய் குறளை சொல்லி முடித்திருந்தாள்.“வாவ்…” என்று வாய்பிளந்தனர்மற்றவர்கள்.

 

 

“உங்க பிரண்டுக்கு இந்த குறளும் சொல்ல வராது… ஹிந்தியும் வாய்ல வராது. என்ன கேட்டாலும் ஏக் காவ் மேன் ஏக் கிஸான் ரகு தாத்தான்னு தான் சொல்லி வைப்பார்” என்று அவள் தன் பங்குக்கு தன் கணவனை வாரினாள்.

 

 

“ஏன்டா எங்க இருந்துடா கிளம்பி வர்றீங்க எல்லாரும்… ஒண்ணா சேர்ந்து எனக்கு தான் ஆப்பு வைப்பீங்க போல… இந்த ஒரு திருக்குறளை வைச்சே எனக்கு தமிழ் தெரியும்ன்னு சொல்லிக்கிட்டு இருக்காடா இவ”

 

 

“என் மானத்தை வாங்குறதுக்கு நீங்க மூணு பேரும் போதும்டா!! ஆளைவிடுங்கடா சாமிகளா!!” என்று கரம் கூப்பினான் ராகவ். பின் கேலியும் கிண்டலுமாய் அவர்கள் கலைந்தனர்.

 

 

சிறிது நேரம் கழித்து ரதி பேசிக்கொண்டே மேடையில் இருந்த பிரணவை நோக்கி வர அவளிடம் கண்களால் பேசிக் கொண்டிருந்தான். “போதும்டா நீங்க கொஞ்சிட பேசிட வேணாம்ன்னு கண்ணுல பேசிக்கறது போதும்”

 

 

“இப்போ தான் கல்யாணம் ஆனா பிள்ளைய வைச்சுக்கிட்டு ஏன்டா இப்படி பண்றீங்க??” என்று அங்கலாய்த்தான் முகுந்தன்.

 

 

“பாட்டு கேட்டிருச்சாடா உனக்கு என்ன பாட்டு சொல்லு பார்ப்போம்” என்று கடுப்படித்தான் பிரணவ் நண்பனை.

 

கொஞ்சி பேசிட வேணாம் உன் கண்ணே பேசுதடி
கொஞ்சமாக பார்த்தா மழைச்சாரல் வீசுதடி

நான் நின்னா நடந்தா கண்ணே உன்முகமே கேட்குதடி
அடி தொலைவில இருந்தாதானே பெருங்காதல் கூடுதடி


தூரமே தூரமாய் போகும் நேரம்…

 

 

“இந்த பாட்டு தானே முழுசா கேட்டிருச்சு எனக்கு, போதும்டா முடியலை!!” என்றான் முகுந்தன்.

 

 

“நீயும் வேணா கொஞ்சுடா யாரு வேணாம்ன்னு சொன்னா??” என்றான் பிரணவ் திரும்பி பார்க்காமலே.

 

“அப்படியே இவளை கொஞ்சிட்டாலும்” என்று மீராவை பார்த்து முகுந்தன் சொல்ல மீரா அவனை பார்த்து முறைத்தாள்.

 

 

“அப்படியேஇவரு கொஞ்சிட்டாலும்” என்றாள் அவள்.

 

 

“என்ன முணுமுணுக்குற??”

 

 

அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் வெட்டும் பார்வை பார்த்துக் கொண்டிருக்க ரதி இப்போது பிரணவின் அருகில் வந்திருந்தாள்.

 

 

“நீ இப்போ எங்க எதுக்கு வந்தே ரதிம்மா… நான் தான் பார்த்துக்கறேன்னு சொன்னேன்ல”

 

 

“நீஅங்க இங்க அலையாதே!! கீழே போ!!” என்று பிரணவ் விரட்ட “ஆஹான் நீங்க பார்த்த லட்சணம் தான் நல்லா தெரியுதே”

 

 

“இங்க இருந்து இவங்க ரெண்டு பேரையும் பார்க்கச் சொன்னா என்னைய பார்த்திட்டு நிக்கறீங்க”

 

 

“ரெண்டு பேரும் முறைச்சுக்கிட்டு இருக்காங்க அது கண்ணுக்கு தெரியலையா உங்களுக்கு”

 

 

“என்னடா எதுக்கு மீராவை முறைக்கிற??”

 

“நானெங்கடா முறைச்சேன், உன் தங்கச்சி தான் என்னைய முறைச்சு வைக்குறா!! பார்த்தாலே பயம்மா இருக்கு… ப்பா…” என்று வேறு சொல்லி வைத்தான் முகுந்தன்.

 

 

“இதுக்கே பயந்தா எப்படிடா!! மீரா இவன் சரிப்பட்டு வரமாட்டான்ம்மா!! நீ கிளம்பும்மாநம்ம வீட்டுக்கு போவோம்” என்று மீராவை பார்த்து பிரணவ் சொல்ல “அடேய் ஏன்டா எனக்கு குழி வெட்டுற, மீரு மீரு அவன் சொல்றதை நம்பாதே மீரு”

 

 

“நீ ஒரு கோடு கிழிச்சா நான் அதை மீறிக் கூட போகமாட்டேன் மீரு… என்னைநம்பு மீரு!!” என்றுபுலம்பிக் கொண்டிருந்தான் முகுந்தன்.

 

 

“உங்களுக்கு எப்பவும் விளையாட்டு தானா” என்ற மீரா அவனை பார்த்து வெட்கப்பட “என் பொண்டாட்டி வெட்க்கப்பட்டுட்டாடா” என்று உணர்ச்சிவசப்பட்டு கத்திய முகுந்தனை மீரா இரண்டு அடி போட நண்பர்கள் மகிழ்ச்சியாய் பார்த்தனர்.

 

____________________

 

 

பிரணவின்அன்னை மாலதி சசிக்கும் பேறுகாலம் நெருங்குவதால் அவளுக்கு சீமந்தம் செய்து அவளை சென்னைக்கு அழைத்து வந்திருந்தனர்.

 

 

மருமகளும் மகளும் ஒரே நேரத்தில் உண்டாயிருந்ததால் நேருக்கு நேர் பார்க்கக் கூடாது என்ற காரணத்தால் முகுந்தனின் அன்னையிடம் மனோவை ஒப்படைத்து சென்றிருந்தார் அவர்.

 

 

அவருக்கு மகளையும் விட முடியவில்லை, மருமகளையும்பார்க்க முடியவில்லை என்று ஆதங்கமாய் தானிருந்தது.

 

 

மனோ பழனியிலேயே இருக்க பிரணவும் வழக்கின் விசாரணைக்காய் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தான்.

 

 

இதோ வழக்கின் தீர்ப்பும் வந்திருக்கஅவன் பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைத்தும்விட்டது. தீர்ப்பு சொல்லி முடித்ததுமே மனோவால் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் ஓடிவந்து பிரணவை கட்டிக் கொண்டிருந்தாள்.

 

 

அவனுக்குமே அது ஒரு சவாலான வழக்கு தானே!! மனைவியை ஆறுதல்படுத்தி அன்னையுடன் வீட்டிற்கு அனுப்பியிருந்தான்.

 

 

வழக்கிற்குஇடைப்பட்டநாளில் மனோவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.பிரணவ் சொன்னது போல அவள் அன்னையே மீண்டும் பிறந்ததாய் தான் அவளுக்கு தோன்றியது.

 

மாலதி தான் முதலில் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தார். மனோவிற்கு குழந்தை பிறந்ததும் அவள் மருமகளை சென்னைக்கு தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டார்.

 

 

குழந்தைக்குஅதிதி என்று பெயரிட்டனர், அபாரஜித் போலவே அதுவும் ‘அ’ வில் தொடங்க வேண்டி அப்பெயரை சூட்டியிருந்தனர்.

 

 

தீர்ப்பு முடிந்த அன்று வீட்டிற்கு வருவதாக சொன்ன பிரணவ்மனோவிற்கு போன் செய்தான்.

 

 

“சொல்லுங்க எங்க இருக்கீங்க??”

 

 

“பழனிக்கு கிளம்பிட்டு இருக்கேன்… ரெண்டு நாள்ல வீட்டுக்கு வந்திடுறேன்” என்று அவன் கூறவும் “இப்போ என்னங்க அவசரம்” என்றாள் அவன் மனைவி.

 

 

“கேஸ் முடிஞ்சது வேண்டுதலை தள்ளிப்போட வேண்டாமா… இந்த தாடி மீசையோட குட்டிப்பொண்ணை கொஞ்ச கூட முடியலை” என்றான்.

 

 

“சீக்கிரம் வந்திடுறேன்ம்மா, பார்த்துக்கோ…” என்றுவிட்டு அவன் அன்னையையும் அழைத்து சொல்லிவிட்டே போனை வைத்தான்.

 

 

ஆம் பிரணவ் முருகனுக்கு வேண்டுதல் வைத்திருந்தான். வழக்குநல்லவிதமாய் முடியவும், குழந்தை நல்லபடியாக பிறக்கவும் பாதயாத்திரை செய்வதாய் இருந்தான்.

 

 

அதன்பொருட்டே வேண்டுதலை நிறைவேற்ற அன்றே கிளம்பியும்விட்டான். அவன் வேண்டுதல் நல்லபடியாக முடிந்து அன்று காலை தான் வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தான்.

 

 

ஒருவித சோர்வுடன் அவன் அறைக்குள் நுழைந்தாலும் எதையோ சாதித்த திருப்தி அவன் முகத்தில் தெரிய ரதிக்கு அவனைக் கண்டு சற்று பெருமிதமே!!

 

 

இவனைவிட வேறு யாரும் தன்னை புரிந்திருக்க முடியாது என்பதை அக்கணம் உணர்ந்தாள். மனதார தன் தந்தைக்கு நன்றி கூறினாள்.

 

 

குளித்துவிட்டு வந்த பிரணவ் குழந்தையை ஒரு பார்வை பார்த்துவிட்டு கட்டிலில் விழுந்தவன் அடித்துபோட்டது போன்றதொரு உறக்கம் அவனுக்கு.

 

 

யாருமே அவனை தொந்திரவு செய்யவில்லை. அவன் அலுப்பை அனைவரும் உணர்ந்தே இருந்தனர். மாலை முடிந்து இரவு நெருங்கும் நேரம் தான் மெதுவாய் கண்விழித்தான்.

 

 

உடல் சோர்வு போக குளித்துவிட்டு வந்தவன் உணவருந்திவிட்டு அவர்கள் அறைக்குள் நுழைந்தான்.

 

 

தொட்டிலில் உறங்கும் குழந்தையை எட்டிப்பார்த்தான். சிறிது நேரம் உறங்கும் குழந்தையை அவன் கொஞ்சுவதை பார்த்தவள் “தூங்குற குழந்தையை கொஞ்சக் கூடாது” என்றாள்.

 

 

“அப்போ முழிச்சுட்டு இருக்கற குழந்தையை கொஞ்சலாமா” என்றான்ஒரு மாதிரியான குரலில்.

 

 

அவன் சொன்னதின் அர்த்தம் புரியாமல் “முழிச்சுட்டு இருக்கும் போது கொஞ்சலாம் தப்பில்லை” என்றாள் பதிலுக்கு. அபராஜித் இப்போதெல்லாம் தாத்தா பாட்டியுடன் தான் படுப்பது.

 

 

அவனும் அங்கே இல்லாதது பிரணவிற்கு வசதியாகிப் போனது. வேகமாய் அவளருகில் வந்தவன் அவளை அள்ளி அணைத்துக் கொண்டான். “என்… என்ன பண்றீங்க??” என்றாள்.

 

 

“சந்தோசமா இருக்கியா??”

 

 

“இதென்ன கேள்வி”

 

 

“எல்லாமே ஒரு முடிவுக்கு வந்திருச்சு அது உனக்கு சந்தோசம் தானே” என்றான் அவள் கண்ணை நேருக்கு நேராய் நோக்கி…

 

 

“ரொம்ப…” என்றவள் அவன் இரு கன்னத்திலும் மாறி மாறி முத்தமிட்டாள்.

 

 

“இதெல்லாம் எனக்கு பத்தாது… மொத்தமா வேணும்” என்று காதில் ரகசியம் பேசினான்.

 

 

“முடியாது… முடியாது…”

 

 

“ஏன்?? ஏன் முடியாது?? நான் உன் பக்கம் வந்தே ஒரு வருஷம் ஆகுது” என்றவனிடம் “அதுக்கு” என்றாள்.

 

“இன்னைக்கு எனக்கு எந்த தடையுமில்லை. ரொம்ப பண்ணே அப்படியே எங்காச்சும் தூக்கிட்டு போயிருவேன்” என்று வன்முறை பேசியவன் அவளை இறுக்கமாய் அணைத்து கழுத்து வளைவில் முகம் புதைத்திருந்தான்.

 

 

“எப்படி தூக்கிட்டு போவீங்களாம், உங்க பொண்ணு அழுது ஊரை கூட்டிருவா!! இன்னும் கொஞ்ச நேரத்துலஎழுந்திடுவா!!” என்று பிகு செய்தாள்.

 

 

“என் பொண்ணுக்கு அவ அப்பாவை இந்தே நேரத்துல டிஸ்டர்ப் பண்ணக்கூடாதுன்னு தெரியும்… அவ புத்திசாலி”

“அப்போஅவ அம்மா நானு!!” என்றவளிடம்“நீ டிஸ்டர்ப் பண்ணலாமே!!” என்றான்

 

 

“நான் அதை கேட்கலை, உங்க பொண்ணு மட்டும் புத்திசாலின்னு சொல்றீங்க… அப்போ நானு!!”

 

 

“நீ அதிபுத்திசாலி” என்று அவன் சொல்ல“நிஜமா!!” என்று விழி விரித்தாள் அவள்.

 

 

“பின்னே நீ பிரணவ் பொண்டாட்டியாச்சே!! அவனுக்கு இருக்கறதுல பாதியாச்சும் உனக்கும் இருக்கும் தானே” என்று சொல்ல “உங்களை” என்றவள் அவனை மொத்தவென்று எழ அவளை இழுத்து தன் மேல் சாய்த்துக் கொண்டான்.

 

 

“விடுங்க…” என்று அவள் சொல்ல “முடியாது” என்றவன் அவள் எழ முடியாமல் அவளை கீழே தள்ளி கைகளால் அணையிட்டான்.அங்கு சத்தங்கள் இல்லா முத்த யுத்தம் தொடங்கியிருந்தது.

 

 

ஆறு மாதங்களுக்கு பின்

———————————————–

 

ரெயில் பாம்பன் பாலத்தை கடந்து சென்றுக் கொண்டிருந்தது.பிரணவ் தன் குடும்பம் சகிதமாய் சென்றுக் கொண்டிருந்தான். மனோவின் அன்னைக்கும் தந்தைக்கும் சாந்தி செய்யவே அவர்கள் கிளம்பியிருந்தனர்.

ராமேஸ்வரம் வந்து இறங்கி ஹோட்டலுக்கு சென்று குளித்துவிட்டு வந்தவர்கள், காற்றோடு கலந்து போன தன் மாமனாருக்கும் மாமியாருக்கும் சாந்தி செய்தான்.

 

 

ஒரு ஒரு சடங்கை செய்த போதும் அவனுக்கு குமாரசாமியின் நினைவு தான். அவரை அவன் நினைக்காத நாளே இல்லை.

 

 

கண்கள் லேசாய் கசிந்துக் கொண்டிருந்தது தன்னையுமறியாமல். ஆயிற்று இன்றோடு அவர்கள் இந்த உலகைவிட்டு நீங்கி வருடம் நான்காகி போனது.

 

 

சடங்குகள் முடிந்து எழவும்காற்றுடன் கலந்தவர்கள் ஆசிர்வாதம் செய்தது போல் லேசாய் ஒரு சாரல் தூவி வாழ்த்தியது.

 

 

நிமிர்ந்து வானை நோக்கி நன்றி பார்வை பார்த்தவனின் பார்வை சற்று தாழ்ந்து அவன் மனைவியை காதலாய்நோக்கியது. ரதியும் அக்கணம் அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

 

அவள் தலை லேசாய் தாழ்ந்து அவள் தோளில் சாய ஒரு கையில் அதிதியை வைத்திருந்தவன் அஜியை தூக்கிக்கொண்டு நின்றிருந்த தன் ரதியின் தோளைப் பற்றினான்… எப்போதும் போல் இப்போதும் அவனுக்குள் ஒரு பாடல் அவனுக்குஎழத்தான் செய்தது.

 

தூவானம் தூவ தூவ
மழை துளிகளில் உன்னை கண்டேன்

என் மேலே ஈரம் ஆக ஓருயிர் கரைவதை
நானே கண்டேன்

கடவுள் வரங்கள் தரும் பல கதை கேட்டேன்
அவளே வரமாய் வருவதை இங்கு பார்த்தேன்

வேறு என்ன வேண்டும் வாழ்வில்

 

இனி வேறு என்ன வேண்டும் அவன் வாழ்வில் அவன் வேண்டும் முன்னே அந்த முத்துக்குமாரசாமி மனோவின் தந்தை குமாரசாமியின் வாயிலாக அவனின் ரதியை தந்துவிட்டான்.

 

 

வரம் கேட்கும் முன்னே வந்த வரமாய் தான் அவள் அவனுக்கு தெரிந்தாள். அத்துடன் இரு பிள்ளைச்செல்வங்களும் சேர்ந்திருக்க இனி வேறு என்ன வேண்டும் அவன் வாழ்வில்…

 

 

இனிபிரணவின்உள்ளத்தை எப்போதும் மீட்டும் காதலாய் தென்றலாய் சாரலாய் பெரு மழையாய்எப்போதும் அவனின் ரதி இருப்பாள்…

 

 

தன்னுள் கலந்தவளை உயிரினும் மேலாய் நேசித்து மீட்டும் வீணையின் நாதம் போல அவனை மீட்டும் அவளின் மேல் கொண்ட காதல் எப்போதும்…

 

 

பிரணவின் வரிகளில்…

 

பார்த்ததும்எனைஈர்த்ததைஅறியேன்

எனைஈர்த்தவள்வெறுப்பு ஏனென்றறியேன்

வெறுப்பும்எனைஈர்த்ததறியேன்

 

பார்த்தவள்கோபமும்அறியேன்

கோபத்தின்காரணமும்அறியேன்

கோபமும்எனைஈர்த்ததறியேன்

 

இழப்பின்தவிப்பில்நிற்கும்உன்

துயர்நீக்கதவிக்கும்காரணமறியேன்

நீபதறிடும்நேரம்- உன்துணை

நிற்கதுடிக்கும்உள்ளமுமறியேன்!!

 

அறியாகாரணம்

அறிந்திடவிழைய

எக்கணம்யோசித்து

ஓர்கணம் அறிந்தேன்

என்னுள் ஜனித்த காதலை

எனைஉயிர்த்தகாதலை

என்னுள்மீட்டியகாதலை

 

எனைமீட்டும்காதலை

(ம்)மைமீட்கும்காதலை

நான்மூழ்கும்காதலை

 

உனைசேர்ந்தகாதலேஅது

எனைமீட்டும்காதலே

என்றும்

நம்மைமீட்டும்காதலே!!

 

 

ரதியின் வரிகளில்…

 

வாழ்க்கை

விதிவழிபோனதென எண்ணியிருக்க

சதிவழிபோனதுஎனகாட்டி

மதிவழிமீட்டு இந்த

ரதியோடுபதிசேர்ந்து

சுதிசேர்க்கவந்ததே

எ(ன்)னைமீட்டகாதலே

 

சுயம்மீட்கவைத்ததே

பயம்போக்கிசென்றதே

என்னைமாற்றிசென்றதேஅது

எ(ன்)னைமீட்டும்காதலே– எப்போதும்

எனை மீட்டும் காதலே…

உன்னைசேர்ந்துநின்றதே!!

 

 

நன்றி!! வணக்கம்!!