பிரிவு : பொருட்பால், இயல் : அரசியல், அதிகாரம் : 39. இறைமாட்சி, குறள் எண்: 381 & 382.

Advertisement

Sasideera

Well-Known Member
குறள் 381:- படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.

பொருள் :- படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போன்றவன்.

வீரம் மிக்க படை, நாட்டுப்பற்று மிக்க மக்கள், எடுக்கக் குறையாத செல்வம், நாட்டின் நலம் அறிந்து செயல்படும் அமைச்சர், துன்பத்தில் உதவும் அண்டை மாநில நட்பு, அழிக்கமுடியாத காவல் ஆறும் உடையதே அரசுகளில் சிங்கம் போன்றது.
 
Sasideera

Well-Known Member
குறள் 382:- அஞ்சாமை ஈகை அறிவுஊக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற்கு இயல்பு.

பொருள் :- அஞ்சாமை, ஈகை, அறிவுடைமை, ஊக்கமுடைமை ஆகிய இந்த நான்கு பண்புகளும் குறைவுபடாமல் இருத்தலே அரசனுக்கு இயல்பாகும்.
 
Sasideera

Well-Known Member
அதிகார விளக்கம் :-

இறைமாட்சி என்பது அரசின் மாட்சி அதாவது அரசுக்குரிய பெருமைக் குணங்கள் கூறுவது. ஆட்சித் தலைவனுக்கு வேண்டிய நற்பண்புகளையும் செயல் திறன்களையும் கூறி, ஆளுதலின் மாட்சிமை இதில் விளக்கப்படுகிறது. எங்கும் தங்கியிருக்கின்ற இறைவன் போல, தம் ஆட்சியின் எல்லைக்குட்பட்ட எல்லா இடங்களிலும் நிகழ்வன எல்லாம் அறிந்தும் செய்வன செய்தும் முறைப்படுத்தும் ஆற்றல் உடையதான அரசின் பெருந்தகைமைகளைக் கூறுவதால் இறைமாட்சி என்று சொல்லப்பட்டது.
 
malar02

Well-Known Member
இன்று அழிக்க முடியாத கூலியாய் இருக்கு எப்படி இருக்க சொன்னாரு இப்படி
அடுத்ததில் இப்படி ஒரு வார்த்தைகள் எல்லாம் இருக்குனாவது தெரிந்து கொண்டால் கூட போதும் இருக்கு
நன்றி
 
fathima.ar

Well-Known Member
குறள் 381:- படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.

பொருள் :- படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போன்றவன்.

வீரம் மிக்க படை, நாட்டுப்பற்று மிக்க மக்கள், எடுக்கக் குறையாத செல்வம், நாட்டின் நலம் அறிந்து செயல்படும் அமைச்சர், துன்பத்தில் உதவும் அண்டை மாநில நட்பு, அழிக்கமுடியாத காவல் ஆறும் உடையதே அரசுகளில் சிங்கம் போன்றது.

4th doubtu thaan
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top