Bhuvana
Well-Known Member
பப்பாளி பழ ஜாம் :
தேவையான பொருட்கள்:
பப்பாளி - 1/4 கி. {நன்கு பழுத்த பழம் }
சக்கரை - 1/4 கி.
சிட்ரிக் ஆசிட் - 1 ஸ்பூன்
நன்கு பழுத்த பப்பாளியை கழுவி தோல் சீவி, விதைகளை நீக்கி, நார் போன்ற பகுதிகளையும் நீக்கி விடவும். பின்பு அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு அகண்ட பாத்திரத்தில் போட்டு நன்றாக மசித்து கொள்ளவும். இதனுடன் சக்கரையும், சிட்ரிக் அசிடையும் சேர்த்து அடுப்பில் வைத்து காய்ச்ச வேண்டும். தொடர்ந்து கிளறி விட வேண்டும் இல்லையென்றால் அடி பிடித்து விடும்.
இவ்வாறு கிளறும் கொண்டே ஒரு ஸ்பூன் விட்டு கலவையை எடுத்தால் அது அப்படியே தட்டு தட்டாக விழ வேண்டும். அந்த பதத்துக்கு வந்தால் ஜாம் ரெடி என்று அர்த்தம். அடுப்பை அணைத்து விட்டு ஆறிய பின்பு நல்ல சுத்தமான காற்று புகாத டப்பா அல்லது பாட்டிலில் எடுத்து பிரிட்ஜில் வைத்து உபயோகபடுத்தலாம்.