பிரிவு : பொருட்பால், இயல் : அரசியல், அதிகாரம் : 46. சிற்றினச் சேராமை, குறள் எண்: 453 & 455.

Advertisement

Sasideera

Well-Known Member
குறள் 453:- மனத்தான்ஆம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தான்ஆம்
இன்னான் எனப்படும் சொல்.

பொருள் :- மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும்; இப்படிப்பட்டவன் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல் சேர்ந்த இனத்தால் ஏற்படும்.

மக்களுக்கு இயல்பான அறிவு அவர்தம் மனததால் உண்டாகும்; ஆனால், ஒருவன் இப்படிப்பட்டவன் என்று பெரியோர் சொல்லும் சொல் அவன் சார்ந்த இனம் காரணமாகவே உண்டாகும்.
 

Sasideera

Well-Known Member
குறள் 455:- மனம்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனம்தூய்மை தூவா வரும்.

பொருள் :- மனத்தின் தூய்மை, செய்யும் செயலின் தூய்மை ஆகிய இவ்விரண்டும் சேர்ந்த இனத்தின் தூய்மையைப் பொறுத்தே ஏற்படும்.
 

Sasideera

Well-Known Member
அதிகார விளக்கம் :-

சிற்றினம் சேராமை என்பது சிறிய இனத்தாரை இணங்காமையாகும். இனம் என்ற ஆட்சியால் இது பலபேரைக் கலந்து வாழ்தலைக் குறித்தலைத் தெளியலாம். சிறிய இனம் என்பது சிறுமைப் பண்புகள் அதாவது தீய குணமும் தீயொழுக்கமும் கொண்டவர்களைக் குறிக்கும். சேரும் இனத்தினது நலம் சேர்ந்தவரின் மனநலத்தை வெகுவாகப் பாதிக்கும் ஆற்றல் கொண்டது. அதனால் இனநலம் சொல்லவந்த இவ்வதிகாரம் மனநலம் பற்றி நிறையப் பேசுகிறது. சிற்றினச் சேர்க்கை துன்பம் உறுவிப்பதால் சேரும் இனத்தின் தன்மையை ஆய்ந்து ஒருவர் அதில் தன்னை இணைத்துக் கொள்ளாமல் காத்துக் கொள்ளவேண்டும் என்கிறது இத்தொகுதிப் பாடல்கள். நல்லின உறவு கொள்ளல் சிற்றினம் சேர்தலுக்கு எதிர்மறையாக இருத்தலால், சிற்றினம் சேராமை என்பது நல்லினம் சேர்தலை அறிவுறுத்துவதாகிறது.. .
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top