மண்ணில் தோன்றிய வைரம் 30

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
“சரிங்க ஜிலேபி.... இப்போ உங்களோட ஸ்டோரியை சொல்லுங்க” என்று அஸ்வின் கேட்க தன் கதையை கூறத்தொடங்கினாள் சாரு. அவள் கூறி முடித்ததும் அஸ்வின்
“அடிப்பாவி நீ இவ்வளவு பெரிய கேடியா??? நானும் சின்னப்பொண்ணு ஒன்றும் தெரியாத பச்சை மண்ணுன்னு நினைத்தேன்... ஆனா நீ பண்ணியிருக்குற வேலையை பார்த்தா அப்படி தெரியலையே.... இதை விட கொடுமை காலேஜே தூக்கி வைத்து கொண்டாடுன என்னை நீ பேட்ட ரௌடி ரேஞ்சுக்கு டெமொனஸ்ரேட் பண்ணது...எனக்கு என்ன டவுட்டுனா இவ்வளவு தூரம் பாலோ பண்ண உன்னை நான் எப்படி கவனிக்காம விட்டேனு தான் புரியலை....”
“அதுதான் அம்மிணியோட டாலண்டு.... அப்படியிருந்தும் மூன்று தரம் மாட்டுப்பட போய்ட்டேன். கடைசி நிமிடத்தில் இந்த ரோஹினி வந்து காப்பாற்றிவிட்டாள்..... இதைவிட இன்னொரு காமெடி என்னவென்று தெரியுமா??? நான் ஆர்க்கெஸ்ரா டீமிலும் இருந்தேன். ஆனா நீங்க வந்தோன நைசாக அந்த இடத்திலிருந்து கழன்றுவிடுவேன். அதுனால அங்கேயும் நீங்க என்னை மிஸ் பண்ணிட்டீங்க......”
“ஆர்கெஸ்ட்ரா டீமிலா.....????அப்ப அந்த ராப்பன்சல் பிரின்சஸ் நீ தானா???” என்று கேட்க
“அது யாரு…??”
“ஆர்கெஸ்ரா டீமில் நீ ரொம்ப பேமஸ் தெரியுமா???”
“என்னடா சொல்லுற ரௌடி???”
“ஏன் ஜிலேபி உன்னை எவ்வளவு ஸ்வீட்டா வார்த்தைக்கு வார்த்தை ஜிலேபினு கொஞ்சி கொஞ்சி கூப்பிடுறேன். நீ ஏன்டி என்னை ஜில்லா ரௌடி ரேஞ்சுக்கு ரௌடி ரௌடி னு கூப்பிடுற??? எனக்கு ஒரு மாதிரி ஷையா இருக்குடி… வேற ஏதாவது பேர் சொல்லி கூப்பிடேன்….. இந்த ஹனி, பனி, ஸ்வீட் ஹார்ட் ,ஹபி எப்படி எதாவது சொல்லி கூப்பிடேன்… நீ ரௌடினு கூப்பிடும் போது ஒரு நிமிசம் எனக்கு நான் உண்மையாவே ரௌடி தானோனு தோணுது…..” என்று தன் அன்புக்குரிய காதலி வைத்த அந்த அதிரடி செல்லப்பெயர் குறித்து அஸ்வின் புகார் கூற….
“நீ ரௌடி தான் டா என்னோட ரௌடி பேபி… உனக்கு இந்த பேர் பிடிக்காட்டி நீ சொன்ன இந்த ஹனி,பனி லிஸ்டுல பன்னி னு ஒரு ஸ்வீட் பெட் நேம் இருக்கு… அது ஓகேனா சொல்லு இனி அப்படியே கூப்பிடுறேன்” என்றுவிட்டு அவனை அப்பேர் கொண்டு அழைக்க…. அவளின் முன் தன் கைகளை பணிந்திருந்த தலைக்கு மேல் கூப்பி……
“அம்மா தாயே தெரியாம கேட்டுட்டேன்.மன்னிச்சுக்கோ… என்னை நீ ரௌடி பேபினே கூப்பிட்டுக்கோ… இனிமே நான் அதைப்பற்றி ஒன்றும் சொல்லவும் மாட்டேன். கேட்கவும் மாட்டேன். மீறி கேட்டேனா நீ என்னை அந்த பெயரை சொல்லி கூப்பிடு…. இப்ப ஆளை விடு…” என்று ஜகா வாங்க அவனது செயலில் சிரித்த சாரு அவனது இரு கன்னத்தையும் பிடித்து கொஞ்சியவாறு “சோ ஸ்வீட் ரௌடி பேபி” என்று கூறி புன்னகைக்க அவளது செயல் அவனுக்கு அவன் தாய் இந்திராவை நியாபப்படுத்தியது. அவரது நினைவில் அவன் அமைதியாக அவனது இந்த அமைதியில் குழம்பிய சாரு
“என்னாச்சு அச்சு…. ஏன் திடீர்னு சைலண்டாகிட்ட???”
“ஒன்றும் இல்லை ஜிலேபி… நீ கொஞ்சும் போது அம்மா நியாபகம் வந்திருச்சி அதான்…வேற ஒன்றும் இல்லை..”
“சாரி டா…”
“ஹேய் கூல் ஜில்லு… சொல்லப்போனா நான் தான் உனக்கு தேங்ஸ் சொல்லனும். ரொம்ப வருஷங்களா எனக்கு கிடைக்காத இனிமே கிடைக்கவே கிடைக்காதேனு நினைத்திருந்த அந்த கொஞ்சல் உன்மூலமா எனக்கு கிடைத்திருக்கு… நான் சேட்டை பண்ணாம சமர்த்தா இருந்து அம்மாக்கு ஹெல்ப் பண்ணும் போது எல்லாம் அம்மா இப்படி என்னை கொஞ்சிட்டு என்னை அணைத்து ஒரு முத்தம் குடுப்பாங்க… அதுல அவ்வளவு பாசம் இருக்கும்… அந்த கொஞ்சலுக்காகவும் அம்மாவோட அந்த சோ ஸ்வீட் அப்படிங்கிற வார்த்தைக்காகவும் நான் எப்பவும் சமத்தா சேட்டை பண்ணாம இருப்பேன். அம்மா தவறிவிட்ட பிறகு அது இல்லாமலே போய்விட்டது. அதுக்காக சித்தி நல்லா பார்த்துக்கொள்ளவில்லை என்று அர்த்தமில்லை. கவி,மாதுவை விட சித்திக்கு நான் என்றால் உயிர். நான் அம்மாவோட இழப்பிலிருந்து மீள அவங்க தான் காரணம்.. என் மனசு அம்மாவை தேடும் போது எல்லாம் அவங்களுக்கு அது புரிந்துவிடுமோ தெரியவில்லை என்னை வந்து அணைத்து தலையை கோதி விடுவாங்க… என்னோட மைண்டை சேஞ்ச் பண்ண ஏதாவது பேசிட்டே இருப்பாங்க…. நான் மைண்டை டைவர் பண்ண மியூசிக் தான் சரியான வழினு என்னை வெஸ்டர் மியூசிக் கத்துக்க அனுப்புனாங்க… அவங்க நினைத்த மாதிரி நானும் நார்மல் ஆகிட்டேன். என்னை அவங்க கண்ணுக்குள்ள வைத்து பார்த்துக்கிட்டாங்க… அம்மா இருந்திருந்தா கூட அப்படி என்னை பார்த்திருப்பாங்களானு தெரியலை… ஆனா என்னதான் அவங்க என்னை நல்லா பார்த்துக்கிட்டாலும் அம்மாவை யாராலும் ரீபிளேஸ் பண்ண முடியலை…. அது அம்மாவுக்கே உரிய தனித்துவம்… சித்தி மட்டும் இல்லை பாட்டி, தாத்தா,சித்தப்பா கவி,மாது எல்லோருமே என்மேல் இன்னும் வரை பாசத்தை வரையறையில்லாம கொட்டிட்டு தான் இருக்காங்க….. நான் எதையும் விருப்பப்பட்டு கேட்டு வாங்கிக்க மாட்டேன். அது தெரிந்து அவங்க ஒரு சின்ன பொருளா இருந்தாலும் எனக்கும் சேர்த்து வாங்கிக்கொடுப்பாங்க. சித்தியும் சித்தப்பாவும் எதையும் செய்ய சொல்லி போர்ஸ் பண்ணமாட்டாங்க.. ஆனா அவங்க பேசும் விதத்திலேயே நான் மனம் விரும்பி செய்யத்தொடங்கிடுவேன்.இதுவரைக்கும் எல்லா விடயத்திலும் அவங்க தலையீடு இருக்கு….. ஆனா அது தொந்தரவா இல்லாம வழிகாட்டுதலா தான் இருந்திருக்கு…. நான் அவுஸ்ரேலியா போகக் காரணமே என்னோட சித்தப்பா தான். எனக்கு ஆப்சைட் மாஸ்டர்ஸ் செய்யனும்னு ஆசையிருந்தது. அதுக்கான ஆப்பர்சுனிட்டு கிடைச்சப்போ சித்தியும் பாட்டியும் அவ்வளவு தூரம் போக வேணாம்னு விடாப்பிடியா இருந்தாங்க. அவங்களை சரிகட்டி சித்தப்பா தான் என்னை அவுஸ்ரேலியா அனுப்பி வைத்தாரு… அப்புறம் அங்க ஜாப் கிடைத்தப்போ அங்க கொஞ்சநாள் வர்க் பண்ணட்டானு கேட்டப்போ சித்தி பாட்டி பேச்சை கேட்காம என்னோட விருப்பத்திற்கு முதலிடம் கொடுத்து எனக்கு சரினு சொன்னாரு. இப்படி எல்லா விஷயத்திலும் என்னை முதன்மை படுத்தினாங்க…. அவங்களுக்காக ஏதாவது செய்யனும்னு தோணுச்சி. அதான் இங்க வந்துட்டேன். நான் அவங்களோட செலவழிக்கிற நேரம் தான் அவங்களுக்கு நான் கொடுக்கக்கூடிய மகிழ்ச்சினு தோணுச்சி….. அதான் இங்கயே செட்டில் ஆகிட்டேன்….. ஆனா இப்போ நீயும் என்னோட குடும்பத்துல சேர போறனு நினைக்கிறப்போ நான் இழந்த என்னோட அம்மா தான் உன்னோட ரூபத்தில் வரப்போறாங்கனு தோனுது. ஐயம் சோ லக்கிடு ஹேவ் யூ இன் மை லைப்..”
“உண்மையில நான் தான்டா லக்கி. நீ என் லைப்பில் வந்திருக்காவிடின் எனக்கு இந்த ஸ்வீட் ரௌடி பேபியும் அவனோட அழகான உறவுகளும் எனக்கு கிடைத்து இருக்காது..... அம்மா இல்லாதது எவ்வளவு கொடுமைனு எனக்கு நல்லா தெரியும்டா. ஆனா உனக்கு அந்த தனிமையை போக்க உன்னோட சித்தப்பா குடும்பம் என்ற கூடு கிடைத்தது. ஆனா எனக்கு அப்படி யாரும் இருக்கலை.... அந்த விதத்தில் நீ லக்கி தான்டா.... ஆனா இப்போ நானும் லக்கி. அந்த கூட்டில் என்னையும் சேர்த்துக்க நீ என்னை அங்க கூட்டிட்டு போகப்போற.....” என்று துக்கம்,கவலை ,மகிழ்வு பல கலந்த உணர்வை அவளது முகத்திலீன் வெளிபட சூழ்நிலையினை மாற்றும் பொருட்டு அஸ்வின்
“ஓய் என்ன பீலிங்சா..... உனக்கு இதெல்லாம் செட்டாகல.. இப்போ உன்னோட பெட் நேமிற்கு ரீசன் வேணுமா வேண்டாமா???
“ஹா பார்த்தியா மறந்துட்டேன்.. சொல்லு ஏன் என்னை ராப்பன்சல் பிரின்சஸ்னு சொன்ன??”
“அதுவா.... பெருசா ஒன்றும் இல்லை....அது...”
“மிஸ்டர் ரௌடி பேபி பெரிசா சிறுசா அதெல்லாம் நான் பார்த்துக்கொள்றேன். நீங்க அது இதுனு இழுக்காம ரீசனை சொல்லுங்க....”என்று சாரு கேட்க அவன் ஒரு மார்க்கமாய் சிரித்தான்.
அஸ்வினின் சிரிப்பிற்கு காரணம்???
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top