மண்ணில் தோன்றிய வைரம் 23

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
சாருவை தேட மண்பத்தினுள் சென்ற அஸ்வின் அவளை அங்கு காணாது ராக்கேஷிடம் விசாரிக்க அவனோ தெரியவில்லை என்று கூறிவிட்டு அவளது மற்ற தோழிகளிடம் விசாரிக்க அவர்கள் அவள் போன் பேசுவதற்காக வெளியே சென்றதாக கூறினர். அதன்படி சாருவை மண்டபத்திற்கு வெளியே தேடத்தொடங்கினான் அஸ்வின். அவளது அழைபேசிக்கு முயன்றவாறு அங்கிருந்த ஆற்றுங்கரையோரம் வந்த அஸ்வின் அங்கு ஏதோ சத்தம் கேட்க அது என்வென்று பார்க்கும் பொருட்டு சத்தம் வந்த திசையை நோக்கி சென்றான். அங்கிருந்த புற்களுக்கிடையே இருந்து ஏதோ சத்தம் கேட்க அதை நோக்கி குனிந்தவன் அங்கு ஐ 8 போன் ஒலித்துக்கொண்டிருப்பதை பார்த்தான். அதை பார்த்ததும் அது சாருவினுடைய போன் என்று புரிய அதனை கையில் எடுத்து அணைத்துவிட்டு அதனை தனது பார்க்கெட்டில் வைத்துவிட்டு சாருவை நாலாபுறமும் தேடத்தொடங்கினான். “சாரு சாரு” என்ற அவனது குரலுக்கு பதில் கிடைக்காமல் போக அவனுள் ஒரு நடுக்கம் பரவத்தொடங்கியது. எந்தவொரு நெருக்கடியான நிலையிலும் நிதானமாக யோசித்து செயல்படுபவனுக்கு இப்பொழுது மூளை செயற்பட மறுத்தது. மூளை மறுத்த மறு கணம் மனம் தாறுமாறாக தன் கற்பனையை படரவிட்டு அவனுள் இனம்புரியாத ஒரு பயத்தினை உண்டுபண்ணி அவனை பலவீனமாக்கியது.
ஆனாலும் அவனது கண்கள் சாருவை தேடுவதை நிறுத்தவில்லை.. அவனது முயற்சிக்கு பலனாக ஆற்றிற்கு இறங்கும் படிக்கட்டின் மீது ரத்தம் சொட்ட மயங்கிக்கிடந்தாள் சாரு.
அவளை கண்ட மறுநொடி மகிழ்ந்த மனம் அவள் ரத்தம் சொட்ட மயங்கிக் கிடந்த கோலம் அவனது மகிழ்ந்த மனதை கலங்கடித்தது. நீ இவ்வாறு கலங்குவதில் அர்த்தமில்லை என்று மூளை அவனுக்கு பணிக்க அவளது நிலை அறியும் பொருட்டு அவ்விடம் நோக்கி விரைந்தான் அஸ்வின்.
படிக்கட்டின் மேல் கிடந்தவளின் தலையில் அடிப்பட்டிருக்க அதனால் உருவான ஆழமான காயத்தினால் ரத்தம் பெருக்கெடுத்து அவளது அழகிய வதனத்தை முற்றுகையிட்டிருந்தது.
அவளை நெருங்கிய அஸ்வின் அவளது உதிரத்தை பார்த்து தன் பாக்கெட்டில் இருந்த அவனது வெண்ணிற கைகுட்டையினை எடுத்து அவளது தலையில் கட்டிவிட்டு அவளது கன்னத்தை தட்டி அவளை எழுப்ப முயல அவளிடம் எந்தவொரு அசைவும் இல்லை. தாமதிக்காது உடனடியாக அவளை தன் கைகளில் ஏந்திக்கொண்டு கார் நின்றுக்கொண்டிருந்த இடத்திற்கு நோக்கி சென்றான். காரினருகே நின்றுக்கொண்டிருந்த டிரைவரிடம் காரை எடுக்குமாறு சாருவை பின் சீட்டில் வாகாக படுக்கவைத்துவிட்டு அவனனும் காரினுள் ஏறிக்கொண்டான். அவன் காரினுள் ஏறிய அடுத்த நொடி கார் மின்னல் வேகத்தில் பறக்க சாருவை தன் மடியில் கிடத்திக்கொண்டு அங்கிருந்த டிசுவினால் அவளது இரத்தக்கறைகளை துடைத்துக்கொண்டே டிரைவரிடம் “அண்ணா ஆஸ்பிடல் எங்க இருக்குனு தெரியுமா?” என்று வினவ
“ஆமா தம்பி வரும் வழியில் பார்த்தேன். இன்னும் ஐந்து நிமிடத்தில் போயிரலாம்” என்று கூற அவனது கைகள் அவளது முகத்தில் இருந்த இரத்தத்தை துடைத்த வண்ணம் இருந்தது. மூன்று நிமிடத்தில் ஆஸ்பிடலை கார் அடைய அதிலிருந்து விரைந்து இறங்கிய டிரைவர் உள் சென்று உரியவர்களை ஸ்டெச்சருடன் அழைத்து வர அவர்கள் அஸ்வின் காலின் மீது தலை வைத்து படுத்திருந்த சாருவை மெதுவாக தூக்கி ஸ்டெச்சரில் படுக்கவைத்து ஸ்ரெச்சரை எமர்ஜென்சி வாடினை நோக்கி தள்ளிச்சென்றனர். அவளை தூக்கி சென்றதும் காரிலிருந்து இறங்கி அஸ்வின் டிரைவரிடம் காரை ஓரமாய் நிறுத்துமாறு கூறிவிட்டு ஆஸ்பிடலினுள் விரைந்தான். அங்கு எமர்ஜன்சி வாடில் அனுமதிக்கப்பட்ட சாருவை பற்றிய விபரங்களை கேட்ட தாதியிடம் விபரங்களை வழங்கிவிட்டு அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான் அஸ்வின்.
அமர்ந்தவனுக்கு இவ்வளவு நேரம் இழுத்து பிடித்திருந்த தைரியம் காற்றாய் மறைய கண்கள் கலங்கத்தொடங்கியது.
எவ்வளவு அழகாக தொடங்கிய நாள்.....
காலையில் அவன் தேவதையாய் வலம் வந்த சாருவும் இப்போது அடிப்பட்டு ரத்தம் சொட்ட மயங்கிக்கிடந்த சாருவும் கண் முன்னால் வந்து அவனது துக்கத்திற்கு வலு சேர்த்தனர். எப்போதும் நானும் புன்னகையும் ஒட்டிப்பிறந்த இரட்டையர் என்ற ரீதியில் புன்னகையை தவழவிட்டவாறு மலந்திருக்கும் அவள் முகம் இன்று புயலில் சிக்கிச் சிதைந்த கொடியாய் வாடி இருந்தது அவனது உயிரினை ஊடுருவிச்சென்று வலித்தது. அந்த சந்தர்ப்பத்தில் கூட தான் ஏன் அவளுக்கொன்று என்றால் இப்படி வருந்துகின்றோம் என்று அறியமுயலாமல் இருக்க கடுப்பான அவனது மனசாட்சி
“டேய் நீ ஏன்டா சும்மா சீனப்போடுற? அவ யாரு உனக்கு சொந்தமா பந்தமா??” என்று கேட்க அதற்கு பதிலளிக்க தெரியாமல் அவன் அமைதியாக மீண்டும் அவனை கேள்விகளால் துளைத்தது அவனது மனசாட்சி.
“ டேய் இப்படி அமைதியா இருந்து தப்பிச்சிரலாம்னு நினைக்காத... இன்னைக்கு நீ இதுக்கு பதில் சொல்லியே ஆகனும்” என்று மறுபடியும் மனசாட்சி வற்புறுத்த அப்பொழுதும் அவனது மனதினை உணராது அவன் மௌனம் காக்க
“டேய் நீ எல்லாம் என்ன ஜென்மம் டா.. ஒரு பொண்ணை பயங்கரமா சைட் அடிப்பியாம். கனவிலேயே அவளை கல்யாணம் பண்ணிப்பியாம். ஆனா நிஜத்தில அவ யாருனு கேட்டா சைலண்ட் ஆகிருவியாம்..
டேய் இன்னுமாடா உனக்கு புரியலை??” என்று அவனது மனசாட்சி அவனை கேள்வி எனும் சாட்டையால் தாறுமாறாய் விளாச ஆப் ஆகியிருந்த பல்ப் அப்போது எறிய ஆரம்பித்தது.
“அப்போ அதுவா??” என்று அவன் மனசாட்சியிடமே வினவ காண்டான மனசாட்சியோ
“ஆமாண்டா விளக்கெண்ணே...” என்றுவிட்டு சைலண்டாகிவிட அஸ்வினோ உள்ளுக்குள் ஏகத்துக்கு துள்ளினான். அவனது துள்ளல் முகத்தில் ஒரு புன்னகையை தோன்றுவித்த வேளையில் சாருவை அனுமதித்திருந்த அறையில் இருந்து டாக்டர் வெளியே வந்தார். அவரை நோக்கி விரைந்த அஸ்வின்
“டாக்டர் சாரு எப்படி இருக்கா?” என்று கேட்க
“சின்ன அடிதான். கைதான் பிராக்சர் ஆகிருக்கு. பாண்டேஜ் போட்டுருக்கேன். அடிப்பட்டது காலையில இருந்து சாப்பிடாம இருந்தது எல்லாம் சேர்ந்து தான் அவங்க மயங்கிட்டாங்க.. மத்தபடி ஏதும் இல்லை. இப்போ குளுக்கோஸ் ஏறிட்டு இருக்கு. இன்னும் கொஞ்ச நேரத்தில கண்ணு முழிச்சிருவாங்க.. கையில பாண்டேஜ் டூ வீக்ஸ் இருக்கட்டும். டூ டேசுக்கு ஒருவாட்டி டிரசிங்கிற்கு கூட்டிட்டு வாங்க.. மற்றபடி ஏந்த பிராப்ளமும் இல்லை. ஷூஸ் ஆல் ரைட்” என்று அஸ்வினின் தோளை தட்டிவிட்டு டாக்டர் செல்ல அவருக்கு நன்றியை தெரிவித்து விட்ட சாருவை பார்க்க சென்றான்.
 

banumathi jayaraman

Well-Known Member
பாறை மேல கையை வைச்ச
சாருணீ, வழுக்கி படிக்கட்டில்
விழுந்துட்டாளா, அனு டியர்?
ஏன்மா சாருணீ டியர்?
உன்னோட ரௌடி பேபியோட
நோ, நோ இந்த தேஜஸ்வின்
பயலோட சேர்ந்து "நேற்று இந்த
நேரம் ஆற்றங்கரையோரம்
உன்னைத் தொட்டு என்னைத்
தொட்டு தென்றல் செய்த
கோலங்கள் ஜாலங்கள்
ஆஹா"-ன்னு டூயட்டு பாடுறத
வுட்டுப்போட்டு இப்படிக்கா
வுயுந்துட்டியே, சாருப்
பெண்ணே
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top