Hii...frds and siss AMP9epi pottachu ... Padichittu comments kodungama...happy reading...

அத்தியாயம் - 9
ஒரு பெண்ணின் மீது கொண்ட....
ஒரு ஆணின் காதல் அவனை...
முழுமை அடைய செய்கிறது....
காலை 7மணி அளவில் ரயில்வே ஸ்டேஷனில் கூட்டம் அலை மோதி நின்றது... அப்போது தான் வந்து நின்ற ரயில் வண்டியிலிருந்து இறங்கினர் ஆதியின் அம்மா தனம்,மற்றும் நந்தினியும்... தங்களின் உடைமைகளை தூக்கிக்கொண்டு சுற்றிப் பார்த்துக்கொண்டே நடந்தனர்... "அம்மா.. அண்ணா எங்க நிக்கறன்னு சொன்னான்..." என்று நந்தினி கேட்க.. "இருடி இங்கதான் எங்கேயாவது இருப்பான்... அவனுக்கு ஒரு கால் பன்னு..." என்று தனம் சொல்ல... அவர்களின் முன்னால் வந்து நின்றான் ஆதி...
"அம்மா... ஏன் இவ்வளவு லேட்.. ஏய் குட்டிமா எப்படிடா இருக்க..." என்று தங்கையைக் கட்டிக்கொண்டான்... "ம்ம்ம்... நல்லாருக்கேன்டா.. ஆமா எங்க அந்த விஷ்வாண்ணா எங்கிட்ட ஒரு வார்த்தைக்கூட அண்ணியப் பத்தி சொல்லல..." என்று குறைபட... "குட்டிமா.. அவன் உனக்கு பயந்துதான்மா இங்க வரல... வீட்டுக்கு போய் அவன என்னவேணாப் பன்னிக்கோடா..." என்று சொல்ல... "ம்ம்ம்.. சரி.. அண்ணா எனக்கு ரொம்ப பசிக்குதுடா.. எதாவது வாங்கிக்கொடுத்து குட்டிட்டுப்போ.." என்று அண்ணணும் தங்கையும் பேசிக்கொண்டிருக்க...
"டேய் நிறுத்துங்கடா... இங்க அம்மான்னு ஒருத்தி நிக்கறது உன் கண்ணுக்கு தெரியலயா..." என்று கேட்க... "அதுவந்தும்மா... ரொம்ப நாள் கழிச்சி நேர்ல பார்க்கறோம் இல்ல... அதான் இமோஷன் கொஞ்சம் ஒவராயிடுச்சி..." என்று ஆதி தங்கையிடம் கண்ணடித்துக் கொண்டே சொல்ல... "ம்ம்ம்... நீங்க நடத்துங்கடா.. என் மருமக வந்த பிறகு உங்களுக்கு இருக்கு..." என்று பொய்யாக சலித்துக்கொண்டார்... மூவரும் இப்படி பேசிக்கொண்டே காரில் ஏறி வீட்டிற்கு சென்றனர்...
விஷ்வா போனில் ஷாலியிடம் "ஏய் ஷாலி... இந்த ஆதி நம்ம விஷயத்த அம்மாகிட்டயும், நந்தினிகிட்டயும் சொல்லிட்டான்... அம்மாவக்கூட சமாளிச்சடலாம்.. ஆனா நந்தினி ம்ஹூம்... நீதான்டி என்ன காப்பாத்தனும்..." என்று சொல்ல.. "நான் என்ன பன்னமுடியும் விஷு.." என்று அவள் கேட்க... "உடனே கிளம்பி வீட்டுக்கு வா..." என்று சொல்ல... "ம்ம்ம் வரேன்..." என்று சொல்லிவிட்டு கிளம்பினாள்...
வீட்டிற்குள் நுழைந்த நந்தினி விஷ்வாவைத் தேட.. அவன் ஷோபாவுக்கு பின்னாடி இருந்து எட்டிப்பார்த்து அவளிடம் மாட்டிக்கொண்டான்.. அவன் ஓட ஆரம்பிக்க ,இவளும் அவனை துரத்த.. என்று இவர்களின் ஆட்டத்தைக் கண்டு ஆதியும்,தனம்மாவும் அடக்கமாட்டாமல் சிரித்தனர்... விஷ்வா நின்று ஆதியை முறைத்து "துரோகி... உன்ன அப்புறம் வச்சிக்கிறேண்டா..." என்று மறுபடியும் வாசல் பக்கம் ஓடவும் ஷாலி வரவும் சரியாக இருந்தது...
விஷ்வா அவளின் பின்னால் ஒளிந்துக்கொண்டு "ஷாலி.. என்ன காப்பாத்தும்மா..." என்று சொல்ல... "ஹாய்... நந்து.. நான் வைஷாலி.. உன் விஷ்வா அண்ணண கல்யாணம் பன்னிக்கப்போறவ..." என்று சொல்ல.. "ஓஓ... நீங்கதானா அவங்க... ரொம்ப அழகா இருக்கீங்க அண்ணி.. எப்படி விஷ்வா அண்ணண செலக்ட் பன்னீங்க..." என்று முக்கியமான கேள்வியை கேட்க... எல்லாரும் சிரித்துவிட்டனர்.. "ம்ம்ம்... அண்ணிக்காக உன்ன சும்மஆ விடறேன் அண்ணா..." என்று நந்து சொல்ல... ஆதி மனதுக்குள் "ம்ம்ம்... இவ அண்ணன்னுகூடப் பார்க்காம இப்படி விரட்டுறாளே... கட்டிக்கப்போறவன்... ரொம்ப பாவம்..." என்று நினைத்து வெளியே சிரித்துவைத்தான்....
ஷாலியை அவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தான்... விஷ்வா... கொஞ்சநேரத்தில் "அம்மா...நான் கொஞ்சம் திங்ஸ் வாங்கணும்... ஷாப்பிங் போறேன்.. உங்களுக்கு எதாவது வாங்கணுமா.." என்று ஆதி கேட்க.. "எனக்கு எதுவும் வேணாம்டா.. நாளைக்கு பொண்ணுப்பார்க்க போறோம்ல.. வெறும் கையோடையாப் போறது.. என் மருமகளுக்கு ஒரு நல்லப் புடவையா வாங்கிட்டு வாடா..." என்று அவர் சொல்ல... "ம்ம்ம்.. சரிம்மா.. என்று விஷ்வாவை அழைக்க.. அவன் ஷாலியை "இங்கேயே கொஞ்சநேரம் அம்மாட்டயும்,நந்துகிட்டயும் பேசிட்டிரு..." என்று சொல்லிவிட்டு இருவரும் கிளம்பினர்....
பெரிய துணிக்கடை ஒன்றில் நுழைந்த ஆதியும்,விஷ்வாவும் தங்களுக்கான உடையை தேர்வு செய்துக்கொண்டிருக்க... இவர்களை ஒரு ஜோடி கண்கள்...பின் தொடர்ந்துக் கொண்டிருந்தது... உடையை தேர்வு செய்தவர்கள் பெண்கள் பிரிவிற்கு சென்றனர்...
உள்ளே சென்ற ஆதியின் கண்கள் அங்கிருந்தவளை கண்டு ரசிக்க... அவளோ இவனை கவனிக்காமல் தன் மீது புடவையை வைத்து கண்ணாடி முன்பு நின்று பார்த்துக் கொண்டிருந்தாள் இளா... நாளை பெண் பார்க்க வருவதால் புதுப்புடவை எடுக்க ரேஷ்மியுடன் வந்திருந்தாள்... புடவையை வைத்துக்கொண்டே திரும்பி ரேஷ்மியிடம் காண்பிக்க... "ம்ம்ம்... சுப்பரா இருக்குடி..." என்று அவள் சொல்ல... "ஏய் கலர் ரொம்ப ப்ரைட்டா இருக்குடி..." என்று வேறுப் பார்க்க ஆரம்பித்துவிட்டாள்... ரேஷ்மி "உனக்கு இது தேவையா..." என தன் தலையிலே அடித்துக்கொண்டாள்...
அவளின் அலும்பல்களை கண்டு ரசித்தவன்... அவளின் அருகில் சென்று ஒவ்வொருப் புடவையாகப் பார்த்தவன்... சாம்பல் நிற வண்ணப்புடவையில் பொண்ணிற பார்டர் வைத்த சில்க் காட்டன் ஒன்றை எடுத்து அவளின் பக்கம் நகர்த்த... அதுவரை அவனை விடாதுப் பார்த்துக்கொண்டு நின்றவள்.. அவன் திரும்பியதும் கீழே குனிந்து கொண்டு புடவையை எடுத்துக்கொண்டு ரேஷ்மியிடம் சென்றாள்...
"என்னடி எடுத்துட்டியா... போலாமா..." என்று கேட்க.. "இருடி கொஞ்ச நேரம் கழிச்சிப் போகலாம்..." என்று சொல்ல.. "போடி... நான் கீழப்போய் ஐஸ்கிரீம் சாப்பிடப்போறேன்... நீ பொறுமையா வா..." என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்... ரேஷ்மி ஆதியை கவனிக்கவில்லை...
புடவையை தன் மீது வைத்து கண்ணாடி பார்த்துக்கொண்டே ஓரக்கண்ணால் அவனைப்பார்க்க... அவனோ இவளை கவனிக்காமல் புடவை எடுப்பதில் மும்முரமாக இருக்க... அவள் முகம் கூம்பிவிட்டது.. "ச்ச்ச.. புடவை எடுத்துக்கொடுத்துட்டு என்ன பார்க்காம... யாருக்கோ புடவை எடுக்கறான்.." என்று சலித்துக்கொண்டே பில் போடக்குடுத்துவிட்டு அவன் திரும்புவானா... என்று பார்த்துக்கொண்டே போக... அதே சமயம் அவனும் அவளைப் பார்க்க... இருவரும் பார்த்துக்கொண்டே இருக்க... விஷ்வாவோ ஷாலிக்கு புடவை எடுப்பதில் பிசியாக இருந்தான்... ஆதி புருவத்தை உயர்த்தி என்னவென்று கேட்க... அவள் ஒன்னுமில்லை என்று தலையை ஆட்டிவிட்டு ஓடிவிட்டாள்... இவர்களின் சம்பாஷணைகளை பார்த்த அந்த இருகண்கள்... இளாவை அளவிடத் தொடங்கியது... ஆதியும் ,விஷ்வாவும் ஷாப்பிங்கை முடித்துவிட்டு வீடு வந்து சேர்ந்தனர்..
ஆதியும், இளாவும்... நாளை விடிவை எதிர்பார்த்து கனவுகளுடனே தூங்கிப்போனார்கள்...
ஆனால் ரேஷ்மி உறங்காமல் தன் அப்பா போனில் சொன்ன விஷயத்தை கேட்டு அழுது கொண்டிருந்தாள்.. "நாளை மறுநாள் உன்னை பெண் பார்க்க வருகிறார்கள்.. டிக்கெட் புக் செய்துவிட்டேன்.. நாளை மதியம் 2மணிக்கு ட்ரெயின்..." என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டார்... இதனை கேட்டதிலிருந்து ரோஹித்தின் நினைவு தான்... ஆம் அவனை மூன்று வருசமாக மனசுக்குள்ளே காதலிக்கிறாள்... ஆனால் இதுவரை அவனிடம் சொன்னதில்லை... ஏனென்று அவளுக்கே தெரியவில்லை... நாளை அவனிடம் பேசவேண்டும் என நினைத்துக்கொண்டே உறங்கிப்போனாள்....
ரோஹித் தான்.. "நான் மாப்பிள்ளை என்று ரேஷ்மியிடம் சொல்ல வேண்டாம்..." என்று அவள் அப்பாவிடம் சொல்லிவிட்டானே... பின்ன இப்போதாவது தன்மீதான அவளின் காதலை தன்னிடம் சொல்வாளா என்ற ஆசையில் தான்... பாவம் அவனும் தான் என்ன செய்வான் நான்கு வருட காதல் அல்லவா...
அந்த இருகண்களின் சொந்தக்காரனான தாஸ் என்கிற 30 வயதுதக்க இளைஞன்... தன் வீட்டின் கதவை திறந்து படுக்கையில் விழுந்தவன்... "ச்ச்ச... இந்த போலீஸ்காரன் இங்க குடி வந்ததுல இருந்து நைட்ல எங்கயும் போகமுடியல... ம்ம்ம்.. இன்னிக்கு அந்த போலீஸ்காரன்கூட பார்த்த பீகர் செம்மையா இருந்தா... அவ மட்டும் இங்க இருந்தா... சூப்பரா இருந்துருக்கும்..." என்று அவளை பற்றி நினைத்துக் கொண்டு தூங்கினான்....
பொழுது அழகாக விடிய ஆதியின் வீட்டில் பம்பரமாக சுழன்று கொண்டிருந்தாள் நந்தினி... ஆம் பூ பழம் என எல்லாவற்றையும் சரிபார்த்துவிட்டு அனைவருக்கும் டீ போட்டுக்கொண்டிருந்தாள்... கிளம்பி வந்த அன்னையிடம்... "அம்மா பூ பழம் எல்லாம் வைக்க தாம்பூல தட்டு இல்லமா..." என்று சொல்ல... "எதிர்க்க வீட்ல ஒரு பாட்டி இருப்பாங்க அவங்ககிட்ட கேட்டுட்டு வாடி..." என்று சொல்ல.. அவசரமாக கதவை திறந்து வெளியே போனவள்... ட்யூட்டிக்கு நேரமாகிவிட்டது என்று வேகமாக வந்த ஹரிஷின் மீது மோதினாள்....
மோதிக்கொண்ட இருவரும் தலையை தேய்த்துக்கொண்டே ஒருவரை பார்க்க... நந்தினி தான் "முதலில் சாரி... சார் என் மேலதான் தப்பு..." என்று சொல்லிவிட்டு சுந்தரி பாட்டியின் வீட்டு கதவை தட்ட... ஆனால் ஹரிஷ்.. அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்... அழகாக சாரி கட்டி ,தலை குளித்து துண்டைக் கட்டியிருந்தாள்... பார்க்க பார்க்க தெவிட்டவில்லை அவனுக்கு... அவள் உள்ளே சென்றதும்... சுயநினைவுப் பெற்றவன்... "அம்மாடி என்ன கண்ணுடா சாமி... ஒருவேல ஆதி சாரோட தங்கச்சியா இருப்பாளோ..." என்று நினைத்துக்கொண்டே சென்றுவிட்டான்....
இளாவின் வீட்டில்.. அவன் தேர்வு செய்த புடவையில் அழகாக கிளம்பிக்கொண்டிருந்தாள்.. இவளுக்கு நேர்மாறாக முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் ரேஷ்மி... அவளின் முகவாட்டத்திற்கு காரணம் தெரிந்தும்... கண்டுகொள்ளாமல் இருப்பதுப்போல் காட்டிக்கொண்டாள் இளா...
ஆதி.. லைட் ப்ளூ ஜீன்சும் ,வொயிட் கலர் முழுக்கை சட்டையை மேலே கொஞ்சம் ஏற்றிவிட்டுக்கொண்டு அழகாக கிளம்பியிருந்தான்... தனம்மா அனுக்கு சுத்திப்போட... விஷ்வா அவனை ஓட்ட.. நந்தினியும்கூட சேர்ந்து ஓட்ட... என சிரிப்புடனே கிளம்பினர்...
சிவராம் "சீதா மாப்பிள வீட்லருந்து வந்துட்டாங்க..." என்று சொல்ல... இளாவுக்கு ஒரு இனம்புரியாத உணர்வு... முகமெல்லாம் சிவக்க வெட்க புன்னகை ஒட்டிக்கொண்டது... அவளுக்கு புரிந்துவிட்டது... "நான் அவனை காதலிக்கிறேன்..." என்று....
-தொடரும்