ப்ரியசகியே உன் ப்ரியமானவன் நானடி-1


அத்தியாயம் 1

சென்னை ரயில் நிலையம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அன்று கூட்டம் அதிகமாகத்தான் இருந்தது.

அந்தக் கூட்டத்தில் படபடப்புடன் தனது நீண்ட கருவிழிகளை அங்கும் இங்கும் அலைபாய விட்டுவிட்டு ஐந்தரை அடி உயரத்தில் சந்தன சிலையாக நின்றாள் ஒருத்தி.அவள் அருகே நின்று கொண்டிருந்தவன், அவளது படபடப்பை பார்த்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தான்.

"பயப்படாதடி! உன்னோட அப்பா அம்மா ,அண்ணா எல்லாரையும் நான் சமாளிச்சுக்கறேன் நீ தைரியமா இரு" என்று அவன் ஆறுதல் சொன்னாலும்,
அவனுக்கும் இப்படி செய்வது சரியா? என்று தெரியவில்லை.

வேறு வழியும் இல்லை.
தனக்கும் அந்த வேலை வேண்டாம் என்று உதறி விடலாமா? என்று கூட யோசித்தான்.

அவளோ அவனின் முகத்தில் கவலை ரேகைகளை பார்த்துவிட்டு,
அவனை தேற்றுவதற்காக....
"போடா! டேய் நான் பயப்படறேன்னு உன்கிட்ட சொன்னேனா?நாங்கல்லாம் ஒத்தக்கால்ல எவரெஸ்ட் மலையில ஏறி சர்க்கஸ் விளையாண்டவங்க ...
இந்த மாதிரி சப்ப மேட்டர் சால்ட் வாட்டர் பிரச்சனைக்கு எல்லாம் நாங்க அசர மாட்டோம்"என்று வீரமாக டயலாக் பேச...

"தயவு செஞ்சு டயலாக் மட்டும் பேசாதடி தாங்கல..."என்றவன்,
" அப்ப எதுக்கு? சுடிதார் துப்பட்டாவ கைல வச்சு...முறுக்கு பிழிஞ்சிட்டு இருந்த? அதைப் பாத்து தான் நான் கூட உண்மையா நீ பீல் பண்றன்னு நினைச்சேன்" என்றான்.

உண்மையில் அவள் ரொம்பவே பதற்றத்துடன் தான் இருந்தாள்.
அதை வெளியே காட்டி விட்டால் அவள் கதாநாயகி அல்லவே....!!?

"நான் ஃபீல் பண்ணது உண்மை
தான்டா..."என்றாள் மீண்டும் அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு,


"அப்டியாடி எதுக்கு பீல் பண்ற மா?
அங்க போறது நெனச்சா?" என்றான்
மீண்டும் அவள் நடிப்பை நம்பி...

" சே...சே அதுக்கெல்லாம் இல்ல ட்ரெயின்ல திங்க ஸ்னாக்ஸ் இல்லடா... அதான் ஒரு பீலிங்கா இருக்கு... "
என்றாள் அவள்.

"ஹம்ம்!! இவளைப் பத்தி தெரிஞ்சும்,இப்படி கேட்டது நம்ம தப்பு தான்..."என்று மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டவன்.
அதன் பிறகு ஒன்றும் கேட்காமல் அமைதியாக நின்று விட்டான்.இல்லையென்றால் இந்த ராட்சசி இன்று அவனின் பர்ஸிற்கு பாடை கட்டாமல் விடமாட்டாள்.

"டேய் என்னடா அமைதியா இருக்க? காசு வைக்கலையா? மரியாதையா நான் தா்ர லிஸ்ட வாங்கிட்டு வா..."என்றவள் மெல்லியதாக சுருட்டி வைத்திருந்த ஒரு சிறிய காகிதத்தை அவனிடம் நீட்டினாள்.

வேறு வழி இல்லாமல் அதை வாங்கியவன்
அவள் சுருட்டி வைத்திருந்த காகிதத்தை விரிக்க விரிக்க அது ஒரு மீட்டர் நீளத்திற்கு நீண்டு கொண்டே சென்றது.

"அடி பாதகத்தி...!
8 மணிநேரம் 24 நிமிஷம் ஆகும் சென்னையில் இருந்து தேனிக்கு போக... அதுக்கு ஏண்டி ஊரே திங்கற அளவுக்கு ஸ்னாக்ஸ் வாங்கிட்டு வர சொல்ற... தின்னி பண்டாரம்..."என்று அவன் திட்ட,

அவளோ கூலாக,
"எரும கண்ணு வைக்காதடா...இப்ப நான் சொன்னத நீ போய் வாங்கிட்டு வா்ர... இல்லன்னா நான் என்ன பண்ணுவேன்னு தெரியும்ல..." என்று மிரட்ட...

அவள் என்ன செய்வாள் என்பதை பலமுறை அனுபவித்தவன்....
ராட்சசி முணுமுணுத்துக் கொண்டே அவள் கேட்டதை வாங்க சென்றான்.

அவன் செல்லவும் இவள் செல்ல வேண்டிய ட்ரெயின் வந்து நிற்கவும் சரியாக இருந்தது. அனைவரும் ட்ரெய்னில் ஏற ஆரம்பித்தனர்.

இவளும் ஏறி தன் இருக்கை எண்ணை பார்த்தாள்.ஒருவர் மட்டும் அமருமாறு இருந்த ஜன்னலோர இருக்கையை அவளுக்கு கிடைத்திருந்தது.

"ச்சை!! இந்த சீட்டா" என்று அலுத்துக் கொண்டவள்,
அவள் லக்கேஜை தூக்கி மேலே வைத்துவிட்டு ஹேண்ட் பேக்கை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு அவளது இருக்கையில் அமர்ந்தாள்.

"இந்த சீட் நல்லாவே இல்ல,
இந்த ட்ராவல் நல்லாவே இருக்காது போலயே... இந்த சீட்டுல உக்காந்தா, நானும் எதிர் சீட்டுல உட்காந்து இருக்கிறவங்களும்... ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பாத்துட்டு இருக்க வேண்டியது தான்.நம்ம சும்மா இருந்தாலும், நம்ம வாய் சும்மா இருக்காது.யார் வந்து நம்ம கிட்ட மாட்ட போறாங்களோ? யாராயிருந்தாலும் சரி தான் அவங்க தான்...இந்த ட்ராவல்ல நமக்கு டைம் பாஸ்
பா..." என்று நினைத்துக்கொண்டே ஹேண்ட் பேக்கில் வைத்திருந்த பபுள் கம்மை எடுத்து சுவைக்க ஆரம்பித்தாள்.
சுருக்கமாகச் சொன்னால் அவள் வாய் ஒன்று அரைத்துக் கொண்டிருக்கும் அல்லது அறுத்துக் கொண்டிருக்கும்.

ஒவ்வொருவராக ட்ரெயினில் ஏற ஆரம்பிக்க,
அவள் கதிர் எப்பொழுது வருவான் என்று ஜன்னல் வழியாக எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் இருக்கும் கம்பார்ட்மெண்டில் பக்கவாட்டில் இருந்த பெரிய சீட்டில் வயதான தம்பதியர்கள் இருவரும் புதிதாக திருமணம் செய்த ஒரு ஜோடியும் ஏறி அமர்ந்தது.
அவர்களைப் பார்த்து ஹாய் என்றாள் அவள்.
அவர்களும் அவளை பார்த்து ஹாய் என்ற முறுவலித்தனர் .அவர்களிடம் தன்னை ஹர்ஷினி என்று அறிமுகம் படுத்துக்கொண்டாள்.
அவர்களும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு அவர்களுக்குள்ளேயே ஏதேதோ பேசிக்கொண்டனர்.

ஹர்ஷினி மீண்டும் ஜன்னல் வழியாக திரும்பி கதிர்காக காத்திருந்தாள்.

சிறிது நேரத்திலேயே,ஆறடி உயரத்தில் அம்சமான முக லட்சணத்துடன், கம்பீரமான தோரணையுடன் நடந்து வந்த ஒருவன் எதிரே உள்ள சீட்டில் அமர்ந்தான்.

எதிர் சீட்டில் வந்து அமர்ந்தவனை கூட கவனிக்காமல் ஏதோ சிந்தனையில் ஜன்னல் பக்கம் திரும்பி இருந்த ஹர்ஷினி, தன் வாயில் உள்ள பபுள்கம்மில் பெரியதாக முட்டை ஒன்றை விட்டு டப்பென உடைத்தாள்.

அந்த சத்தத்தில் எதிர் சீட்டில் இருந்தவன் திடுக்கிட்டு அவளைப் பார்த்து முறைக்க, அப்பொழுதுதான் அவளும் அவனைப் பார்த்தாள்.

"ஆத்தாடி!!! யார்யா இவன்? எப்ப வந்து உட்கார்ந்தான்? என்னடா இவன் உட்கார்ந்து இருந்தாலே எழுந்து நின்ன மாதிரி இருக்கு. அதீத வளர்ச்சி தாய்யா... பன மரம் மாதிரில இருக்கான்... இவன பாத்த டெரர் பீஸ் மாதிரி இருக்கே...நம்ம இவன் கிட்ட நம்ம திரு வாய தொறக்காம இருக்கறதுதான் நல்லது டி ஹர்ஷி... ஒருபா பபுள்கம்ல முட்டை விட்டதுக்கே ஆம்பள கண்ணகி மாதிரி பார்வையால எரிக்கிறானே... எக்காரணத்தைக் கொண்டும் இவன்கிட்ட சிக்கிட கூடாது" என்று தனக்குத்தானே மனதிற்குள் பேசி கொண்டவள், பபுள் கம்மை அதன் தாளிலேயே சுருட்டி நல்ல பிள்ளையாக கீழே எறிந்து விட்டு மீண்டும் ஜன்னல் வழியே வெளியே நோட்டமிட ஆரம்பித்து விட்டாள்.


"அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே... "
என்ற அழகான பாடலுடன் அவளது மொபைல் போன் ஒலிக்க....

அதை எடுத்து டிஸ்ப்ளேவில் வந்த பெயரை பார்த்தவளின் முகம் அதிர்ந்ததை அப்பட்டமாக காட்டியது.

எடுக்கவா வேண்டாமா...என்று மனதினுள் புலம்பியவாறு திருட்டு முழி முழித்து கொண்டு இருந்தாள் ஹர்ஷினி. அதற்குள் முழு ரிங் போயி கால் கட்டாகி விட்டது.

அவள் மொபைல் போன் ஒலி எழுப்பும் போது தான்... அவளின் எதிரே இருந்தவன் மீண்டும் அவளைக் கூர்ந்து கவனித்தான்.

"இவ என்ன கால் அட்டென்ட் பண்ணாம...இப்படி திருட்டு முழி முழிக்கிறா... சம்திங் ராங்" என்று நினைத்தவன் அவளையே கூர்ந்து பார்க்க தொடங்கினான்.

எதிரே இருந்தவன் கூர்ந்து பார்ப்பதைக் கூட கவனிக்காமல், தன் அம்மாவிடம் எப்படி பேச வேண்டும்...என்று வாய்க்குள்ளேயே முணுமுணுத்து ஒத்திகை பார்த்துக்
கொண்டவள்.

அடுத்த தடவை மொபைல் அடிக்கும்போது...
தொண்டையை செருமி வாரே காலை அட்டென்ட் செய்தாள்...

" ஹலோ அம்மா "

" ............... "

"போதும் போதும்...அம்மா...மூச்சு விட்டு பேசு...நான் சின்ன பிள்ளையா ஃபோன் எடுக்கல உடனேயே என்னை யாராவது கடத்திட்டு போய்டுவாங்களா... எதுக்குமா தேவையில்லாம டென்ஷன் ஆகுற..."

" ................. "

"அட போம்மா பொண்ணுனா பயப்படணும் மா... எந்த ஊரு சட்டம்... இது... அண்ணனுக்கு போட்ற அதே சாப்பாடு தான எனக்கும் போட்டு நீ வளக்க"

" ................. "

" சரி சரி டயலாக் பேசல... அம்மா போன் ஹேண்ட் பேக்குள்ள இருந்துச்சு...அதான் எடுக்க லேட்"

" ...................."

" நான் கிளம்பி வரும்போது நீ கோயிலுக்கு போயிட்ட....மா அதனாலதான் சொல்லாம வந்துட்டேன்"

"..................."

"ப்ச்ச் அம்மா என்ன பத்தி கவலை
படாத...நான் என் பிரெண்ட்ஸ் கூட தானே டூருக்கு போறேன்....ஏதோ டெரரிஸ்ட் கூட டூர் போற மாதிரி பீல் பண்ணிக்கிட்டு இருக்க...."

" ............... "

"ஆஆஆஆ.....சரி சரி... நான் வாயை குறைச்சு பேசுறேன் மா.."

" ................... "

"ஆஆஆஆ.... நான் பத்திரமா இருப்பேன்...கவலைப்படாதீங்க அதான் கீர்த்தி என் கூட வர்றாள..."

" ................ "

" ம்ம்ம்..... இத நீங்க தனியா வேற சொல்லனுமா...இந்த உலகமே அழிஞ்சாலும் நான் ஒருநாளும் யாருக்காகவும் எதுக்காகவும் வயித்துக்கு கொட்டி காம இருக்க மாட்டேன்...நான் நல்ல சாப்பிடுறேன் மா..."

"....................."

" ம்ம்ம்... அங்க போன உடனே கால் பண்றேன்..... "

"......................"

"ம்ம்ம்... மிஸ் யூ அம்மா... ஆஆ வைக்கிறேன்..."
என்று மொபைலை அணைத்து விட்டு பெருமூச்சு விட்டாள் ஹர்ஷினி.

"அப்பாடா சமாளிச்சுட்டேன் எப்படியோ...."என்று நிமிர்ந்தவள் அப்பொழுதுதான் கவனித்தாள், தன் எதிரே சந்தேகப் பார்வையுடன் பார்த்துக்கொண்டிருந்தவனை.

"ஆத்தாடி இந்த பனமரம் எதுக்கு நம்மள முறைச்சி பார்க்குது...." என்று யோசித்தவளை மீண்டும் கலைத்தது அவளது மொபைல் போன்,இந்த முறை அவளது பெஸ்ட் பிரண்ட் கீர்த்தி இடமிருந்து கால் வந்திருந்தது...

" ஹலோ கீர்த்தி செல்லம் "

".................."

" என்ன பாக்காம இருக்க முடியலையோ...."

"..................."

" அடி வென்று...ஜவ்வு மாதிரி இழுக்காம...ஃபர்ஸ்ட் மேட்டர் என்னன்னு சொல்லு..."

"..................."

" வாவ் செம டி.... all the best...."

"..................."

" ம்ம்....அது...நான் ஃபேமிலியோட டூர் போறதால எப்ப வருவேன்னு சொல்ல முடியாது..... நா ஊர்ல இருந்து வந்த உடனே உனக்கு மேரேஜ் பிக்ஸ் ஆனதுக்கு கண்டிப்பா ட்ரீட் வைக்கணும்..."

"............................"

" நீ காரணம் எல்லாம் சொல்லக்கூடாது...."

"............................."

" காசு இல்லன்னா....உன்னோட வருங்கால ஹஸ்பண்ட் கிட்ட சொல்லி ட்ரீட்....வை..."

"............................."

" அப்டி சொல்லு....
என் செல்லக்குட்டி...."

"............................."

"ம்ம்ம்.... மிஸ் யூ டி
வைக்கிறேன்...."

என்று மொபைலை அணைத்துவிட்டு மீண்டும் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.
எதிரே இருந்தவனின் மனதிற்குள் குழப்பம் குல்பி ஐஸ் சாப்பிட்டது .
"இவ என்ன இப்படி புழுகுறா... அம்மா கேட்டா ஃப்ரெண்ட்ஸ் கூட போறேன்னு சொல்றா.. ப்ரெண்ட்ஸ் கிட்ட ஃபேமிலி கூட போறேன்னு சொல்றா... சரியான பிராடா இருப்பா போலயே"என்று சந்தேகத்துடன் அவளைப் பார்த்தான்.

அவள் இவனது சந்தேகப் பார்வையை தவிர்த்து விட்டு கூலாக அமர்ந்திருந்தாள்.

அதற்குள் கதிர் ஒரு கடையையே வாங்கி வந்திருந்தான்.
( அந்த சின்ன பேப்பர்ல எழுதுனது இதுவா...)
தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு வந்தவனிடம்....

"டேய் லாலிபாப் வாங்கிட்டு வந்தியா டா. லிஸ்ட்ல எழுத மறந்துட்டேன் டா " என்றாள் ஹர்ஷினி அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு,

கொண்டுவந்த மூட்டையை
(ஸ்னாக்ஸ்ஸை)அவள் மீது போட்டவன்,
"தின்னி மூட்ட...இந்தத் தீனு திங்குற...உடம்புல மட்டும் ஒண்ணுமே இல்ல.எருமை எருமை...உனக்கு வாங்கிப்போட்டே... உன் அப்பா ஆண்டி ஆயிடுவார் டி " என்று அவன் காண்டாகி திட்ட,
ஸ்னாக்ஸ்ஸை பார்த்த முகம் மலர்ந்த ஹர்ஷினி, எல்லார் முன்பும் அவன் திட்டியதால் அவனை முறைக்க ஆரம்பித்துவிட்டாள்.

"ஆஹா இந்தக் கேடி நம்ம திட்டுனதுக்கு இப்போ ஒரு வழி பண்ணுவாளே... இங்க உள்ளவங்க கிட்ட நான் தான் இங்க இவளை கடத்திட்டு வந்த மாதிரி கோர்த்து விட்டு அடிவாங்க வச்சாலும் வைப்பா" என்று நினைத்தவன்,

"சரி சமாளிப்போம் " என்று,

"ப்ளீஸ்டி தாயே...என்னால முடியல இதுக்கு மேல எனக்கு வாங்க முடியாதுடி..."என்று கும்பிடு போட,

"அது......" என்றவள்

"அம்மா கால் பண்ணாங்க டா...என் குரலை வச்சு ஏதோ பிரச்சனைன்னு கண்டுபிடிச்சுடுவாங்கனு...எப்படி எப்படியோ பிட்டு போட்டு எஸ்கேப் ஆகி இருக்கேன்..." என்று சொல்ல.,
"நீதான் கேடி கேப்மாரி ஆச்சே... அதுமட்டுமில்லாம பிட்டு போடுறது... பிட் அடிக்கிறது எல்லாத்துலேயும் சகலகலாவல்லி ஆச்சே" என்று மைண்ட் வாய்ஸில் பேசினாலும் வெளியே சொல்லவில்லை கதிர்.

"நீ சமாளிச்சிட்டல்ல...அப்ப ஓகே ஆனா எதுக்கும் கவனமாயிரு... அடுத்து உன்னோட ஆருயிர் அண்ணன் கால் பண்ணாலும் பண்ணுவான்" என்றான்.

"அம்மாவையே சமாளிச்சுட்டேன்.... அண்ணாவை சமாளிக்க முடியாதா?" என்று தெனாவெட்டாக சொல்லி விட்டு
சுடிதாரின் காலரை கெத்தாக தூக்கி விட்டுக் கொண்டாள் அவள்.

இதையெல்லாம் எதிர் சீட்டில் இருந்து ஜன்னல் வழியாக வேடிக்கை பார்ப்பது போல் கேட்டுக் கொண்டிருந்தவன்,
"ஒருவேளை இவ இவன லவ் பண்றா போல...அதான் ரெண்டு பேரும் யாருக்கும் தெரியாம ஓடி போறாங்க போல..." என்று தனக்குத் தானே முடிவெடுத்து கொண்டான்.

ஆனால் அவன் மனது தான் கேட்கவில்லை அவளைப் பற்றியே சிந்தித்தது.

"பார்த்தா சின்ன பொண்ணு மாதிரி இருக்கா... எதுக்கு தேவையில்லாம பெத்தவங்கள ஏமாத்துறா"
என்று யோசித்துக்கொண்டே அவளை ஆராய்ச்சியாக பார்த்தான்.

"டேய் ட்ரெயின் முவ் ஆகுது டா... சீக்கிரம் இறங்கு..."என்று ஹர்ஷினி கதிரை அவசரப்படுத்த....

அவளின் உடன் பிறவாத அண்ணனான கதிரும்....

"பார்த்து போடி...அங்க போய் சேர்ந்த உடனேயே கால்
பண்ணு...." என்று நல்ல அண்ணனாக கூறியவன்....

தன் தங்கையை எதிர் சீட்டில் இருந்து முறைத்துக்கொண்டிருந்தவனை பார்த்து முறைத்துவிட்டு...
"பத்திரமா போமா... உனக்கு கராத்தே தெரியும்னு எனக்குத் தெரியும் தான்... இருந்தாலும் கவனமா இருக்கணும். யார் என்ன கொடுத்தாலும் வாங்கி சாப்பிடாத... அதுல என்ன வேணாலும் கலந்திருக்கலாம்... யாரையும் அவ்வளவு சீக்கிரம்
நம்பாத... "என்று குழந்தைக்கு சொல்வதுபோல் சொல்லிவிட்டு கீழே இறங்கி விட்டான் கதிர்.

எதிர் சீட்டில் இருந்தவனுக்கு தான் மண்டை காய ஆரம்பித்தது.
"இவ இவன் கூடவும் போகல. அப்ப எங்க தான் போறா?"என்று யோசித்தவனின் மண்டைய ரெண்டு தட்டு தட்டியது அவன் மனசாட்சி...
"டேய் அந்த பொண்ணு எங்க போனா உனக்கென்ன... நீ உன்னோட சிஐடி மூளையை யூஸ் பண்ணாம இரு..."
என்று அடக்கியது.

அவன் அடங்குவனா?

தொடரும்......

ப்ரியசகியே உன் ப்ரியமானவன் நானடி.....❤❤❤
 

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , mallikamaniv[email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top