AVAV epilogue 1 & 2

Advertisement

இடையில் ரொம்ப தேடினேன்
சைட்க்குள் வரும் போது எல்லாம் மறக்காமல் பார்த்து விட்டு அடுத்த கதைக்கு போவது என்று
ரொம்ப அருமையான முடிவுடன் சூப்பர் :love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love:
 

Hema Guru

Well-Known Member
சொன்ன படி நைட் UD and Epilogue போட்டுட்டேன் மக்களே.....

கொஞ்சம் பெரியமனசு பண்ணி நாலு வார்த்தை கிறுக்கி போங்க.....
அருமையான கதை பா, லேட்டா வந்தாலும் latesttaa முடிச்சிடீங்க, very nice
 

naveensri

Well-Known Member
அருமையான கதை, நங்கை மூலம் நிறைய கருத்துக்கள், தெரிந்து கொள்ள முடிந்தது...
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
:love::love::love:

முதலில் பிடித்தம் இல்லைனாலும் கடைசியில் நல்ல புரிதலோடு இருக்கிறான் விக்......
epilogue விக்ரமன் படம் மாதிரி இருக்கு எனக்கு........
ஸ்கூல், யூனிவர்சிட்டி, MP..........

அந்த 5ம் வகுப்பில் தொழிற்கல்வி :eek:
9th-ல இருந்தே practicals எல்லாம் தொடங்குறாங்க........
காலேஜ் வரும் போது என்னெல்லாம் பண்ணுனீங்கன்னு கேட்டால் தெரியுதா பசங்களுக்கு???

என்னை பொறுத்த வரை syllabus குறையில்லை........ Education பாலிசியே சரியில்லை.... கற்றலும் கற்பித்தலும் தான்........

என்னைக்கு அண்ணா யூனிவர்சிட்டி entrance exam stop பண்ணுனாங்களோ அப்போவே ஸ்கூல் லெவல் டீச்சிங் மார்க் oriented ஆகிப்போச்சு....... full-லா private தான் control பண்ணுறாங்க.......

பசங்க & parents பக்கமும் நிறைய இருக்கு......
parents பொதுவா மார்க் மார்க் னு தான் ஓடுறாங்க..... ஏன்னா எல்லாமே மார்க் based....... Admission to 11th to higher education....... அப்போ தான் rote learning வருது...... புரிஞ்சு படிக்கிற பசங்க ரொம்ப குறைவு...... அதுக்கும் காரணம் இருக்கு..... புக் ல இருக்கிற மாதிரி இருக்கிற answers இருந்தால் தான் மார்க் (என்னோட friend பெண்ணுக்கே நடந்தது answer சரி but அந்த answer key ல இல்லை...... so மார்க் கொடுக்கலை)

பசங்க ஈஸி going....... எது வருமோ அதை மட்டும் சொல்லிட்டா ஈஸியா படிச்சுக்கலாம்......

Teaching விட coaching தான் பிரமாதமா நடக்குது.......
டீச்சர்ஸ் பொதுவா கஷ்டமா இருக்கும் topics omit பண்ணுறாங்க........ 11th full-லா டீச் பண்ணுறதில்லை...... Chemistry-யில் எனக்கு தெரிந்தது சொல்றேன் (பசங்க கிட்ட பேசுறப்போ சொல்றது தான் & நிறைய ஸ்கூல்-ல நடக்கிறது)......
11th....... Chemical calculations, Thermodynamics
12th..... Thermodynamics, Electrochmistry
இது மாதிரியே organic கெமிஸ்ட்ரி......
இதெல்லாம் கான்செப்ட் புரிந்தால் ஈசி....... இல்லைனா கஷ்டம்.......
நிறைய problems வரும் area........

Teachers students parents என்னைக்கு உணர்வாங்களோ அன்னைக்கு தான் பழைய எழுச்சி வரும்.......
5ம் கிளாஸ் லேயே தொழிற்கல்வி படிக்கும் அளவு பசங்களோட intelligent லெவல் இருக்குமா எல்லோருக்கும் @Aadhi


//epilogue விக்ரமன் படம் மாதிரி இருக்கு எனக்கு........
ஸ்கூல், யூனிவர்சிட்டி, MP..........//

பணம் + மனசிருந்தா எல்லாமும் சாத்தியமே, எனக்கே கொஞ்சம் வேக நடை-னு தோணிச்சு. இப்போ இருக்கிற மந்திரிகள் நிறையா பேர் கல்வித்தந்தைகள்தானே ? education பணம் கொழிக்கும் தொழிலா ஆகி ரொம்ப காலமாச்சு. சேவைக்குன்னு வர்றவங்க எத்தனை பேர்?

// என்னை பொறுத்த வரை syllabus குறையில்லை........ Education பாலிசியே சரியில்லை.... கற்றலும் கற்பித்தலும் தான்........

என்னைக்கு அண்ணா யூனிவர்சிட்டி entrance exam stop பண்ணுனாங்களோ அப்போவே ஸ்கூல் லெவல் டீச்சிங் மார்க் oriented ஆகிப்போச்சு....... full-லா private தான் control பண்ணுறாங்க.......

பசங்க & parents பக்கமும் நிறைய இருக்கு......
parents பொதுவா மார்க் மார்க் னு தான் ஓடுறாங்க..... ஏன்னா எல்லாமே மார்க் based....... Admission to 11th to higher education....... அப்போ தான் rote learning வருது...... புரிஞ்சு படிக்கிற பசங்க ரொம்ப குறைவு...... அதுக்கும் காரணம் இருக்கு..... புக் ல இருக்கிற மாதிரி இருக்கிற answers இருந்தால் தான் மார்க் (என்னோட friend பெண்ணுக்கே நடந்தது answer சரி but அந்த answer key ல இல்லை...... so மார்க் கொடுக்கலை) //

யெஸ் .

// பசங்க ஈஸி going....... எது வருமோ அதை மட்டும் சொல்லிட்டா ஈஸியா படிச்சுக்கலாம்......//

எது வரும்னு தெரியணும்னா... நிறைய விஷயங்களை நேரடியா அவங்க பாக்கணும், கத்துக்கணும்.. பிள்ளைங்களோட intelligence parents/teachers தான் கண்டுபிடிக்கணும்.

நான் சொல்ற தொழிற்கல்வி, படிப்பை மட்டுமே சார்ந்து இருக்கறது இல்ல.

பீமனுக்கு மல்யுத்தமும் தெரியும், நள பாகமும் வரும்.
அர்ச்சுனன் வில்லாளி அதே சமயம் நல்ல டான்ஸர்.

இப்போ சமீபமா.. IT & manufacturing இண்டஸ்ட்ரி-ல நிறைய lay off. Cognizant, Ashok Layland ..

கம்பெனி வடிகட்டின 18000 பேர்ல 7000 பேருக்கு வேலையில்லை. மிச்சம் பேருக்கு வேற டிபார்ட்மென்ட் ல வேலை பாக்க அவங்களே training கொடுப்பார்களாம், தேறலைன்னா தூக்கிடுவாங்க.

என்ன பண்ணுவாங்க? எல்லாருமே ஸ்கில்ட்/செமி ஸ்கில்ட் .. எல்லாருக்கும் எத்தனை கமிட்மென்ட் இருக்கும்? நினைச்சாலே பயமா இருக்கு. வேற தொழில் தெரியும்னு ஒரு நம்பிக்கை இருந்தா, [அதுவும் அடிலேர்ந்து தான் ஆரம்பிக்கணும் ] நல்லாயிருக்கும்னு தோணுது.

படிப்பு மூளைக்கு, வேலை உடம்புக்கு ன்னு அப்பா சொல்லுவாங்க, எங்க வீட்ல மாடுங்க இருந்தது, நான் சாணி அள்ளி, தீவனம் கரைச்சு வச்சிருக்கேன். MCA முடிச்ச பின்னாடியும் கூட.. மாட்டுப்பண்ணை வைக்கிற அளவுக்கு விஷயம் தெரியும்.

அப்பா சொல்லிருக்கார், ராஜாஜி ஒரு காலத்துல படிப்போடு குலத்தொழிலும் படிங்க-ன்னு, சொன்னாராம். நிறைய எதிர்ப்பு பகுத்தறிவாளர்கள் கிட்ட இருந்து.. இப்போ unskilled youth 50% above-nnu data சொல்லுது.

என்ன ஆகப்போகுதோ? @Joher
 

Saroja

Well-Known Member
ரொம்ப அருமையான பதிவு
நம்ப நாட்டுல கண்டிப்பாக
மாற வேண்டிய விஷயம்
கல்வி துறை
விக்ரம் மனைவி வெற்றிய
பெருமையாக கொண்டாடுவது
இனிமை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top