முள்ளோடு நீ ரோஜா inro and teaser

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
நாளை என் பிறந்தநாள். புது கதையோட அறிமுகம் பார்த்துடலாம்.:):)


download.jpg

பாடசாலை செல்ல ஆரம்பித்தபின்தான் யாழினிக்கு பிரச்சினையே ஆரம்பமானது. சமவயது தோழிகள், வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு மத்தியில் ஆசிரியை தந்தையின் பெயரை கேட்க இவளோ தெரியாது என்றாள். வகுப்பறையே "கொல்" என்று சிரிக்க, ஏதோ குழந்தை கூறத் தெரியாமல் கூறுவதாக ஆசிரியை மற்ற மாணவர்களை அதட்டி விட்டு நாளை வரும் பொழுது தாய், தந்தை இருவரினதும் பெயரை எழுதிக் கொண்டு வருமாறு கூறினாள்.



வீட்டுக்கு வந்த குட்டி யாழினி கல்பனாவிடம் தந்தையை பற்றி கேட்க முதலில் அதிர்ந்த கல்பனா எதை எதையோ கூறி குழந்தையை தூங்க வைத்தாள்.



ஆனால் குட்டி யாழினி படு சுட்டியாக காலையில் எழுந்த உடனே பாடசாலைக்கு செல்ல தயாராககும் பொழுதே நோட்டைக் கையில் வைத்துக் கொண்டு தந்தையின் பெயரைக் எழுதிக் கொடுக்குமாறு அடம்பிடித்தாள்.



கல்பனாவின் கண்களில் கண்ணீர் முணுக்கென எட்டிப்பார்த்திருக்க, குழந்தையை சமாதானப்படுத்த முடியாமல் யாழினியின் முதுகில் இரண்டு வைத்து பாடசாலைக்கு அனுப்பி வைத்திருந்தாள்.



அழுது அழுது ஓய்ந்து முகத்தை தொங்க போட்டவாறே பாடசாலைக்கு வந்த யாழினி ஆசிரியையிடம் அன்னை தந்தையின் பெயரை கூற மறுத்தாள் என்று கூற ஆசிரியைக்கு எதுவோ புரிவது போல் இருக்க, "பரவாயில்லை நீ போய் உக்காரு" என்றாள்.



அவளது சோகமான தோற்றத்தையும், அவள் கூறியதையும் பிடித்துக் கொண்ட சகமாணவர்கள் பாரதூரம் அறியாமலையே கேலியும், கிண்டலும் செய்ய ஆரம்பித்து நாளடைவில் யாழினி அப்பா பெயர் தெரியாதவள் என்ற பெயரோடு வளரானாள். இந்த கேலியும், கிண்டலினாலும் யாழினி யாருடனும் ஒட்டாமல் முறைத்துக் கொண்டே திரிய, அவளுக்கு பாடசாலையில் தோழிகளே அமையவில்லை.

********************************************************************************

கல்லூரியில் சீனியர் ஒருவன் அவளை காதலிப்பதாக வந்து நின்றான்.



அவன் வேறு யாருமல்ல முதன் முதலாக அவள் காலேஜினுள் நுழைந்த பொழுது அவளை ரேகிங் செய்த சீனியர் குரூப்பில் இருந்தவர்களில் ஒருவன்.



காலேஜில் ராகிங் செய்வார்கள் என்று தெரியும். இவர்களை பார்த்ததும் ஒதுங்கிப் போனவளை கைதட்டி அழைத்தும் இவள் காது கேளாதவள் போல்தான் நடந்தாள்.



ஓடிவந்து சூழ்ந்து கொண்டால் இவளும்தான் என்ன செய்வாள்?



"என்ன கூப்டுறது காதுல விலல? நீ பாட்டுக்கு போற" ஒருவன் எகிற



"கூப்டீங்களா அண்ணா. வேற யாரையோ... உங்க ப்ரெண்ட்ஸ்ஸனு... நினச்சேன்" பவ்வியமாக பதில் சொன்னாள் இவள்.



"இதோடா அண்ணணாமே" இன்னொருவன் சொல்ல



"எங்களுக்கெல்லாம் அண்ணன் ஒருவன் இருக்கான் வந்து ஸலாம் போட்டு போ..." என்றான் ஒருவன்



இவளும் பயந்தவாறுதான் போனாள்.



இவளை அவன் ரசித்துப் பார்த்ததும், அவளை சுவாரஸ்யமாக பார்த்ததும் இவளுக்குத்தான் புரியவில்லை.



"உன் பேரென்ன"



"யாழினி அண்ணா"



"அய்யராத்து பொண்ணா? அண்ணான்னு கூப்டுற" என்று கலாய்க்க கூட்டமே சத்தமாக சிரித்தது.



"இல்ல அண்ணா" புத்தகங்களை பற்றிப் பிடித்தவாறு மருண்ட பார்வை பார்த்தவளை பார்த்தா நொடியே அவனுக்கு பிடித்துத்தான் போய் இருந்தது.



என்ன படிக்கிறாள்? எந்த கிளாஸ் என்றெல்லாம் விசாரித்தவனின் பார்வை மூக்குகண்ணாடிக்குள் இருந்த அவள் விழிகளை நேர்பார்வை பார்த்திருந்தன.



"டேய் தங்கச்சிய பத்திரமா வழியனுப்பி வைங்க" என்று சொல்ல கூட்டம் மீண்டும் "ஓஹ் ஒஹ்" என்றது.



இவர்களின் பேச்சின் அர்த்தம் இவளுக்கு சுத்தமாக புரியவில்லை. அங்கிருந்து வந்து விட்டால் போதும் என்றிருக்க, அவளை போகச் சொன்னதும் சிட்டாக பறந்திருந்தாள்.



அவன் பெயர் கூட இவளுக்கு தெரியாது. இவள் காலேஜ் சேர்ந்து நான்கு மாதங்கள் கூட முழுவதாக ஆகவில்லை. அதற்குள் காதல், கத்தரிக்காய் என்று வந்து நிற்கின்றான்.



முகத்தில் அடித்தது போல் அவள் தனக்கு பிடிக்கவில்லை என்று கூறினாலும் அவன் கேட்பது போல் தெரியவில்லை. அவள் பஸ் ஏறும் பொழுது காட்ச்சி கொடுப்பவன் அவள் கல்லூரி பஸ்ஸில் எறியபின் அவளோடு ஏற ஆரம்பித்தான். அவனும் அவன் நண்பர்களும் இவளுக்காக பாடல்கள் பாட, இவளோ அவர்களை கண்டுகொள்ளவே இல்லை.



ஆனாலும் விடாமல் இவள் செல்லும் இடமெல்லாம் செல்ல ஆரம்பித்தான். இவள்தான் அவனை கண்டுகொள்ளவில்லை. அவனும் விடுவதாக இல்லை.



காதலை சொன்னான் இவள் மறுத்து விட்டாள். செல்லும் இடமெல்லாம் வந்தாலும் அவனாக வந்து பேசவில்லை. அதனால் இவள் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.



நாட்கள் மாதங்களாகி வருடங்களாக உருண்டோடி இருந்த நிலையில் யாழினி கல்லூரி இறுதியாண்டில் படித்துக் கொண்டிருந்தாள்.



ஆனாலும் அவள் மனதில் ஆழமாய் பதிந்து போன ஈஸ்வரமூர்த்தி என்ற பெயரையும் அவள் மறக்கவில்லை. அன்னைக்கும் அவருக்கும் என்ன தொடர்பு இருக்கும் என்பதை தேடுவதையும் விடவில்லை.



ஈஸ்வர மூர்த்திக்கு சென்னையிலையே எட்டு பெரிய தொழிற்சாலைகள் இருக்க, நான்கை மகனும், மற்றத்தை மருமகனும் பார்ப்பதாக கேள்வி.



மனைவியின் மூலம் கிடைத்த சொத்துக்களை ஈஸ்வரமூர்த்தி சரியாக பயன்படுத்தி அசுரவளர்ச்சியடைந்து விட்டார்.



ஈஸ்வரமூர்த்தி தன்னுடைய தந்தையா? என்று யாழினிக்கு குழப்பமாக இருந்தது. காரணம் அன்னையை விட்டு பணத்துக்காக தற்போது இருக்கும் மனைவியை தேர்ந்தெடுத்திருந்தால் தனக்கு அவருடைய மூத்த மகளை விட வயது அதிகமாக இருக்க வேண்டும். ஆனால் யாழினி அவர்களை விட இளையவள்.



ஒருவேளை திருமணத்து பின்பு அன்னையை கண்டு காதல் கொண்டு திருமணம் செய்து கொண்டாரா? அப்படியாயின் மாதத்துக்கு ஒரு தடவை அல்லது வருடத்துக்கு ஒரு தடவையாவது வந்து தங்களை பார்த்து விட்டு சென்றிருக்கலாமே அவர் தான் வருவதே இல்லையே.



தான் காதலே இல்லாமல் ஒருவித ஆசையில், இச்சையில் பிறந்தவளா? அதனால்தான் தந்தை தன்னை வெறுக்கிறாரா? என்னை காண வராமல் இருக்கிறாரா? என்று சிந்தித்தவளுக்கு விடையாக அன்னை வேலை பார்ப்பதும் ஈஸ்வரமூர்த்தியின் தொழிற்சாலையில்தான், தாங்கள் குடியிருக்கும் காலனி தொழிலாளர்கள் குடியிருக்கும் காலனிதான் என்று தெரிய வந்ததும் இதுதான் உண்மை என்ற முடிவுக்கு வந்தாள்.



:love::love::love::love::love:
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
Wow super sis!!!! Advance happy birthday and Have a healthy and wealthy life sis!!! தங்களின் பிறந்த நாள் பரிசு சூப்பர் sis!!!
யாழினி பற்றி தெரிந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன் !!!
tnq u so much dear:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top