மெல்லிய காதல் பூக்கும் ?????

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் கியூட்டிபாய்ஸ் என்னோட அடுத்த கதையின் ஹீரோவை மெல்லிய காதல் பூக்கும் இல் அறிமுகப் படுத்தலாமா வேண்டாமா என்ற குழப்பம். பொதுவா என் எல்லா கதையிலும் வேறொரு கதையின் ஹீரோ கண்டிப்பா தலைக்கு காட்டுவான். ஆனா இந்த போசன எழுதின பிறகும் வேணாம் னு தோணுது.

முடிவு உங்க கையில்.......... வேணாம்னா தூக்கிடலாம்.

1420527650374.jpg

மலர் விமான பயணத்தை முடித்துக் கொண்டு சென்னையில் காலடி எடுத்து வைக்க அவளுக்காக காத்திருந்த வண்டியை காணாது சுற்றும் முற்றும் பார்க்க, அவளருகில் வந்த ஒருவன்



"மேடம் ப்ளீஸ் இந்த வண்டில ஏறுங்க" என்று உத்தரவிட அவனை கேள்வியாக ஏறிட்டாள்.



"மிஸ்டர் ஈகைச்செல்வன் ஈஸ் வைட்டிங் போர் யு"



"அந்த பெயரை எங்கயோ கேட்டது போல் நியாபகம் ஆனால் எங்கே?" மலர்விழி யோசிக்க அவனோ கதவை திறந்து வைத்துக் கொண்டிருந்தான்.



"மேம் ப்ளீஸ்..."



"ஆ... அப்பா பார்த்த மாப்புள. அவனா என்ன சந்திக்க இன்றே காத்திருக்கிறான். அப்பா எதுவும் சொல்லவில்லையே!" மலரின் மனம் நொடியில் கண்டு பிடித்து காரணங்களை அலச கதவை திறந்து வைத்துக் கொண்டிருந்தவன் ரொம்ப பொறுமையாகவே நின்று கொண்டிருந்தான்.



வண்டியில் ஏறி அமர்ந்தவள் "எப்படியும் இவனை சந்திக்க வேண்டி இருக்கு அது இப்போவே என்றால் என்ன இன்னும் இரண்டு நாளில் என்றால் என்ன?" முணுமுணுத்தவாறே மலர் தனது கணணியை திறந்து ஈகைச்செல்வனை பற்றி அவளுக்கு வந்த மெயிலை ஆராய்ந்தாள்.



ஈகை செல்வன் வயது இருபத்தியெட்டு. சிறு வயதில் பெற்றோரை இழந்து தனியாக வளர்ந்தவன். இன்று அவனுக்கு இருக்கும் சொத்துக்களின் மதிப்பு பல கோடி. எல்லாம் அவனின் சுய சம்பாத்தியம். பல தொழில்களில் கால் பதித்து கொடி கட்டி பறக்கும் இந்தியாவின் இளம் வயது தொழிலதிபர்களின் இவனும் ஒருவன். மது, மாது, சூது என்று எதிலும் ஈடுபாடற்றவன். தன்னிடம் உள்ள பணத்தை மேலும் பெருக்க எந்த தொழிலில் முதலீடு செய்யலாம் என்று விரல் நுனியில் வைத்திருப்பவன்



அதற்கு மேலும் படிக்க பிடிக்காமல் மடிக்கணணியை மூடினாள் மலர். "சரியான பணப் பேயா இருப்பான் போல இருக்கு. காசு காசுன்னு அலையிறான். எந்த கெட்ட பழக்கமும் இல்லனு ரிப்போர்ட் சொல்லுது இவன எப்படி துரத்தியடிக்கிறது" மலர்விழி சிந்தனையில் ஆழ்ந்திருக்க அவள் சந்திக்க போகும் ஈகைச்செல்வனோ தனது மடிக்கணனியில் மலர்விழியை பற்றி வந்திருந்த தகவலை அக்குவேர் ஆணிவேராக ஆராய்ந்துக் கொண்டிருந்தான்.



அந்த ஐந்து நட்சத்திர விடுதியின் உள்ளே வண்டி செல்லவும் மலர்விழிக்கு கதவை திறந்து விட்டவன் அவளை அழைத்துக் கொண்டு ஈகை செல்வன் தங்கி இருக்கும் அறைக்குள் அழைத்து சென்று விட்டு கதவை சாத்திக் கொண்டு வெளியே செல்ல மலர்விழியோ அங்கே அமர்ந்து தன்னையே ஆராயும் பார்வை பார்ப்பவனை பார்த்து



"இன்னும் ரெண்டு நாள்ல தான் என்ன சந்திக்க வருவதாக அப்பா சொன்னாரு. என்ன திடீரென்று..." சாதாரணமாகவே பேசியவள் அவன் முன் சென்று அமர



அவன் முன் கொழிக் குஞ்சாய் நடுங்கும் பெண்களையே பார்த்து பழகியவனுக்கு மலர்விழியின் நிமிர்ந்த நடையும் பேச்சு முகத்தில் புன்னகையை வரவழைக்க



"ம்ம்... எந்த ஒரு காரியத்தையும் பிளான் பண்ணி தான் செய்வேன். கல்யாணம் என்பது ஒரு கப் காபி சாப்பிட்டு முடிவு செய்யிற விஷயமில்லை. உன்ன பத்தி விசாரிச்சேன். அமெரிக்கால படிச்ச இங்க இப்போ என்ன செய்யிற எல்லாம்" அவனும் சாதாரணமாக சொல்ல



கண்டிப்பாக விசாரித்திருப்பான் என்று மலர்விழிக்கு தெரியும் என்பதால் இந்த கல்யாணத்தை நிறுத்தும் படி அவனிடம் நேரடியாகவே பேசிப் பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தாள். அவள் எவ்வாறு ஆரம்பிப்பது என்று யோசிக்கையில்



"உங்கப்பாவை பழிவாங்கின பிறகுதான் கல்யாணம் பண்ணனும் னு இருக்கியா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு பழிவாங்கலாம்னு இருக்கியா"



ஈகைச்செல்வனின் இந்த பேச்சில் ஒருகணம் உள்ளுக்குள் ஆட்டம் கண்டாலும் வாயை இறுக மூடி அமர்ந்திருந்தாள் மலர்விழி.





"நீ அமெரிக்கால என்ன படிச்ச, இங்க என்ன வேல பாக்குற, இப்போ நீ மும்பாயில் யாரை சந்திச்சுட்டு வர, உங்கம்மா சாவுக்கு உங்கப்பா அண்ட் அத்தைக்கு சம்பந்தம் இருக்கு என்பது மட்டுமல்ல அவங்கள வீழ்த்த நீ பண்ணிக்க கிட்டு இருக்குற ஒவ்வொன்னாத்தையும் கண்டு பிடிச்சிட்டு தான் உன் முன்னாடி உக்காந்து இருக்கேன் பேபி"



"அமெரிக்கால உன் பிரெண்டு ஒருத்தன் எப்.பி.ஐ ல இருக்கான் இல்ல அவன் உதவி உனக்கு கிடைச்சி கிட்டே இருக்கு. யாதவ் மாதவ் என்ற ஒருவனை உருவாக்கி அவன் பேருல கம்பனி ஆரம்பிச்சு உன் அத்தை கோட் பண்ணும் அமௌண்ட்ட விட குறைவா கோட் பண்ணி எல்லா ப்ரொஜெக்டையும் உன் கை வசப்படுத்தி அவங்க தொழிலை கொஞ்சம் கொஞ்சமாக முடக்கிட்டுவர.



இந்த மாதவ் யாதவ் யாரு? எங்க இருக்கான்? உன் அத்தையும், அப்பாவும் மண்டைய பிச்சிக்கிறாங்க, நீ கூலா அவங்க பேசுறத ஒட்டுக் கேட்டு உன் வேலைய பாக்குற.







கூடிய சீக்கிரம் உங்க அப்பாவை மண்ணை கவ்வ வைக்க போற. அப்பொறம்... உன் அத்த....


உன் மாமா பையன் அமுதன் அவனை லவ் பண்ணுறியா? இல்ல ....

ஒரு பிரீ அட்வைஸ் சொல்லவா... பேசாம உங்கப்பனையும், அத்தையும் போட்டுட்டு" சாதாரண முகத்தை வைத்துக் கொண்டு பேசிக் கொண்டிருப்பவனை மலர்விழியால் கணிக்க முடியவில்லை. அவனை பார்க்கும் பொழுது இன்னொரு ரத்னவேல் என்றே தோன்றியது.



"என்ன பேபி எப்போ கல்யாணத்த வச்சிக்கலாம்?"



தான் செய்பவை எல்லாவற்றையும் புட்டு, புட்டு வைக்கும் இவன் லேசு பட்டவனில்லை. இவனிடம் இருந்து தப்பிப்பது கடினம் என்று மலர்விழிக்கு தோன்ற என்ன பதில் சொல்வது? எப்படி சொன்னால் பிரச்சினை வராது என்று யோசிக்கையில் ஈகைச்செல்வனின் அலைபேசி அடித்தது.





மறுமுனையில் என்ன சொல்ல பட்டதோ! மடிக்கணியில் மடிசாரில் இருந்த மாமியை கண்ணுக்குள் நிறைத்துக் கொண்டவன் மலர்விழியின் புறம் திருப்பி



"வீ ஆர் இன் சேம் போர்ட். எங்கப்பா அம்மாவை கொன்னு என்ன அனாதையாக்கினவன நானும் பழிவாங்க காத்திருந்தேன்... அவன் பேத்தி இதோ இவ தான் இவளுக்கு வலிச்சா அவன் துடிப்பானில்லை" கண்கள் சிவக்க சொன்னவன் ஒரு நொடியில் சுதாரித்து "ஓகே மிஸ் மலர்விழி இந்த கல்யாணம் நடக்காது உங்க அப்பாக்கு நானே போன் பண்ணி சொல்லுறேன். ஐ ஹவ் டு கோ" என்றவன் அவளின் பதிலையும் எதிர் பார்க்காது நகர





"ஒரு நிமிஷம் மிஸ்டர் ஈகைச்செல்வன் பெண் பாவம் பொல்லாததுனு சொல்வாங்க. அந்த பொண்ணோட தாத்தா பண்ணதுக்கு அந்த பொண்ண எதுக்கு பழிவாங்க போறீங்க. சரியான ஆம்புளையா இருந்தா அவ தாத்தாவோட மோதுங்க. இதுவும் ப்ரீ அட்வைஸ் தான்" அவனை நேர் பார்வை பார்த்தே சொல்ல



"என் விஷயத்தில் தலையிட நீ யாரு" எனும் விதமாக மலரை அலட்ச்சியமாக ஒரு பார்வை பார்த்து விட்டு நடையை தொடர்ந்தான் ஈகைச்செல்வன்



செல்லும் அவனையே வெறித்து பார்த்தவள் "சிலருக்கு பட்டா தான் புரியும்" என்று முணுமுணுத்தவாறே வீட்டை நோக்கி பயணிக்க ஆரம்பித்தாள்.

கதையோட பெயரே இன்னும் யோசிக்கல ஹீரோ என்ட்ரி ஆகிட்டாரு.:p:D
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஈகைச் செல்வன் புது ஹீரோ பேர் ரொம்பவே சூப்பரா இருக்கு,
மிலா டியர்
ஸ்டோரிக்கு பேர்தானே
பொறுமையா வைச்சுக்கலாம்
ஒண்ணும் அவசரமில்லை
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top