பிரிவு : அறத்துப்பால், இயல் : துறவறவியல், அதிகாரம் : 36. மெய்யுணர்தல், குறள் எண்: 355 & 360.

Advertisement

Sasideera

Well-Known Member
குறள் 355:- எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

பொருள் :- எப்பொருள் எத்தன்மையதாய்த் தோன்றினாலும் (அத் தோற்றத்தை மட்டும் கண்டு மயங்காமல்) அப்பொருளின் உண்மையான இயல்பை அறிவதே மெய்யுணர்வாகும்.

எந்தப் பொருளானாலும், அது எப்படிக் காட்சி தந்தாலும், அப்பொருளின் வெளித்தோற்றத்தைக் காணாமல், உள்ளடக்கமாகிய உண்மைப் பொருளைக் காண்பதே மெய்யுணர்தல்.
 

Sasideera

Well-Known Member
குறள் 360:- காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.

பொருள் :- விருப்பு, வெறுப்பு, அறியாமை ஆகிய இக்குற்றங்கள் மூன்றனுடைய பெயரும் கெடுமாறு ஒழுகினால் துன்பங்கள் வாராமற் கெடும்.

விருப்பு, வெறுப்பு, மயக்கம் என்னும் இம்மூன்றன் பெயருங்கூட உள்ளத்திற்குள் இல்லாது போனால், அவற்றால் வரும் துன்பங்களும் இல்லாமல் போகும்.
 

Sasideera

Well-Known Member
அதிகார விளக்கம் :-
உயிர் வாழ்க்கைத் தத்துவம் அறிதலை மெய்யுணர்தல் எனலாம். இதை 'மெய்ப்பொருள் காண்பது' எனக் குறிக்கிறது இவ்வதிகாரம். 'மெய்ப்பொருள்' என்பது கல்வி, கேள்வி, பட்டறிவு இவற்றின் துணையால் பகுத்தறிந்து, மனம் பலவகையானும் ஓர்த்து (ஆராய்ந்து) 'உள்ளதை'க் காண்பது அது; பிறவிவாழ்க்கை பற்றிய அறியாமை நீங்கியபின், எங்கும் நிறைந்த இறைஒளி வீச்சில் 'சிறப்பென்னும் செம்பொருள்' உணரப்படும். மெய்ப்பொருள் கண்டவர் மெய்யுணர்வு பெற்றவராகிறார். மெய்யுணர்வு பெறுவதற்கு துறவு வாழ்வு மேற்கொள்ளவேண்டும் என்றில்லை.
 

Sainandhu

Well-Known Member
muthal kural epothum engeyum olithu kondu irupathu
nanri

எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும்
அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு”
இக்எகுறள்ன தான் என் ஞாபகத்தில், எப்பவும் இருக்கும்,..,
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top