மாயவனின் அணங்கிவள் -26

Advertisement

Priyamehan

Well-Known Member
"எனக்கு ஒன்னும் அப்சக்சன் இல்லப்பா இனியன் கிட்டையும் கார்த்திக்கிட்டையும் கேளுங்க..."

"அவங்க உனக்கு பொண்ணுக் கொடுக்க தான் விரும்பறாங்க போலவேந்தா.. உன்கிட்ட தான் பேசணுன்னு சொன்னான்.."

"சாரிப்பா எனக்கு இதுல விருப்பமில்ல... முதல ரித்துவுக்கு கல்யாணம் பண்ணனும்... அதுக்கு அப்புறம் என்னையப் பத்தி யோசிக்கலாம், எனக்கு வெளியே பொண்ணு எடுக்க விருப்பமில்ல என்று அருவியைப் பார்க்க அவளோ யாருக்கு வந்த விருந்தோ என்று சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்."

"எங்களுக்கும் அதுதான் அண்ணா ரித்து இருக்கும் போது எங்களுக்கு என்ன அவசரம்? வாசுதேவன் குடும்பத்தைப் பத்தி நானும் கேள்விப்பட்டுருக்கேன் நல்லக் குடும்பம் தான் ஆனா எனக்கு இப்போதைக்கு கல்யாணத்துல விருப்பமில்ல" என்று இனியன் சொல்ல கார்த்திக்கும் அதை தான் சொன்னான்.

"அப்போ ரித்துவுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சா சரியாப் போய்டும்...உங்களுக்கு அடுத்து அடுத்து கல்யாணம் பண்ணிடலாம்" என்று கிருபாகரன் சொல்ல

"எதுக்குப்பா வெளியே மாப்பிள்ளை தேடறீங்க? நம்ப நிருவை உங்களுக்கு தெரியலையா?"

"ஐயோ வேந்தா நான் நிருவை வேண்டாம்னு எப்போ சொன்னேன்... மாப்பிள்ளை பார்க்கலாம்ன்னு தானே சொன்னேன்.. என் மனசுலையும் நிரு தான் இருக்கான் நான் அவனை சொன்னா நீயும் உங்க அம்மாவும் வேண்டாம்னு சொல்லுவீங்க இதுலாம் தேவையா? எனக்கு என் பேச்சுக்கு மதிப்பு அத்துப் போய் ரொம்ப நாள் ஆகுது" என்று மாலதி அருவியை மறைமுகமாக வேண்டாம் என்று சொன்ன நினைவில் பேசினார்.

நிருவைப் பற்றி பேசியதும் அருவிக்கு அதிர்ச்சியில் வேகமாக நிமிர்ந்து பார்த்தாள்.

ரித்துவை தவிர முறைப் பெண் யாருமில்லை அவளோ சரவணனை காதலிக்கிறாள் என்னும் போது எப்படி தன் அண்ணனை திருமணம் செய்துகொள்வாள்.. அப்படியே செய்துகொண்டாலும் அவர்களின் வாழ்க்கை எப்படி சந்தோசமாக போகும்...கூட பிறந்த அண்ணனுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று ஒரு பக்கம் எண்ணம் இருந்தாலும் தன் நண்பன் ரித்துவை எந்த அளவிற்கு காதலிக்கிறான் என்று கூட இருந்தேப் பார்த்திருக்கிறாள்.. அவனின் காதலை பிரிப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்று ஒரு நிமிடத்தில் ஆயிரம் சிந்தனைகள் சிந்தயையை நிறைக்க யாரைப் பற்றியும் கவலைப்படாமல் பேச ஆரம்பித்து விட்டாள்.

"நிருவுக்காக ... நோ நிரு ரித்துவை கல்யாணம் பண்ணிக்க மாட்டான் தேவையில்லாம இந்த பேச்சை எடுக்காதீங்க" என்றாள் அருவி.

"அரு அமைதியா இரு... மாமா வேந்தன் என்கிட்ட இந்த விஷயமா பேசுனான் எனக்கு எந்த அப்ஜக்சனும் இல்ல ரித்துவை கல்யாணம் பண்ணிக்கறேன்... நீங்க ஜாதகம் பார்க்கணும்ன்னா பார்த்துடுங்க" என்று நிரூபன் அருவியின் பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைக்க...

"நிரு நீ என்ன லூசா?, அன்னிக்கே உங்கிட்ட இதைப் பத்தி சொன்னேன்ல ரித்து உனக்கு செட்டாக மாட்டா, சொன்னா கேளு, ப்ளீஸ் உன் வாழ்க்கையை கெடுத்துக்காத" என்று எங்கு தன் அண்ணன் வாழ்க்கை வீணாக்கிவிடுவார்களோ என்ற பயத்தில் அருவி மறைமுகமாக நிரூபனுக்கு புரிய வைக்க பேசிக் கொண்டிருக்க

"எனக்கு எல்லாமே தெரியும் அரு...இதுல நீ தலையிடாம இருந்தா தான் நல்லது" என்று எழுந்து செல்லப் போக

"இரு நிரு... உன் தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணாம உனக்கு கல்யாணம் பண்ண முடியாதுல.. அதைப் பத்தியும் பேசிடுவோம்" என்று வேந்தன் நிருவை அமர வைக்க...

அங்கு சுற்றி இங்கு சுற்றி கடைசியில் தன்னிடம் வந்து நிற்கும் வேந்தனைக் கண்டு உள்ளுக்குள் ஆத்திரம் பொங்கியது அருவிக்கு... நிரு வேண்டும் என்றால் வேந்தனை எதிர்த்து பேசாமல் இருக்கலாம் ஆனால் தான் எதற்காக பேசாமல் இருக்க வேண்டும்? தன்னிடம் வரட்டும் நன்றாக பேசிவிட்டு விட வேண்டும் என்று மனதில் நினைத்துக்கொண்டிருக்க...

"அப்போ அருவிக்கு" என்று மாலதி எதையோ சொல்ல வர..

"அம்மா வெளியே மாப்பிள்ளை பார்க்க போறிங்களா?" என்று வேந்தனும் அன்று மாலதி பேசியதை வைத்து நக்கலாக கேட்டான்.

"இல்ல வேந்தா" என்று அவர் தயங்கவும்

"எனக்கு அவளை பிடிச்சிருக்கு... எனக்கும் அவளுக்கும் கல்யாணம் ஏற்பாட்டைப் பண்ணுங்க, எங்க கல்யாணம் முடிஞ்சதும் அடுத்த மூகூர்த்ததுல நிரு ரித்து கல்யாணத்தை வெச்சிக்கலாம்" என்றான் தட்டில் இருந்த உணவை அலைந்துக் கொண்டே

அதில் தேவாவிற்கு ஒருப் பக்கம் வேதனை என்றால் அருவியைப் பற்றி சொல்லவா வேண்டும்... உலகமே தலைக் கீழாக சுற்றுவது போல் இருந்தது.

அங்கிருந்த அனைவருமே வேந்தனின் இந்த வார்த்தையில் அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் பார்க்க கார்த்திக்கும் இனியனும் அர்த்தத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

"ரொம்ப சந்தோசம் வேந்தா நானே இதைப் பத்தி உங்கிட்ட பேசணும்னு இருந்தேன்" என்று கிருபாகரன் சொல்ல நிர்மலாவிற்கு ஆனந்தக் கண்ணீர் கூட வந்துவிட்டது

தனக்கு பின் தன் அண்ணன்களின் உறவு தன் குழந்தைகளுக்கு கிடைக்காமலையே போய்விடுமோ என்று பயம் நிர்மலாவின் மனதை சமீப காலமாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்க... தற்போது அந்த கவலை இல்லை என்ற சந்தோசத்தில் ஆனந்த கண்ணீர் வந்தது.

எல்லோரும் வேந்தனின் ஆசையில் சந்தோஷமாக இருக்க... ஒவ்வொருவரும் வேந்தனை உச்சி முகர்ந்து அவர்களின் சந்தோசத்தை வெளிக் காட்டிக் கொண்டிருந்தனர்... அருவியைப் பற்றி யாரும் கவலைக் கொள்ளவில்லை..அவளுக்கு விருப்பம் இருக்கிறதா என்று எந்த கேள்வியும் யாரும் கேக்கவில்லை.. வேந்தனை கட்டிக்க கசக்குமா என்ற எண்ணத்தில் தான் இருந்தனர்.

பொறுத்து பொறுத்துப் பார்த்தவள் பொங்கி விட்டாள் அருவி..

சாப்பாட்டு தட்டை தூக்கி சுவற்றில் அடித்து மொத்த கவனத்தையும் தன் பக்கம் திருப்பியவள்.

"எப்போமே இவர் விருப்பத்தை மட்டும் தான் கேப்பிங்களா? எனக்குன்னுக்கு ஒரு விருப்பம் இருக்கு அதைக் கேக்கணும்னு உங்களுக்கு தோணலையா?" என்று கத்தினாள்.

அதில் வேந்தன் இரு கண்களையும் சுருக்கி நெற்றியில் யோசனை ரேகை விழ அருவியைப் பார்க்க

"அரு, வேந்தன் மாதிரி ஒரு பையன் கிடைக்க நீ குடுத்து வெச்சிருக்கணும், நீ வேண்டான்னு வேற சொல்லிவியா?" என்று நிர்மலா சத்தம் போட்டார்.

"என்னய்ய நம்பாத நீங்களாம் எனக்கு அட்வைஸ் பண்ண வந்துட்டீங்க...என்று இளக்காரமாக நிர்மலாவைப் பார்த்துக் கேக்கவும் அவர் அதிர்ச்சியில் அமைதியாகிவிட்டார்.

வேந்தன் மீதிருந்த கோவத்தில் என்னப் பேசுகிறோம் என்பதை உணராமல் வாய்க்கு வந்ததை கொட்டினாள்.

"என்ன சொன்னிங்க நான் குடுத்து வெச்சிருக்கணுமா? ஆமா நான் குடுத்துதான் வெச்சிருக்கணும் இவர் கிட்ட என்னோட தன்மானத்தை சுயகவுரவத்தைன்னு எல்லாத்தையும் கொடுத்து வெச்சிட்டு நான் ஒரு அடிமையா இவர் சொல்றதுக்கெல்லாம் தலையை ஆட்டிட்டு இருக்கனும் அதானே ...என்றதும்

வேந்தன் அருவியை ஆழமாக பார்த்தான் அவனுக்கு இதுபோன்று ஏதாவது கிளம்பும் என்று தெரியும்... ஆனால் தன்னைய பிடிக்கவில்லை என்று சொல்ல மாட்டாள் என்று உறுதியாக நம்பினான்... அந்த நம்பிக்கை தான் இப்போது ஆட்டம் கண்டுக் கொண்டிருந்தது.

"உங்க எல்லோருக்கும் ஒன்னு தெரியுமா நான் இந்த உலகத்துலயே அதிகம் வெறுக்கறது இதோ இந்த ஆளை தான் .. பார்த்தாலே பிடிக்கல , மூஞ்சுலையே முழிக்கக் கூட புடிக்கல இவரை கண்டாலே உடம்புல கம்பளி பூச்சி ஊற மாதிரி இருக்கு" என்று கத்த
அங்கிருந்த அனைவருக்குமே அருவியின் இந்த அதீத வார்த்தை அதிர்ச்சியை உண்டாகியது.

"என்ன பேசற அருவி நீ...? என் பையனுக்கு என்ன குறைச்சல் அவனுக்கு பொண்ணுக் குடுக்க எங்க இருந்துலாம் வராங்கன்னு தெரியுமா? ஒழுக்கத்துக்கு பேர் போனவன் இதுவரைக்கு பொண்ணுங்களை தப்பாப் பார்த்து பார்த்துருக்கியா? இல்ல தண்ணி தம்முனு எந்த கெட்டப் பழக்கம் தான் இருக்கா... ஓ உங்களுக்குலாம் இதுமாதிரி நல்லவனா இருந்தா தான் பழம்ன்னு புடிக்காம போய்டுதுல... தினம் குடிச்சிட்டு வந்து அடிக்கறவனை தான் புடிக்கும்" என்று மாலதி தன் மகனை பிடிக்கவில்லை என்று அமைதியாக போயிருந்தால் கூட இந்த அளவிற்கு பேசியிருக்க மாட்டார். கம்பளி பூச்சி ஊறுவது போல் இருக்கிறது என்று அனைவரின் முன்னிலையிலும் வேந்தனை அவமானப்படுத்தவும் தான் பெற்ற தாயால் பொறுத்துக் கொள்ள முடியாமல் பேசிவிட்டார்.

"பொண்ணுங்க வரிசையில நின்னா தாராளமா குடுங்க அத்தை யார் வேண்டான்னு குறுக்க கிடந்து தவிச்சா... "

"அரு உனக்கு வேந்தனைப் பத்தி தெரியல அவனுக்கு பிடிக்கலைன்னா இப்படி எல்லோருக்கும் முன்னாடி சொல்ல மாட்டான்,அதுக்காக நீ பேசற வார்த்தை அதிகம்" என்று நிரு வேந்தனுக்கு ஆதாரவாக பேச

"உன் வாழ்க்கையில தலையிடக்கூடாதுன்னு சொல்லிட்டில... என்னோட வாழ்க்கையில நீயும் தலையிடாத ... வாழப் போறது நான் தான் நீயில்ல உன்னோட விசுவாசத்தையெல்லாம் என் வாழ்க்கையில காட்டாம ஒதுங்கி நில்லு, வந்துட்டான் பெருசா பேச" என்றாள்..

இதுதான் அருவிக்கு கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு இன்று வேந்தனை அவமானப்படுத்திக் கொண்டால் தான் இதுபோன்ற வாய்ப்புகல் இனி கிடைக்கப்போவதில்லை..பலநாள் வெறுப்பை இன்று கொட்டி தீர்த்துக்கொண்டிருந்தாள்.

வேந்தன் அனைத்தையும் கசங்கிய முகத்துடன் பார்த்திருந்தான்

"அரு.... "என்று அடுத்ததாக இனியன் வர

"நீ சும்மா இரு" என்றவள் "நேத்து எதுக்கு தெரியுமா? அந்த மணல் வீடு உடைச்சதும் அழுதேன்... என்று நிறுத்தியவள்.

"இந்த வீட்டுக்கு வந்ததுள இருந்து எந்த பொருள் வாங்கினாளும் என் கையில குடுக்கும் போது ஒரு இக்கு வெச்சி பேசுவீங்களே நியாபகம் இருக்கா...? உங்களுக்கு மறந்துருக்கும் எனக்கு மறக்கற விசயமா அது..?

அப்பா இல்லாத பொண்ணு வாங்கி கொடுக்கயில்லைனா பொக்குன்னு போய்டுவா.... அப்பா இல்லாத பொண்ணு ரித்துக்கு மட்டும் வாங்குனா ஏங்கி போய்டுவா... அப்பா இல்லாத பொண்ணு நம்ப வாங்கி தராம யார் வாங்கி தருவா, இப்படி சொல்லி சொல்லி தான் ஒவ்வொரு பொருளும் என் கைக்கு வரும்... ஒன்னு கைக்கு வந்ததுக்கு அப்புறம் சொல்லுவீங்க இல்லையா சொல்லிட்டு கையில கொடுப்பிங்க..

அப்பா இல்ல உறவுகளாவது இருக்கனும்னு தான் அம்மா இங்க கூட்டிட்டு வந்தாங்க.... ஆனா நீங்க உறவா எனக்கு இருந்திங்களான்னு தெரியல எனக்கு அப்பா இல்லைனு சொல்லி சொல்லி இத்தனை பேர் இருந்தும் என் அப்பாவை நல்லா தேட வெச்சீங்க...அது மட்டும் உறுதி,உங்களுக்கு பிடிச்சதை வாங்கி குடுத்தீங்களே தவிர அது எனக்கு புடிக்குமான்னு ஒருநாள் கேட்டதில்லை நேத்து மட்டும் தான் அந்த மணல் வீட்டுல ஒவ்வொரு இடமும் எனக்கு பிடிச்சதா இருந்தது...நான் சொன்னதுக்காக இதோ இவர் செஞ்சிக் குடுத்தது அது உடைஞ்சி போக தான் அவ்வளவு அழுகை அழுதேன் ஒரு மணல் வீடு உடைஞ்சி போன அழுகிற நிலைமை தான் நான் இருக்கேன்... இன்னைக்கு கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்றவர் தான் எனக்காக ஆசையா ஒரு பொருளைக் கூட வாங்கி தராதவர், யார் யாரையோ அழைச்சிட்டு வர கார் எடுத்து போவார் லீவ்ல வீட்டுக்கு வர எங்களை அழைச்சிட்டு வர வரணும்னு தோனதில்ல, கேரளா போகும்போது எந்த கார்ல போகணுன்னு கூட நான் ஆசைப்படக்கூடாது எந்த இடத்துக்கு போகணும்னு நான் ஆசைப்படக் கூடாது, எல்லாமே உங்க ஆசைமகன் தான் ஆசைப்படனும் அவர் சொல்ற மாதிரி தான் நாங்க கேக்கணும்.. இப்போ இருக்கற மாதிரி வாழ்க்கை முழுக்க என்னால இருக்க முடியாது... ஏய் ச்சீ வா இதுதான் இவர் என்னைய அதிகமாக கூப்பிட்ட வார்த்தை என் பேரு என்னனு கேளுங்க மறந்து போயிருப்பார் ஏன்னா என் பேரு சொல்லிக் கூப்பிட்டா தானே பேர் நியாபகத்துல இருக்கும் இவருக்கு என்னய்ய கல்யாணம் பண்ணிக்கணுமா..." என்று நக்கலாக கேட்டவள்...

"குடும்ப நடத்த பொண்ணு தேடறீங்களா இல்ல உங்க காலை சுத்தி வந்து வீட்டு வேலைப் பார்க்க வேலைகாரி தேடறீங்களா ...? இந்த வீட்டை விட்டு எப்போடா போவோம்னு நானே ஏங்கி கிடைக்கேன்,என்றவள் அன்று கார்த்திக்கிடம் சொன்னதையும் சொன்னாள்,தயவு செஞ்சு விட்டுருங்க என்னைய" என்று எழுந்துக் கொண்டாள்.

புயல் அடித்து ஓய்ந்தது போல் இருந்தது அந்த இடம்.
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Lakshmimurugan

Well-Known Member
மனதில் அடைத்து வைத்திருந்ததை எல்லாம் கொட்டி விட்டாள், வேந்தன் நிலைமை ‌
 
sumee

Well-Known Member
Appa illainna thani veetla kudi vachu support panniyirukkanum. Aruviyoda aathangathai ellam sollitta. Parkkalam ithukku enna react panna porangannu.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top