பவித்ரன்-2

Advertisement

KP JAY

Well-Known Member
இரவு பண்ணிரெண்டு மணி. பேய் மழைப் பெய்துகொண்டிருந்தது. அதில் தன்னுடைய காரை மிகுந்த சிரமங்களுக்கு இடையே ஓட்டிவந்து ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தான் பவித்ரன். பத்து மணிநேரமாக காரை ஓட்டி இருக்கிறான். உடம்பு ஓய்வுக்கு கெஞ்சியது. இரவில் ரோட்டில் அரைகுறை வெளிச்சத்தில் கவனம் சிதறாமல் ஓட்டியதில் கண்களும் சிவந்து என்னை மூட விடுங்கடா என்று கதறியது. காரை பார்க் செய்துவிட்டு அப்படி ஒரு அயர்வுடன் வீட்டுக்குள் நுழைந்தான்.

நுழைந்தததும் ஆச்சர்யம்.

கூடத்தில் அவன் அம்மா வள்ளியும், அப்பா ஆவுடையப்பனும், தாத்தா வேலப்பனும் அமர்ந்து இருந்தனர். வீட்டின் முதியவர்கள் இன்னும் தூங்காமல் ஏன் விழித்திருக்கிறார்கள் என்று பார்த்தான்.

“என்ன தாத்தா? தூங்காம ஏன் இப்படி முழிச்சிட்டு இருக்கீங்க?”

அப்பாவும் தாத்தாவும் அவனைப் பாவமாகப் பார்த்தனர். உள்ளே இருந்து பாட்டி சுப்பு வந்தார்.

“பேராண்டி. நீ இப்படி அல்லும் பகலும் ஓயாம உழைச்சுக்கொட்டுடா. இந்த வீட்டு ஆம்பளைங்க நோகாம போய் அழிச்சிட்டு வரட்டும். காசோட அருமை எல்லாம் இந்த ஆம்பளைங்களுக்கு தெரியாது. பேரன் சம்பாரிக்கிறத காப்பாத்தலைன்னாலும் பரவால்ல. ஒரு பொறுப்பு இல்லாம அழிச்சிட்டு வராங்க.” என்று பெரும் குரலில் கத்தினார்.

“என்னப்பா? என்ன செஞ்சு வஞ்சிருக்கீங்க?”

வாய் திறக்காமல் அமர்ந்து இருந்தார்கள்.

“அவங்க எப்படி வாய் திறப்பாங்க? அய்யா ராசா சிரமம் பக்கமா மில்லுக்கு போய் அங்க என்ன நடக்குதுன்னு பாருய்யா. இந்த ஆளுங்கள நீ காலைல வந்து பேசிக்கோ” என்று கெஞ்சி அவனை கிளம்ப கூறினார்.

மில்லில் பிரச்சனை என்றவுடன் அவனுக்கும் பதட்டம். மில் எப்பொழுதும் இரவு ஏழு மணிக்கு மூடப்பட்டுவிடும். மீண்டும் அடுத்த நாள் காலை ஏழு மணிக்குத்தான் திறக்கப்படும். ஆனால் இப்பொழுது மில்லில் என்ன? வந்த வேகத்தில் உடனே கிளம்பி சென்றான்.

இருபது நிமிடத்தில் மில்லுக்கு சென்று சேர்ந்தான். அரவை எந்திரங்கள் ஓடும் சத்தம் கேட்டது. உள்ளே ஒரு ஐம்பது பேருக்கும் மேல் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். கோடௌன் இருக்கும் இடத்தில் இரண்டு லாரிகளில் மூட்டைகள் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்தது.

காரை கோடௌன் வாசலில் கொண்டு நிறுத்தினான். அங்கு மூட்டைகள் ஏற்றுவதை நின்று மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்தாள் தீபா.

இவன் அவள் அருகில் சென்று “தீபா” என்று அவனுடைய சிம்ம குரலில் அழைத்தான். திடிரென்று கேட்ட குரலில் தூக்கிவாரிப்போட திரும்பி பார்த்தாள்.

“இங்க என்ன நடக்குது?” கோபமாக கேட்டான்.

“வாங்க சார். இங்க எதுவும் பேச வேண்டாம். நீங்க உங்க ரூம்ல உக்காருங்க. நான் இப்போ ரெண்டு நிமிஷத்துல வரேன்” என்று கூறினாள்.

அவனும் அங்கு நடப்பதை எல்லாம் பார்த்துக்கொண்டே சென்றான். அரிசி தான் ஏற்றிக்கொண்டியிருந்தனர். ஆனால் அதை ஏன் இவ்வளவு அவசரமாக இரவில் செய்யவேண்டும். ரூமில் சென்று அமர்ந்தான். பின்னாலேயே ஒரு கிண்ணத்தில் அரிசியுடன் உள்ளே நுழைந்தாள் தீபா.

“இது தான் சார் நாம புதுசா வாங்கியிருக்க ஆந்திரா அரிசி”

அவனும் வாங்கி பார்த்தான். இரண்டு அள்ளி வாயிலும் போட்டுக்கொண்டான்.

“ம்ம்ம். ரொம்ப நல்லா இருக்கே.” என்று கூறி மேலே சொல் என்பதுபோல் பார்த்தான்.

“சார் நாம கேட்டது ரெண்டு லாரி துவரம் பருப்பு, ரெண்டு லாரி அரிசி. உங்க அப்பாவும் தாத்தாவும் எப்படி ஆர்டர் குடுத்தாங்கன்னு தெரியல. வந்து இறங்கினது நாலு லாரி பருப்பு, எட்டு லாரி அரிசி” என்று கூறி நிறுத்தினாள்.

பவித்ரன் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றான். அவ்வளவு பெரிய கோடௌன் அவர்களிடம் இல்லை. கொட்டும் மழை வேறு. என்ன செய்து வைத்திருக்கிறார்கள்.

“என்ன பண்ணுணிங்க?”

ஆந்திரவுல இருந்து அவ்ளோ தூரம் கொண்டுவந்துட்டாங்க. நாம தான் அவ்ளோ ஆர்டர் குடுத்தோம்னும் சொல்லிட்டாங்க. ஒன்றும் செய்யமுடியல. வந்த லோடுக்கு காசு குடுத்துட்டோம் சார் என்றாள்.

“இப்போ எங்க வந்த லாரி எல்லாம் இறக்காம அப்படியே நிக்குதா?”

“சரக்கு லாரியை எப்படி நிறுத்தி வைப்பது. அவர்கள் அடுத்த சவாரி போக வேண்டும் என்று நின்றார்கள். உதவி வேணும்னு சாமிநாதனிடம் போய் நின்றோம். அவர் நம்ம கோடௌன் ஒட்டி இருக்குற ஒரு ஏக்கர் நிலத்துல இப்போ தான் கடலை போட்டிருந்தார். அது போனால் போகட்டும் என்று நமக்கு அந்த லாண்ட்ல லோட் பண்ணிக்க இடம் குடுத்துருக்கார்.

பருப்பு எல்லாத்தையும் கோடௌன்க்குள்ள வச்சாச்சு. அரிசி நாலு லோடு சாமி சார் நிலத்துல இறக்கி தார்ப்பாய் போட்டு மூடிவச்சிட்டோம். ரெண்டு லோடு நம்ம கம்பனிக்குள்ள இருக்க இடத்துலயே லோடு பண்ணி அதையும் மூடிவச்சிட்டோம்.

நாம டெலிவரி கொடுக்கவேண்டிய ரெண்டு லோடு மளிகை சாமானை முன்னாடியே அனுப்பறோம்னு சொல்லி அதையும் அனுப்பிச்சிட்டோம். அந்த இடத்துல இன்னும் ரெண்டு லாரி அரிசியை லோடு பண்ணிருக்கோம். இப்போ நம்ம இடத்துல வெளில இருக்க லோட எடுத்து தான் பாலிஷ் பண்ணி லாரில ஏத்திட்டு இருக்கோம்.” நடந்த அனைத்து குளறுபடிகளையும் கூறி முடித்தாள்.

“இந்த லாரில அரிசியை இப்போ எங்க அனுப்பிட்டு இருக்கீங்க?”

“நாம ஏற்கனவே பேசலாம்னு சில கஸ்டமர்களை மார்க் பண்ணி வச்சிருந்தோம்ல. அவங்ககிட்ட நான் பேசினேன். சாம்பிள் அரிசியும் உடனே கொடுத்து அனுப்பினேன். அவர்களும் உடனே ஒத்துக்கொண்டார்கள். இரண்டு லாரி அரிசி அவர்களுக்கு போகுது. அப்புறம் நம்ம பழைய கஸ்டமர்களிடமும் பேசினேன். அதில் நான்கு பேர் ஒத்துக்கொண்டார்கள். சாமி சார் இடத்தில இருக்க அரிசி எல்லாம் அவங்களுக்கு குடுத்துடலாம். அத மட்டும் முடிச்சிட்டா நாம சேஃப் சார். இப்போ வரைக்கும் எதுவும் நஷ்டம் இல்லை. நமக்கு இப்போ பிரச்சனை இந்த மழை தான். எப்படியாவது வெளியில் நிற்கும் அரிசியை அனுப்பிவிட்டால் அனைத்தும் லாபம் தான் ” என்றாள்.

ஒரு அவசரநேரத்தில் மிகவும் திறமையாக முடிவு எடுத்திருக்கிறாள். ஊரில் இருந்து கோபமாக கொதித்துப்போய் வந்தவளை இங்கு நடந்த பிரச்சனைகள் முழுவதுமாக உள் இழுத்துக்கொண்டது. இப்பொழுது சென்று அவளிடம் உன் பெயர் என்னவென்று கேட்டால் கூட அவள் பெயர் அவளுக்கே ஞாபகம் வர சில நொடிகள் தேவைப்படலாம். அப்படி அனைத்தும் மறந்து எதுவும் நஷ்டம் ஆகிவிடக் கூடாது என்று ஒரு பதைபதைப்புடன் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.

“நைட் ஷிப்ட் இன்னும் இரண்டு நாளைக்கு தேவைப்படும். சாமி சார் போய் நம்ம ஊரு ஆளுங்கள வர சொல்லிட்டார். நம்மகிட்ட வேலை பாக்குற பொண்ணுங்கள பகல்ல பாதி பேரையும் நைட்டுல பாதி பேரையும் வரசொல்லிருக்கேன். நேற்றிலிருந்து முழு நேரமும் வேலை பார்த்துட்டு இருக்கோம்” என்று மேலும் தகவல் கூறினாள்.

ஆம். ஊர் மக்கள் உடன் வந்து உதவி செய்தனர். அவர்களுக்கு தெரியுமே விளையும் பொருட்களின் மதிப்பு. அனைவரும் ஓன்றுபட்டே உழைத்துக்கொண்டிருந்தனர். ஒரு குண்டுமணி அரிசி கூட வீணாகக்கூடாது என்று அல்லும் பகலும் அயராது பாடுபடுகின்றனர். ஒரு கார்பொரேட் கம்பெனியில் லட்சக்கணக்கில் செலவுசெய்து கொண்டுவரும் ஒரு குண இயல்பை இந்த எளிய மனிதர்கள் இயற்கையாகவே கொண்டிருந்தனர். டீம் வொர்க் மற்றும் ஓனர்ஷிப் மைண்டசெட்.

“நீ எப்போ வீட்டுக்கு போற எப்போ தூங்குற?”

எப்படி சமாளிக்கிறாள் என்று தெரிந்துகொள்ள கேட்டான். வீட்டுக்கு காலைல தான் சார் போகணும். போய் குளிச்சி கிளம்பி வந்துடுவேன். தூக்கம் எல்லாம் இங்க தான். அப்பப்போ பிரேக் எடுத்து தூங்கிக்கறேன். குகனும் பரணியும் வீட்டுக்கும் போகல. ரெண்டு நாளா இங்க தான் இருக்காங்க.”.

“ சரி போய் வேலைய பாருங்க.” என்றான்.

“சார் நீங்க ரொம்ப டயர்டா இருக்கீங்க. வீட்டுக்கு போயிட்டு காலைல வாங்க” என்றாள்.

“இல்ல. நானும் இங்கவே தூங்கிக்கறேன். நீங்க போங்க” என்று கூறி அனுப்பிவிட்டான். அவனுடைய கம்பெனி. பொறுப்பாக இவ்வளவு பேர் வேலை பார்க்க அவன் எப்படி அவனுடைய தூக்கம் முக்கியம் என்று பார்ப்பான். அவனும் நின்றான். அடுத்த இரண்டு நாளும் நின்றான். ஒரு பொட்டு தூக்கம் இன்றி அனைத்தும் மேற்பார்வை பார்த்து நின்றான். அவனுடன்?

குகன் பரணி இருவரும் தீபாவுடன் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். குகன் வகுப்பு தோழன். பரணி குகனின் ரூம்மெட். பரணீதரன் என்கிற பரணி. பவித்ரனின் தம்பி.

பவித்ரன் என்கிற ஒரு பெரிய விவசாயி. ஒரு சிறு கம்பெனியின் முதலாளி. தம்பி உடையான். அவனின் நண்பர்களையும் உடையான். ஊர் மக்களையும் உடையான். தோள் கொடுக்கும் தோழர்களையும் உடையான்.

ஆனால் அவன் விழி பார்த்து நிற்பது?

அந்த ஒருத்திக்காக. விவசாயத்தில் இருந்து இன்னொரு பிசினஸ்ஸை தொடங்கியதும் அந்த ஒருத்திக்காக. அவளுக்காக இன்னும் வளரவேண்டினுள்ளது. எல்லாம் கிடைத்தவனுக்கு வாழ்க்கையில் வேறு ஒரு குறிக்கோள். அது சரியான குறிக்கோள் தானா என்று சில நாட்களாக ஒரு சலனம்.

முடிந்தது. வெளியில் நின்ற அனைத்து அரிசியும் அனுப்பப்பட்டுவிட்டது. நஷ்டமாக இருந்த அனைத்தும் மூன்று மடங்கு லாபம் கொண்டு வந்து சேர்த்தது. ஆனால் எவ்வளவு பணம் வந்தாலும் இவனுடைய குறிக்கோளுக்கு அது பத்தாதே.

அப்பொழுது கால் வந்தது.

காயத்ரி!!!

கடந்த ஐந்து வருடங்களாக அவன் ஜபம் செய்யும் மந்திரம். நினைத்தாலே அவனுக்குள் பூ பூக்க செய்யும் உதட்டில் புன்னகையை வரவழைக்கும் அந்த காயத்ரி மந்திரம். மூன்று தினங்களாக அழைக்காமல் இப்பொழுது தான் அழைத்தது.

அவள் தீபாவின் வகுப்பு தோழி. அந்த ஊரிலேயே மிகப்பெரும் பணக்காரரின் பெண். வீட்டில் ஸ்ட்ரிக்ட் என்று கூறி அவனை கால் பண்ண கூடாது என்று கூறியிருக்கிறாள். அவள் அழைத்தால் மட்டுமே இவனால் பேச முடியும். ஆனால் எப்பொழுதாவது தான் அழைப்பாள். அவளை பார்க்க வேண்டும் அவளிடம் பேச வேண்டும் என்று இவனின் ஒவ்வொரு அணுவும் ஒவ்வொரு நொடியும் துடித்துக்கொண்டிருக்க மிகவும் நிதானமாக மூன்று தினம் கழித்து கால் செய்கிறாள்.

“பவி. தீபாவுக்கு கால் பண்ணினேன். கம்பெனில ஏதோ பிரச்சனை அப்புறம் பேசுறேன்னு வச்சிட்டா. எதுவும் நஷ்டம் ஆகலையே?”

“நஷ்டம் தான் ஆகிடுச்சு. இனிமேல் நான் எழுந்திரிக்க முடியாத அளவுக்கு நஷ்டம் ஆகிடுச்சு. நான் அப்புறம் பேசுறேன்” என்று கூறி கடுப்பில் கால் கட் செய்தான். அங்கு முழு லோடுடன் நின்ற லாரியை ஒற்றை கையால் தூக்கி அடிக்கலாம் போன்ற கோபத்துடன் கணன்று நின்றான்.
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Geetha sen

Well-Known Member
Very nice update
உனக்காக இவ்வளவு உழைக்கும் தீபா உன் கண்ணுக்கு தெரியலையா பவி.
காயத்ரி சரியில்லையே.
அருமையாக இருக்கிறது உங்க எழுத்து.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top