மயக்கும் மான்விழியாள் 2

Advertisement

Ambal

Well-Known Member
சென்ற பதிவிற்கு விருப்பங்கள் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் தோழிகளே...இதோ அடுத்த பதிவு..



மயக்கும் மான்விழியாள் 2



சிவராமன் தன் தங்கை வீட்டுக்கு சென்று திரும்பியதில் இருந்து ஏதோ போல் இருக்கவும் தேவகி அவரிடம் கேட்க அதற்கும் சரியான பதில் தரவில்லை.முக்கியம் என்றால் அவரே சொல்லுவார் என்று தேவகியும் விட்டுவிட்டார்.நாட்கள் ஓட தேவகிக்கு ஏழாம் மாத வலைக்காப்பும் வந்தது சிவசுந்தரி வீட்டுக்கும் அழைப்பு விடுக்க அவர்கள் வேலை இருப்பதாக சொல்லி வர மறக்க பெற்றவர்களுக்கு தான் கஷ்டமாக போனது.சிவராமனுக்கு அவர்கள் வரமாட்டார்கள் என்று தெரியும் போன முறை அவர் சென்ற பொழுதே அவர்களின் அணுகுமுறையை வைத்தே கண்டு கொண்டார் தன் திருமணத்தின் விளைவு தங்கையை பாதிக்கிறது என்று அதனால் பூமிநாதனிடம் தனியே பேசியவருக்கு கிடைத்த பதில் மனதை கனக்க செய்தது இனி எங்களிடம் அதிகம் உன் குடும்பம் அதாவது சிவராமனையும்,தேவகியும் குறிப்பிட்டவர் வரவை குறைத்துக்கொள்ளுங்கள் என்று அவர் கூறியதை தன் தந்தையிடம் பகிர்ந்தார் நாதனோ,

"விடு ராமா காலப்போக்குல எல்லாம் சரியா போகும்...நீ வருத்தப்படாத..."என்று தந்தை கூறுகையில் சற்று தெளிந்திருந்தவர் இப்போது அவர்கள் தங்களை தவிர்கவும் மனதுடைந்து போனார்.

உறவுகளின் மேன்மை தெரியாதவர்களுக்கு சில உறவுகள் தேவைப்படுவதில்லை அதேபோல் தான் சிவராமன் குடும்பத்தை ஒதுக்கினர் சிவசுந்தரியின் குடும்பத்தார்.தங்கையின் வரவுக் குறைந்தது ராமனுக்கு வருத்தம் தான் என்றாலும் அதற்காக தன் ஆருயிர் மனைவியின் நலனில் எந்தக் குறையும் வைக்கவில்லை அவர்.தேவகியும் குடும்பத்தாரின் தேவை அறிந்து நடந்து கொள்வதில் வல்லவர் அதனாலேயே எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சென்றது.மூன்று மாதம் கழித்து சிவராமன் தேவககிக்கு மகன் பிறக்க அவனுக்கு சிவரூபன் என்று பெயரிட்டனர் குடும்பத்தார்.அதற்கும் சுந்தரி குடும்பம் வர மறுக்க இனி தாங்கள் சம்மந்தப்பட்ட எதற்கும் அவர்களை அழைக்க வேண்டாம் என்று தன் வீட்டினரிடம் நேரிடையாகக் தேவகி கூற மோகனாவோ ஆடித்தீர்த்துவிட்டார்.ஆனால் தேவகியோ தன் வாத்தில் நிற்க நாதனும் மருமகள் காரணம் இல்லாமல் கூறமாட்டாள் என்று அமைதியாக இருந்துவிட்டார்.

தேவகிக்கு தான் வந்ததில் இருந்து சுந்தரி குடும்பத்தார் இங்கு வருவதைக் குறைத்துக்கொண்டனர் என்று தெரியும் அதனாலேயே அவர்கள் தங்கள் வீட்டு விஷேஷங்களில் வருவது இல்லை என்று தன் வலைக்காப்பின் போதே உணர்ந்தார்.அதனாலேயே தேவகி அவ்வாறு கூறியது அவருக்கு போன முறை தன் கணவரை ஏதோ அவர்கள் காயப்படுத்தியுள்ளனர் என்று அவரது முகவாட்டத்திலேயே தெரிந்து கொண்டார்.அவர்களுக்கு தாங்கள் தேவையில்லை என்றால் எங்களுக்கும் அவர்கள் தேவையில்லை என்ற முடிவிற்கு வந்துவிட்டார் தேவகி.தேவகியின் முடிவில் ராமனுக்கு சற்று வருத்தம் தான் என்றாலும் இதில் வேறு ஒன்று செய்வதற்கில்லை என்று அவரும் ஒன்றும்சொல்லவில்லை.

சிவரூபனுக்கு ஒரு வயது இருக்கும் போது சிவராமனுக்கு சென்னைக்கு மாற்றல் கிடைக்க அதே சமயம் சுந்தரியும் கருதரித்திருப்பதாக செந்தில்நாதனுக்கு செய்தி வர பெற்றவர்கள் மட்டும் சென்றுவந்தனர். சுந்தரிக் குடும்பத்தினர் நாதனையும் மோகனாவையும் மட்டுமே அழைத்திருந்தனர்.இவ்வாறு சுந்தரிக் குடும்பம் ராமனின் குடும்பத்தை ஒதுக்க துவங்கியது.சுந்தரிக்கு மகள் மதுமிதா பிறக்க இம்முறையும் ராமனை ஒதுக்க நினைக்க அவரோ என் தங்கை மகளுக்கு நான் செய்வதை யாரும் தடுக்க முடியாது என்று சண்டையிட்டு அனைத்து விதமான சீரும் செய்து அமர்களப்படுத்திவிட்டார்.அதில் சற்று திருப்தி அடைந்த சுந்தரிக் குடும்பம் ராமனை ஏற்றுக்கொண்டாலும் தேவகியை ஏற்க மறுத்தனர்.தேவகியோ இவர்களின் குணம் அறிந்து ஒதுங்கியே இருந்தார்.வாழ்க்கை ராமனுக்கும்,தேவகிக்கும் நல்லவிதமாகவே சென்றது சிவரூபனின் ஐந்தாவது வயதில் ஒரு கட்டிட வேலை இடி பாட்டில் ராமனுக்கு கால்களில் காயம் என்று கூறி செய்தி வர குடும்பம் அதிர்ந்து மருத்துவமனை செல்ல அங்கே இரு கால்களும் நீக்கப்பட்ட நிலையில் சுயநினைவின்றி இருந்த ராமனை கண்டு அதிர்ந்துவிட்டனர்.

நாதனும்,மோகனாவும் மகனின் நிலைக் கண்டு துடிக்க தேவகியோ திக்பிரம்மை பிடித்தைப் போல இருந்தார்.அந்த நிலையில் ஐந்து வயதே ஆன சிவரூபனுக்கு என்ன தோன்றியதோ தன் அன்னையின் கண்ணீர் துடைத்தவன் தான் இருப்பதாக தைரியம் ஊட்டினான்.

ராமனின் நிலைக் கண்டு மருத்தவமனையில் காண வந்ததோடு தங்கள் கடமை முடிந்ததென்று சென்றுவிட்டனர் சுந்தரிக் குடும்பத்தினர். தேவகி தேங்கியது சில கணங்களே இது தான் தேங்கி நிற்கும் தருணம் கிடையாது என்று தனக்குள் சொல்லிக்கொண்டவர் பின் ஆக வேண்டியது என்ன என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டார்.இதில் ராமனுக்கு வேலைகள் முன்போல் செய்யமுடியாமல் போய்விட கம்பெனி அவரை விருப்ப ஓய்வில் அனுப்பியது.இதனால் அவர்களது வாழ்வாதாரமே ஆட்டம் கண்டது தேவகியும் பியூசி உடன் படிப்பை நிறுத்தியிருந்த காரணத்தால் அவருக்கும் வேலைக் கிடைப்பது கடினமாக போனது.

குடும்ப சுழ்நிலைக் கருதி செந்தில்நாதன் தனக்கு தெரிந்தவர் உதவியுடன் ஒரு மளிகை கடையில் பொட்டலங்கள் போடும் வேலையில் சேர்ந்தார்.தேவகி மோகனா இருவரும் அதே கடையில் அப்பளம்,மிளகாய் தூள் இன்னும் சில மாசாலா சாமான்கள் என்று வீட்டில் இருந்து செய்து கடையில் தர அவர்களது பொருளும் தரமாக இருந்ததால் அதற்கு வரவேற்ப்பும் கிடைக்கவே குடும்பம் சற்று தெளிய ஆரம்பித்தது.ராமனோ தன்னால் ஆன உதவிகளை செய்தாலும் மனதால் மிகவும் ஒடிந்து போனார்.சிவரூபன் தன் குடும்ப சுழ்நிலைக் கருதி நல்ல முறையில் படித்தான்.ஒருளவிற்கு குடும்பம் தேறிவந்தது சிவரூபனும் நல்ல மதிப்பெண்கள் எடுத்து பிஇ கட்டிட கலை படிப்பை தேர்ந்தெடுத்து படிக்க ஆரம்பித்தான்.விதியின் ஆட்டம் முடிந்தது என்று எண்ணும் வேலையில் அது முடியவில்லை என்னும் விதமாக இருந்தது அடுத்தடுத்து நடந்த காரியங்கள்.வேண்டாம் நினைக்காதே நினைக்காதே என்று மனது கூப்பாடு போட்டாலும் முடியாமல் போக தேவகியை நிகழ்வுக்கு கொண்டு வந்தார் நாதன்,

"என்னமா பழச நினைக்கிறிய...வேண்டாம்மா...மறக்க முயற்சி செய்..."என்றார்.

"ம்ம் சரி மாமா..."என்றதோடு உள்ளே சென்றுவிட்டார். நாதனுக்கு மருமகளின் நிலை புரியத் தான் செய்கிறது ஆனாலும் பழசை நினைத்து மனதை கெடுப்பதை விட வருங்காலத்தைப் பார்க்கலாம் என்று நினைத்தார். ராமன் இன்டீரீயஸ் சிவரூபனின் அலுவலகம்.

சிவரூபன் கட்டிடங்களின் உள் அமைப்பு அலங்கரிக்கும் அதாவது ஒரு இன்டீரியர் டெக்கரேட்டர்.தனக்கு என்று சொந்தமாக நிறுவனத்தை நடத்த விரும்பியவனுக்கு பல கஷ்டங்களை அனுபவித்த பின்னரே அது சாத்தியமாயிற்று. ராமன் இன்டீரீயஸ் ஆரம்பித்த நேரம் பல இடையூறுகள் தொழிலில் ஒவ்வொன்றையும் பொறுமையாக கடந்து இதோ டெல்லியில் தனக்கென்று பெயரை பெற்றும்விட்டான்.அவனது கனவான கவர்மென்ட் புராஜெக்ட் இப்போது அவனது கையில் இதற்காக எத்தனை நாள் உணவு,உறக்கம் இல்லாமல் வேலை பார்த்தான் இதோ அவனது உழைப்பின் பலன் அவனது கையில்.

தன் கம்பெனிக்கு வந்த சிவரூபனுக்கு வேலைகள் குவிந்து இருந்தன இதில் அந்த கவர்மென்ட் புராஜெக்ட் வேறு தமிழ்நாட்டு பக்கம் என்று கூறியுள்ளனர் அது சென்னையாக இருக்கக் கூடாது என்று மனதில் கடவுளுக்கு வேண்டுதல் வைத்தவன் தன் வேலைகளில் மூழ்கி போக தன் கைபேசி சத்தத்தில் தன் மடிக்கணிணியில் இருந்து தலையை எடுத்தவன் கைபேசி திரையை பார்க்க தன் அன்னை அழைத்திருந்தார்.

"ரூபா...என்னடா டையம் பார்த்தியா இல்லையா...மணி பதினொன்னு ஆகப்பொகுது...வீட்டுக்கு வா சீக்கிரம்..."என்று விட்டு வைக்க தன் வேலைகளை ஓரம் கட்டியவன் தன் காரை எடுத்துக்கு கொண்டு கிளம்பினான்.

தேவகி மகனுக்காக காத்திருந்தவர் அவன் வந்தவுடன்,

"என்னடா உன்னோட லேப்டாப் ஓட மூழ்கிட்டியா..."என்றார் கிண்டலாக.தாயின் கிண்டலில் லேசாக சிரித்தவன்,

"ம்மா...கொஞ்சம் வேலை அதான்..."என்றவன் வேகமாக சென்று குளித்து உடை மாற்றி வந்து டைனிங் காலில் தன் தாயுடன் அமர்ந்தான்.

"என்ன ரூபா எங்க வேலைனு சொல்லிட்டாங்களா..."என்றார்.

"இன்னும் இல்லமா...இன்னும் இரண்டு நாள்ல நீயூஸ் வரும் அதுக்கு தான் வெயிட்டிங்..."என்றான்.பிறகு தாயுடன் சில நிமிடம் பேசிவிட்டு படுக்கை அறைக்கு வந்தான்.நாளை நடக்கவிருக்கும் ஒரு மீட்டிங்கிற்காக சில குறிப்புகளை எடுத்துவிட்டு படுக்க மணி ஒன்று என்று காட்டியது படுக்கையில் விழுந்தவனின் மூடிய இமைகளின் முன் வந்தன கண்ணீர் தாங்கிய விழிகள் அதை தவிர்க்க முயன்று தோற்றவன் மனது மீண்டும் அதே விழிகளை தேடியது.

மயங்கினேன் உனது விழிகளில்...

என்னை மயக்கும் மான்விழியே...
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்

அச்சோ
சிவராமனுக்கு இரண்டு கால்களும் எடுத்துட்டாங்களா?
தேவகியும் ராமனின் பெற்றோரும் கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறியிருக்கிறார்களா?

சுந்தரியின் புருஷன் சிவராமனை ஒதுக்கினால் தங்களுக்கும் அவர்கள் உறவு வேண்டாம்ன்னு தேவகி சொல்வது சரியே

இன்னும் சிவரூபன் காலேஜ் படிக்கும் பொழுது என்ன துன்பம் வந்தது?

சென்னையில் இருந்தவர்கள் ஏன் டெல்லி வந்தாங்க?
சிவராமன் எப்படி எதனால இறந்தார்?

கண்ணீர் தாங்கிய விழிகள் யாருடையவை?
அது சுந்தரியின் மகளா?
அவள் ரூபனை விரும்புறாளா?
 
Last edited:

Ambal

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்

அச்சோ
சிவராமனுக்கு இரண்டு கால்களும் எடுத்துட்டாங்களா?
தேவகியும் ராமனின் பெற்றோரும் கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறியிருக்கிறார்களா?

சுந்தரியின் புருஷன் சிவராமனை ஒதுக்கினால் தங்களுக்கும் அவர்கள் உறவு வேண்டாம்ன்னு தேவகி சொல்வது சரியே

இன்னும் சிவரூபன் காலேஜ் படிக்கும் பொழுது என்ன துன்பம் வந்தது?

சென்னையில் இருந்தவர்கள் ஏன் டெல்லி வந்தாங்க?
சிவராமன் எப்படி எதனால இறந்தார்?

கண்ணீர் தாங்கிய விழிகள் யாருடையவை?
அது சுந்தரியின் மகளா?
அவள் ரூபனை விரும்புறாளா?
நன்றி தோழி...
 

Ambal

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்

அச்சோ
சிவராமனுக்கு இரண்டு கால்களும் எடுத்துட்டாங்களா?
தேவகியும் ராமனின் பெற்றோரும் கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறியிருக்கிறார்களா?

சுந்தரியின் புருஷன் சிவராமனை ஒதுக்கினால் தங்களுக்கும் அவர்கள் உறவு வேண்டாம்ன்னு தேவகி சொல்வது சரியே

இன்னும் சிவரூபன் காலேஜ் படிக்கும் பொழுது என்ன துன்பம் வந்தது?

சென்னையில் இருந்தவர்கள் ஏன் டெல்லி வந்தாங்க?
சிவராமன் எப்படி எதனால இறந்தார்?

கண்ணீர் தாங்கிய விழிகள் யாருடையவை?
அது சுந்தரியின் மகளா?
அவள் ரூபனை விரும்புறாளா?
நன்றி தோழி...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top