மண்ணில் தோன்றிய வைரம் 39

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு விழித்த சாரு எழுந்து சென்று கதவினை திறந்தாள்... அங்கு ஷெண்பா கையில் உணவுத்தட்டுடன் நின்றிருந்தார்.....
அவரை நேருக்கு நேர் சந்திக்க முடியாத சாருவோ அவரை உள்ளே அழைத்துவிட்டு கட்டிலில் சென்று அமர்ந்து கொண்டாள்....
அஸ்வின் சாருவிற்கு அவளது தவறை உணர்த்திய பின் சாரு தன் சித்தி ஷெண்பாவின் ஊரிற்கு சென்று அவரிடம் மன்னிப்பு வேண்டினாள். அவரை தன்னுடன் வந்து இருக்குமாறு அழைக்க அவர் மறுத்துவிட்டார்... பின் அவரிடம் பல கெஞ்சல்கள் மன்றாட்டுக்களை முன் வைத்து அவரையும் அவளது தம்பியையும் தன்னோடு அழைத்து வந்துவிட்டாள்... அதன் பின் ஷெண்பா சாருவை தன் மகள் போல் கவனித்துக்கொண்டாள்.... எப்போதும் ஆபிஸ் விட்டு வரும் சாரு சித்தி என்று அழைத்தவாறே வீட்டினுள் நுழைவாள்..... பின் அன்று நடந்த அனைத்தையும் அவரோடு பகிர்ந்து கொள்வாள்... பின் தன் சகோதரனுடன் அரட்டை, அவனுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது என்று அவளது நேரம் பறக்கும்....
ஷெண்பா சாருவிற்கு பிடித்ததை பார்த்து பார்த்து செய்வார்.....
சாருவிற்கு உறவென்று தான் இருக்கின்றேனென தன் ஒவ்வொரு செயலிலும் காட்டினார்.....
அவ்வாறு இருக்க இன்று வழமையான நேரத்திற்கு முன் வீடு திரும்பிய சாரு தான் அழைத்தது கூட காதில் வாங்காது சோர்ந்த நடையுடன் அறைக்கு சென்றதை பார்த்த அவரிற்கு ஏதோ சரியில்லை என்று தோன்றியது.....
சரி அவளுக்கு ஓய்வு தேவை என்று எண்ணி அவளை சிறிது நேரம் தொல்லை பண்ண வேண்டாம் என்று ஷெண்பா அமைதியாய் இருக்க சாருவோ அறையை விட்டு வெளியே வரவில்லை...இரவு உணவிற்கும் கீழே வராத சாருவிற்கு தானே உணவு கொண்டு சென்றார் ஷெண்பா...
அவர் ஐயம் கொண்டது போல் சாருவும் எதையோ இழந்தது போல் அமர்ந்திருந்தாள்...
அவளது கண்கள் வழமைக்கு மாறாய் சிவந்திருந்தது அவள் அழுததை காட்டிக்கொடுத்தது... தான் இங்கு வந்த நாள் முதலாய் மலர்ச்சியை மட்டுமே தாங்கி நின்ற அவள் முகம் இன்று ஏதோ வேதனையில் கசங்கி நின்றதை காணப்பொறுக்காது சாருவிடம் விசாரித்தார்...
“சாருமா என்னாச்சு??? ஏன் முகமெல்லாம் வாடி இருக்கு ??? ஆபிசில் ஏதும் பிரச்சினையா??”
“இல்லை சித்தி அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை.... நான் நல்லா தான் இருக்கேன்... லைட்டா தலை வலி அதான்....”
“தலைவலியா??? இதை ஏன் முன்னமே சொல்லல??? சொல்லி இருந்தா சித்தி தைலம் பூசி விட்டுருப்பேன்ல...” என்றவாறு அவர் தைல டப்பாவை எடுக்கச்செல்ல அவரை தடுத்த சாரு
“சித்தி கொஞ்ச நேரம் உங்க மடியில் படுத்துக்கவா?” என்று கேட்க
“இதை நீ கேட்கனுமா??? நான் உன்னோட சித்தி. நீ உரிமையோட என் மடியில் படுத்துக்கலாம்... வாமா வந்து படுத்துக்கோ” என்று ஷெண்பா சாருவை அழைக்க சாரு தன் சித்தி மடிமீது தலை வைக்க அவர் தலையை தடவிக்கொடுத்தார்....அது அவளுக்கு அப்போது மிகத்தேவையாக இருந்தது....
“சாரு..”
“சொல்லுங்க சித்தி...”
“எந்தவொரு பிரச்சனையும் நிரந்திரமில்லை..... வாழ்க்கைனா பிரச்சனைகள் வரத்தான் செய்யும்...
அதை நாம தான் தைரியமா நின்று முகம் கொடுக்கனும். உன்னோட பிசினசில் எவ்வளவோ பிரச்சனைகளை முகம் கொடுத்து தான் இன்று இந்த நிலையில் இருக்க.... ஒவ்வொரு பிரச்சனையும் ஏதோ ஒரு நோக்கத்தோடு தான் அந்த கடவுள் நமக்கு கொடுக்கிறார்... அதை நாம பிரச்சனைனு எடுத்துக்கிட்டா பிரச்சனை சவால்னு எடுத்துக்கிட்டா அது வெற்றி..... இதெல்லாம் நான் உனக்கு சொல்லனும்னு அவசியம் இல்லை ...
ஆனாலும் வாழ்க்கைனு வரும் போது சில உணர்வுகள் நமக்கு பிரச்சினையை உண்டு பண்ணுது… அந்த உணர்வுகளுக்கு நாம் அடிமையாகும் பட்சத்தில் அது நமக்கு சில பிரச்சனைகளை உருவாக்குகின்றது… உதாரணத்திற்கு ஒரு புதிதா திருமணமான ஜோடியை எடுத்துகிட்டா திருமணமான புதிதில் மனைவி கணவனை இதை செய்யாதீங்க அதை செய்யாதிங்க அப்படினு குறை சொல்லும் போது பொதுவான எந்த ஆணா இருந்தாலும் கோபம் வரும்… சில வேளைகளில் அவங்களோட வாழ்க்கை முறையை அந்த வேண்டுகோள்கள் மாற்றுவதாக இருந்தால் அவங்களுக்கு இடையில் பிரச்சனைகள் வரும்… ஆனா எதனால் அவன் மனைவி அப்படி சொல்றானு கணவன் யோசித்து அதன்படி நடந்துகொண்டால் அவங்களுக்கிடையில் எந்த பிரச்சினையும் வராது…… மனைவியும் கணவனை புரிந்து ஒரேடியாக மாற்றத்தை எதிர்பார்க்காம சிறுக சிறுக மாற்றத்தை ஊக்குவிக்கும் போது அவர்களுக்கிடையில் சண்டை சச்சரவுகள் எப்போதும் இருக்காது...... இவங்க இரண்டு பேரும் அப்படி நடந்துகொள்வதற்கு காரணம் ஒருவர் மேல் மற்றொருவருக்கு உள்ள உரிமையுணர்வு...... அந்த உரிமையுணர்வு இல்லாவிடின் தாம்பத்தியம் இனிக்காது....ஆனா அந்த உரிமையுணர்வு தான் அவங்களுக்குள்ளே பிரச்சனையை உருவாக்குகின்றது. அதுமட்டும் இல்லை அதீத அன்பு கூட சில சிக்கல்களை உருவாக்கலாம்.... ஆனா அதற்காக அந்த அன்பை உதறித்தள்ளிட்டு செல்வது சரியல்ல......... அந்த சிக்கலிற்கான வேறு தீர்வை நாம தான் நிதானமா யோசித்து எடுக்கனும்....... உணர்வுகள் கண்ணாடி பாத்திரம் மாதிரி சரியாக கையாளவில்லைனா அது பல மறைக்க முடியாத வடுக்களை ஏற்படுத்திடும்....
அதனால் நாம தான் நம்மோட சிக்கல்களையும் பிரச்சனைகளையும் தைரியமா கையாளனும்...... அதுக்கு நம்ம மனம் ஒத்துழைக்கின்ற அளவுக்கு நம் மனதை திடமாக வைத்திருக்கனும்.........
பிரச்சினைகள் இன்றைக்கு வரும் நாளைக்கு போகும் அதற்காக உன்னோட மகிழ்ச்சியை நீ எப்பவும் தியாகம் பண்ணக்கூடாது.... ஒரு மனிதனுக்கு எல்லா விடயங்களும் மகிழ்ச்சியை கொடுக்காது..... ஒரு கர்நாடக இசை பிரியருக்கு மேல்நாட்டு இசை மகிழ்ச்சியை கொடுக்காது.... சிலபேருக்கு குடும்பத்திற்காக தன்னோட வாழ்க்கையை அர்பணிப்பதில் மகிழ்ச்சி ..... ஆனா சில பேருக்கு அவங்களோட குடும்பத்தை மீறி அவங்களோட கனவுகளை நிறைவேற்றுக்கொள்வதில் மகிழ்ச்சி........இது தான் சாரு வாழ்க்கை....... பிரச்சனை என்ற காரணத்தினால் எந்த தியாகத்தையும் செய்யாதே..... அவசியம் இருந்தால் மட்டும் செய்யும் தியாகத்திற்கே ஆயுள் அதிகம்.... அதனால பிரச்சனைகள் வந்தா அதை தீர்க்கும் வழியை பார்க்கனும்... இப்படி உம்முனு முகத்தை வைத்துக்கொள்ள கூடாது... சரியா??
உனக்கு நான் சொன்னதெல்லாம் புரிந்திருக்கும்னு நினைக்கிறேன்????? இப்போ எழும்புமா கொஞ்சம் சாப்பிட்டு படுக்கலாம்....”
“சரி சித்தி....” என்ற சாருவிற்கு தான் கொண்டு வந்திருந்த உணவினை ஊட்டினார்....
உணவுண்ண தோன்றாத போதிலும் ஷெண்பாவிற்காக உண்டாள் சாரு....
உணவூட்டி முடித்த ஷெண்பா சாருவை படுத்துறங்குமாறு கூறிவிட்டு விளக்கை அணைத்துவிட்டு சென்றார்...
அவர் சென்றதும் அவர் கூறியது அனைத்தும் சாருவிற்கு ரீவைன் ஆனது.....
அவசியம் என்றால் எந்த தியாகத்தையும் செய்யலாம் என்று ஷெண்பா கூறியது மீண்டும் மீண்டும் சாருவின் காதில் ஒலித்தது....
தன்னுடைய காதலை தியாகம் செய்வது அஸ்வினை அவனது தந்தையுடன் சேர்ப்பதோடு அவனுக்கு என்னால் இனி எந்த கஷ்டமும் வராது என்று எண்ணியவள் ஷெண்பாவுடைய புத்திமதியில் தேவையானதை விடுத்து அவசியமில்லாததை மனதில் பதிய வைத்த சாரு அதை பின்பற்ற முடிவெடுத்தது அந்த காலத்தின் சதி....
முடிவெடுத்தாளே ஒழிய அவளால் அதை நடைமுறை படுத்த முடியுமா என்று தெரியவில்லை...அஸ்வினை சமாளிப்பது என்பது அவ்வளவு சுலபமில்லை....அவனிடம் பிரிவு பற்றி பேசும் தைரியமும் அவளிடம் இல்லை... அவள் பேசும் தோரணையிலே அவள் மனதில் என்ன நினைக்கிறாள் என்று கண்டுபிடிப்பவன் அஸ்வின்... அவனிடம் அவனை வெறுப்பது போல் நடிப்பது என்பது அவளால் முடியாத காரியம்...அவனிடம் இந்த பிரிவின் அவசியத்தை அவளால் வார்த்தைகளால் சொல்லி புரியவைக்க முடியாது.. அதை அஸ்வின் ஏற்றுக்கொள்ளவும் மாட்டான்...... இந்த பிரிவு அவனுக்கு அவசியம் என்று அவளால் புரியவைக்கவும் முடியாது.... ஆனால் இந்த பிரிவு அவனுக்கு நன்மையே...
ஆனால் உனக்கு என்று மனசாட்சி கேட்ட கேள்விக்கு பதில் கண்ணீராய் வெளிவந்தது....
தன் மொபைலை எடுத்தவள் கேலரியில் இருந்த அஸ்வினுடைய படத்தோட பேச ஆரம்பித்தாள்
“ஏன்டா என்னோட லவ்விற்கு ஓகே சொன்ன???? என்னால உனக்கு என்ன சந்தோஷம் கிடைத்தது... என்னால் உன் அப்பாவை எதிர்கின்ற சூழ்நிலை வந்தது.... என்னால தான் கிருஷ்ணன் அப்பா இப்போ ஆஸ்பிடலில் இருக்காங்க.... ஆனா நீதான் இவை எல்லாவற்றிற்கும் காரணம் அப்படிங்கிற மாதிரி ஒரு குற்ற உணர்ச்சியோட என்னை பார்க்குற..... கிருஷ்ணன் அப்பா ஆஸ்பிடலில் இருப்பதை கூட நீ என்கிட்ட சொல்லாம மறைச்சிட்ட.... ஏன் மறைச்ச??? நீ எனக்காக சண்டை போட்டது எனக்கு தெரிந்திரும் அப்படிங்கிறதாலா??? அது தெரிந்தா நான் கில்டியா பீல் பண்ணுவேன் அப்படிங்கிறதால தான் என்கிட்ட இருந்த மறைச்சியா????? ஏன்டா எப்பவும் என்னை பற்றி மட்டுமே யோசிக்கிற???? உன்னை பற்றி யோசிக்கவே மாட்டியா?? உனக்காக அங்க ஒருதொழில் சாம்பிராச்சியமும் உன் குடும்பமும் காத்திட்டு இருக்கும் போது நீ ஏன்டா என்னை பற்றி இவ்வளவு யோசிக்கிற???நீ என்னை இவ்வளவு தூரம் நேசிப்பதற்கு நான் உனக்கு ஒன்றும் செய்யலையே......... ஆனாலும் ஏன் இப்படி??” என்று அவள் படத்துடன் பேசிக்கொண்டிருக்க தவறுதலாக அவள் கை பட்டு அவர்கள் இருவரும் இருந்த படமொன்று வந்தது. அது அவர்கள் கடற்கரையில் அமர்ந்திருந்த போது எடுத்தது. அந்த புகைப்படம் அந்த நாளில் அவர்கள் பேசிக்கொண்ட உரையாடலை அவளுக்கு நினைவு படுத்தி அவளது துயரை அதிகப்படுத்தியது........
 

banumathi jayaraman

Well-Known Member
இந்த சாருணீ சரியான கூமுட்டையாக இருக்காளே?
அவ்வளவு தூரம் மூச்சைப்
பிடிச்சு ஷெண்பா இவளுக்கு
அட்வைஸ் செஞ்சது வேஸ்ட்டா,
அனு டியர்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top