பவித்ரன்-3

Advertisement

KP JAY

Well-Known Member
அடுத்த நாள் எல்லோருக்கும் விடுமுறை அளித்து விட்டான். அவனுக்கும் உடம்பு கெஞ்சியது கொஞ்சம் நேரம் படுக்கச்சொல்லி. வீட்டிற்கு வந்தவன் அவன் அப்பாவும் தாத்தாவும் கூடத்தில் அமர்ந்து இருப்பதை பார்த்து முறைத்து விட்டு எதுவும் கூறாமல் மாடி ஏறிவிட்டான். அவனுக்கு இப்பொழுது எதற்கும் சக்தி இல்லை.

இருவருக்கும் புரிந்தது. விடிந்ததும் இருக்கிறது என்று.

வந்து படுத்தவனுக்கு உறக்கம் தான் பிடிக்கவில்லை. வீட்டில் அவனுக்கு திருமணம் செய்ய வற்புறுத்திக்கொண்டே இருக்கின்றனர். அவனும் காயத்ரியிடம் எவ்வளவோ கேட்டுவிட்டான் பெண் கேட்டு வருகிறோம் என்று. பிடி கொடுக்க மாட்டேன் என்கிறாள்.

அவ்வளவு தூரம் பயணம் செய்து வீடு வந்து சேர்ந்தவனை பத்திரமா வந்துட்டான்னா எப்படி இருக்கேன்னு ஒரு வார்த்தை கேட்க இல்லை. கால் எடுத்ததும் லாப நஷ்ட கணக்கு கேட்கிறாள். மனதிற்குள் புலம்பிக்கொண்டிருந்தான்.

லாபம் நஷ்டம் பற்றி அவளிடம் கூறுவதை எப்பொழுதோ நிறுத்திவிட்டான். அது என்ன என்னை பற்றி கவலை படாமல் எப்பொழுதும் என் பிசினெஸ் பற்றியே கவலை அவளுக்கு என்று கடுப்பு இவனிற்கு. அப்படியா அவளை கல்யாணம் செய்து தெருவில் நிறுத்திவிடுவேன். தன்னை அவளின் அப்பாவின் அளவுக்கு பெரிய பணக்காரன் ஆக சொல்கிறாள். நான்கு தலைமுறையாக செல்வந்தர்களாக இருப்பவர்களுடன் நானும் இணையாக வேண்டும். அதுவும் விரைவில்.

ஹா… என்னால் முடியாதா என்று யோசித்து எழுப்பியது தான் இந்த வேலு மில். அனைத்து மளிகை பொருட்களும் கொள்முதல் செய்து பாக்கெட் செய்து விற்கிறான். இவன் வயலில் விளைவதையும் இவனே கொள்முதல் செய்து சந்தை படுத்துகிறான். அதுவும் இவன் வயலில் விளைவது அனைத்தும் ஆர்கானிக். சென்னையில் அதற்கு நல்ல மார்க்கெட் உருவாக்கி விட்டான். இப்பொழுது அதை பெங்களூரிலும் சந்தை படுத்தும் வேலையாக தான் சென்று வந்திருக்கிறான். போன வேலை வெற்றியே.

இவன் பிடித்தது பிடித்து கொண்டிருப்பது ரீடெயில் மார்க்கெட். விவசாயிகள் தோற்கும் இடம் இங்கு தான். அவர்கள் விளைவிப்பதை அவர்கள் நேரடியாக மக்களுக்கு கொடுக்காமல் இடை தரகர்கள் மூலம் விற்கிறார்கள். அப்பொழுது நல்ல லாபம் பார்ப்பவர்கள் தரகர்கள் மட்டுமே. இங்கு இவனே நேரடியாக மக்களின் கையில் தன் பொருட்களை கொண்டு சேர்க்கிறான். அதனால் லாபமும் பன்மடங்கு அதிகம்.

ஒரு வருடம் முன்பு ஒரு நாள் தீபா ஒரு டப்பாவில் சாம்பார் கொண்டுவந்து குடுத்து அவனை டேஸ்ட் பார்க்க கூறினாள்.

அன்று தாத்தா அப்பா மகன் மூன்று பேருமே மில்லில் தான் மதிய உணவு சாப்பிட அமர்ந்தனர். இவள் அன்று கொஞ்சம் விரைவில் வீடு சேர்ந்து சாப்பிட்டுவிட்டு கையிலும் சாம்பார் எடுத்து வந்திருந்தாள்.

மூவருமே சாப்பிட்டு பார்த்தனர். சாம்பார் அப்படி ஒரு ருசி.

ஆவுடை கேட்டார். “என்னம்மா இவ்ளோ டேஸ்ட்டா கூட நீ சமைப்பியா?” என்று.

“சார் நான் சமைக்கல. என் பாட்டி தான் சமைப்பது. நானும் இவ்ளோ நாளா அவங்க சமைக்கிறத சாப்பிடுறேன். சாம்பார்ல இப்பொழுது தான் இப்படி ஒரு ருசி வருகிறது.”

“ஓ. அப்படி என்ன போட்டாங்க சாம்பார்ல?” ஆவுடை ஆர்வம் தாங்காமல் கேட்டார். தாத்தாவும் பேரனும் இவர்கள் பேச்சை கவனித்துக்கொண்டே சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.

பொறுமையாக பதில் கூறினாள். இப்பொழுது சாம்பாரில் போடும் பொருட்கள் அனைத்தும் வேலு மில்லில் இருந்து எடுத்து சென்றது என்று.

பவித்ரன் நிமிர்ந்து அமர்ந்தான். அவனை ஒரு அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்தாள். அவன் பிசினெஸ்ஸை அடுத்த லெவெலுக்கு கொண்டு செல்லும் வழியை கூறி இருக்கிறாள். ஆர்கானிக் பொருட்களை போட்டால் சாம்பார் ருசியாக இருக்கிறது. இது போதாதா. அனைவரும் சேர்ந்து சாம்பார் போடி ரச போடி புளியோதரை பருப்பு போடி என்று உணவில் அத்தனை ரெடிமேட் வகைகளும் செய்து டேஸ்ட் பார்த்துவிட்டனர். அத்தனையும் நன்றாக வந்தது. அது பெரும் நகரங்களில் பெரும் லாபமும் ஈட்டித்தந்தது.

ஆம். பவித்ரன் பெரும் பணக்காரன் ஆகி ரொம்ப நாட்கள் ஆகிறது. அதை பற்றி எதையும் காயத்ரியிடம் மட்டும் பகிர்ந்துகொள்ளவில்லை. கடந்த ஒரு வருடமாக தன்னுடைய பிசினெஸ் பற்றி எதுவுமே கூறுவதில்லை. ஆனால் பிசினெஸ் உலகம் இவனை கண்டுகொண்டது. பெரும் பணக்காரர்களுக்கு இவனை பற்றி தெரியும்.

ஏதேதோ எண்ணங்கள் மனதில் வலம் வர அப்படியே உறங்கிப்போனான்.

காலை எட்டுமணிக்கு போன் அடித்து தான் அவனை எழுப்பியது. கால் செய்த்தது காயத்ரி. என்ன அதிசயம்.

எடுத்து அட்டென்ட் செய்தான்.

“பவி இப்போ என்ன பண்றதா இருக்கீங்க?”

“எதை பற்றி கேக்குற?”

“அதான் இனிமேல் எந்திரிக்க முடியாத அளவுக்கு நஷ்டம்ன்னு சொன்னிங்கள்ல. என்ன பண்ண போறீங்க?”

இவள் இன்னும் இதை விடவில்லையா. இன்னும் கடுப்பாகியது.

“ஆமாம். பிசினெஸ்ஸ தூக்கிப்போட்டுட்டு முழு நேரம் விவசாயம் மட்டும் பாக்கலாம்னு இருக்கேன்.”

வேண்டும் என்றே கூறினான்.

“ஓ. சரி. அப்புறம் பேசுறேன்” என்று கூறி வைத்துவிட்டாள்.

தன்னிடம் கேட்க வேறு எதுவுமே இல்லையா. காலையிலேயே ஒரு விரக்தி மனநிலைக்கு சென்றான்.

எழுந்து குளித்து சாப்பிட்டு வயலுக்கு சென்றுவிட்டான்.

அன்று மதியம்…

“ஏய் நில்லுடி” என்று பரணி லாவண்யாவின் ஸ்கூட்டரை நிறுத்தினான்.

“ஏன் மாமா இப்படி நாடு ரோட்டுல வம்பு பண்ற. விடு நான் கடைக்கு போகணும்.

“ஏய் என்னடி கொழுப்பா? உன் பாட்டுக்கு வீட்டுக்கு வர எல்லாருக்க்கூடவும் பேசுற. என்னைய மட்டும் ஒரு மனுசனா கூட திரும்பி பாக்காம போற.”

“ஹான். உன்னை எல்லாம் எனக்கு பார்க்க கூட பிடிக்கலன்னு அர்த்தம். போ. போயி வேற வேலை எதுனா பாரு.”

“ஓ.. உனக்கு என்ன பார்க்க பிடிக்கல. அப்போ மேடம் ஏன் நான் சாப்பிட்டு இருக்கும்போது மட்டும் எண்ணியவே பாத்தீங்களாம்”

“அது எப்படி நான் பார்த்தேன்னு உனக்கு தெரியும். நீ தான் எனக்கு முதுகு காட்டி உக்காந்து இருந்தியே”

“அது உள்ளுணர்வுடி. நீ என்னிய பார்த்தா அது கண்டிப்பா எனக்கு தெரியும்”

“அதான் உனக்கு எல்லாம் தெரியுதில்ல. எனக்கு வழி விடு போகணும்.”

“போலாம். நீ ஏதோ யூ.எஸ் போறதா கேள்விப்பட்டேன்.”

“ஆமாம் போறேன்.”

“எவ்ளோ நாள்?”

“ஒரு வருஷம்”

“என்னடி அவ்ளோ நாள் என்னைய விட்டு இருக்க போறியா? பேசாம என்னைய கல்யாணம் பண்ணிக்கிட்டு அப்புறம் போடி”

“இப்போ எதுக்கு உனக்கு அவசரமா கல்யாணம்?”

“நீ வெளிநாடு போறேன்னு அங்க இருந்து ஒரு வெள்ளைக்காரனை பிடிச்சிட்டு வந்துட்டினா நான் என்னடி பண்ணுவேன்?”

“உனக்கு தான் என்மேல எம்புட்டு நம்பிக்கை மாமா. நீ என்ன தலை கீழா நின்னாலும் பவி மாமாக்கு கல்யாணம் முடிக்காம உனக்கு யோசிக்க கூட மாட்டாங்க. முதல்ல போயி பவி மாமா லவ்வ சேர்த்துவைக்கிற வழிய பாருங்க. இப்போ எனக்கு வழி விடுங்க”

அவள் கூறியதில் அவன் யோசனை ஆனான். அவள் சென்று வருகிறேன் என்றதிலும் கவனம் இல்லை. அவளும் சென்றுவிட்டாள். ஆனால் அவன் யோசனையுடன் நின்றுவிட்டான். அண்ணனிடம் எப்படி சொல்வது என்று. இரண்டு நாட்கள் முன்பு நண்பன் கால் செய்து ஒரு விசயம் கூறினான். ஆனால் மில்லில் நடந்த கூத்தில் இதை மறந்துவிட்டிருந்தான்.

பவித்ரன் அப்பொழுது பைக்கில் வந்துகொண்டிருந்தான். இவன் என்ன நடு ரோட்டுல இப்படி நிற்கிறான் என்று யோசித்து அவன் அருகில் சென்று அவனும் வண்டியை நிறுத்தினான்.

“என்னடா இங்க நிற்கிற?”

பரணி அப்பொழுது தான் யோசனையில் இருந்து வெளி வந்தான். அண்ணன் முகத்தை பார்த்தவன் சரி கூறிவிடுவோம் என்று அங்கு இருந்த ஒரு கல் மேடையில் சென்று அமர்ந்து கொண்டான்.

பவித்ரனும் இவன் என்ன செய்கிறான் என்று யோசித்து அவன் அருகில் சென்று அமர்ந்தான்.

“அண்ணா” என்று தயங்கி ஆரம்பித்தான்.

“டேய் பரணி நான் நேத்து காயத்ரியை ஒரு பையன் கூட பஜார்ல பார்த்தேண்டா. அவ அப்பா எங்க அப்பாவுக்கு நல்ல பழக்கம் தான். நான் அவருக்கு கால் பண்ணி காயத்ரிக்கு இப்போ மேரேஜ் பண்ற ஐடியா இருக்கா மாமான்னு கேட்டேன். ஒரு பையன் பாத்துருக்கு. ஆனால் பொண்ணு இன்னும் முடிவு சொல்லலன்னு சொன்னார். சரி நானாவது உங்க அண்ணன் லவ் மேட்டர்க்கு ஏதாச்சும் பண்ண முடியுமான்னு யோசிச்சி, நீங்க இன்னும் முடிவு எடுக்கலன்னா வேலு மில் பவித்ரன பார்க்கலாம்ல மாமான்னு கேட்டு பார்த்தேன்.” இதை சொல்லி முடித்து அவன் பரணியை பாவமாக பார்த்தான்.

“என்னடா சொன்னாரு?” பரணி ஆர்வம் தாங்காமல் கேட்டான்.

“தம்பி நான் ஏற்கனவே அந்த பையன் பவித்ரனை பார்க்கலாமான்னு என் பொண்ணுகிட்ட கேட்டு பார்த்தேன். அதுக்கும் யோசிச்சு சொல்றேன்னு சொல்லிச்சு. ஆனால் இன்னும் ஒரு பதிலும் சொல்லலப்பா. ஆனால் இப்போ சிதம்பரம் பையன தான் அவளுக்கு முடிக்கலாம்னு பாக்குறேன். அவன் மேல என் பொண்ணு ஆர்வம் காட்டுற மாதிரி தோணுது” என்று கூறியதாக கூறினான்.

அதை இப்பொழுது மறைக்காமல் பவித்ரனிடம் கூறிவிட்டான். பவித்ரன் இப்பொழுது சிலை போல அமர்ந்து இருந்தான். தன்னுடைய ஐந்து வருட தவம் போன்ற காதல் முடிவுக்கு வந்துவிட்டதா என்று உள்ளம் உடைந்து நின்றான். வேறு ஒருவனுடன் வெளியில் சுற்றுகிறாளாம். இவனுக்கு பேச கூட அவ்வளவு தடைகள் போட்டாள். பார்ப்பது என்பது அவ்வளவு சீக்கிரம் முடியாது.

இது அனைத்தும் உரைப்பது ஒன்றே ஒன்று தான். காருக்கு ஸ்டெப்புணி போல அவனை பயன்படுத்தி இருக்கிறாள்.

முதலில் அவனை சுற்றி வந்து காதலில் விழ வைத்த பொழுது அவளுக்கும் அவனை பிடித்து தான் செய்தாள். ஆனால் தன் பெரியம்மா பெண் மேரேஜ் முடிந்தததும் ஆள் மாறிப்போனாள். அவளை மிகவும் பெரிய இடத்தில் கொடுத்து இருந்தனர். காயத்ரியின் அம்மா அவளிடம் நீயும் இது போல மிகவும் செல்வாக்கான இடத்துல தாண்டி கல்யாணம் பண்ணனும். உன் அக்கா அளவுக்கு நீயும் ஒரு பெரிய வீட்டு மருமகளா இருக்கணும். எவனாவது ஒன்னும் இல்லாதவனை லவ் பணறேன்னு கூட்டிட்டு வந்து நிற்காத என்று கூறிவிட்டார்.

அதன் பிறகு தான் அவள் அதிகம் பணம் வசதி பற்றி பவித்ரனிடம் பேசியது. அவ்வளவு பெரிய வீட்டு பெண்ணை கட்டவேண்டும் என்றால் தானும்
அதுபோல பெரிய இடமாக தான் இருக்கவேண்டும் என்று நினைத்தான். அதன் பிறகு தான் அவன் பிசினஸில் இறங்கியது.

எல்லாம் செய்து நினைத்ததை அடைந்துவிட்டான். ஆனால் அந்த வெற்றியை காதலியிடம் பகிர்ந்துகொள்ளவில்லை. பகிர தோன்றவில்லை. ஒரு முறையேனும் இவனை பற்றி அக்கறையாக எதுவும் விசாரித்து இருந்தால் அவனும் அவளிடம் பிசினெஸ் நிலவரம் கூறியிருப்பான்.

அவன் எதிர் பார்ப்பது தனக்கான முக்கியத்துவத்தை. ஆனால் அவள் கொடுப்பது அவனுடைய பிசினெஸ் வளர்ச்சிக்கு மட்டுமே.

தம்பி கூறியதை கேட்டதில் இருந்து ஏதோ பித்து பிடித்தது போல சுற்றி கொண்டிருந்தான்.

அடுத்த நாள் காயத்ரி மிகவும் தயங்கி அவனுக்கு கால் செய்தாள்.

“வீட்டுல எனக்கு வேற மாப்பிள்ளை பாத்துட்டாங்க.”

“ஓ.. என்னை பற்றி சொல்லவே இல்லையா?”

“சொன்னேன். நான் உங்கள லவ் பணறேன்னு. ஆனால் ஒத்துக்கலை. என்ன போர்ஸ் பண்றங்க.”

“பையன் யாரு?”

“தங்கம் ஜுவல்ஸ் ஓனர் சிதம்பரத்தோட பையன் வாசுதேவன்”

பவித்ரன் ஒன்றும் கூறாமல் அமைதியாக இருந்தான்.

“நான் என்ன பண்ணட்டும்?”

“நீ என்ன முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதம் தான் காயத்ரி. எந்த குற்றஉணர்ச்சியும் எடுத்துக்காம உனக்கு தோணுறத செய். உன்னோட எந்த முடிவுக்கும் கட்டுப்படுவேன்” என்றான்.

“ம்ம்ம். யாரோ கூப்பிடுற மாதிரி இருக்கு. நான் அப்புறம் பேசுறேன்” என்று கூறி வைத்துவிட்டாள்.

கடவுளே அவன் இப்பொழுது என்ன செய்தான்.
காதல் என்ற தளையை கழட்டிவிட்டான். இப்பொழுது இருவருமே அதற்கு கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை. அவன் விட்டுவிட்டான். இனி இது தொடர வேண்டும் என்றால் காயத்ரி தான் இழுத்து பிடிக்க வேண்டும்.

இன்னும் ஒரு சிறு நம்பிக்கையுடன் காத்து நின்றான் தீபா அவன் முன்பு வந்து நிற்கும் வரை.

“சார். நீங்க தான் இப்போ நல்ல நிலைமைல இருக்கிங்கல்ல. ஏன் காயத்ரிய பொண்ணு கேட்டு போகலை. ஏன் அவள விட்டுட்டீங்க?”

இப்பொழுது அவன் இதயம் துடிக்கும் ஓசை அவனுக்கே கேட்டது. ஏதோ விரும்பத்தகாதது நடந்துவிட்டது என்று தோன்றியது.

“என்ன ஆச்சு?”

இங்க பாருங்க என்று மொபைலில் ஒரு விடியோவை காட்டினாள்.

அதில் காயத்ரிக்கு வேறு ஒருவன் மகிழ்ச்சியுடன் தாலி கட்டிக்கொண்டிருந்தான். காயத்ரியும் தலை குனிந்து அதை ஏற்று கொண்டிருந்தாள்.
 
Last edited:

Nirmala senthilkumar

Well-Known Member
அடுத்த நாள் எல்லோருக்கும் விடுமுறை அளித்து விட்டான். அவனுக்கும் உடம்பு கெஞ்சியது கொஞ்சம் நேரம் படுக்கச்சொல்லி. வீட்டிற்கு வந்தவன் அவன் அப்பாவும் தாத்தாவும் கூடத்தில் அமர்ந்து இருப்பதை பார்த்து முறைத்து விட்டு எதுவும் கூறாமல் மாடி ஏறிவிட்டான். அவனுக்கு இப்பொழுது எதற்கும் சக்தி இல்லை.

இருவருக்கும் புரிந்தது. விடிந்ததும் இருக்கிறது என்று.

வந்து படுத்தவனுக்கு உறக்கம் தான் பிடிக்கவில்லை. வீட்டில் அவனுக்கு திருமணம் செய்ய வற்புறுத்திக்கொண்டே இருக்கின்றனர். அவனும் காயத்ரியிடம் எவ்வளவோ கேட்டுவிட்டான் பெண் கேட்டு வருகிறோம் என்று. பிடி கொடுக்க மாட்டேன் என்கிறாள்.

அவ்வளவு தூரம் பயணம் செய்து வீடு வந்து சேர்ந்தவனை பத்திரமா வந்துட்டான்னா எப்படி இருக்கேன்னு ஒரு வார்த்தை கேட்க இல்லை. கால் எடுத்ததும் லாப நஷ்ட கணக்கு கேட்கிறாள். மனதிற்குள் புலம்பிக்கொண்டிருந்தான்.

லாபம் நஷ்டம் பற்றி அவளிடம் கூறுவதை எப்பொழுதோ நிறுத்திவிட்டான். அது என்ன என்னை பற்றி கவலை படாமல் எப்பொழுதும் என் பிசினெஸ் பற்றியே கவலை அவளுக்கு என்று கடுப்பு இவனிற்கு. அப்படியா அவளை கல்யாணம் செய்து தெருவில் நிறுத்திவிடுவேன். தன்னை அவளின் அப்பாவின் அளவுக்கு பெரிய பணக்காரன் ஆக சொல்கிறாள். நான்கு தலைமுறையாக செல்வந்தர்களாக இருப்பவர்களுடன் நானும் இணையாக வேண்டும். அதுவும் விரைவில்.

ஹா… என்னால் முடியாதா என்று யோசித்து எழுப்பியது தான் இந்த வேலு மில். அனைத்து மளிகை பொருட்களும் கொள்முதல் செய்து பாக்கெட் செய்து விற்கிறான். இவன் வயலில் விளைவதையும் இவனே கொள்முதல் செய்து சந்தை படுத்துகிறான். அதுவும் இவன் வயலில் விளைவது அனைத்தும் ஆர்கானிக். சென்னையில் அதற்கு நல்ல மார்க்கெட் உருவாக்கி விட்டான். இப்பொழுது அதை பெங்களூரிலும் சந்தை படுத்தும் வேலையாக தான் சென்று வந்திருக்கிறான். போன வேலை வெற்றியே.

இவன் பிடித்தது பிடித்து கொண்டிருப்பது ரீடெயில் மார்க்கெட். விவசாயிகள் தோற்கும் இடம் இங்கு தான். அவர்கள் விளைவிப்பதை அவர்கள் நேரடியாக மக்களுக்கு கொடுக்காமல் இடை தரகர்கள் மூலம் விற்கிறார்கள். அப்பொழுது நல்ல லாபம் பார்ப்பவர்கள் தரகர்கள் மட்டுமே. இங்கு இவனே நேரடியாக மக்களின் கையில் தன் பொருட்களை கொண்டு சேர்க்கிறான். அதனால் லாபமும் பன்மடங்கு அதிகம்.

ஒரு வருடம் முன்பு ஒரு நாள் தீபா ஒரு டப்பாவில் சாம்பார் கொண்டுவந்து குடுத்து அவனை டேஸ்ட் பார்க்க கூறினாள்.

அன்று தாத்தா அப்பா மகன் மூன்று பேருமே மில்லில் தான் மதிய உணவு சாப்பிட அமர்ந்தனர். இவள் அன்று கொஞ்சம் விரைவில் வீடு சேர்ந்து சாப்பிட்டுவிட்டு கையிலும் சாம்பார் எடுத்து வந்திருந்தாள்.

மூவருமே சாப்பிட்டு பார்த்தனர். சாம்பார் அப்படி ஒரு ருசி.

ஆவுடை கேட்டார். “என்னம்மா இவ்ளோ டேஸ்ட்டா கூட நீ சமைப்பியா?” என்று.

“சார் நான் சமைக்கல. என் பாட்டி தான் சமைப்பது. நானும் இவ்ளோ நாளா அவங்க சமைக்கிறத சாப்பிடுறேன். சாம்பார்ல இப்பொழுது தான் இப்படி ஒரு ருசி வருகிறது.”

“ஓ. அப்படி என்ன போட்டாங்க சாம்பார்ல?” ஆவுடை ஆர்வம் தாங்காமல் கேட்டார். தாத்தாவும் பேரனும் இவர்கள் பேச்சை கவனித்துக்கொண்டே சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.

பொறுமையாக பதில் கூறினாள். இப்பொழுது சாம்பாரில் போடும் பொருட்கள் அனைத்தும் வேலு மில்லில் இருந்து எடுத்து சென்றது என்று.

பவித்ரன் நிமிர்ந்து அமர்ந்தான். அவனை ஒரு அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்தாள். அவன் பிசினெஸ்ஸை அடுத்த லெவெலுக்கு கொண்டு செல்லும் வழியை கூறி இருக்கிறாள். ஆர்கானிக் பொருட்களை போட்டால் சாம்பார் ருசியாக இருக்கிறது. இது போதாதா. அனைவரும் சேர்ந்து சாம்பார் போடி ரச போடி புளியோதரை பருப்பு போடி என்று உணவில் அத்தனை ரெடிமேட் வகைகளும் செய்து டேஸ்ட் பார்த்துவிட்டனர். அத்தனையும் நன்றாக வந்தது. அது பெரும் நகரங்களில் பெரும் லாபமும் ஈட்டித்தந்தது.

ஆம். பவித்ரன் பெரும் பணக்காரன் ஆகி ரொம்ப நாட்கள் ஆகிறது. அதை பற்றி எதையும் காயத்ரியிடம் மட்டும் பகிர்ந்துகொள்ளவில்லை. கடந்த ஒரு வருடமாக தன்னுடைய பிசினெஸ் பற்றி எதுவுமே கூறுவதில்லை. ஆனால் பிசினெஸ் உலகம் இவனை கண்டுகொண்டது. பெரும் பணக்காரர்களுக்கு இவனை பற்றி தெரியும்.

ஏதேதோ எண்ணங்கள் மனதில் வலம் வர அப்படியே உறங்கிப்போனான்.

காலை எட்டுமணிக்கு போன் அடித்து தான் அவனை எழுப்பியது. கால் செய்த்தது காயத்ரி. என்ன அதிசயம்.

எடுத்து அட்டென்ட் செய்தான்.

“பவி இப்போ என்ன பண்றதா இருக்கீங்க?”

“எதை பற்றி கேக்குற?”

“அதான் இனிமேல் எந்திரிக்க முடியாத அளவுக்கு நஷ்டம்ன்னு சொன்னிங்கள்ல. என்ன பண்ண போறீங்க?”

இவள் இன்னும் இதை விடவில்லையா. இன்னும் கடுப்பாகியது.

“ஆமாம். பிசினெஸ்ஸ தூக்கிப்போட்டுட்டு முழு நேரம் விவசாயம் மட்டும் பாக்கலாம்னு இருக்கேன்.”

வேண்டும் என்றே கூறினான்.

“ஓ. சரி. அப்புறம் பேசுறேன்” என்று கூறி வைத்துவிட்டாள்.

தன்னிடம் கேட்க வேறு எதுவுமே இல்லையா. காலையிலேயே ஒரு விரக்தி மனநிலைக்கு சென்றான்.

எழுந்து குளித்து சாப்பிட்டு வயலுக்கு சென்றுவிட்டான்.

அன்று மதியம்…

“ஏய் நில்லுடி” என்று பரணி லாவண்யாவின் ஸ்கூட்டரை நிறுத்தினான்.

“ஏன் மாமா இப்படி நாடு ரோட்டுல வம்பு பண்ற. விடு நான் கடைக்கு போகணும்.

“ஏய் என்னடி கொழுப்பா? உன் பாட்டுக்கு வீட்டுக்கு வர எல்லாருக்க்கூடவும் பேசுற. என்னைய மட்டும் ஒரு மனுசனா கூட திரும்பி பாக்காம போற.”

“ஹான். உன்னை எல்லாம் எனக்கு பார்க்க கூட பிடிக்கலன்னு அர்த்தம். போ. போயி வேற வேலை எதுனா பாரு.”

“ஓ.. உனக்கு என்ன பார்க்க பிடிக்கல. அப்போ மேடம் ஏன் நான் சாப்பிட்டு இருக்கும்போது மட்டும் எண்ணியவே பாத்தீங்களாம்”

“அது எப்படி நான் பார்த்தேன்னு உனக்கு தெரியும். நீ தான் எனக்கு முதுகு காட்டி உக்காந்து இருந்தியே”

“அது உள்ளுணர்வுடி. நீ என்னிய பார்த்தா அது கண்டிப்பா எனக்கு தெரியும்”

“அதான் உனக்கு எல்லாம் தெரியுதில்ல. எனக்கு வழி விடு போகணும்.”

“போலாம். நீ ஏதோ யூ.எஸ் போறதா கேள்விப்பட்டேன்.”

“ஆமாம் போறேன்.”

“எவ்ளோ நாள்?”

“ஒரு வருஷம்”

“என்னடி அவ்ளோ நாள் என்னைய விட்டு இருக்க போறியா? பேசாம என்னைய கல்யாணம் பண்ணிக்கிட்டு அப்புறம் போடி”

“இப்போ எதுக்கு உனக்கு அவசரமா கல்யாணம்?”

“நீ வெளிநாடு போறேன்னு அங்க இருந்து ஒரு வெள்ளைக்காரனை பிடிச்சிட்டு வந்துட்டினா நான் என்னடி பண்ணுவேன்?”

“உனக்கு தான் என்மேல எம்புட்டு நம்பிக்கை மாமா. நீ என்ன தலை கீழா நின்னாலும் பவி மாமாக்கு கல்யாணம் முடிக்காம உனக்கு யோசிக்க கூட மாட்டாங்க. முதல்ல போயி பவி மாமா லவ்வ சேர்த்துவைக்கிற வழிய பாருங்க. இப்போ எனக்கு வழி விடுங்க”

அவள் கூறியதில் அவன் யோசனை ஆனான். அவள் சென்று வருகிறேன் என்றதிலும் கவனம் இல்லை. அவளும் சென்றுவிட்டாள். ஆனால் அவன் யோசனையுடன் நின்றுவிட்டான். அண்ணனிடம் எப்படி சொல்வது என்று. இரண்டு நாட்கள் முன்பு நண்பன் கால் செய்து ஒரு விசயம் கூறினான். ஆனால் மில்லில் நடந்த கூத்தில் இதை மறந்துவிட்டிருந்தான்.

பவித்ரன் அப்பொழுது பைக்கில் வந்துகொண்டிருந்தான். இவன் என்ன நடு ரோட்டுல இப்படி நிற்கிறான் என்று யோசித்து அவன் அருகில் சென்று அவனும் வண்டியை நிறுத்தினான்.

“என்னடா இங்க நிற்கிற?”

பரணி அப்பொழுது தான் யோசனையில் இருந்து வெளி வந்தான். அண்ணன் முகத்தை பார்த்தவன் சரி கூறிவிடுவோம் என்று அங்கு இருந்த ஒரு கல் மேடையில் சென்று அமர்ந்து கொண்டான்.

பவித்ரனும் இவன் என்ன செய்கிறான் என்று யோசித்து அவன் அருகில் சென்று அமர்ந்தான்.

“அண்ணா” என்று தயங்கி ஆரம்பித்தான்.

“டேய் பரணி நான் நேத்து காயத்ரியை ஒரு பையன் கூட பஜார்ல பார்த்தேண்டா. அவ அப்பா எங்க அப்பாவுக்கு நல்ல பழக்கம் தான். நான் அவருக்கு கால் பண்ணி காயத்ரிக்கு இப்போ மேரேஜ் பண்ற ஐடியா இருக்கா மாமான்னு கேட்டேன். ஒரு பையன் பாத்துருக்கு. ஆனால் பொண்ணு இன்னும் முடிவு சொல்லலன்னு சொன்னார். சரி நானாவது உங்க அண்ணன் லவ் மேட்டர்க்கு ஏதாச்சும் பண்ண முடியுமான்னு யோசிச்சி, நீங்க இன்னும் முடிவு எடுக்கலன்னா வேலு மில் பரணியை பார்க்கலாம்ல மாமான்னு கேட்டு பார்த்தேன்.” இதை சொல்லி முடித்து அவன் பரணியை பாவமாக பார்த்தான்.

“என்னடா சொன்னாரு?” பரணி ஆர்வம் தாங்காமல் கேட்டான்.

“தம்பி நான் ஏற்கனவே அந்த பையன் பரணியை பார்க்கலாமான்னு என் பொண்ணுகிட்ட கேட்டு பார்த்தேன். அதுக்கும் யோசிச்சு சொல்றேன்னு சொல்லிச்சு. ஆனால் இன்னும் ஒரு பதிலும் சொல்லலப்பா. ஆனால் இப்போ சிதம்பரம் பையன தான் அவளுக்கு முடிக்கலாம்னு பாக்குறேன். அவன் மேல என் பொண்ணு ஆர்வம் காட்டுற மாதிரி தோணுது” என்று கூறியதாக கூறினான்.

அதை இப்பொழுது மறைக்காமல் பவித்ரனிடம் கூறிவிட்டான். பவித்ரன் இப்பொழுது சிலை போல அமர்ந்து இருந்தான். தன்னுடைய ஐந்து வருட தவம் போன்ற காதல் முடிவுக்கு வந்துவிட்டதா என்று உள்ளம் உடைந்து நின்றான். வேறு ஒருவனுடன் வெளியில் சுற்றுகிறாளாம். இவனுக்கு பேச கூட அவ்வளவு தடைகள் போட்டாள். பார்ப்பது என்பது அவ்வளவு சீக்கிரம் முடியாது.

இது அனைத்தும் உரைப்பது ஒன்றே ஒன்று தான். காருக்கு ஸ்டெப்புணி போல அவனை பயன்படுத்தி இருக்கிறாள்.

முதலில் அவனை சுற்றி வந்து காதலில் விழ வைத்த பொழுது அவளுக்கும் அவனை பிடித்து தான் செய்தாள். ஆனால் தன் பெரியம்மா பெண் மேரேஜ் முடிந்தததும் ஆள் மாறிப்போனாள். அவளை மிகவும் பெரிய இடத்தில் கொடுத்து இருந்தனர். காயத்ரியின் அம்மா அவளிடம் நீயும் இது போல மிகவும் செல்வாக்கான இடத்துல தாண்டி கல்யாணம் பண்ணனும். உன் அக்கா அளவுக்கு நீயும் ஒரு பெரிய வீட்டு மருமகளா இருக்கணும். எவனாவது ஒன்னும் இல்லாதவனை லவ் பணறேன்னு கூட்டிட்டு வந்து நிற்காத என்று கூறிவிட்டார்.

அதன் பிறகு தான் அவள் அதிகம் பணம் வசதி பற்றி பவித்ரனிடம் பேசியது. அவ்வளவு பெரிய வீட்டு பெண்ணை கட்டவேண்டும் என்றால் தானும்
அதுபோல பெரிய இடமாக தான் இருக்கவேண்டும் என்று நினைத்தான். அதன் பிறகு தான் அவன் பிசினஸில் இறங்கியது.

எல்லாம் செய்து நினைத்ததை அடைந்துவிட்டான். ஆனால் அந்த வெற்றியை காதலியிடம் பகிர்ந்துகொள்ளவில்லை. பகிர தோன்றவில்லை. ஒரு முறையேனும் இவனை பற்றி அக்கறையாக எதுவும் விசாரித்து இருந்தால் அவனும் அவளிடம் பிசினெஸ் நிலவரம் கூறியிருப்பான்.

அவன் எதிர் பார்ப்பது தனக்கான முக்கியத்துவத்தை. ஆனால் அவள் கொடுப்பது அவனுடைய பிசினெஸ் வளர்ச்சிக்கு மட்டுமே.

தம்பி கூறியதை கேட்டதில் இருந்து ஏதோ பித்து பிடித்தது போல சுற்றி கொண்டிருந்தான்.

அடுத்த நாள் காயத்ரி மிகவும் தயங்கி அவனுக்கு கால் செய்தாள்.

“வீட்டுல எனக்கு வேற மாப்பிள்ளை பாத்துட்டாங்க.”

“ஓ.. என்னை பற்றி சொல்லவே இல்லையா?”

“சொன்னேன். நான் உங்கள லவ் பணறேன்னு. ஆனால் ஒத்துக்கலை. என்ன போர்ஸ் பண்றங்க.”

“பையன் யாரு?”

“தங்கம் ஜுவல்ஸ் ஓனர் சிதம்பரத்தோட பையன் வாசுதேவன்”

பவித்ரன் ஒன்றும் கூறாமல் அமைதியாக இருந்தான்.

“நான் என்ன பண்ணட்டும்?”

“நீ என்ன முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதம் தான் காயத்ரி. எந்த குற்றஉணர்ச்சியும் எடுத்துக்காம உனக்கு தோணுறத செய். உன்னோட எந்த முடிவுக்கும் கட்டுப்படுவேன்” என்றான்.

“ம்ம்ம். யாரோ கூப்பிடுற மாதிரி இருக்கு. நான் அப்புறம் பேசுறேன்” என்று கூறி வைத்துவிட்டாள்.

கடவுளே அவன் இப்பொழுது என்ன செய்தான்.
காதல் என்ற தளையை கழட்டிவிட்டான். இப்பொழுது இருவருமே அதற்கு கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை. அவன் விட்டுவிட்டான். இனி இது தொடர வேண்டும் என்றால் காயத்ரி தான் இழுத்து பிடிக்க வேண்டும்.

இன்னும் ஒரு சிறு நம்பிக்கையுடன் காத்து நின்றான் தீபா அவன் முன்பு வந்து நிற்கும் வரை.

“சார். நீங்க தான் இப்போ நல்ல நிலைமைல இருக்கிங்கல்ல. ஏன் காயத்ரிய பொண்ணு கேட்டு போகலை. ஏன் அவள விட்டுட்டீங்க?”

இப்பொழுது அவன் இதயம் துடிக்கும் ஓசை அவனுக்கே கேட்டது. ஏதோ விரும்பத்தகாதது நடந்துவிட்டது என்று தோன்றியது.

“என்ன ஆச்சு?”

இங்க பாருங்க என்று மொபைலில் ஒரு விடியோவை காட்டினாள்.

அதில் காயத்ரிக்கு வேறு ஒருவன் மகிழ்ச்சியுடன் தாலி கட்டிக்கொண்டிருந்தான். காயத்ரியும் தலை குனிந்து அதை ஏற்று கொண்டிருந்தாள்.
Nirmala vandhachu
 
Saroja

Well-Known Member
இப்படி ஒரு பொண்ணு
ரொம்ப தேவைதான்
பணம் மட்டும் யோசிக்கிறா காதல்
என்ன காதலோ
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top