மண்ணில் தோன்றிய வைரம் 38.1

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
சித்ரா கிருஷ்ணரின் இந்நிலைக்கு அஸ்வின் அவன் தந்தையுடன் சண்டையிட்டதே காரணம் என்று கூறினார்....
“அஸ்வினோட அப்பா கால் பண்ணி இருந்தாருமா.... அவனுக்கு அவர் பெண் பார்த்திருப்பதாகவும் அவன் அந்த பெண்ணை திருமணம் செய்யனும்னு எங்ககிட்ட சொன்னாரு.... சிறுவயதிலிருந்தே அஸ்வினிடம் கேட்காம அவன் சம்பந்தப்பட்ட எதுலயும் நாங்க முடிவெடுத்ததில்லை.... இது அவன் வாழ்க்கை ....
அதுனால அவன்கிட்டயே கேட்போம்னு அவன் இருக்கும் போது அவங்க அப்பா கூட பேசினோம். ஸ்கைப்பில் பேசினதால நாங்க எல்லோரும் ஒரேடியா ஒரு இடத்தில் இருந்து தான் பேசினோம் ...... மனசுக்குள்ள பயம் அஸ்வினுக்கும் அவங்க அப்பாவிற்கும் மறுபடியும் மோதல் வந்திருமோனு......
அதுபடியே அஸ்வினும் அவங்க அப்பா சொன்னதை மறுத்துட்டான்.... அவங்க அப்பா காரணம் கேட்டப்போ அதை எதுக்கு உங்ககிட்ட சொல்லனும்னு அப்படி இப்படினு அவங்க அப்பா கூட வாக்குவாதம் பண்ண ஆரம்பிச்சிட்டான்... வாக்குவாதம் முற்றிப்போய் அஸ்வின் அப்பா இந்த கல்யாணம் நடந்தே ஆகனும்னு சொல்லிட்டாரு..... அதுக்கு அஸ்வின் என் வாழ்க்கையை பற்றி முடிவெடுக்குற உரிமையை நான் உங்களுக்கு கொடுக்கவில்லை.... அது என்னோட சித்தி சித்தப்பாவிற்கு மட்டும் தான் இருக்கு.... உங்க உரிமை என்னோட இனிசியலில் உங்க பெயர் இருப்பதில் மட்டுமே.... அதுவும் அம்மாவுக்காக தான் மாற்றாமல் இருக்கேன்... இல்லைனா அதையும் எப்பவோ மாற்றி இருப்பேன்... அப்படினு நிறைய பேசிட்டான் மா.... எனக்கும் அப்பாக்கும் இவங்க சண்டையை எப்படி நிறுத்துவதுனு தெரியாம இருந்தப்போ அப்பா நெஞ்சை பிடிச்சிகிட்டு மயங்கி விழுந்துட்டாரு..... அவரு அப்படி விழுந்தவுடன் உடனே ஆஸ்பிடல் கூட்டிட்டு வந்துட்டோம்.... அஸ்வின் தான் ரொம்ப பயந்துட்டான்......அவனால தான் இப்படி ஆகிருச்சினு ரொம்ப அழுதுட்டான்.....
அஸ்வின் இந்த விடயத்தில் அவங்க அப்பா பேச்சை கேட்டுருக்கலாம்..... அவங்க அப்பா சொல்லுறாருங்கிற ஒரே காரணத்திற்காக அவன் இப்படி மறுப்பான் என்று நான் எதிர்பார்க்கலை...
நானும் அப்பாவும் பேசி இருந்தோம்னா அவன் மறுத்திருக்க மாட்டான்... இப்போ இப்படி ஆகியிருக்காது..... அவங்க ரெண்டு பேருக்கும் இடையில் உள்ள விரிசலை இந்த கல்யாணப்பேச்சில் சரி படுத்தலாம்னு நினைத்தோம்... ஆனா அது கடைசியில் இப்படி ஆகிவிட்டது.... யாரு செய்த பாவமோ இப்படி அஸ்வினையும் அவங்க அப்பாவையும் பிரித்து வைத்திருக்கு.... ஆனா இந்த கல்யாணம் நடக்கலைனா கடைசி வரைக்கும் அஸ்வின் அவங்க அப்பா கூட ஒட்டாமலே போய்ருவான்..... இதுக்கு கடவுள் தான் ஒரு வழி செய்யனும்..... சாரு நீ அஸ்வின் கூட கொஞ்சம் பேசிப்பாரேன்...... அவனுக்கு உன் மேல் மதிப்பு கலந்த மரியாதை இருக்கு. நீ சொன்னா கொஞ்சம் யோசிப்பான்” என்று சித்ரா சாருவிடம் உதவி கேட்க அவளுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை... தன் ஆருயிர் காதலனிடம் தானே சென்று வேறொருவரை மணம் புரியச்சொல்ல எந்த காதலியால் முடியும்??? அதுவும் தன்னை மனதால் விரும்பிய காரணத்திற்காக பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேர்ந்த காதலனை நோகடிக்க எந்த காதலியால் முடியும்???? இப்படி ஒரு நிலை ஏன் வந்தது என்று சாரு மனம் நொந்தாள்...
தன்னால் அவனது குடும்ப உறுப்பினரின் உயிரிற்கு ஆபத்து வந்த போதிலும் குற்றவுணர்ச்சியுடன் சென்ற அஸ்வினின் முகம் அவள் கண் முன் வந்தது.... அவனது குற்றவுணர்ச்சிக்கு காரணம் என்ன???? அனைத்து இடர்களிற்கும் தானே காரணகர்த்தாவாக இருக்கின்ற பட்சத்தில் அவன் ஏன் குற்றவுணர்ச்சியை சுமக்க வேண்டும்.... என்னை விரும்பிய காரணத்திற்காக தன் தந்தையை எதிர்த்து அவருடனான உறவையே முறித்துகொள்ள துணிந்தான்...இல்லையேல் அவர் தந்தை பார்த்திருந்த பெண்ணிற்கு சம்மதம் தெரிவித்திருப்பான் ( ஆனால் சாரு உணராத ஒன்று அவரது தந்தை பார்த்ததாலே எந்த காலத்திலும் அந்த திருமணத்திற்கு அஸ்வின் சம்மதம் தெரிவித்திருக்க மாட்டான்..) இன்று அப்பாவிற்கு இந்த உயிர் போகும் நிலையும் வந்திருக்காது..... இவை அனைத்திற்கும் நானே காரணம் என்று தன்னுள் பிதற்ற தொடங்கினாள் சாரு....
இறுதியாக தன் காதலே அவனை இவ்வளவு வருத்துகின்றதென்றால் அதை அவனது நன்மைக்காக துறப்பதே அவனது நல்வாழ்வுக்கு சிறந்தது என்று முடிவெடுத்தாள்....
ஆனால் அப்போது சித்ராவிற்கு அவர்களது காதல் விவரம் தெரிந்திருந்தால் அவரே அவர்களது திருமணத்தை எந்தவித எதிர்ப்புமின்றி செய்து கொடுத்திருப்பார்.... அவர் பெறா மகன் என்றாலும் அஸ்வினிற்கு அவன் விரும்புவதை பெற்றுக்கொடுப்பதில் எந்த எதிர்ப்பையும் சமாளிக்க சித்ராவும் கிருஷ்ணரும் துணிவார்கள். சித்ரா உண்மையறியாது யதார்த்தமாக கூறியதை சாரு வேறு விதமாக எடுத்துக்கொண்டது யாரின் தவறு????
சாரு அங்கிருந்து சித்ராவிடம் சொல்லிக்கொண்டு தன் இல்லம் திரும்பினாள்... அங்கு தன் அறைக்கு சென்றவள் இவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த கண்ணீரை உகந்தாள்... அவள் முடிவெடுத்த போதும் அவளது மனம் அதை ஏற்கவில்லை.... அவளது மனசாட்சியோ பல கேள்விகளை எழுப்பி அவளை இன்னும் நோகடித்தது.... எழுப்பப்பட்ட எந்த கேள்விக்கும் அவளிடம் சரியான பதில் இல்லை..... அவளிடம் இருந்த ஒரே பதில் தன்னால் அஸ்வினிற்கு எந்த இழப்பும் நேரக்கூடாது.... அவன் தன் குடும்பத்துடன் எப்போதும் மகிழ்வுடன் இருக்க வேண்டும் என்பதே....... ஆனால் தன் பிரிவு அவனுக்கு அவன் அன்னையின் இழப்பிற்கு ஈடான ஒரு பெரிய இழப்பு என்பதை சாரு உணரத்தவறினாள்....
அந்த பிரிவு என்ற வார்த்தை சாருவிற்கு அவனுடனான இனிமையான தருணங்களை நினைவுபடுத்தி இம்சித்தது...
அவளையறியமாலே அவள் தன் மொபைலை எடுத்து கேலரியில் இருந்த அவனுடன் தான் எடுத்துக்கொண்ட படங்களை பார்த்தாள். அதில் ஒரு படம் அஸ்வினின் பிறந்த நாள் அன்று மால் இற்கு சென்ற போது எடுத்தது....அதை பார்த்ததும் அன்று நடந்த நிகழ்வுகள் சாருவின் கண் முன் படமாய் விரிந்தது...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top