பவித்ரன்-4

Advertisement

KP JAY

Well-Known Member
தீபாவுக்கும் காயத்ரிக்கும் இருக்கும் உறவு ஒரே வகுப்பில் படித்தவர்கள் என்பது மட்டுமே. அவளுக்கு எப்பொழுதும் நெருங்கிய தோழமை என்பது குகனுடன் மட்டுமே. இருவரும் படிப்பு முடித்ததும் இருவருக்குமே வேலை தேவைப்பட்டது.

அப்பொழுதுதான் காயத்ரி பரணியின் அண்ணன் மில் தொடங்கி இருக்கிறான். அங்கு வேலைக்கு சேர்ந்துகொள்ள கூறினாள். அவளும் பவித்ரனிடம் அவர்களை சேர்த்துக்கொள்ள கூறி அப்படி தான் அவர்கள் இருவரும் வேலு மில்லுக்கு வந்து சேர்ந்தது. அதன் பிறகு தான் பரணி தீபாவுக்கு நண்பன் ஆனது.

அவள் வேலைக்கு சேர்ந்த பிறகு தான் பவித்ரன் காயத்ரி காதல் விஷயம் ஒவ்வொருவருக்காக தெரிய வந்தது. பவித்ரனின் குடும்பம் மொத்தத்துக்கும் கூட இந்த விஷயம் தெரியும்.

தீபா முதலில் இருவருக்கும் இன்னும் திருமணம் செய்யும் வயது வரவில்லை. அதனால் திருமணத்தை தள்ளி போடுகின்றனர் என்று நினைத்தாள். மில் ஒரு நிலைமைக்கு வந்து பவித்ரன் வீட்டில் கல்யாண விஷயம் தொடங்கிய பிறகும் திருமணம் நடப்பது போல தெரியவில்லை.

இதன் நடுவில் பவித்ரன் இதற்கும் மேல் எப்படி தொழிலை கொண்டு சென்று அதிக லாபம் ஈட்டுவது என்று யோசித்துக்கொண்டிருந்தான். ஏன் என்றால் அவன் இதுவரை காட்டிய வளர்ச்சியும் காயத்ரிக்கு போதவில்லை. அதனால் அவனை பெண் கேட்க வரவிடாமல் முட்டுக்கட்டை போட்டாள்.

இவனின் சோர்வும் திருமணம் பற்றி எந்த முன்னேற்றமும் இல்லாதது இரண்டும் தீபாவை யோசனைக்குள்ளாக்கியது. இதுவரை பவித்ரனிடம் வேலை விஷயம் தவிர்த்து அதிகமாக ஒரு வார்த்தை கூட அவள் பேசியதில்லை. அவனுக்கு முதலாளி என்ற மரியாதை கொடுப்பாள். வேறு எந்த சலுகைகளும் கூட எடுத்துக்கொள்ள மாட்டாள். அதனால் நேரடியாக பவித்ரனிடம் கேட்காமல் காயத்ரிக்கு அழைத்து கேட்டாள் அவர்களின் காதலைப் பற்றியும் எப்பொழுது கல்யாணம் என்பது பற்றியும். அப்பொழுது தான் அவளுக்கு தெரியவந்தது பவித்ரன் பெண் கேட்டு வரவேண்டும் என்றால் இன்னும் வளர வேண்டும் அப்பொழுது தான் அவளுடைய அப்பா திருமணத்திற்கு சம்மதிப்பார் என்று.

அதன் பிறகு தொடங்கியது தான் ரெடிமேட் பொடிகள் செய்து விற்பது. அது அவர்களுக்கு நன்றாகவே லாபம் கொடுக்க இனிமேல் எந்த பிரச்னையும் இல்லை என்றே தீபா நினைத்தது.

காயத்ரி தீபாவிடம் லாபம் விவரம் கேட்டிருந்தால் கூட அவளுக்கு தெரிந்திருக்கும். அவள் பவித்ரன் கோபத்தில் கூறியதை உண்மை என நினைத்து இப்படி முடிவு எடுத்து அவசரமாக வேறு ஒருத்தனுக்கு கழுத்தத்தை நீட்டிவிட்டாள்.

அன்று பவித்ரன் உன்முடிவுக்கு கட்டுப்டுவேன் என்று கூறி அதன் பிறகு காயத்ரி கால் கட் செய்த பிறகு மீண்டும் அவனுக்கு அழைக்கவே இல்லை. இரண்டு வாரம் ஓடி போனது. அவளிடம் இருந்து எந்த காலும் இல்லை. தன் காதல் இன்னும் உயிருடன் இருக்கிறதா இல்லை செத்தே விட்டதா என்றும் அவனுக்கு தெரியவில்லை. அதனால் எதையோ இழந்தது போல் எதிலும் ஒரு அக்கறையின்றி கவனமும் இன்றி சுற்றிக்கொண்டிருந்தான்.

அதை கவனித்து தீபா காயத்ரிக்கு அழைக்க அன்று காலை தான் அவர்களின் குலதெய்வ கோயிலில் வைத்து வேறு ஒருவனுடன் திருமணமே முடிந்துவிட்டது என்று கூறி காயத்ரி தான் அந்த விடியோவை அனுப்பிவைத்தாள்.

ஏண்டி இப்படி பண்ணின என்று கேட்டதற்கு அவள் கூறிய உண்மைக்கு முரணான பதில் அவளை குழப்பத்தில் ஆழ்த்தியது. என்ன நஷ்டம் என்று கூறுகிறாள். எல்லாம் லாபம் தானே. பவித்ரன் தான் அவளை விட்டுவிட்டான் என்று நினைத்து அவன் முன்பு சென்று நின்றாள்.

அவனோ இப்பொழுது இடிந்து போய் அந்த விடீயோவையே திரும்ப திரும்ப பார்த்துக்கொண்டிருந்தான்.

இவன் இவ்ளோ லவ் வச்சிருக்கும்போது ஏன் விட்டுவிட்டான் என்று அவளுக்கும் புரியவில்லை.

பவித்ரன் அப்படியே கிளம்பி வீட்டுக்கு சென்றுவிட்டான். அதன் பிறகு அவன் மில்லுக்கு வரவில்லை. இனிமேல் அவன் யாருக்காக உழைக்க வேண்டும். காயத்ரி தன்னை இப்படி விட்டுவிடுவாள் என்று நினைக்கவில்லை. அவள் தானே துரத்தி வந்தது. முதலில் என் மீது அவ்வளவு ஆசையாக இருந்தவளுக்கு திடீர் என்று ஏன் இப்படி என் வசதி அவள் கண்ணை உறுத்தியது. என்னைவிடவும் என்னிடம் இருக்கும் வசதி அவளுக்கு முக்கியமா என்று தோன்றியது.

எல்லாவற்றிலும் ஜெயித்தவன் காதலில் தோற்று போனான். இவன் வேண்டாம் என்று ஒரு பெண் அவனை தூக்கி எறிந்துவிட்டாள்.

அவனுக்கு எதிலும் பிடிப்பு அற்று போனது. மில்லுக்கு வரவில்லை. வயலுக்கு செல்வதில்லை. தாடி வளர்த்து எதையோ பறிகொடுத்தது போல சுற்றிக்கொண்டிருந்தான்.

மில்லை தீபா, குகன், பரணியே பார்த்துக்கொண்டனர். அப்பொழுது தான் காயத்ரியின் அப்பா அங்கு வந்தார்.

தன் பெண்ணின் திருமண வரவேற்புக்கு தீபா பரணி மற்றும் குகனுக்கும் அழைப்பு வைத்தார் அவர்கள் பெண்ணின் உடன் படித்தவர்கள் என்பதால்.

அதன் பிறகு பரணியின் வீட்டிற்கே சென்று பவித்ரனுக்கு ஸ்பெஷல் அழைப்பு வைத்தார். இது பிசினஸில் அவன் வளர்ந்ததால் அவனுடைய தொடர்பும் அவருக்கு தேவைப்பட்டதால் கண்டிப்பாக வரவேண்டும் என்று கூறி அழைப்பு வைத்தார். அவனும் வேறு வழி இன்றி வருவதாக ஒப்புக்கொண்டான்.
———-

வரவேற்புக்கும் சென்றனர். பவித்ரனும் தீபாவும் மட்டும். மற்ற அனைவருக்கும் கோபம். வேறு யாரும் செல்லவில்லை.

தீபா தன் ஸ்கூட்டரிலேயே சென்றுவிட்டாள். பவித்ரன் முகத்தை ஷேவ் செய்து அழகாக ஒரு பேண்ட்டும் சட்டையும் அணிந்து டிப்டாப்பாக பி.எம்.டபிள்யூ காரில் வந்து இறங்கினான்.

இந்த காரை வாங்கிவிட்டான். ஒரு முறையாவது காயத்ரி நேரில் பார்க்க அழைத்தால் அவளிடம் நேரில் எடுத்து சென்று காட்டவேண்டும் என்று நினைத்திருந்தான். அப்படி ஒன்று நடக்கவே இல்லை.

காயத்ரியின் அப்பா வாசலிலேயே நின்று அவனுக்கு வரவேற்பு கொடுத்து கூடவே கூட்டி வந்து வி.ஐ.பி வரிசையில் அமர வைத்தார்.

காயத்ரியின் பெரியம்மா பெண்ணுடைய கணவன், யாரை பார்த்து இவ்வளவு சூடும் போட்டு கொண்டாலோ அவனும் எங்கிருந்தோ ஓடி வந்தான். மூச்சு வாங்க பவித்ரனின் முன் சென்று நின்று அவனுக்கு கை கொடுத்து தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான்.

காயத்ரிக்கு ஆச்சர்யம். ஏன் அவனுக்கு இவ்வளவு முக்கியத்துவம் என்று. அவள் கணவனிடம் கேட்டாள் அங்கு யார் என்று. அவனும் பார்த்துவிட்டு, ஹே அது பவித்ரன். நியூ சக்சஸ்ஃபுல் பிசினெஸ் மேன். தொழில் வட்டாரத்தில இவர எல்லாருக்கும் தெரியும். நம்ம மேரேஜுக்கு வந்துருக்கார்னா நமக்கு கவுரவம் தான் என்று கூறினான்.

காயத்ரிக்கு உலகமே தட்டாமாலை சுற்றியது. தான் மிக பெரிய ஆட்கள் என்று நினைத்த தன் வீட்டு மூன்று ஆண்களும் தன் காதலனை பெரிய ஆள் என்று கை காட்டுகின்றனர். தான் அவனை பற்றி முழுதாக தெரிந்துகொள்ளாமல் அவசரப்பட்டுவிட்டோம் என்பது அப்பொழுது தான் அவளுக்கு புரிந்தது.

இன்னும் பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் அவனிடம் வந்து நின்று பேசினார். தீபாவும் ஒரு ஓரமாக அமர்ந்து காயத்ரியின் நடவடிக்கைகளை கவனித்து கொண்டிருந்தாள்.

பவித்ரனும் மேடை ஏறி வந்து அவர்களுக்கு வாழ்த்து கூறினான். காயத்ரியை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. ஆனால் அவன் கணவன் இவன் வந்ததற்காக மிகுந்த மகிழ்ச்சியைக் காட்டினான். பவித்ரனின் உள்ளம் உலைக்கலமாகத் தான் இருந்தது. ஆனால் எதுவும் முகத்தில் தெரியாதவாறு மறைத்து மேடையை விட்டு இறங்கிவிட்டான்.

சிறிது நேரம் கழித்து ரெஸ்ட் ரூம் போகணும் என்று சொல்லி வீட்டிற்குள் சென்றாள் காயத்ரி. வரவேற்பு அவளின் வீட்டு கார்டெனில் தான் நடந்துகொண்டிருந்தது.

இப்பொழுது தீபாவும் அவள் பின்னே எழுந்து சென்றாள்.

நேராக காயத்ரியின் முன்பு சென்று நின்றாள். அவள் ஒரு சோபாவில் அமர்ந்து தலையில் கை வைத்து அமர்ந்து கொண்டிருந்தாள்.

இவள் வந்து நின்றதும் நிமிர்ந்து பார்த்தாள்.

“நீயும் என்ன ஏமாத்திட்டேல்ல?” தீபாவிடம் வெடித்தாள்.

“நான் என்ன பண்ணினேன்”

“அவர் தொழிலில் இவ்வளவு சாதிச்சு இருக்கார். ஆனால் நீ அத என்கிட்டே சொல்லல”

“நான் எப்பவுமே உங்க ரெண்டுபேருக்கும் நடுவுல வந்தது இல்லையே. நீங்க தானே லவ்வர்ஸ். எனக்கு தெரிந்ததை விடவும்
உனக்கு தானே பவித்ரனை பற்றி அதிகம் தெரிஞ்சிருக்கணும். இப்போ வந்து என்னை குற்றம் சொன்னால் என்ன அர்த்தம்.

அப்போ நீ தான் பவித்ரனை கழட்டிவிட்ருக்க. அதுக்கு காரணம் அவரோட உண்மையான வளர்ச்சி உனக்கு தெரியலை. அப்படித்தானே.” என்று கேட்டாள்.

“நீ தானேடி அன்னிக்கு மில்லில் பிரச்சனை என்று கூறினாய்”

“ஆமாம் சொன்னேன். மறுபடியும் கால் பண்ணி என்ன ஆச்சுன்னு என்கிட்டயே கேட்ருக்கலாமில்ல”

“நான் பவித்ரன் கிட்ட கேட்டேன். அவர் இனிமேல் எந்திரிக்க முடியாத அளவுக்கு லாஸ்னு சொல்லிட்டார்”

“உடனே நீ அவரை விட்டுட்டு இந்த பையனுக்கு கழுத்த நீட்டிட்ட இல்லையா”

காயத்ரி பதில் கூறாமல் குனிந்து அமர்ந்து இருந்தாள்.

இங்கு இனி ஒரு நிமிடம் கூட இருக்க கூடாது என்று தீபா கிளம்பிவிட்டாள். அவளுக்கு சீ என்று ஆனது. என்ன வேலை செய்துவிட்டாள். காதலன் தோற்றுப்போனால் அவனை விட்டு ஓடி போகும் காதலி. நினைக்கவே அருவெறுப்பாக இருந்தது.

நிற்காமல் சொல்லிக்கவும் இல்லாமல் கிளம்பிவிட்டாள்.

அங்கு பவித்ரனும் கிளம்பிவிட்டான்.

தீபா அவள் வண்டியை அவனின் காருக்குப் பின்னால் தான் ஓட்டிக்கொண்டு வந்தாள். சிறது தூரம் சென்ற பிறகு பவித்ரனின் காரில் ஒரு தடுமாற்றம் தெரிந்தது.

கார் முதலில் நேராக ஒழுங்காக சென்றது பிறகு வலப்பக்கமும் இடப்பக்கமும் ஆக நிதானம் இன்றி சென்றது. ஐயோ என்ன கார் இப்படி போகுது என்று அவளும் பயந்து போய் அந்த காரை பின் தொடர்ந்தாள். இறுதியில் ஒரு மரத்தில் மோதுவது போல் சென்று அதற்குள் அவன் சடன் பிரேக் போட்டு வண்டியை நிறுத்தி இருந்தான். இரவு நேரம் வேறு. ஏதேனும் ஆகிவிட்டதோ என்று பயந்தாள்.

தன் வண்டியை நிறுத்திவிட்டு அருகில் சென்று பார்த்தாள். கார் மரத்தில் மோதவில்லை என்பதில் நிம்மதி ஆனாள்.

அவன் பக்கம் சென்று கார் டோர் நாக் செய்தாள். அவனும் கண்ணாடியை இறக்கினான்.

“வெளில வாங்க” என்றாள்.

அவனும் வந்தான்.

“கார் லாக் பண்ணுங்க” என்றாள்.

செய்தான்.

“சாவி குடுங்க” என்று கை நீட்டினாள்.

கொடுத்த்தான். (சாவியை மட்டுமா? :) )

“வாங்க” என்று கூறி அவள் வண்டியின் அருகில் சென்றாள்.

அவனும் சென்றான்.

அவள் ஸ்கூட்டரை கிளப்பி பின்னால் அமருமாறு கூறினாள்.

அவனும் அமர்ந்தான். சொல்வதை எல்லாம் கேட்கும் சிட்டி ரோபோ போல் இருந்தான்.

பார்த்து பத்திரமாக ஓட்டிக்கொண்டு சென்றாள். அவனும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. எதிலோ மூழ்கி போனவன் போல் அமர்ந்து இருந்தான்.

அரைமணி நேரம் கழித்து அவன் வீட்டின் முன்னாள் சென்று நிறுத்தினாள்.

வீட்டு வாசலில் வேலு, ஆவுடை, பரணி அனைவரும் நின்றனர்.

இவள் வண்டியை நிறுத்தியதும் பவித்ரன் இறங்கி வேகமாக வீட்டினுள் சென்றுவிட்டான். இவள் கார் சாவியை பரணியிடம் கொடுத்து கார் நிற்கும் இடத்தை கூறினாள்.

அவள் கிளம்புகிறேன் என்று சொன்னபோது, ஆவுடை அவளை கொண்டுவிட்டு வருமாறு பரணியை அனுப்பி வைத்தார். இப்பொழுது பரணி அவளின் வண்டியை ஓட்ட இவள் பின்னால் அமர்ந்துகொண்டாள்.

கிளம்பும்போது ஆவுடையிடம், பவித்ரன் சார் இன்னும் சாப்பிடவில்லை என்பதை கூறி சென்றாள்.
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top