Bhuvana
Well-Known Member
மூக்கடைப்பு குறைய :
1. இலவங்கப்பட்டை தூளை எடுத்து நீர் விட்டு குழைத்து சிறிது தலையில் தேய்த்து விட்டு சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் மூக்கடைப்பு குறையும்.
2. புதினா இலைச்சாறுடன் எலுமிச்சை பழச்சாறு மற்றும் ஆரஞ்சு பழச்சாறு கலந்து குடித்து வந்தால் மூக்கடைப்பு குறையும்.
3. மாதுளம் பூ சாறு, அருகம்புல் சாறு ஆகியவைகள் 15 மி.லி மூன்று வேளை குடித்து வந்தால் மூக்கிலிருந்து இரத்தம் வருவது குறையும்.
4. புதிய ரோஜா மலரை எடுத்து முகர்ந்து வந்தால் மூக்கடைப்பு குறையும்.
5. குங்குமப்பூவுடன் சம அளவு தேன் கலந்து மூன்று நாட்கள் தினசரி இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் சுவாசநோய் அலர்ஜி குறையும்.
6. நொச்சி இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து சாறு எடுத்து, சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து கொதிக்க வைத்து ஆற வைத்து உச்சந்தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து வெந்நீரில் குளிக்க மூக்கடைப்பு குறையும்.
7. அகத்தி இலைச் சாற்றில் சமஅளவு தேன் கலந்து சாப்பிட்டால் மூக்கடைப்பு குறையும்.
8. ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
9. விரலி மஞ்சளை தீயில் சுட்டு, அதன் புகையைச் அடிக்கடி சுவாசித்தால், மூக்கடைப்பு குறையும்.
10.வேப்ப இலையையும் ஓமத்தையும் அரைத்து நெற்றியில் பூச மூக்கடைப்பு குறையும்.