பிரிவு : பொருட்பால், இயல் : அமைச்சியல், அதிகாரம் : 73. அவையஞ்சாமை, குறள் எண்: 723 & 726.

Advertisement

Sasideera

Well-Known Member
குறள் 723:- பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்.

பொருள் :- பகைவர் உள்ள போரக்களத்தில் (அஞ்சாமல் சென்று) சாகத் துணிந்தவர் உலகத்தில் பலர்; கற்றவரின் அவைக் களத்தில் அஞ்சாமல் பேசவல்லவர் சிலரே.
 

Sasideera

Well-Known Member
குறள் 726:- வாளொடுஎன் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடுஎன்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு?

பொருள் :- அஞ்சாத வீரர் அல்லாத மற்றவர்க்கு வாளோடு என்ன தொடர்பு உண்டு? நுண்ணறிவுடையவரின் அவைக்கு அஞ்சுகின்றவர்க்கு நூலோடு என்ன தொடர்பு உண்டு?
 

Sasideera

Well-Known Member
அவையஞ்சாமை
சொல்வன்மை, அவையறிதல், அவையஞ்சாமை இவை மூன்றும் ஒன்றோடொன்று தொடர்புபடுத்திப் படிக்கத்தக்க அதிகாரங்கள். அவையைக் கண்டு அஞ்சாமல் இருந்து பேசுதல் அவையஞ்சாமையாம். இது 'அவையினருக்குப் பயப்படாமல் இருத்தல்' என்ற பொருளைத் தரும். கல்விகேள்விகளில் சிறந்தவரே அவையஞ்சாமல் பேசவல்லார் என்பது வள்ளுவர் கருத்தாதலால் கற்ற என்ற சொல்லை பலமுறை இவ்வதிகாரத்தில் ஆள்கின்றார். கற்ற அனைவருக்கும் அவையஞ்சாமை வேண்டும்.

ஒரு கருத்தை அல்லது தாம் விரும்பும் திட்டத்தை, ஈர்ப்புடைய சொற்களில், அவையோர் மனக்கொள்ளும் வகையில் அஞ்சாமல் சொல்லும் சொல்லும் திறன் பேசப்படுகிறது. அவையில் அஞ்சாமல் பேசுவதற்குச் சொற்றிறமை வேண்டும். சொற்களஞ்சியப் புலமையாளர் - மிகுதியான சொற்களை அறிந்தவர் - சொல்வன்மை உடையவராயிருப்பர். மொழியாளும் திறமையை வற்புறுத்த, அவையறிதலுக்குப் பிறகு இங்கும், அடுத்தடுத்து இரண்டு அதிகாரங்களில் இரண்டு குறள்களில் 'சொல்லின் தொகையறிந்த தூய்மையவர்' என்பதை ஈற்றுப் பகுதியாக வைக்கிறார் வள்ளுவர்.
அவையஞ்சாமை ஒருவன் பெற்ற கல்வியறிவால் எளிதில் கைவரப் பெறும். அதை இன்னும் வளர்த்துக்கொள்ள தம்மினும் மேலாகக் கற்றவர்கள் உள்ள அவைக்குச் சென்று மேலும் பாடம் கற்றுக் கொள்ளலாம். அவையில் அஞ்சாமல் எதிர்மொழிதற்கு நிறையக் கற்றிருக்க வேண்டும். பல்துறை நூல்களை - இலக்கண, தருக்க நூல்கள் போன்றவற்றைத் தெரிந்திருத்தல் நலம் என்கிறது அதிகாரம்.
அவையில் பேசுவது போர்க்களத்தில் நிற்பதுபோல் என்றும் வாள் என்னும் போர்க்கருவி நூல் போன்றது என்றும் சொல்லி அவையஞ்சாமை பெருமைப்படுத்தப்படுகிறது.

குழுவாகக் கூடி கலந்துரையாடுவது குறிகொண்ட பொருளைச் செம்மைப்படுத்த உதவும். ஒருவன் தான் கற்ற கல்வியறிவைப் பகிர்ந்து கொள்ளும் போதுதான் பொது நன்மைக்கு
அதை எய்துவிக்க முடியும். கல்வியறிவிற் சிறந்திருந்தாலும் அவையில் கருத்துரைத் திறனுடன் பேசுவதற்குத் தனித்திறமையும் துணிவும் வேண்டும் அவை அஞ்சும் ஒருவர்க்குத் தம் கருத்தை கூட்டத்தில் எடுத்துரைத்தல் இயலாது.

இன்று நாடாளுமன்றம், சட்டப்பேரவை, அரசியல் பொதுமேடைகள், சமுதாயக்கூடங்களின் மாநாடுகள், கருத்தரங்குகள், இயக்குநர் குழும அமர்வு (Board of Directors Meeting), பணியிடங்களில் அடிக்கடி நடைபெறும் கூட்டங்கள் போன்ற அவைகளை நாம் அறிவோம். குறளில் புல்லவை (719), வல்லவை (721), நுண்ணவை (726), நல்லவை (728), நல்லாரவை (729) என்று அவை வகைகள் குறிக்கப்பெறுகின்றன.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top