பாசிப்பருப்பு, கருப்பட்டி பாயாசம்

Bhuvana

Well-Known Member
#1
பாசிப்பருப்பு, கருப்பட்டி பாயாசம் :

தேவையான பொருட்கள்:


பாசிப்பருப்பு - 1 கப்
கருப்பட்டி - 1/2 கப் {பொடித்தது}
பால் - 1/2 கப் ( காய்ச்சியது)
தேங்காய் பால் - 1/2 கப்
ஏலக்காய் - 2
முந்திரி பருப்பு - 10
நெய் - 1 டீஸ்பூன்


ஒரு கடாயில் பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுக்கவும். வறுத்த பின் குக்கரில் வைத்து வேக வைத்து எடுக்கலாம். நான் இந்த கடாயிலேயே தண்ணீர் விட்டு வேக வைத்தேன். பருப்பு நன்றாக குழைய வெந்து விட்டது.


கருப்பட்டியை கொஞ்சம் தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி வைக்கவும். வெந்த பருப்புடன் இந்த கருப்பட்டி ஜூஸ், காய்ச்சிய பால் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.


தேங்காய் பால், ஏலக்காய் சேர்த்து நன்றாக கலந்து ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.


நெய்யில் வறுத்த முந்திரி பருப்பை சேர்த்து பரிமாறவும்.


குறிப்பு:
பால் சேர்க்காமல் தேங்காய் பாலில் மட்டுமே இதை செய்யலாம்.

addtext_com_MDIxNjMyMTY3ODk3.jpg
 
Last edited:

Advertisement

Sponsored

New Episodes