மண்ணில் தோன்றிய வைரம் 22

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
அஸ்வின் மண்டபத்தில் நுழைந்த போது அங்கு அனைவருக்கும் மணமக்களை ஆசிர்வதிப்பதற்கான அட்சதை வழங்கப்பட்டுக்கொண்டிருந்தது. அட்சதை வழங்கும் பெண்ணிடம் அட்சதையை பெற்றுக்கொண்டு தன் நண்பர்கள் அமர்ந்து கொண்டிருந்த இடத்திற்கு சென்று அமர்ந்து கொண்டு திருமணத்தை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். அப்போது மணப்பெண் நிஷா அருகே நின்றுகொண்டிருந்த சாரு அவனது கண்களுக்கு தென்பட்டாள். மணப்பெண் அலங்காரம் இல்லாமலே ஜொலித்துக் கொண்டிருந்த சாருவை கண்டதும் இதுவரை நேரம் குழம்பித்தவித்த மனம் ஒரு மோனநிலைக்குள் சிக்குற காலையில் அவன் விட்ட சைட் அடிக்கும் வேளையை மறுபடியும் தொடங்கினான் அஸ்வின். அவளை சைட் அடிப்பதோடு நில்லாது அவனது கற்பனை அவர்களது கல்யாணம் என்ற எல்லைக்குள் சென்றது.மணப்பெண் அருகே நின்ற அவள் மணப்பெண்ணாய் மாறியிருக்க மணமேடையில் மணமகனாக இருந்த ஆனந் அஸ்வினாக மாறி இருந்தனர் அஸ்வினின் கற்பனை கதையில். அஸ்வின் அருகே மணப்பெண்ணிற்கே உரிய அலங்காரத்துடன் அமர்ந்திருக்க அவளது முகப்பூரிப்பு அவளது மணப்பெண் பாத்திரத்திற்கு பொருத்தமாய் இருக்க அவளது முகச்சிவப்பை காண்பதற்காக அஸ்வின் அவளது இடையை கிள்ள அவனது அவாவிற்கு ஏற்ப அவன் தீண்டலால் உண்டான கூச்சத்தை உடலின் சிறு அசைவினாலும் முகச்சிவப்பாலும் வெளிப்படுத்த அவளது அவஸ்தை புரிந்த போதிலும் அதில் மகிழ்ந்த மனதை மேலும் மகிழச்செய்ய எண்ணி மீண்டும் இடையைக் கிள்ள சென்ற கையை தடுக்கும் முகமாக சாரு அவனது கையை கிள்ள என்று செல்ல சீண்டல்கள் தொடர அதற்கு மேலும் சந்தர்ப்பம் வழங்கும் முகமாக ஐயர் அக்னி குண்டத்தில் இருவரையும் பூக்களை போட பணிக்க வேண்டுமென்றே அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவளது கைகளை தன் விரலால் வருடி அந்த திருமண சடங்கின் ஒவ்வொரு செயலிலும் தன்னவளை முகம் சிவக்கச் செய்து அதில் பரவசம் அடைந்துக்கொண்டான். இவ்வாறு அவனது கற்பனையாய் வெளிப்பட்ட சாருவுடனான அவனது திருமணக்கனவை என்று டேய் அடங்குடா டேய் என்ற ரீதியில் தடை செய்தது மேளச்சத்தமும் அதனைத்தொடர்ந்து ஒலித்த ஐயரின் “கெட்டிமேளம்” என்ற குரலும். கனவு கலைந்து எழுபவன் போல் முழித்த அஸ்வினை
“டேய் என்னடா பார்த்திட்டு இருக்க??? அட்சதையை போடுடா..” என்று ரவியின் குரல் யதார்த்தத்தை உணர்த்த தன் கையில் இருந்த அட்சதையை தூவினான் அஸ்வின்.
திருமணம் முடிந்த நிஷாவும் ஆனந்தும் வலம் வரும் போது மீண்டும் அவனது கற்பனை படர்ந்து விரியத்தொடங்கியது. அவன் முன் செல்ல அவனது சிறுவிரலில் சாருவின் சிறுவிரல் கோர்க்கப்பட்டு நிஜத்தை தொடரும் நிழல் போல் சாரு பின் தொடர அவர்களது அக்னி வலம் ஆரம்பமாகியது. இடமிருந்து வலமாக ஆரம்பித்து அம்மிக்கல்லை இருவரும் நெருங்க ஐயர் மெட்டி அணிவிக்குமாறு பணிக்க தங்கள் அக்னி வலத்தை தற்காலிகமாக நிறத்துவிட்டு கோர்த்திருந்த விரல்களை பிரித்த அஸ்வின் மண்டியிட்டு நிலத்தில் அமர்ந்து அவன் முன் நின்ற சாருவை நோக்கி கண்ணடிக்க அவளது கன்னங்கள் இரண்டும் வெட்கத்தை தத்து எடுத்ததற்கு சான்றாக குங்கும நிறமாய் மாற “தம்பி நாழியாகுது” என்ற ஐயரின் குரலிற்கு மதிப்பளிக்கும் முகமாக சாருவிடம் காலை அம்மி மீது வைக்குமாறு கண்களாலே கூற அதை புரிந்த அவளோ தன் மெல்லிய கொலுசால் போர்த்தப்பட்டருந்த தன் மென்பாதங்களை தூக்கி அம்மியில் வைத்து அப்பாதங்களுக்கு போர்வையாய் இருந்த தன் சேலையினை சற்று தூக்கிபிடிக்க அஸ்வின் அவளது அந்த செயலில் மேலும் மதிமயங்க அவனது நிலை உணர்ந்த சாரு அவனை கண்களால் மிரட்ட அதன் விளைவாக அவனது இதழ்களில் ஒரு மென்னகை வந்து குடியேறியது. பின் அவளது வெண்ணிற தலையணை பஞ்சுபோல் மெத்தென்று இருந்த பாதத்தில் இருந்து நீண்டுக்கொண்டிருந்த நடுவிரலில் ஐயர் கொடுத்த மெட்டியை அணிக்கும் போது எங்கே மெட்டி அணியும் போது அந்த வெண்டைக்காய் விரல்கள் சிவந்துவிடுமோ என்ற ரீதியில் மெதுவாக அவன் அணிவித்து விட அவனது எண்ணம் அறிந்த சாரு க்ளுக் என்று சிரிக்க அவனது சிரிப்பில் தன் தலையினை உயர்த்தி என்னவென்று வினவி கண்ணடிக்க அவனது செயலில் மதிமயங்க தொடங்கிய மனதை கட்டுப்படுத்தும் வகையறியாது நிலைத்தினை நோக்க அதனை வெட்கம் என்று நன்குணர்ந்த அஸ்வின் அவளது பாதங்களை வருட அதில் இன்னும் சிவந்தது அவளது கன்னங்கள். அந்த நொடியில் எழுந்த அஸ்வின் அவளது முன்னிச்சியில் இதழ் பதிக்கையில்......
“டேய் அஸ்வின் என்னடா கண்ணை முழிச்சிட்டே தூங்குறியா?” என்ற ரவியின் குரல் அஸ்வினின் அந்த மோனநிலை கலைத்தது. அழகாய் சென்றுக்கொண்டிருந்த கனவு கலைந்தால் யாருக்கு தான் கோபம் வராமல் இருக்கும்??? தன் மோனநிலையை கலைத்த ரவியிடம் தன் கோபத்தை காட்டினான் அஸ்வின்.
“ஆமானு சொன்னா வந்து தாலாட்டு பாட போறியா??” என்று அஸ்வின் கோபத்தொனியில் கேட்க அவனது கேள்வியில் அவனை விசித்திரமாக பார்த்த ரவி
“டேய் இப்ப நான் கேட்டுட்டேனு இவ்வளவு கடுப்பாகுற??” என்ற ரவியின் கேள்வியில் தன் தவறினை உணர்ந்த அஸ்வின்
“ஐயோ சாரிடா நான் ஏதோ யோசனையில இருந்தேன். அதான் நீ எப்படி கேட்டோன கடுப்பாகிவிட்டது” என்று வருந்தும் தொனியில் அஸ்வின் மன்னிப்பு கேட்க
“சரி வா.. பொண்ணு மாப்பிள்ளையை விஷ் பண்ணிட்டு சாப்பிட போவோம். பசி வயிற்றை பொரட்டி எடுக்குது. ஏர்லி மார்னிங் கல்யாணத்தை வச்சி இவங்க படுத்துற பாடு இருக்கே... சப்பா... வாடா போவோம்” என்று அஸ்வினை அழைக்க தன் நண்பர் கூட்டத்துடன் மணமேடை சென்று மணமக்களை வாழ்த்திய போதும் அவனது பார்வை சாருவை தீண்டிச்செல்ல மறக்கவில்லை.
அதிகாலையில் திருமணம் என்பதால் காலை உணவு மட்டும் கோயிலின் பின்புறம் இருந்த மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தது. திருமணத்திற்கு வந்தவர்கள் மணமக்களை வாழ்த்திவிட்டு உணவறைக்கு வர மணமக்களின் குடும்பத்தாரும் அவர்களின் தோழர்களும் மட்டும் அங்கே குழுமி இருந்தனர். அந்த இடம் கேலி கிண்டல்களின் சலசலப்புடனும் மங்கள வாத்தியத்தின் ஒலியுடன் கலகலப்பாய் இருக்க அந்நேரம் சாருவின் அலைப்பேசிக்கு அழைத்தான் சஞ்சய். அங்கு இருந்த சத்தத்தினால் அவன் பேசுவது தெளிவாக கேட்காத காரணத்தினால் சாரு மண்டபத்திற்கு வெளியே சென்று பேசத்தொடங்கினாள். அவ்வாறு சஞ்சயுடன் பேசியவாறு அம்மண்டபத்தின் பின்புறம் இருந்த ஆற்றங்கரையின் அருகே வந்த சாரு அங்கிருந்த பாறையின் மீது கை வைத்த போது அச்சம்பவம் நிகழ்ந்தது.
தன் நண்பர்களுடன் அரட்டை அடித்துக்கொண்டிருந்த அஸ்வினின் கவனத்தை கலைத்தது அவனது அலைப்பேசி ஒலி.
அதனை எடுத்த அஸ்வின்
“சொல்லுங்க சஞ்சய்” என்று கூறியபடி தன்னிடம் விட்டு எழும்பி செல்ல அந்தப்புறம் சஞ்சய்
“அஸ்வின் சாரு பக்கத்திலயா இருக்கா??”
“இல்லையே சஞ்சய். அவங்க மண்டபத்திற்குள்ளே தான் இருக்காங்க. ஏன் சஞ்சய் ஏதும் பிராப்ளமா??”
“அதெல்லாம் இல்லை. பேசிக்கிட்டு இருக்கும் போது திடீர்னு லைன் கட்டாகிருச்சி. திரும்ப ட்ரை பண்ணப்போ ரிங் போய்ட்டு கட்டாகிருச்சி... அதான் உங்களுக்கு கால் பண்ணேன். அவளை பார்த்தா என்னோட நம்பருக்கு கூப்பிட சொல்லுறீங்களா?” என்று சஞ்சய் கேட்க
“சத்தத்தில் போன் ரிங் ஆகுனது கேட்காம இருந்திருக்கும். இங்க சிக்னலும் வீக். நான் அவங்களை உங்களுக்கு கால் பண்ண சொல்றேன்” என்றுவிட்டு போனை அணைத்த அஸ்வின் சாருவை தேடத் தொடங்கினான். ஆனால் அங்கு சாருவின் நிலை......????
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஏங்கண்ணு தேஜஸ்வினு
தம்பிரி?
பொம்பிளப்புள்ள சாருணீ,
காண வேண்டிய கெனாவ,
நீயி காங்குறியே?
ஆனாலும் இதுவும்
நல்லாத்தேன் இருக்கு,
அனு டியர்

நண்பேன்டா நீயி, சஞ்சய்
''உண்ணும் பொழுதும் உறங்கும்
பொழுதும் எண்ணம் முழுதும்
சாரு நண்பீடா''=ன்னு சஞ்சய்
பாடுறானோ அனு டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
பாறை மேல கைய வைச்ச
சாரூணீக்கு என்ன ஆச்சு?

இதெல்லாம் நல்லாவேயில்ல,
அனு டியர்
ஆமாம், சொல்லிப்புட்டேன்

இப்பிடிக்காண்டி எங்கோ
அஸ்வினுத் தம்பி லவ்வரை
தேடிக்கினு வாறோச் சொல்ல
அந்த சாருணீக்கு ஆபெத்த
நீங்கோ உண்டாக்கலாமா,
அனு டியர்?

''என் நண்பன் சஞ்சய் போல
ஆரு அஸ்வினு மச்சான்''-னு
சாருப் புள்ளயப் பாடச்
சொல்லிருவோமா, அனு டியர்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top