பிரிவு : பொருட்பால், இயல் : படையியல், அதிகாரம் : 77. படைமாட்சி, குறள் எண்: 761 & 766.

Advertisement

Sasideera

Well-Known Member
குறள் 761:- உறுப்புஅமைந்து ஊறுஅஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை.

பொருள் :- எல்லா உறுப்புக்களும் நிறைந்ததாய் இடையூறுகளுக்கு அஞ்சாததாய் உள்ள வெற்றி தரும் படை அரசனுடைய செல்வங்கள் எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.
 

Sasideera

Well-Known Member
குறள் 766:- மறம்மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு.

பொருள் :- வீரம், மானம், சிறந்த வழியில்நடக்கும் நடக்கை, தலைவரால் நம்பித் தெளியப்படுதல் ஆகிய நான்கு பண்புகளும் படைக்குச் சிறந்தவையாகும்.
 

Sasideera

Well-Known Member
உள்நாட்டு அமைதிக்கு ஊறு நேராதவாறு தடுப்பதற்கும் வெளிநாட்டுக்கு அடிமைப்படாமல் உரிமையுடன் வாழ்வதற்கும் மிகுந்த ஆற்றல் உள்ள படை ஒர் நாட்டிற்கு இன்றியமையாததாகிறது. ஒரு நாட்டின் செல்வ வளம் சிதைவுபடாமல் இருக்க வேண்டுமானாலும், அந்நாட்டிலே போதுமான படைபலம் இருக்க வேண்டும். இவ்வாறு அமைதியையும் வளத்தையும் படை பாதுகாக்கின்றது. அப்படையின் பண்பு எப்படி இருக்கவேண்டும் என்பதை இத்தொகுதியில் விளக்கமாக உரைக்கின்றார் வள்ளுவர். உயர்ந்த நாட்டுப்பற்றுடன் கூடிய வீரம் காட்டி நாட்டின் இறையாண்மையைப் படைதான் காப்பாற்றுகிறது. எனவே படை அரசின் தலைமைச் செல்வமாம். படைமாட்சி என்பது படைவீரர்களின் மாட்சியையும் குறித்தது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top