மண்ணில் தோன்றிய வைரம் 29

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
சாரு காதல் யாசகம் பெறுவதற்காக அவன் முன் மண்டியிட்டிருக்க அவனோ அவளை எழுப்பி தன் பதிலால் அவளை கதிகலங்க வைத்தான்.
“நான் ஓல்ரெடி ஒரு பெண்ணை விரும்புறேன். அந்த பொண்ணும் என்னை உருகி உருகி காதலிக்கிறாளாம். தினமும் போன் பண்ணி ஐ டெரிப்லி மிஸ்ஸிங் யூ னு சொல்லி புலம்புறா.... நானும் இவ்வளவு நாளா ஒன்றும் சொல்லலை. ஆனா இப்போ அவ தான் வேணும்னு என் மனசு சொல்லுது... உங்களுக்கு ஓகே சொன்னா அவளுக்கு நான் துரோகம் பண்ண மாதிரி போய்விடும். என் மனசாட்சி என்னை கேள்வி கேட்டே கொன்னுரும்... அதுனால...” என்று அஸ்வின் முடிப்பதற்குள் காளி அவதாரம் எடுத்தாள் சாரு.... அவனது சட்டையை கொத்தா பிடித்து
“ஏண்டா டேய்... என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியிது??? செவனேனு இருந்தவள இழுத்துட்டு வந்து பிரபோஸ் பண்ணிட்டு இப்போ இன்னொருத்தி கூட கமிட் ஆகிட்டேனு சொல்லுவியா??? சொன்ன வாயை கடிச்சி துப்பிருவேன் பார்த்துக்கோ.... இவரை நாங்க பல வருஷமா சைட் அடித்து லவ் பண்ணுவோமாம். இவரு வேறு பெண்ணுடன் கமிட் ஆகிருவாறாம். அது எப்படி அவ உன்னை மிஸ் யூனு சொல்லி புலம்புறதால நீ அவளை ஓகே பண்ணுவியா.... டேய் எத்தனை நாள் உனக்கு பேக் அக்கவுண்டில் இருந்து மிஸ் யூ மெசேஜ் அனுப்பியிருப்பேன்... என்றாவது அதுக்கு ரிப்ளை பண்ணியிருப்பியா??? எவ்வளவு நாட்கள் என்னோட லவ்வை புரிந்துகொள் என்று கெஞ்சியிருப்பேன். இதெல்லாம் துரைக்கு பாவமா தெரியலையோ???. இப்படி ஒரு மனசாட்சியே இல்லாத ஒருத்தனை நான் காலேஜ் டைமில் இருந்து லவ் பண்ணேன் பாரு.. என் புத்தியை செருப்பால அடிக்கணும். ஆனா ஒன்று மட்டும் மனதில் வச்சிகோ. அந்த சண்டாளிக்கு ஓகே சொல்லலாம்னு நினைத்த மகனே உன்னை மட்டும் இல்லை அவளையும் சேர்த்து கட்டிவச்சி சவுக்காளயே அடிப்பேன் பார்த்துக்கோ.... நீ எப்பவும் எனக்கு மட்டும் தான் சொந்தம்... வேற எவளயாவது நடுவில் நுழைக்கலாம்னு நினைச்ச உன்னை குருமா செய்து சாப்பிட்டிருவேன். பார்த்துக்கோ” என்று அஸ்வினை வார்த்தைகளாலே துவைத்து எடுத்த சாருவின் பேச்சு அஸ்வினுக்கு சிரிப்பை உண்டாக்கியது. அவனது சிரிப்பை கண்டு மீண்டும் சாரு கொதித்தெழு
“யம்மா தாயே.... என் வாய்டா இது.... இந்த புள்ளையும் பால் குடிக்குமாங்குற ரேஞ்சில் இருந்துக்கிட்டு என்னமா பேசுற.... விட்டா கெட்ட வார்த்தையிலெல்லாம் திட்டுவ போல இருக்கு.. உனக்கு அந்த அராத்து ஆனந்திங்கிற பேரு சரியாத தான் இருக்கு. சண்டைக்கோழி மாதிரி இப்படி சிலிர்த்துக்கிட்டு வார... கொஞ்சம் விட்டிருந்தா வாயாலையே என்னை பொரித்து எடுத்து சாப்பிட்டிருப்ப போல.....”என்று அஸ்வின் அராத்து ஆனந்தி என்ற பெயரை சொன்னவுடன் அவனது சட்டையை விட்ட சாரு.... அஸ்வின் தன்னை கண்டு கொண்டான் என்று உணர்ந்து வெட்கம் வந்து சூழ்ந்து கொள்ள மறுபுறம் திரும்பி நின்று கொண்டாள். அவளது வெட்கம் அஸ்வினுக்கு அவளை இன்னும் சீண்டும் ஆர்வத்தை உண்டு பண்ண
“ இங்க இவ்வளவு நேரம் யாரோ பட்டாசு மாதிரி வெடிச்சாங்களே....... அவங்களை யாராவது பார்த்தீங்களா.....அவங்க பேரு கூட சாருணியாம். யாராவது அவங்களை பார்த்தீங்களா பா....” என்று அவளை சீண்ட மறுபுறம் திரும்பி நின்றவள் அவன்புறம் திரும்பி அவனது மார்பில் செல்லமாய் அடித்துவிட்டு அடித்த மார்பிற்கு மருந்தாக மார்பிலேயே சாய்ந்து கொண்டாள்... அவ்வாறு அவள் சாய்ந்து கொள்ள அங்கிருந்த கூட்டம் கூச்சலிட்டு கை தட்டியது.......
பின் அவளை அணைத்தவாறே அனைவருக்கும் நன்றி கூற அவர்கள் தங்கள் சார்பாக ஒரு பரிசுப்பொதியையும் ஒரு கூடை சாக்லேட்டையும் வழங்கிவிட்டு அவ்விடத்திலிருந்து கலைந்தனர். அவர்கள் வழங்கியதை பெற்றுக்கொண்ட அஸ்வின் அதனை சாருவிடம் கொடுக்க அதை வாங்கியவள் ஒரு சிறு சிரிப்பை உதிர்க்க அதில் மயங்கியவன் அவள் முகம் நோக்கி குனிய அவன் எண்ணம் அறிந்த சாரு வெட்கத்தால் அவனை விட்டு ஓட முயல அஸ்வின் அவளது கையை பிடித்து இழுத்தான். அவன் இழுத்த வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் அவன் மேல் பூங்கொத்தாய் வந்து அவள் விழ அவளை தாங்கி பிடித்து நிறுத்தியவன் அவளை கைகளில் ஏந்தினான். அவளை ஏந்தியதும் வெட்கம் அவளை பிடிங்கித்திங்க அவனை இறக்கி விடுமாறு கேட்டாள்... அவள் கேட்டது அவளது காதுகளுக்கே எட்டாத போது அஸ்வினின் காதிற்கு எவ்வாறு எட்டும்????
அவளை கையில் ஏந்தியவன்
கனவா..... இல்லை காற்றா...
கனவா.... இல்லை காற்றா.....
கையில் மிதக்கும் கனவா நீ....
கைகால் முழைத்த காற்றா நீ...
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே....
நுரையால்... செய்த சிலையா...நீ..
இப்படி உன்னை... ஏந்திக்கொண்டு ....
இந்திரலோகம் போய்விடவா.....
இடையில் கொஞ்சம்.. வழியெடுத்தாலும்....
சந்திர...தரையில்...பாயிடவா....

நிலவில் பொருள்கள் எடையிழக்கும்...
நீரிலும் பொருள் எடையிழக்கும்...
காதலில் கூட எடையிழக்கும்..
என்று கண்டேனடி... இன்று கண்டு கொண்டேனடி...
காதல் தாய்மை இரண்டு மட்டும்...பாரம் என்பதை அறியாது....
உன் பளிங்கு பார்த்து கொண்டால் பசியோ வழியோ தெரியாது....
உன்னை மட்டும் சுமந்து நடந்தால் உயரம் தூரம் தெரியாது...
உன் மேல் வந்தொரு பூ விழுந்தால் என்னால் தாங்க.. முடியாது...

என்று பாடியவாறு அவர்களுக்கென்று போடப்பட்டிருந்த மேசையினருகே சாருவை தூக்கி சென்றவன் அவளை கதிரையில் அமரவைத்துவிட்டு அவளருகில் இருந்த கதிரையை இழுத்து போட்டு அவனும் அமர்ந்து கொண்டான்.
அவனை கண்களாலே பருகிக்கொண்டிருந்தவள் அவனது ஒவ்வொரு செயலையும் ரசித்த வண்ணம் இருக்க…
“ ஓய் ஜிலேபி என்ன கண்ணை திறத்துட்டே தூங்குறியா?” என்று கேட்க அவனை முறைத்தாள் சாரு...
“டேய் ரௌடி உனக்கு ரொமான்சிற்கும் தூங்குவதிற்கும் கூடவா வித்தியாசம் தெரியல?? உன்னை இங்க ஒருத்தி காதல் கொட்ட கொட்ட பார்த்திட்டு இருக்கேன்.. நீ என்னடானா தூங்குறியானா கேட்குற…”
“ஜிலேபி நான் போய் பவுல் ஏதும் எடுத்துட்டு வரவா??
“எதுக்கு?”
“இல்லை எதோ கொட்டுதுனியே அதான் அது கொட்டாமல் பிடித்துக்கொள்ள….”
“டேய்…” என்று அவனை சாரு அடிக்க
“ இனிமே இப்படி மொக்க ஜோக் சொன்ன மொத டெட் பாடி நீ தான் பார்த்துக்கோ….”
“அடிப்பாவி ஓகே சொன்னவுடனே இப்படி சங்கு ஊத பிளான் பண்ணிட்டியே…”
“நீ தானே ஆசை பட்டு கேட்ட அதான்..” அவளது பதிலில் சிரித்த அஸ்வின்…
“சரி இப்போ சொல்லு ஜிலேபி நீ என்னை எப்போ இருந்து லவ் பண்ண ஸ்டார்ட் பண்ண??”
“ அதுக்கு முதல்ல என் ரௌடி பேபிக்கு எப்போ என் மேல லவ் வந்துச்சுனு சொல்லு??”
“ஆஹா… அதெல்லாம் சீக்ரெட்…வெளியில சொல்லப்படாது”
“ஓ அப்படிங்களா சார். அப்போ நாங்களும் எங்க லவ்சை பற்றி மூச்சு கூட விடமாட்டோம்.”
“ஐயோ சாரு சொல்லாமல் இரு பரவாயில்லை. இப்படி மூச்சு விடாம இருக்காத…அப்புறம் மூச்சு திணறல் வந்துரும்” என்று சாருவை வெறுப்பேற்றும் நோக்குடன் காமடி என்ற பெயரில் மொக்கை போட சாரு அவனை இன்னும் மொத்தினாள்…
“ஹேய்…. விடு ஜிலேபி. உன்னோட ரௌடி பேபிக்கு வலிக்கும்.. பேபி பாவம்ல??”
“அப்படி விடனும்னா உனக்கு லவ் ஸ்டார்ட்டான ஸ்டோரியை சொல்லனும்…”
“சரி சொல்லுறேன்… லவ் அட் பெஸ்ட் சைட்னு சொல்லுவாங்களே…. கேள்வி பட்டு இருக்கியா??”
“ஆமா…”
“ஆனால் நம்ம ஸ்டோரியில லவ் இன்டர்வியூவில் தான் ஸ்டார்ட் ஆகிச்சி….”
“என்னாது..??? இன்டர்வியூவிலேயே என்னை சைட் அடிக்க ஸ்டார்ட் பண்ணிட்டியா???”
“ஆமா ஜிலேபி…. உன்னை இன்டர்வியூவில் பார்த்தோனே சைட் அடிக்க ஸ்டார்ட் பண்ணிட்டேன்… ஆனா உன்னோட பொசிஸன் பெரிசா இருக்கும் அப்படி தோன்றியவுடன் கப்புசிப்புனு ஆகிட்டேன்….இப்படி செவனேனு இருந்தவனை கொஞ்சம் கொஞ்சமா கவுத்திட்ட நீ… ஆனாலும் எனக்கு அது லவ்வுனு புரியலை… உன்னை சைட் அடிக்கிறேனு உணராமலே சைட் அடித்தேன். எந்த பொண்ணையும் ஒரு சகோதரன் என்ற உணர்வோடு மட்டும் பார்த்து பழகிய எனக்கு உன்னை பார்க்கும் போது மட்டும் அந்த உணர்வு வரமறுத்தது. அது எதனால் என்று யோசித்தால் குழப்பம் தான் பதிலா கிடைக்கும். அதுனாலேயே எதுக்கு வம்புனு என் மனவிருப்பத்தை ஆராயாம விட்டுட்டேன். நீ எங்க வீட்டுல…. சாரி நம்ம வீட்டுக்கு வந்து எல்லோரோடும் சந்தோஷமாக இருக்கும்போது என்னை அறியாம ஒரு மனநிறைவு வரும். இப்படி எல்லாம் நடந்தும் கூட உன்மேல எனக்கிருப்பது காதல் என்பதை உணரத்தவறினேன். ஆனால் நான் காதல் என்று உணரும் சந்தர்ப்பம் நிஷாவின் கல்யாணம் என்ற ரூபத்தில் வந்தது. அன்னைக்கு நீ அந்த சாரியில் வந்து நின்னப்போ ஐயா டோட்டல் பிளாட்டு… இன்னும் கொஞ்சநேரம் அப்படியே இருந்திருந்தனா அங்க என்னென்னமோ நடந்திருக்கும். அப்படி ஏதாவது நடந்துவிடும் என்ற பயத்தில் தான் காருக்கு போறேன்னு வெளியில் வந்துட்டேன்.”
“அது என்ன அந்த என்னென்னமோ???”
“உனக்கு அந்த என்னென்னமோ என்னவென்று தெரியாதா?? தெரியாவிடின் சொல்லு…இப்ப அந்த என்னென்னமோ என்னானு டெமோ காட்டுறேன்..” என்றவாறு அவள் உதடுகளை கைகளால் வருட அதில் வெட்கிச்சிவந்தவள் அந்த வருடிய விரல்களை நறுக்கென்று கடிக்க
“ஆஆ….ஐயோ இந்த ஜிலேபி என்னை கடிச்சிட்டா….. என்னை காப்பாற்றுங்களே” என்று அவன் தன் கையை உதறி சிறு பிள்ளை போல் அழ
“டேய் ரௌடி கத்தி மானத்தை வாங்காதா “
“நான் கத்துவேன்…நான் கத்தாமல் இருக்கனும்னா நீ கடித்த இடத்திற்கு ஒரு உம்மா குடு” என்று டீலிங் பேச
அவளும் சிரித்தவாறே அவள் கடித்த இடத்திற்கு ஒரு முத்தத்தை மருந்தாக வழங்கினாள். அவளது மென்மையான முத்தத்தில் ஒரு வித மோன நிலையில் கட்டுண்டு கிடந்த அஸ்வினை உலுக்கினாள் சாரு….
“மிஸ்டர் ரௌடி பேபி நீங்க டிரீம்ஸை வீட்டுக்கு போய் கண்டினியூ பண்ணலாம். நீங்க விட்ட கதையை தொடருங்கள்..”
“அராத்து… ஒரு நிமிஷம் மனிஷனை என்ஜாய் பண்ண விட மாட்டான்கிறா… இரு கதையை சொல்லித்தொலைக்கிறேன்” என்றவனை பார்த்து வந்த சிரிப்பை அடக்கினாள் சாரு…
“அப்போ தான் நீ விழுந்து அடிபட்டு கிடந்த. உன்னை தேடிட்டு வரும் போது உனக்கு கால் பண்ணிட்டு வந்தேன். அப்போ உன்னோட போன் ரிங் ஆகுற சத்தம் கேட்டு அதை தேடி எடுத்தப்போ அதில் ரௌடி பேபினு விழுந்திருந்தது. அப்போ உன்னை காணவில்லைனு தேடிட்டு வந்ததால் அது மைண்டில் பதியலை. ஆனா உன்னை ஆஸ்பிடலில் அட்மிட் பண்ணி இருந்தப்போ என்னோட லவ்வை ரியலைஸ் பண்ணேன். அதுக்கு பிறகு நீ நல்லா இருக்கனு சொன்ன பிறகு தான் நான் ஒரு நிலைக்கு வந்தேன்.அப்போ தான் அந்த ரௌடிபேபி மேட்டர் மைன்டிற்கு வந்தது.. அப்போ என் மொபைலில் இருந்து உன்னோடதுக்கு கால் பண்ணப்போ ரௌடிபேபி காலிங்னு வந்தது. அப்போ தான் அது நீ என்று தெரிய வந்தது. அதுனால தான் உனக்கு சப்ரைஸ் குடுக்கலாம்னு சைலண்டா இருந்தேன்”
“இவ்வளவு வேளை பார்த்திருக்கியா நீ??? நான் கூட நீ இந்த லவ் விஷயத்தில் ரொம்ப தத்தினு நினைத்தேன்… ஆனா நீயும் ஸ்மார்ட் தான்…” என்று சாரு அவனை பாராட்ட அஸ்வின் அவனது காலரை தூக்கிவிட்டுக்கொண்டான்.....
 

banumathi jayaraman

Well-Known Member
ஏன்மா, அனு டியர்?
சாருவோட லவ்வை அஸ்வின்
கண்டுக்கினான்-னு நானு
சொன்னப்போ, இல்லை
சாருவே அவனிடம் சொல்வாள்-னு
சொன்னீங்களே?
இப்போ என்ன சொல்லுறீங்க?

என்ன, பால்கனியில சாரு
பேசும் பொழுது இந்த
அராத்து ஆனந்தியை இவன்
கண்டு கொண்டானோ-ன்னு
பார்த்தா, அதுக்கு மின்னாடியே
தேஜஸ்வின் பய புள்ள
ஆசுபத்திரியில சாருவை
கண்டுபிடிச்சுட்டான், அனு டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top