பிரிவு : பொருட்பால், இயல் : அரசியல், அதிகாரம் : 45. பெரியாரைத் துணைக் கோடல், குறள் எண்: 448 & 450.

Advertisement

Sasideera

Well-Known Member
குறள் 448:- இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானுங் கெடும்.

பொருள் :- கடிந்து அறிவுரை கூறும் பெரியாரின் துணை இல்லாத காவலற்ற அரசன் தன்னைக் கெடுக்கும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.
 

Sasideera

Well-Known Member
குறள் 450:- பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.

பொருள் :- நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பத்து மடங்கு தீமை உடையதாகும்.
 

Sasideera

Well-Known Member
அதிகார விளக்கம் :-

செயற்கரிய செய்யும் பெரியாரைத் தமக்குத் துணைவர்களாக இருக்கச் செய்து கொள்ளுதலைச் சொல்லும் அதிகாரம். பெரியார் என்றது அறிவிலும், ஆயாய்ச்சியிலும் அனுபவத்திலும், ஆற்றலிலும் மேம்பட்டவர்களை குறித்தது. இவர் குற்றங்கள் நிகழா வண்ணம் காப்பர். பொதுத் தன்மையில் பலருக்கு உரியதாகும் இவ்வதிகாரத்துக் குறட்கருத்துக்கள் மன்னன் எனக் குறிப்பிட்டதால் சிறப்பாக ஆட்சியாளருக்குக் கூறப்பட்டுள்ளன. பெரியாரைத் துணைக் கொள்ளுதலின் சிறப்பினையும் பயனையும் கூறி அவரைத் துணைக் கொள்ளாத வழி வரும் குற்றத்தினையும் எடுத்துச் சொல்கிறது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top