மாயவனின் அணங்கிவள் -34

Advertisement

Priyamehan

Well-Known Member
வேந்தனையேப் பார்த்துக் கொண்டிருந்தவளை "அரு கார்ல ஏறுக் கண்ணு..." என்றார் தாத்தா.

வேந்தன் கார் கிளம்பி விட... அரு அந்தக் காரைப் பார்த்துக் கொண்டே ஏறியவளுக்கு அப்போதுதான் காயப்போட்ட உடையை எடுக்க வில்லை என்ற நினைவு வந்தது..

"தாத்தா ஒரு நிமிஷம் இருங்க... ரூம் வரைக்கும் போய்ட்டு வந்தரேன்"

"ஏன் கண்ணு எதையாவது மறந்துட்டு வந்துட்டியா?"

"ஆமா தாத்தா... டிரஸ் ஒன்னு காயப் போட்டேன், வரவரைக்கும் அது தூக்குலையே கிடந்தா வீணாப் போய்டும் நான் போய் எடுத்துட்டு வந்தரேன்" என்று காரை விட்டு இறங்கி அறையை நோக்கி ஓடினாள்.

அவளது அறை தோழிகள் வீட்டிற்கு கிளம்பிக் கொண்டிருக்க

"என்ன அரு இன்னும் கிளம்பலையா? அப்போவே கிளம்புன?" என்று கேள்வி கேக்க..

"கிளம்பிட்டேன்டி... டிரஸ் ஒன்னு எடுக்கணும் அதான் வந்தேன்" என்று காயப்போட்டிருந்த உடையை எடுத்துக் கொண்டவள் அவர்களிடம் விடைப் பெற்றுக் கொண்டு வெளியே வந்தாள். அந்த உடையில் சிவப்பு தடம் அப்படியே தெரிய மனம் முழுக்க வேந்தனையே சுற்றி வந்தது...

ஒரு பெண்ணை அசிங்கப்படுத்த வேண்டும் என்றால் இல்லாத ஒன்றை இருப்பது போல் காட்டிய ஜீவா போன்ற ஆட்களுக்கு மத்தியில், இருந்த ஒன்றை இல்லாதவாரு மாற்றி அன்று அருவியை காத்தவன் வேந்தன் அல்லவா.

பருவம் எய்து பெரிய பெண்ணாக மாறிய நாளுக்கு அருவியின் நினைவுகள் சென்றது ...

அருவி பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த தருணம் அது.பதினைந்து வருடமாகப் போகிறதே இன்னும் பெண் பெரிய பெண்ணாக ஆகாமல் இருக்கிறாளே என்று வீட்டு பெண்களுக்கு ஒரு கவலை இருந்துக் கொண்டே இருந்தது... ரித்துவும் அருவியும் ஒரே வயதாக இருந்தாலும் ரித்து பருவம் எய்து மூன்று வருடம் சென்றிருந்தது.. ஆனால் அருவி சிறு பிள்ளையாக வீட்டை வலம் வந்துக் கொண்டிருந்தாள்...

ஒருநாள் வேந்தனின் முன் சென்று நின்றவள்..

"மாமா எனக்கு இளநீ குடிக்கணும் போல இருக்கு வா தோட்டத்துக்கு போலாம்" என்றாள்...

வேந்தனுக்கும் அருவிக்கு ஆறு வருடம் வயது வித்தியாசம்...அருவி பத்தாம் வகுப்பு படிக்கும் போது கல்லூரியின் இறுதி வருடத்தில் இருந்தான் வேந்தன்..

"இப்போவே வேணுமா?"

"ஆமா... வயிறு வலிக்கற மாதிரி இருக்கு வா..."

"இனியை கூட்டிட்டு போலாம்ல"

"அவனுக்கு ஒன்னுமே தெரியாது ஆள் இல்லானா நீ கூட சீவி குடுத்துடுவ அவனுக்கு அதுலாம் தெரியாது இப்போ நீ வரியா இல்லையா...?"

"சரி வரேன் இரு..." என்று அவளுடன் எழுந்து நடந்தான்..

இருவரும் நடந்தே தோட்டம் வரைக்கும் வந்துவிட்டனர்..

திடீரெண்டு அருவிக்கு வயிற அதிகமாக வலிக்க... வேந்தனின் கையை இறுக பிடித்துக்கொண்டவள்.. "மாமா ரொம்ப வயிறு வலிக்குது மாமா...வலிக்குது " என்று அழுக ஆரம்பித்து விட்டாள்...

"ஏய் ஒன்னுமில்லடா அரு... வா ஒரு இளநீ குடிச்சிட்டு வந்தா சரியா போய்டும்...சூடா கூட இருக்கும்" என்று அவளை கல்லில் ஒரு பக்கம் அமர வைத்துவிட்டு மாறனிடம் இருந்து ஒரு இளநீரை வெட்டி வாங்கிக் கொண்டு வேக வேகமாக ஓடி வந்தவன் ....

அங்கு ஆடையின் பின் பகுதி முழுவதும் இரத்தத்துடன் நின்றுக் கொண்டிருந்த அருவியை தான் கண்டான்..

21 வயதை தாண்டிய வேந்தனுக்கு அருவியின் நிலை புரிய... "இந்த இளநீயை குடி..." என்று அவளிடம் நீட்ட..

"எனக்கு வேணா என்னமோ பண்ணுது..."என்று வேந்தனின் மீது சாயிந்து அவனை இறுக பிடித்துக்கொண்டாள்.....

"அரு.. கொஞ்ச நேரம் அப்படி தாண்டா இருக்கும்" அவனின் சட்டையை கழட்டி அருவிக்கு போட்டு விட்டவன்..

"அரு நடக்க முடியுமா...?"

"ஹும்ஹும்.."

"சரி இரு நான் இனியன்கிட்ட சொல்லி வண்டி எடுத்துட்டு வர சொல்றேன்.."

"வேணா...எனக்கு பயமா இருக்கு?"

"எதுக்கு பயம்?"

"தெரியல யாரைப் பார்த்தாலும் பயமா இருக்கு வயிறு வலிக்குது... டிரஸ்யெல்லாம் ஈரமாகியிருக்கு அதை யாராவது பார்த்துடுவாங்களோன்னு பயமா இருக்கு..." என்று அழ..

"உன்னைய அவ்வளவு தூரம் என்னால தூக்கிட்டு போக முடியாது..உன்னாலயும் நடக்க முடியாது...என்ன பண்ணலாம்?"

"நான் நடந்தே வரேன்..."என்று அழுகையுடன் சொல்ல

"வேண்டா இப்படி இரு" என்றவன் மாறனிடம் ஓடி... "உங்க வண்டியை குடுங்க" என்றான்.

"இந்தாங்க...உங்க சட்டை என்னாச்சி?"

"சட்டையை நான்தான் கழட்டிடேன், வண்டியை இனியன் கிட்ட குடுத்து விடறேன்" என்று அங்கு நிற்காமல் அருவிடம் ஓடியவன்... "அரு எழு வா போலாம்.." என்று அவளை தோளோடு அணைத்தவாறு அழைத்துக் கொண்டு வண்டி இருக்கும் இடத்திற்கு சென்றவன்..

வண்டியை எடுத்துவிட்டு அவளை பின்னால் அமர சொல்லி வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

அதுதான் இருவரும் கடைசியாக நல்லமுறையாகபேசிக் கொண்டது...அன்று வீட்டில் கொண்டுபோய் விட்டதும் பெரியவர்கள் அருவியை சூழ்ந்துக் கொள்ள... அதன்பிறகு நடக்க வேண்டிய சடங்குகளை கிருபாகரனும் தினகரனுமே செய்து முடித்திருந்தனர்.

வேந்தன் அருவியை பார்ப்பதே அரிதாகிப் போனது.

அடுத்து வந்த நாட்களில் வயது பெண் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று வீட்டு பெண்களால் அருவிக்கு பாடம் எடுக்கப் பட... வேந்தனை விட்டு இரண்டடி அல்ல இருபது அடி தள்ளி சென்று விட்டாள் அருவி...

ஷர்மிளா சொன்னதை வேறு மனதில் ஏற்றிக் கொண்டு சுற்றியவளுக்கு வேந்தன் எது செய்தாலும் தனக்கு எதிராக தான் செய்கிறான் என்று அதிகமாகவே வேந்தனை விட்டு தள்ளி சென்றிருந்தாள்.

இப்போது நினைக்கும் போது அந்த இடத்தில் அவன் வீட்டு பெண் இருந்ததால் வேந்தன் அவ்வாறு செய்யவில்லை எந்த வீட்டு பெண் இருந்திருந்தாலும் வேந்தன் அவ்வாறு தான் செய்திருப்பான் என்பது புரிய... எந்த அளவிற்கு ஒரு பாதுகாப்பான இடத்தில் இருந்திருக்கிறோம் என்று புரிந்தது.

உரிமை இல்லாதவனே ஆயிரம் வழிகளில் எல்லை மீற துடிக்கும் போது மாமன் மகள், அத்தை மகள் உறவு இருந்தும் வேந்தன் இனியன் கார்த்திக் மூவரும் எவ்வளவு கண்ணியமாக நடந்துக் கொள்கின்றனர். எந்த இடத்திலாவது உரிமையாக ஒரு தவறான பார்வை பார்த்திருப்பார்களா
என்று நினைக்க

மற்ற இருவரும் கண்ணியமாக இருப்பதற்கு கூட வேந்தனால் தான் என்று இன்று புரிந்தது.

கையில் உடையுடன் எதை எதையோ நினைத்துக்கொண்டே வந்தவள் காரின் மீது மோதி நின்றாள்.

அவளைப் பார்த்தவாறே வண்டியை விட்டு கீழே இறங்கினான் ஜீவா..

அவனை பார்த்ததும் முகத்தை திருப்பியவளை...

"நான் உனக்கு பண்ணது தப்பு தான், ஆனா அதுக்காக எல்லோருக்கும் முன்னாடி வெச்சி நீ அடிச்சதை ஒருநாளும் மறக்கவும் மாட்டேன் மன்னிக்கவே மாட்டேன் நியாபகம் வெச்சிக்கோ... இனி உனக்கு எதிரியே நான் தாண்டி... இப்போகூட பராக்கு பார்த்துட்டு வந்த உன்னை ஒரே அடியில அடிச்சி தூக்கியிருக்க முடியும்.. ஆனா அதை பண்ணல ஏன் தெரியுமா...?நீ மனசளவுல கஷ்டப்படனும் ரொம்ப டிப்ரசனுக்கு போய் பைத்தியம் பிடிச்சி சுத்தணும் அதுதாண்டி எனக்கு வேணும்" என்று கத்திவிட்டு சென்றுவிட்டான்.

அவனை ஒரு மனிதனாகக் கூட மதிக்காதவள் அவன் பேசிய வார்த்தைகளுக்கா மதிப்பு கொடுக்கப் போகிறாள்...ஒரேவேளை மதிப்பு கொடுத்திருந்தால் பின்னால் வரவிருக்கும் பிரச்சனைகளை தவிர்த்திருக்கலாமோ...என்னவோ

அருவி காருக்கு வந்ததும் கார் கடம்பூரை நோக்கி சென்றது.

போகும் வழியெங்கும் காசி தாத்தா கேள்வி கேட்டுக்கொண்டே செல்ல அதற்கு "ம்ம், இல்ல,ஆமா" என்ற வார்த்தைகளில் மட்டும் பதில் அளித்துக் கொண்டு வந்தாள் அருவி..

பேத்தியை திரும்பிப் பார்த்தவர் அவளின் வாடிய முகம் சோர்வை காட்டவும்..

"ஏன் கண்ணு வூட்டுக்கு போகதான் நேரம் இருக்கே சத்த தூங்கறது..'

"சரி தாத்தா" என்றவளுக்கும் அந்த நேரம் உறக்கம் தேவைப்பட.. கண் மூடினாள்.

மூடிய கண்களுக்குள் அவளது மாயவன் வந்து நிற்க...
"அதி..." என்றது அவளது உதடுகள்..

என்ன சொன்னோம் என்று உணர்ந்ததும் சட்டென்று கண் திறந்தவளுக்கு ஒரே குழப்பமாக இருந்தது.

"எனக்கு என்னாச்சி எதுக்கு அவனையே நினைச்சிட்டு இருக்கேன், பேசாம போறானா போய்ட்டு போகட்டும் அது எதுக்கு என்னைய பாதிக்குது..?அது என்ன புதுசா அதி..? இதுலாம் எதுக்கு? என்று அவளுக்கு அவளே கேள்விக் கேட்டுக் கொண்டிருக்க

அருவியின் மனம் அவளுக்கு சிறிது சிறிதாக புரிய ஆரம்பித்தது..

அன்று கோவிலில் வைத்து சரவணன் கேட்டப் போதே அதைப் பற்றி யோசித்திருந்தால் அவள் மனம் அப்போதே புரிந்திருக்கும் ஆனால் அதற்காக நேரத்தை வீட்டில் இருப்பவர்கள் கொடுக்கவில்லை அடுத்து அடுத்து பிரச்சனைகள் வந்து நிற்கவும் அருவியும் அதைப் பற்றி யோசிக்காமல் விட்டுவிட்டாள்.

இப்போது அதைப் பற்றி தான் யோசித்தாள். "நாங்க எல்லோரும் பாசம் காட்டும் போது வேந்தன்கிட்ட வேணுன்னு நீ ஏன் எதிர்பார்க்கற?" என்ற சரவணனின் கேள்வி காதில் ஒலிக்க..

"ஏனா அவன் என்மேல மட்டும் தான் பாசம் காட்டணும்னு நினைச்சேன்" என்று மனம் கத்தியதை கேட்டு அதிர்ந்து போனாள் அருவி.

"ஆமா இந்த கேள்வியை எப்ப கேப்பன்னு தான் காத்துட்டு இருந்தேன்... மத்தவிங்களுக்கு வேந்தனா இருந்தாலும் எனக்கு அவன் என்னோட அதி தான், அவன் எனக்கு மட்டும் தான் மாமாவா இருக்கணும், நான் மட்டும் தான் அப்படி கூப்பிடனும், தேவாவும் மாமான்னு கூப்பிடவும் தான் நான் கூப்பிடறதை நிறுத்திட்டேன்.. என்னைய முன்னாடி உக்கார வைக்காம அவளை மட்டும் உக்கார வெச்சா நான் சும்மா இருப்பானா அதா பொங்கிட்டேன்... தேவா வந்ததும் தான் எங்க ரெண்டு பேருக்குள்ளையும் நிறைய ப்ரோப்லேம் வந்தது அதுக்கு முன்னாடி அவன் எது சொன்னாலும் தட்டி விட்டு தானே போனேன்.." என்று மனம் சொல்ல.. மேலும் மேலும் அதிர்ந்துப் போனாள் அருவி.

"இல்லை நான் வேந்தனை விரும்பல வெறுக்கறேன் நீ சொல்றதுலாம் பொய் நான் நம்ப மாட்டேன்" என்று அவளுக்கு அவளே சமாதானம் சொல்லிக் கொள்ள முயல

"அடி முட்டாளே வெறுப்புக்கும் விருப்புக்கும் ஒரு நூல் இலை தான் வித்தியாசம்.. நீ வெறுக்கறேன்னு சொல்லி சொல்லியே அவனை ரொம்ப விரும்பற.. என்ன ஒன்னு அவன் அதை பண்ணாத இதை பண்ணாதன்னு சொல்றதை ஒரு காரணம் காட்டி அதுக்கு பின்னாடி உன்னோட விருப்பத்தை மறைச்சி வெறுப்பை வெளிக்காட்டிக்கிட்ட அவ்வளவு தான்...மத்தபடி வேந்தனை உன்னை மாதிரி யாரும் லவ் பண்ண மாட்டாங்க..."என்றது மனது.

"அப்போ நான் அவனை விரும்பறன்னா?"

"இன்னும் என்ன டவுட்டு...?"

"இல்ல நீ பொய் சொல்ற அவனை நான் லவ் பண்ண மாட்டேன். அவன் என்னைய அடிமையா வெச்சிக்கனும்னு பார்க்கறான், அதுக்கு நீயும் உடந்தையா?"

"பைத்தியமே ... அவன் உன்னைய அப்பா ஸ்தானத்துல இருந்து பார்த்துக்கறான். உன்னைய தாங்கறான்..இதுலாம் உனக்கு புரியுதா இல்லையா?"

"கிழிச்சான் அப்பா மாதிரி பார்த்துகிட்டானா இதுல இருந்தே நீ பொய் சொல்றேன்னு தெரியல எங்க ஒரு விஷயம் சொல்லு"

"உன் அப்பாவா இருந்திருந்தா நீ என்ன பண்ணாலும் சரினு சொல்லுவாரா?, தப்பு செஞ்சா கண்டிக்க தானே செய்வாரு.. அதை தான் வேந்தன் செஞ்சான், நீ கேக்கறதுக்கு முன்னாடி உங்கிட்ட எல்லாமே இருக்கும் நீ கேக்கற அளவுக்கு அவன் வெச்சிக்கவே மாட்டான், கண்டிக்கும் போது கண்டிச்சி தாங்கும் போது உனக்கே தெரியாம தாங்கி உனக்கு எது நல்லது எது கெட்டதுன்னு ஒவ்வொன்னையும் பார்த்து பார்த்து செஞ்சிருக்கான். என்ன ஒன்னு அதை பாசமா செய்யாம அதிகாராம செஞ்சிட்டான் அவ்வளவு தான்" என்று புரிய வைக்க முயல அருவிக்கு தான் ஒன்றும் புரியாமல் தலை சுற்ற ஆரம்பித்தது.

"அவன் பண்ணதை விடு..
அவன் என்னய லவ் பண்றேன்னு பண்ணல இப்போவும் அவன் தங்கச்சிக்காக தான் என்னைய கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொன்னேன்..ஆனா
நான் எந்த இடத்துல இருந்து அவனை லவ் பண்ண ஆரம்பிச்சேன்?எனக்கு புரியல" என்று சந்தேகமாக கேக்க..

"எந்த இடத்துல லவ் ஆரம்பிச்சதுன்னு லவ் பண்ற யாரைக் கேட்டாலும் சொல்ல முடியாது.. ஏதோ ஒரு இடத்துல உனக்கு வேந்தனை பிடிச்சிருக்கலாம். இப்போவும் சொல்றேன் நீ வேந்தனை லவ் பண்ற" என்று மனம் அடித்து சொல்ல..

முதலில் இருந்து வேந்தனுடன் நடந்த ஒவ்வொரு பிரச்சனையையும் நினைத்துப் பார்க்க.. அன்று அனைவரும் அவள் மீது சந்தேகப்படும் போதுக் கூட.. வேந்தன் எதுவும் பேசாமல் நின்றான் கல்யாணம் இப்போதைக்கு வேண்டாம் என்று சொன்னானே தவிர அவளை ஒரு வார்த்தை தவறாக பேசவில்லை. என்று தோன்றியது.பலவற்றை நினைத்துப் பார்த்துக் கொண்டே மனம் முழுவதும் வேந்தன் பக்கம் சாய்ந்து விட்டது...வீடும் வந்துவிட்டது.

"அரு கண்ணு'

"தாத்தா.."

"இறங்கு வீடு வந்துடுச்சி"

"சரி தாத்தா" என்று இறங்க... அம்சவேணி பாட்டி, "கண்ணு எப்படிடா தங்கம் இருக்க?" என்று கன்னத்துடன் கன்னம் வைத்து இழைந்தார்.

"என்ன கிழவி ஒரு சுத்து பெருத்துட்டப் போல... என்னைய பார்க்காமல் எளச்சி துரும்பா போயிருப்பன்னு பார்த்தேன்" என்று கிண்டல் செய்யவும்

"போக்கிரி போடி.. நான் எதுக்கு எளைக்கனுமா? இந்த கிழவியை பார்க்க வாரனும்னு உனக்கே அக்கறை இல்லையாக்கோ... அத நினைச்சி நான் ரா, பகலா சோறு தண்ணி வுண்ணாம இருக்கனமோ போடி..."

"அதானே நீ எதுக்கு திங்காம இருக்கப் போற கொஞ்சமாவது பேத்தியை பார்க்கணும்னு ஆசை இருந்தா அப்டி இருப்ப...."

"அதை விடு கண்ணு... இன்னும் எத்தனை நாளைக்கு இங்க இருப்ப..?"

"ஒரு மாசம் இங்க தான் டேறா"

"அதுக்குப்பொறவு"

"அதுக்கு பொறவு உன் பேரன் விட்டு வைக்கணுமே..கம்முனு இங்கனவே ஒரு மாப்பிள்ளை பார்த்து கட்டி வெச்சிடு கிழவி... இங்கவே இருந்துடுவேன்ல.."

"ராசா கணக்கா என் பேரன்ங்க இருக்கப்ப நான் எதுக்குடி அசல மாப்பிள்ளை பாக்கனோம்..?"

"ராசா" என்றதும் வேந்தனின் கம்பிரமான நடையும் ஆளுமையான பேச்சும் தான் நினைவுக்கு வந்தது.

"திமிரு புடிச்சவன்... நார்மல நாலு வார்த்தை பேசவே நானூறு தடவை யோசிப்பான்" என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்

"ஏண்டி கிழவி வெளியே வெச்சே எல்லாத்தையும் பேசுவியா? . புள்ள முகம் வாடிக் கிடக்கு கூட்டிட்டு போய் காபி தண்ணி பலகாரம் ஏதாவது கொடுப்போம்ன்னு இல்லாம வெட்டி வாய் பேசிட்டு இருக்கறவ.." என்றார் காசி தாத்தா..

"ஆமா நான் தான் கிழவி இவர் துள்ளி விளையாட கொமாறன்... எனக்கெல்லாம் தெரியும் செத்த வாயை மூடுங்க" என்றவர்.

"அரு கண்ணு போய் குளிச்சிட்டு வரியா...பாட்டி சாப்பாட உனக்கு பிடிச்சதை செஞ்சி வெச்சிருக்கேன் சாப்பிடலாம்" என்றார்.

"சரி இரு..."என்னும் போதே தாத்தாவின் அலைபேசி அடித்தது.

அவர் அதை எடுத்துக் கொண்டு வெளியே செல்ல.. அருவி பையை எடுத்துக் கொண்டு ஒரு அறைக்கு சென்றாள்.

கடம்பூரில் பெரிய குடும்பங்களில் காசிலிங்கம் குடும்பமும் ஒன்று..பாக்கு மர தோட்டம் மட்டும் பத்து ஏக்கரில் வளர்ந்து நிற்க.. தேக்கு மரம் ஐந்து ஏக்கரில் வளர்ந்து நின்றது ..

வயதானவர்களை விவாசாயம் பார் என்று கஷ்டப்படுத்துக் கூடாது என்றும் அதே சமயம் இடத்தை தரிசாக போட்டு வைக்க கூடாது என்றும் பத்து வருடத்திற்கு முன்பே கிருபாகரனும் தினகரனும் சேர்ந்து தான் இந்த ஏற்பாட்டை செய்திருந்தனர்.

அதில்லாமல் வீட்டு செலவிற்கு என்று 20 தென்னை, மா, பலா கொய்யா, வாழை, என்று பல பழ மரங்களை வைத்திருந்தனர்... அதற்கு நோய் விழுந்தாலும் மருந்து அடிக்காமல் இயற்கை முறையில் விவசாயம் செய்து ஆரோக்கிய வாழ்வை வாழ்ந்தனர் பெரியவர்கள்.

நிர்மலாவிற்கு இங்கு வசதிக்கு குறைவு எதுவும்மில்லை... ஆனால் அவர் தாய் வீடு நோக்கி வந்ததற்கு முதல் காரணம் 15 வருடத்திற்கு முன்பு பள்ளிக்கோ மருத்துவமனைக்கோ செல்ல வேண்டும் என்றால் பத்து கிலோமீட்டர் தூரம் வரை செல்ல வேண்டும்.. இப்போது அதற்காக வசதிகள் வந்துவிட்டாலும் அப்போது அது இல்லையே.. குழந்தைகளை வைத்துக்கொண்டு அங்கிருப்பதற்கு ஓரளவிற்கு அடிப்படை வசதிகள் இருந்த அண்ணன்களின் ஊரில் இருப்பது பாதுகாப்பு என்று கருதி தான் அங்கு சென்றார்.

அவர் கணவன் இறந்ததும் பிள்ளைகளை அழைத்துச் செல்ல அனைத்திற்கும் மாமனாரை எதிர்ப்பார்க்க வேண்டிருந்தது. வயதானவர்களை கஷ்டப்படுத்தக் கூடாது என்று எண்ணமும் ஒரு காரணம் தான் இப்படி பலக் காரணங்களை தன்னுள் வைத்திருந்தார் நிர்மலா..

சுடுதண்ணீரில் குளித்துவிட்டு அறைக்கு வந்தவள்... ஊருக்கு வந்துவிட்டதை நிருவிற்கு அழைத்து சொல்லலாம்... மேலும் சுமதியை பற்றியும் அவனிடம் பேச வேண்டும் என்று அவனின் எண்ணிற்கு அழைக்க.

நிருவோ வேலைப் பார்த்துக் கொண்டிருந்ததால் அருவியின் அழைப்பை எடுக்கவில்லை.

"நைட் ஏழு மணிக்கு கூட இவனுக்கு வேலை இருக்கும்" என்று நினைத்தவள். அடுத்து ரித்துவிற்கு அழைத்தாள்.

ரித்து அருவி அழைக்கிறாள் என்றதும் அலைபேசியை எடுத்துக் கொண்டு சோபாவில் வந்து அமர... அங்கு வேந்தன் தன்னுடைய கணக்கு வழக்குகளையும் அரிசி ஆலையின் கணக்கு வழக்குகளையும் பார்த்துக் கொண்டிருந்தான்

"சொல்லு அரு..." என்று ரித்து சொன்னதும் எழுதிக் கொண்டிருந்த வேந்தனின் கை ஒரு நொடி நின்று மீண்டும் இயங்கியது. வேலை என்னவோ கணக்கை பார்ப்பதாக இருந்தாலும் அருவி என்ற பெயரைக் கேட்டதும் காதிரண்டும் ரித்து பேசுவதை கேட்பதில் தான் கவனமாக இருந்தது.

"வீட்டுக்கு வந்துட்டோம் ரித்து."

"ஓ வீட்டுக்கு போயிட்டீங்களா.. பாட்டி என்ன பண்றாங்க?"

"எனக்கு சாப்பாடு எடுத்து வைக்கிறேன்னு போனிச்சி..'

"இனி ஒரு மாசத்துக்கு உன்னைய கையில் புடிக்க முடியாது ஒரே ஜாலியா தான்"

"தனியா என்னடி ஜாலி பண்ணுவாங்க... நீயும் வந்துருக்கலாம்ல.?"

"தனியா இருந்தாலும் உனக்கு ஜாலி தான், போற இடத்தை உனக்கு தங்குந்த மாதிரி நீ மாத்திக்க மாட்ட..அப்புறம் என்ன?"

"ம்ம் சரி அதைவிடு நிரு வீட்டுலையா இருக்கான்".

"இல்லையே இன்னும் மாமா வீட்டுக்கு வரல ஏன்?"

"அவனுக்கு கூப்பிட்டேன் அவன் எடுக்கல..யாரு பக்கத்துல இருக்க..?"

"பெரிய அண்ணா தான் இருக்காங்க இரு கொடுக்கறேன்" என்றதும்

"ஏய் ரித்து வேணா வேணா.. நான் நிரு வந்ததுமே பேசிக்கறேன்.. ஏய் குடுக்காதடி" என்று அந்த புறம் அருவி கத்திக் கொண்டிருக்க.

ரித்து வேந்தனிடம் அலைபேசியைக் கொடுத்து "அண்ணா அரு உங்க கிட்ட பேசணுமா?" என்று வேறு சொல்லி வைத்தாள்.

சந்தேகமாகவே வாங்கியவன் அந்தபக்கம் அருவி "வேணாடி குடுக்காத" என்று கத்திக் கொண்டிருப்பதை கேட்டு "க்குஹும்னு" என்று கனைத்தான்.

"ஹா.... அது.." என்று முதன் முறையாக வேந்தனிடம் பேச தடுமாறினாள் அருவி.

இதுநாள் வரை அவனை எதிர்த்து பேசும் போதும், சரி தான் நினைத்ததை சொல்லும் போது சரி பட்டென்று சொல்லிவிடுபவள்.

இன்று அவள் மனதை அறிந்து இன்னும் தெளியாத சில குழப்பங்களை மனதில் சுமந்துக் கொண்டிருக்கும் போது வேந்தனிடம் பேச தயக்கம் வந்தது.

"ம்ம்.."

"அது ..நம்ப வயல்ல சுமதின்னு என்னோட பிரண்ட் வேலை செய்யறா"

----------

"கேக்கறாரா இல்லையா..... சரின்னு சொன்னாதான் என்னவா... நான் பேசறது கேக்கறா இல்லையானு எனக்கு எப்படி தெரியும்.?" என்று முனவ..

"ம்ம்" என்றான் அழுத்தமாக.

"அவளுக்கு வேற இடத்துல வேலைக்கு ஏற்பாடு பண்ணனும்.. இந்த லீவ்ல வரும் போது அதைப் பத்தி அண்ணாக்கிட்ட பேசணும்னு இருந்தேன்" என்றவள்..
"ஏன்?" என்ற கேள்வியில் தயங்கி நின்றாள்.

"அது அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கறாங்க வெய்யில இருந்து இருந்து கருத்து போய்ட்டா..அதனால வர வரன்லா தட்டிப் போகுதுன்னு கடைசியா போன் பேசும் போது சொன்ன நெவுல்ல இருக்கற மாதிரி ஒரு வேலையை ஏற்பாடு பண்ணிக் குடுத்தா நல்லா இருக்கும்னு அண்ணாக்கிட்ட சொல்லலாம்னு தான் ..."

"ம்ம் ஏற்பாடு பண்ணிடலாம்."

"ஹப்பா மூனு வார்த்தை பேசிட்டான்" என்று நினைத்தவள் அதற்கு பிறகு என்ன பேசுவது என்று அமைதியாக இருக்க. இந்த பக்கம் வேந்தனும் அமைதியாக இருந்தான்.

ரித்துவை மாலதி அழைக்கவும் அவள் சென்று விட்டாள்.

"அப்புறம்..ஒன்னு சொல்லணும்?"

"ம்ம்"

"அது... இல்ல ஒன்னுமில்ல.."

அருவியிடம் இருந்த மாற்றத்தை வேந்தனின் மனம் குறித்துக் கொண்டது. எதா இருந்தாலும் அவள் தான் பேச வேண்டும் என்ற பிடிவாதத்தில் இருந்து மட்டும் வெளியே வரவில்லை வேந்தன்.

இருவரும் அழைப்பை துண்டிக்காமல் அமைதியாக இருக்க..

"கண்ணு வந்து சோறு தின்னு" என்று பாட்டி சத்தம் போடவும்.

"நான் போகட்டுமா பாட்டி கூப்பிடுது"

-----------

"ஹெலோ.."

"ம்ம்.."

"பாட்டி சாப்பிட கூப்பிடுது நான் போறேன்"

"ம்ம்"

இருவரும் மனம் விட்டு பேசிக் கொள்ளவில்லை என்றாலும் அழைப்பு துண்டிக்க மனம் வரவில்லை. இரவு முழுவதும் பேசாமல் இப்படியே இருக்க சொலிருந்தாள் கண்டிப்பாக இருந்திருப்பர்.

கடைசி வரை வேந்தன் அலைபேசியை வைக்கவில்லை.. அருவி தான் அழைப்பு துண்டித்துவிட்டு ஓடினாள்.

காதில் இருந்து அலைபேசியை எடுத்து சோபாவில் போட்டவன் 'உப்ப்ப்ப்ப" என்று ஒரு பெரு மூச்சு ஒன்றை வெளியிட்டவன் கீழே சென்றான்.

"அத்த அத்த...அம்மா அத்த எங்க..?"

"அண்ணி அந்த பக்கம் இருக்கு.."

"ம்ம்" என்று பின்புறம் போனவன்.. நிர்மலாவைப் பார்த்ததும்.

"அத்த"

"ஹா சொல்லு வேந்தா.."

"பண்ணையில முட்டை எடுக்க ஆள் பத்தலன்னு சொல்லிட்டு இருந்திங்க"

"ஆமா... அந்த சரசு பையன் தான் கொஞ்ச நாள் வந்தான்.. நிரு தான் ஸ்கூல் லீவ்னா மட்டும் வா இதுக்காக ஸ்கூல் போகாம இருக்கக் கூடாதுன்னு சொல்லி நிறுத்திட்டான்."

"அதுக்கு ஒரு ஆளை அனுப்பி வைக்கிறேன் எந்த வேலைனாலும் குடுங்க... ஆன வெய்யில் போற வேலை மட்டும் வேண்டா.."

"யாரு வேந்தா அது?"

"நம்ப வயல வேலை செய்யற பொண்ணு தான். பேரு சுமதி"

"ம்ம் அந்த காத்தாயி மகளா?"

"ம்ம்"

"சரி வர சொல்லு"

"ம்ம் நான் நாளைக்கு அந்த பொண்ணைப் பார்த்து சொல்லிடறேன்" என்று சென்று விட்டான்.
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Saroja

Well-Known Member
நல்லா இருக்கு பதிவு
அருவி சொல்ல வேந்தன்
கேட்டு செய்வது :love::ROFLMAO:
 
Akila

Hi
Nice update.
Wondering with Vendhan's changes.
Will Jeeva's curse affect Aruvi.?
But Vendhan is there.
Waiting for your further interesting update.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top