மண்ணில் தோன்றிய வைரம் 38.2

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
அஸ்வினின் பிறந்தநாளை அவனது ரெசியூமியை பார்த்து தெரிந்து கொண்ட சாரு அவனுக்கு சப்ரைஸ் குடுக்க எண்ணினாள்....
அன்று வேலை நாள் என்பதால் அஸ்வினிற்கு ஆபிசில் ஒரு சின்ன பர்த்டே பார்ட்டி ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தது.... அவனுக்கு அனைவரும் வாழ்த்த அவன் எதிர்பார்த்திருந்த சாருவோ அன்று ஆபிஸிற்கு வரவில்லை.... அவனுக்கு சிறு ஏமாற்றமே... ஆனாலும் ஏதேனும் வேலை என்று எண்ணி அவளிற்கு அழைக்க அது எடுக்கப்படவில்லை.... சஞ்சுவிடம் விசாரிக்க அவனும் சரியாக பதில் சொல்லவில்லை.... அன்று மாலை ஆபிஸ் முடியும் வரை சாருவை எதிர்பார்த்திருந்த அஸ்வினிற்கு ஏமாற்றமே..... ஆபிஸ் முடியும் நேரம் அவன் அவனது காரினுள் அமர திடீரென்று அவனது கண்கள் யாருடையதோ கைகளால் மூடப்பட முதலில் பதறிய அஸ்வின் பின் அது சாரு என்று உணர்ந்தான்... அவளை சீண்டும் விதமாக
“யாருங்க நீங்க ??? இப்படி ஒரு கன்னிப்பையன் தனியா இருக்கும் போது கண்ணை மூடி விளையாடுறீங்க??? சிஸ்டர் கொஞ்சம் கையை எடுத்தீங்கனா யாருனு பார்த்துக்க வசதியா இருக்கும்” என்று அவன் கூற கைகள் உடனடியா எடுக்கப்பட்டது....
தன் கண்களை ஒருமுறை தன் கைகளால் ஒற்றி எடுத்துவிட்டு பின்னால் திரும்பி பார்க்க அங்கே சாரு கோபத்தால் முகம் சிவக்க அமர்ந்திருந்தாள்....
அவளது தோரணையை பார்த்து அஸ்வின் சிரிக்க சாரு அவனை முறைத்தாள்....
“என்ன ஜிலேபி சிரிச்சா அடிப்பனு எதிர்பார்த்தேன்.... நீ என்னடானா அடிக்காம முறைக்கிற????”
“ஓ உனக்கு அது ஒரு குறையா இருக்கா..... உனக்கு இன்னைக்கு பிறந்த நாள்னு பாவம் பார்த்தா நீ அடிக்கலைனு பீல் பண்ணுறியா??? சரி இந்தா வாங்கிக்கோ....”என்று அங்கிருந்த பைலினால் அடிக்கத்தொடங்கினாள் சாரு...
அவள் அடிக்காதவாறு அவளை தடுத்த அஸ்வின்
“கூல் ஜிலேபி..... எதுக்குமா இந்த பாவப்பட்ட ஜென்மத்தை இப்படி அடிக்கிற???? சரி சொல்லு ஜிலேபி... எதுக்கு என்னை அப்படி முறைச்ச???”
“நீ பண்ணுற காரியத்திற்கு உன்னை வேறு என்ன பண்ணுறதாம்???? நான் தான் கண்ணை மூடினேன்னு தெரிந்தும் சிஸ்டர்னு கூப்பிடுறனா உனக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கும்?”
“இல்லை ஜிலேபி எனக்கு கொலஸ்ரோல் இல்லைனு டாக்டர்ஸ் சொன்னாங்க” என்று அவன் வேணுமென்ற சாருவை கடுப்பேற்ற அவன் கையில் வைத்திருந்த பைலை வாங்கி மீண்டும் அடித்தவாறே
“உனக்கு எத்தனை தரம் இப்படி மொக்க ஜோக் சொல்லி கடுப்பாக்காதனு சொல்லி இருக்கேன்....கேட்குறியா... கேட்குறியா...”
“ஹாஹா கூல் ஜிலேபி சும்மா உன்னை கடுப்பேத்தலாம்னு தான் அப்படி கூப்பிட்டேன்..... நீ எனக்கு விஷ் பண்ணாததற்கு பனிஷ்மண்ட் தான் அது ... இன்னைக்கு புல்லா உன்னை சிஸ்டர்னு கூப்பிடலாம்னு இருக்கேன்” என்று அஸ்வின் கூற
“அப்படி எல்லாம் பனிஷ்மென்ட் குடுக்கக் கூடாது பேபி... உன்னோட ஜிலேபி பாவம்ல???”
“இல்லையே... இப்பெல்லாம் ஜிலேபி ரொம்ப சேட்டை பண்ணுது... அதுக்கு பனிஷ்மண்ட் குடுக்கனும்னு இந்த பேபி முடிவு பண்ணியாச்சு...”
“ஹேலோ பாஸ் உங்க முடிவெல்லாம் இங்க யாரும் கேட்கல.... இப்போ போய் இந்த டிரஸ் சேன்ஞ் பண்ணிட்டு வாங்க” என்று அவன் கையில் ஒரு பொதியை சாரு கொடுக்க அஸ்வின் அதை பிரித்து பார்த்தான்... அதில் ஒரு இளம் நீலநிற ஸ்ரைப் சேர்ட்டும் ஒரு சாம்பல் நிற டெனிமும் இருந்தது... அதை எடுத்துக்கொண்டு ஆபிசினுள் சென்றவன் உடை மாற்றிவிட்டு வெளியே வர சாரு காரிற்கு வெளியே நின்றிருந்தாள்.... அழகிய இளஞ் சிவப்பு நிற டாப்பும் வெள்ளை நிற லாங் ஸ்கேட்டுமாய் லூஸ் எயாருடன் இருந்தவள் அவனை பார்த்து சூப்பர் என்று சைகை காட்ட அவளது செய்கையில் மையலுற்று இருந்தான் அஸ்வின். என்றும் அவளது அழகில் சொக்கி நிற்பவன் இன்று சித்தம் கலங்கி நின்றான். அவன் அவ்வாறு நிற்க அவனது மாற்றத்தை உணராத சாரு அவன் நின்ற இடம் வந்து அவன் கரம் பற்றி காரினருகே இழுத்து சென்றாள். அவனும் அவள் இழுத்த இழுப்பிற்கு சென்றவன் அவள் காரின் பாக் டோரினை திறக்கச் சொல்லியவள் மறுபுறக்கதவினை திறந்து உள்ளே ஏறினாள்....
கார் கதவினை திறந்த அஸ்வினை ஒரு அழகிய கேக் உடன் ஒரு சிறிய பரிசுப்பொதியே வரவேற்றது.... உள்ளே ஏறி அஸ்வின் அமர சாருவோ அந்த கேக்கின் மீது பொருத்தப்பட்டிருந்த அந்த ஒற்றை மெழுகுதிரியை ஏற்றினாள்.. அந்த கேக்கின் மீது “ஹாப்பி போன் டே ரௌடி பேபி” என்று எழுதப்பட்டிருந்தது.....
“இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மை ஸ்வீட் ரொமாண்டிக் லவ்லி எக்சட்ரா..... ரௌடி பேபி....... நீ இப்போ போல எப்போவும் இப்படியே என்கூட லைப் லோங் ஹேப்பியா இருக்கனும்...”என்று அவனை வாழ்த்திவிட்டு அவன் புறம் கேக்கினை நீட்ட அவன் அவள் மறுகையிலிருந்த கத்தியினை வாங்கி அதனை வெட்டி அவளிற்கு ஊட்டினான்... அவளும் அவனிற்கு ஒரு துண்டு கேக்கினை வெட்டி ஊட்டினாள்.... பின் அங்கு அழகிய சிவப்பு நிற உறையால் பொதி செய்யப்பட்டிருந்த அந்த பரிசுப்பொதியை அவனிடம் கொடுத்து பிரித்து பார்க்க சொன்னாள். அந்த பொதியில் இரண்டு பரசில்கள் இருந்தது.. ஒன்று ஒரு கறுப்பு கூலர்ஸ்..... மற்றொன்று ஒரு அழகிய ஆர். ஜே என்று எழுத்துக்கள் ஒரு இதய வடிவ சின்னத்தினுள் ஒன்றின் மேல் ஒன்றாக பதிக்கப்பட்டு இருந்த ஒரு தங்க பென்டன்.... அதனை கையில் எடுத்த அஸ்வின் தன் கழுத்தில் அணிந்திருந்த செயினை கழற்றி அதில் கோர்த்து அணிந்து கொண்டான்.
“ஜிலேபி தான்கியூ சோ மச்.... இந்த பென்டன் ஐடியா சூப்பர்... ஆனா ஏன் உனக்கு பென்டன் குடுக்கனும்னு தோணுச்சி???” என்று அஸ்வின் வினவ தன் சட்டையினுள் இருந்த செயினை வெளியில் எடுத்து அதில் இருந்த பென்டனை காட்டானாள்.
“ நீ எனக்கு பிரபோசல் பண்ணி பார்ட்டி எல்லாம் குடுத்து சப்ரைஸ் பண்ண.... அதான் உன் ஜிலேபியும் உன்னை சப்ரைஸ் பண்ணேன். இந்த பென்டன் எப்பவும் நம்ம ரெண்டு பேரோட கழுத்திலும் இருக்கனும்... எது நமக்குள்ள என்றைக்கும் பிரிவே வரக்கூடாது அப்படிங்கிறத சிம்பலைஸ் பண்ணுறதுக்காக தான் அப்படி சொல்லி செய்து எடுத்தேன். அந்த பென்டன் நம்ம கழுத்தில் இருக்கும் போது நான் உன் கூடவே இருக்கதாகவும் நீ என் கூட இருக்கதாகவும் நம்ம பீல் பண்ணனும்... அதுக்காக தான் இப்படி ஒரு பெண்டன்...”
“அது சரி .... இது எதுக்கு கூலிங்கிளாஸ்??”
“அது வந்து..... சொன்னா சிரிக்க கூடாது...”
“நீ சிரிக்கிற மாதிரி எதுவும் சொல்ல கூடாது...” என்று அஸ்வின் கூற அவனை முறைத்தாள் சாரு....
“கூல் ஜிலேபி. மேட்டரை சொல்லு.”
“அது நீ கூலிங் கிளாஸ் போட்டால் செம்ம ஹேண்சம்மா இருப்ப.. அப்போ எனக்கு உன்னை அப்படியே இறுக்கி அணைச்சி ஒரு உம்மா கொடுக்கனும் போல இருக்கும்....” என்று சாரு கூற அஸ்வின் வினாடியும் தாமதிக்காது உடனடியாக அந்த கூலரை எடுத்து அணிந்து கொண்டு
“இப்போ அப்படியே இறுக்கி அணைச்சி உம்மா குடுத்திரு ஜிலேபி” என்று கூற அவனை சாரு முறைக்க என்று அவர்கள் இருவரும் சீண்டி விளையாடியது பின் மால் இற்கு சென்று சுற்றி ஆங்காங்கே நின்று போட்டோ எடுத்தது என்று அனைத்தும் அவள் கண்முன் படமாய் ஓட அவளது கண்ணீர் பெருக்கெடுத்தது...... அந்த பென்டனை தொட்டுப்பார்த்தவளால் பெருகி கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை...அதை அடக்கும் வழி தெரியாது அப்படியே அசதியில் உறங்கியும் விட்டாள்....
இனி சாரு என்ன செய்யப்போகிறாள்??? அஸ்வினின் நிலை என்ன???
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top