மண்ணில் தோன்றிய வைரம் 5 & 6

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
#5....
"ஹேலோ வருண்"
"சொல்லுடா எப்போ வந்து சார்ஜ் எடுத்துக்க சொன்னாங்க??"
"டேய் என்னடா என்னமோ நீ இன்டர்வியூ பண்ணி வேலை குடுத்த மாதிரி கேட்குற??"
" இல்லைடா எப்படியும் நீ இந்த ஜாப்பிற்கு எலிஜிபள்னு தெரியும்.சோ கட்டாயம் அப்பாய்மன்ட் ஆடர் கிடைத்திருக்கும். அதான் அப்படி கேட்டேன்"
"இருந்தாலும் நீ என்னை இவ்வளவு நம்பக்கூடாது" என்று சிரித்த அஸ்வினை இடைமறித்து
"டேய் மொக்கை போடாம கேட்டதுக்கு பதிலை சொல்லு."
"ஓகே ஓகே கூல்டா. நாளைக்கே வந்து ஜாயின் பண்ண சொல்லிட்டாங்க டா. இந்த இன்டர்வியூ ஒரு வித்தியாசமான அனுபவம் டா. நீ சொன்னா நம்ப மாட்ட இன்டர்வியூ பண்ணது ஒரு சின்ன பொண்ணுடா."
"என்னது சின்னப்பொண்ணா?? வழமையா பெரிய போஸ்டுக்கான இன்டர்வியூவை அந்த கம்பனி சார்மன் சாருணி மேடம் தான் செய்வாங்க அப்போ சாருணி மேடம் சின்னப்பொண்ணா??" என்ற அதிர்ச்சியுடன் கேட்ட நண்பனிடம்
"ஆமாடா எனக்கும் அதே ஷாக் தான்டா. ஆனா ஒன்னுடா அவங்க பயங்கர ஷாப். இன்டர்வியூல அவங்க கேட்ட ஒவ்வொரு கேள்வியும் அவ்வளவு ஹெவியா இருந்திச்சி. சொல்லி வேளை இல்லடா. இப்படி ஒருத்தரோட அட்மினிஸ்ரேஷனுக்கு கீழே வர்க் பண்ண போறோம்னு நினைத்தா ரொம்ப சந்தோஷமா இருக்கு."
"ஓகேடா கன்கிராட்ஸ். நான் பிறகு பேசுறேன். பாய். டேக் கேர்"
"ஓகேடா பாய்" என்றவாறு தன் அலைப்பேசியை அணைத்த அஸ்வின் அட்மிஷன் கடிதத்தை பெற சென்றான்.
அன்று மாலை தான் இன்டர்வியூவில் தேர்வானதை கொண்டாடும் முகமாக அஸ்வின் தன் குடும்பத்தாரை இரவு உணவிற்காக மூன்று நட்சத்திர விடுதி ஒன்றிற்கு அழைத்து வந்திருந்தான்.
அங்கு எதிர்பாராத விதமாக ஒரு கிளையன்டை சந்திப்பதற்கு சாருணியும் அதே விடுதிக்கு வந்திருந்தாள்.
தனக்கு ரிசவ் செய்திருந்த மேசையில் அமர்ந்து கிளையன்டிற்காக தனது காரியதரிசியும் உற்ற தோழனுமாகிய சஞ்சயுடன் காத்திருந்திருந்த போதே அஸ்வினின் குடும்பம் வருகை தந்தது.
அஸ்வினை கண்டதும் அவனை யார் என்று கண்டு கொண்டாள் சாருணி. சில நிமிடங்களாக அவர்களையே கவனித்துக்கொண்டிருந்த சாருணியிடம் "ஹேய் சாரு என்ன அவ்வளவு சீரியசா அந்த குடும்பத்தை கவனிச்சிகிட்டு இருக்க?? உனக்கு தெரிஞ்சவங்களா??" என்று வினவிய சஞ்சயிடம்
"அந்த பாமிலியில் இருக்க ஒருத்தரை இன்னைக்கு காலையில இருந்து தெரியும் தெரியும்"
"அவரு இன்னைக்கு இன்டர்வியூல செலக்ட் ஆன மிஸ்டர் தேஜஸ்வின் தானே??"
"ஆமா அவரு தான். அவரு அவுஸ்ரேலியாவில் இருந்து இங்க வெகேட் ஆகிருக்காறு. அதுக்கு ரீசன் கேட்டப்போ பாமிலி னு சொன்னாரு. இப்போ தான் அவரோட டிசிஷன் சரினு புரிகிறது." என்று சிறு வருத்தத்துடன் கூறிய தன் தோழியை ஆற்றும் முகமாக
"ஹேய் சாரு நீ என்ன நினைக்கிறனு புரிகிறது. நம்ம வாழ்க்கை எப்பவும் இப்படியே இருக்காது. நீ விரும்புற மாதிரி உன்னோட வாழ்க்கை மாறும். இவ்வளவு சின்ன வயதில் யாரும் உன்னளவிற்கு உயர்ந்தது இல்லை. உன்னை ரோல்மாடலாக பல பேர் நினைக்கும் பட்சத்தில் நீ இப்படி சின்ன விஷயத்துக்கெல்லாம் கவலைப்பட கூடாது. மாற்றம் ஒன்று தான் மற்றது எல்லாம் மாறும். சோ நீ இதெல்லாம் மனசுல போட்டுக் குழப்பிக்காத.."
"நீ சொல்வதெல்லாம் புரியிது.ஆனால் குடும்பத்தின் அன்பு அரவணைப்பு இல்லாம வாழ்வது எவ்வளவு கொடுமைனு அதனை அனுபவிக்கிறவங்களுக்கு தான் தெரியும்." என்று கண்கலங்கிய சாருவை
"சாரு கூல்மா மிஸ்டர் மேதா வருகிறார் கண்ணை துடைத்துக்கொள்" என்று தன் தோழியின் கவனத்தை திருப்பினான் சஞ்சய்.

#6....
முதல் நாள் வேலைக்கு கிளம்பிய அஸ்வினை அவனது குடும்பத்தார் அனைவரும் வாழ்த்து மழையால் நனைத்தனர். அவனது சித்தி மற்றும் தாத்தாவின் ஆலோசனைக்கிணங்க அவனது சித்தப்பா அவனை ட்ராப் பண்ணுவது என்று முடிவானது.
அஸ்வினை அவனது வேலைத்தளத்தில் இறக்கி விட்ட அவனது சித்தப்பா "கண்ணா நீ உன்னோட அப்பா பெருமை படுகிற மாதிரி பெரிய இடத்துக்கு வரணும். அதான் இந்த சித்தப்பாவோட ஆசை."
"சித்தப்பா நீங்க ஆசைப்படுற மாதிரி பெரிய இடத்துக்கு வருவேன். ஆனால் அப்பவும் நான் உங்கள் மகன் அஸ்வின் தான்" என்று தன் சித்தப்பாவின் கூற்றை நேரடியாக மறுக்காது தன் எதிர்ப்பை வெளிப்படுத்தினான்.
காரியாலயத்தில் ரிசப்ஷனை அடைந்த அஸ்வின் மனேஜரின் அறையை கேட்டு அறிந்து கொண்டு அறையை நோக்கி நகர்ந்தான். கதவை தட்டி அனுமதி கேட்டுவிட்டு உள்ளே நுழைந்த அஸ்வின் தன்னுடைய அபாயின்மன்ட் ஆடரை மனேஜரிடம் கையளித்தான். அதனை வாங்கிய மனேஜர் வாசித்து விட்டு அவனை வரவேற்றார். மேலும் சில நிமிட உரையாடலுக்கு பிறகு அஸ்வினை சார்மன் அறைக்கு அழைத்து சென்றார் மனேஜர்.
கதவை தட்டிவிட்டு உள்நுழைந்த அஸ்வின் மற்றும் மனேஜரை காலை வணக்கத்துடன் வரவேற்று அமருமாறு பணித்துவிட்டு வேலை சம்பந்தமான சிறு அறிமுறையை மனேஜரின் உதவியுடன் கூறிவிட்டு மனேஜரை தனது அறைக்கு திரும்புமாறு பணித்தாள் சாரு. பின் அஸ்வினிடம் "மிஸ்டர் தேஜஸ்வின் இந்த ஜாப் நிச்சயம் உங்களுக்கு பெரிய சவாலாக இருக்கும். உங்களது திறமையை வெளிக்காட்டுவதற்கான ஒரு களமாக இதை நீங்க பயன்படுத்துவீங்கனு நம்புகின்றேன். ரொம்ப முக்கியமான விடயம் உங்களுடைய உழைப்பும் நம்ம கம்பனியோட வளர்ச்சிக்கு ரொம்ப அவசியம். சோ கீப் தட் இன்யோ மைன்ட். அன்ட் பீல் பிரி டு ஸ்யார் யோர் ஐடியாஸ் வித் மீ. தட்ஸ் ஆல். நௌ யூ கேன் லீவ்."
"கட்டாயமாக என்னுடைய முழு ஒத்தழைப்பும் நம் கம்பனிக்கு உண்டு மேம்.இப்போ நான் என்னோட சீட்டுக்கு செல்கின்றேன் மேம்" என்று கிளம்பிய அஸ்வினை
"அப்புறம் மிஸ்டர் தேஜஸ்வின் நேற்று டின்னர் பாமிலியோட நல்லா என்ஜாய் பண்ணீங்களா??""
"மேம் உங்களுக்கு எப்படி..."
"நேற்று நானும் ஒரு கிளையண்டை மீட் பண்ண அங்க வந்திருந்தேன் அப்போ தான் நீங்க பாமிலியோட வந்திருந்ததை பார்த்தேன். ஆனா நீங்க என்னை கவனிக்கவில்லை."
"ஐயம் வெரி சாரி மேம் நான் சத்தியமாக உங்களை கவனிக்கவில்லை" என்று மன்னிப்பு கேட்ட அஸ்வினிடம்
"ஹேய் கூல் .நோ வொரிஸ்"
"தாங்யூ மேம். ஷல் ஐ லீவ் நௌ??" என்று அனுமதி கேட்டு நின்ற அஸ்வினிற்கு அனுமதி வழங்கினாள் சாரு.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top