மாயவனின் அணங்கிவள் -24

Advertisement

Priyamehan

Well-Known Member
அன்று மதியம் வரை ஒரு ரைடையும் விடாமல் அனைத்திலும் சென்றனர் அருவி கார்த்திக் இனியன் மூவரும்..

வேந்தனுடன் சென்ற ரித்துவிற்கு தலை சுற்றல் வாந்தி வந்ததால் தேவாவை அழைத்துக் கொண்டு நிரு சில ரைடுகள் செல்ல வேந்தன் ரித்துவிற்கு துணையாக நின்று விட்டான்.

"மதியம் சாப்பிட்டதும் சில ரைடு போக வேண்டும்" என்றாள் அருவி...

"என்னால முடியாது அரு... குடல் வாய் வழியா வந்துடும் போல, போதும் வேற எங்கவாது சுத்திப் பார்க்க போலாம்" என்று இனியன் ரித்துவுடன் அமர்ந்துக் கொள்ள

"கோஸ்ட் ஹவுஸ் மட்டும் போலாம்டா, ப்ளீஸ் இனி அதுக்காகவாது வா..." என்று இனியனை அழைக்க அவன் மாட்டேன் என்று உறுதியாக மறுத்துவிட்டான்.

" கார்த்திக் நீ.." என்று அருவி அவன் பக்கம் போக...

"ஐயோ அவனுக்காவது இனி தான் குடல் வெளியே வரணும் எனக்கு ஆல்ரெடி வந்துடுச்சி போடி அந்த சைடு, ரைடு போலாம்னு கூட்டிட்டு போய் குடலை உருவிட்டா" என்று சொல்ல அனைவரும் சிரித்தனர்.

கடைசியாக தன் ஆசையை வேந்தனிடம் சொன்னாள் எப்படியும் அவன் வரமாட்டான் என்று நினைத்து அருவி கேக்க அவனோ "போலாம்" என்று எழுந்து விட்டான்.

மற்ற யாரும் வரவில்லை என்று சொல்லிவிட.. இதுவரை பேய் வீட்டைப் பார்க்கவில்லை என்று ஆவலுடன் உள்ளே நுழைந்தாள் அருவி.

வீட்டை சுற்றிப் பார்க்க சிறியதாக ஒரு வண்டி இருந்தது..

அதில் இருவரும் ஏறிக் கொள்ள முதலில் வெளிச்சமாக இருந்த வீட்டின் முற்றம் வண்டி நகர ஆரம்பித்ததும் இருள் பூசிக் கொண்டது.

வீட்டின் சுவரில் மண்டை ஓடு, எலும்புக் கூடு என்று அருவியின் முன் வந்து பயமுறுத்தியது பயத்தில் கண்களை மூடி ஆஆஆ கத்தி கூச்சலிட்டவள் பக்கத்தில் இருந்த வேந்தனின் சட்டையை இருக் கையாளும் இறுகப் பற்றி அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள்.

அதில் வேந்தன் பக்கென்று சிரித்துவிட்டான்... "ஏய் அது பொம்மைடி அங்கப் பாரு.."

"பார்க்க மாட்டேன் பார்க்க மாட்டேன்... நான் ஏதோ லைட்லா போட்டு பயமுறுத்துறவாங்கன்னு நினைச்சிட்டேன் இங்க வந்தா எலும்புக் கூடு மண்டை ஓடுன்னு சுடுகாடு மாதிரி இருக்குது... என்று அவன் மார்பில் இதழ் உரச சொல்லவும்..

சட்டென்று அவளைப் பிரித்து அமர வைத்தவன் ..எதுவும் பேசாமல் வண்டியை வீட்டின் வெளியே நோக்கி செலுத்தினான்.

வெளியே வந்ததும் வண்டியை விட்டு இறங்கிய வேந்தன் வயிற்றை பிடித்துக் கொண்டு ஹாஹாஹா சிரித்தான்.

"எதுக்கு இப்படி சிரிக்கறீங்க?"

"ஹாஹாஹா... ஏண்டி அதுவே செட்அப்னு தெரியும் தெரிஞ்சும் எப்படிடி இப்படி பயப்படற சரியான பயந்தாங்கோலி... வாய் மட்டும் ஏழு ஊருக்கு நீளும்" என்று சிரிக்க அவன் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது

"போங்க...." என்று சிணுங்க வேந்தனின் சிரிப்பு சத்தம் நின்றது...

"போலாமா?" என்று புன்னகையுடன் கேக்க...

"இப்போ எதுக்கு நினைச்சி நினைச்சி சிரிக்கறீங்க... இதுக்கு தான் அந்த காக்கா பயலை கூப்பிட்டேன் அவன் உங்க அளவுக்கு என்னைய கேலி பண்ண மாட்டான்" என்றதும் வேந்தன் முகம் சட்டென்று இறுக்கமாக...அனைவரும் இருந்த இடத்திற்கு சென்றனர்.

"என்ன அதுக்குள்ள வந்துட்டீங்க...?"என்க

"சாப்பிட போலாமா ரித்து" என்று அவளிடம் கேட்டான் வேந்தன்.

"இப்போ ஓகே அண்ணா... போலாம் ஆனா சாப்பிட்டு வந்து எந்த ரைடும் போக வேண்டாம்... போனா திரும்ப வாந்தி வந்துடும்" என்றாள்.

"அப்போ சாப்பிட்டு வீட்டுக்கு கிளம்புனா நைட் வீட்டுக்கு போய்டலாம்" என்றதும் அருவி எழுந்து நின்று விட்டாள்.

"அதுக்குள்ளவா..!!!! இன்னும் கேரளாவை சுத்திப் பார்க்கவே இல்ல... கோவளம் பீச், வயநாடு, குருவாயூறு கோவில்" என்று அவள் அடுக்கிக் கொண்டேப் போக

"அதலாம் இன்னொரு நாள் பார்த்துக்கலாம், யாருமே சுத்திப் பார்க்கற நிலைமையில இல்ல"

"நோ... இதுக்கு நான் ஒதுக்கவே மாட்டேன் அட்லீஸ்ட் அந்த கோவளம் பீச்சுக்காவது கூட்டிட்டு போங்க" என்று கண்களால் கெஞ்ச

"மணி இப்போவே மூனு ஆகிடுச்சு சாப்பிட்டு கிளம்புனா பீச் போய்ட்டு போலாம் " என்று வேந்தன் முடித்துக் கொள்ள..அதற்குள் நிருவும் தேவாவும் வந்துவிட்டனர்.

அங்கே இருந்த உணவகத்திலையே அனைவரும் உண்டு முடித்தனர்.வேந்தன் முகம் இப்போதும் இறுக்கமாக இருக்கவும்

'இவ்வளவு நேரம் சிரிச்சிட்டு தானே இருந்தான் திடீர்னு என்னாச்சி இந்த மிஸ்டர் பர்ப்பெக்ட்டுக்கு' என்று அருவி அவனை கவனித்துக் கொண்டிருக்க....

வேந்தன் அருவியை கவனிக்காமல் சாப்பிட்டில் கவனமாக இருந்தான்.

சாப்பிட்டு முடித்ததும் சிறிது நேரம் அங்கையே அமர்ந்திருக்க.. கிளம்பலாமா? என்ற ரித்துவின் கேள்வியில்

"இன்னும் நான் வாட்டர் ரைடு போகவே இல்ல... அதுலையும் போகணும்" என்று முதலில் இருந்து ஆரம்பித்தாள் அருவி...

"ஏம்மா தாயே எங்களால அதுக்கு வர முடியாது நீயும் தனியா போக வேண்டாம்" என்றாள் தேவா

"உங்கிட்ட யார் கேட்டா..."என்ற அருவி வேந்தனைப் பார்க்க

"டைம் ஆகுது இன்னொரு நாள் வரலாம்"

"மூனு நாள் இங்க இருக்கறதா தானே பிளான் பண்ணோம்"

இப்போதான் அப்பா போன் பண்ணாரு, வீட்டுக்கு யாரோ வந்தாங்கன்னு உடனே கிளம்பி வர சொல்றார்.. என்னன்னு தெரியல உடனே போகணும்" என்க

"யார்?" என்றனர் அனைவரும் ஒன்றாக

"வா சொல்றேன்னு அப்பா சொல்லிட்டாரு" என்று எழுந்து நின்றான்.

"இவ்வளவு தூரம் வந்துட்டு ஒன்னும் பார்க்காம போகணுமா... நான் வரல நீங்க போங்க நான் பஸ் புடிச்சி ஹாஸ்டல் போயிக்கறேன்" என்று அருவி மீண்டும் சிணுங்கவும்

"உனக்கு சூழ்நிலை புரியவே புரியாதா.... நாளைக்கு காலையில வீட்டுல இருக்கனும்" என்றவன் "பீச் போயிட்டு வீட்டுக்கு போலாம்" என்றான்.

அதற்கு மேல் அருவி அவனை தொந்தரவு செய்யவில்லை.

அனைவரும் வெளியே வர தேவாவால் நிற்கவே முடியவில்லை... தலைக்கீழ் ஓடும் ட்ரெயின் ரைடில் சென்றதில் இருந்து தலை சுற்றி வாந்தி எடுத்துக் கொண்டே இருந்தாள் இப்போ சாப்பிட்டப் பிறகு மீண்டும் வயிற்றை பிரட்ட... முடியாமல் தொய்ந்து வேந்தனின் கையைப் பிடித்தவள்

"மாமா என்னால முடியல" என்று கண்கள் சூழல ஈனஸ்சுவரத்தில் கூறினாள்.

தன் பையில் இருந்த புளிப்பு மிட்டாயை எடுத்து தேவாவின் கையில் வைத்தாள் அருவி..

"இதை சாப்பிடு சரியா போய்டும்..."

"இதுவா...?"

"ம்ம்" என்றவள் "நீ வேணும்னா அவரோட கார்ல வா நான் அந்த கார்ல வரேன்" என்று இதுதான் வாய்ப்பு என்று அருவி நழுவப் பார்க்க

அவளை முறைத்தவன் "தேவா நீ பின்னால படுத்துக்கோ.. நீ முன்னாடி ஏறு" என்று பற்களை கடித்துக்கொண்டு கூறினான்.

வேறு வழியின்றி வேந்தனுடன் கோவளம் பீச்சிற்கு கிளம்பினாள் அருவி..

கார் எடுத்ததும்... பின்னால் தேவாவின் நிலையை ஒருமுறை திரும்பிப் பார்த்து அவள் தூங்குவதை உறுதி செய்துகொண்டவன் "என்னடி எப்படி விட்டுட்டு ஓடலாம்னே இருப்பப் போல" என்று நக்கலாக கேட்டான்.

"ஆமா அப்படி உங்க கூட வந்துட்டாலும் சந்தோசமா பேசி சிரிச்சிட்டு தான் வேற வேலைப் பார்க்க போறீங்க எப்போ பார்த்தாலும் உருனு மூஞ்சை வெச்சி இருக்கிறவன் மூடையும் ஸ்பாயில் பண்ணிடுவீங்க" என்றதும்...வேந்தன் முகம் மேலும் இறுகியதே தவிர இலகவில்லை.

அதைப் பார்த்தவள்.. 'இதோ வெச்சிட்டான்ல மூஞ்சுல முள்ளைக் கட்டி, இனி இவன்கிட்ட பேசறதும் ஒன்னு தான், தலையைக் கொண்டு போய் சுவத்துல முட்டிக்கறதும் ஒன்னுதான்' என்று முகத்தை வெட்டி திருப்பியவள் கண்ணாடி வழியே முனைவியப்படியே வந்தாள்.

அருவியை பொறுத்த வரையில் வேந்தனை விட்டு தள்ளி ஓடி விட்டால் மட்டுமே தன் வாழ்வில் சந்தோசம் என்பது இருக்கும் நிலைக்கும் என்று நினைக்கும் ஒரு ரகம் அவள் மனதில் வேந்தன் மீது சாதாரண அத்தை மகள் மாமன் மகனுக்கான ஈர்ப்புக் கூட எழவில்லை. எழுவில்லையா? இல்ல எழுந்து அதை அருவி உணராமல் இருக்கிறாளா? என்றால் எல்லாமே கேள்விக்குறிகள் மட்டுமே.

கார் கோவளம் பீச்சில் நின்றதும் முதல் வேலையாக காரை விட்டு இறங்கி கார்த்திக் இனியனுடன் சேர்ந்துக் கொண்டாள்.

காரை விட்டு இறங்கி ஓடும் அருவியைப் பார்த்த வேந்தன் மனதினுள் ஒரு முடிவை தீர்க்கமாக எடுத்து விட்டே தேவாவைப் பார்க்க அவளோ நன்கு உறங்கிக் கொண்டிருந்தாள்.

"தேவா"

"ம்ம் மாமா"

"பீச்க்கு வரியா?"

"இல்ல மாமா நீங்க போங்க"

"சரி ரெஸ்ட் எடு கார் லாக்ல தான் இருக்கும் பயப்படாம தூங்கு" என்று அவளது நலத்தை விசாரித்துவிட்டு மெதுவாக கடற்கரைக்கு செல்ல அதற்குள் வீட்டுப் பட்டாளம் கடலில் இறங்கி இருந்தது

அருவி ஓடி ஓடி கால் நனைக்க அவளது காலைத் தொடவே ஆசைக் கொண்டு ஓடி வந்து அணைத்துக் கொண்டது அலைகள்..

சிறு குழந்தையாக மாறி ரித்துவும் அருவியும் ஒன்று சேர்ந்து குதித்தனர்....

"ஒரு போட்டி வெச்சிப்போம்மா?" என்று ரித்து ஆர்வமாக கேட்டனர்.

"என்ன?" என்றனர் மற்றவர்கள்

ரெண்டு ரெண்டுப் பேரா சேர்ந்து மணல் வீடு கட்டுவோம் யார் வீடு நம்ப இங்க இருந்து கிளம்பர வரைக்கும் கலையாம அப்படியே இருக்கோ அவங்க தான் லக்கியஸ்ட் பர்சன்ஸ்...அவங்க கேக்கறதை மத்தவிங்க வாங்கி தரணும்" என்றதும்..

முதலில் இனியன் அருவி , கார்த்திக் ரித்து, வேந்தன் நிரு என்று ஜோடிப் பிரிய

அருவி கட்ட கட்ட இனியன் கலைத்து விட்டு விளையாடவும் பொறுமை இழந்த அருவி

"தடிமாடே எரும கணக்கா இருக்க ஒழுங்கா ஒரு மணல் வீடு கட்ட தெரியுதா?, போ நான் உன்னோட சேர்ந்து கட்ட மாட்டேன் ஆள் ஸ்வைப் பண்ணுங்க" என்றாள் பிடிவாதமாக.

ரித்து கார்த்திக்கை தர மாட்டேன் என்று அடம்பிடிக்க.

கடைசியில் நிரு தான் இனியனுடன் வர வேண்டியதாகிப் போனது

வேந்தனிடம் சென்றால் தான் அருவியும் அடங்குவாள் என்று மற்றவர்களும் அமைதியாக இருந்துவிட வேந்தனிடம் சென்றவள்..

"உங்களுக்கு வீடு கட்ட தெரியுமா? எனக்கு ஒரு பெரிய வீடு கட்டி தரிங்களா?" என்று ஆசையாக கேட்டாள்.. அவள் கேக்கும் போது குழந்தை மிட்டாய் வாங்கி தா என்று கேப்பது போல் இருக்கவும் ஒருமுறை அவளை நிமிர்ந்து பார்த்துவிட்டு அவன் வேலையில் கவனமானான்.

அவனுமே இதுபோன்ற விளையாட்டை இப்போது விளையாடிக் கொண்டால் தான் ஊருக்குச் சென்றால் நிற்க நேரமில்லாமல் ஓட வேண்டும் பஞ்சாயத்துகளில் தீர்ப்பு சொல்பவன் மணல் வீடு கட்டி விளையாடுகிறான் என்றால் பின்பு ஊருக்குள் யார் அவனை மதிப்பார்கள் அதனாலையே அவனுடைய இயல்பை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருப்பான், இங்கு தன் இயல்பை வெளிக்காட்டினால் அதை பெரிதுப் படுத்த யாருமில்லை என்றதும் அவன் இஷ்டத்திற்கு இருந்தான்.

வீடு ஓரளவிற்கு நல்லப் படியாகவே வர.. 'அங்க ஜன்னல் வைங்க இங்க கதவு வைங்க மேல இந்த டிசைன் வேணும், இத்தனை மாடி வேண்டும்' என்று அருவிதான் வேந்தனை ஒரு பாடுபடுத்தி விட்டாள்.

கடைசியில் அருவிக் கேட்டதுப் போல் அழகிய வீடு தயாராகிவிட அதைக் கண்டு பிரமித்துப் போய்விட்டாள் அருவி ..இந்த காட்டனுக்குள்ள இவ்வளவு அழகான ரசனைக்காரனா? என்று
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top