நேசம் மறவா நெஞ்சம்-27Nesam Marava Nenjam

Advertisement

laksh14

Well-Known Member
அனைவரும் தோப்பிற்கு வரவும்..... சுதாவுக்கு ஒன்னுமே புரியவில்லை..... சந்தோசத்தில் அழுகையே வந்தது.... வீட்டிற்குள் அவ்வளவு இடம் இல்லாததால் அனைவரும் பாயை போட்டு வெளியே அமர்ந்திருந்தனர்....



கயல்... “அக்கா சூப்பரா இருக்குக்கா..... தோப்பு....”

இவர்கள் வந்ததை போனில் சுதா சொல்லவும் வாசு 5 நிமிடத்தில் வீட்டில் இருந்தான்... அவனுக்கு சுதாவின் முகத்தை பார்க்க முடியாமல் இருந்திருந்தான்.... தன்னால் அவள் மிகுந்த கஷ்டப்படுகிறாள் ..... தன்னிடம் முகம் குடுத்துகூட பேசவில்லை.... அவுக அம்மா வீட்டுக்குகூட போகாம இங்க இருக்கான்னா அவுக வரக்கூடாதுன்னு சொல்லிட்டாங்களோ.... அதனால் தான் அவளை கோவிலுக்கு கூட்டிவந்திருந்தான்.... உழைப்பின் அருமை இப்போதுதான் அவனுக்கு தெரிந்திருந்தது... தன்னுடைய ஊதாரித்தனம் புரியவும்தான் கண்ணனின் கோபமும் புரிந்தது... தன்னுடைய முயற்சிய யாராவது தட்டிப் பறிச்சா நமக்கு எம்புட்டு கோபம் வரும் அதுமாதிரிதானே கண்ணனுக்கும் கோபம் வந்திருக்கும்.... அதுவும் என்னைய போல அவுக அப்பா.. தம்பி உதவியில்லாம தன்னோட சொந்த முயற்சியில பண்ணா கோபம் வரத்தானே செய்யும்... என்று கண்ணனின் நியாயத்தை புரிந்து கொண்டான்....



அனைவரையும் வரவேற்றவன்.... கண்ணனையும் தனியாக சென்று வரவேற்று... மனதார மன்னிப்பும் கேட்டான்...... சுதா அனைவருக்கும் காப்பி போட்டுக் கொடுக்க அனைவரும் தோப்பை சந்தோசமாக சுற்றிப் பார்த்தனர்..... கண்ணனுக்கு போன் வந்து கொண்டே இருக்க....... கண்ணன் போன் பேச செல்லவும் மற்றவர்கள் சுற்றிப் பார்க்கச் சென்றனர்..... போன் பேசி முடிக்கவும் வாசு வந்து மீண்டும் மன்னிப்பு கேட்க....



“விடுங்க.......நீங்க என்னோட வயசு பெரியவுக..... அதையே பேசவேண்டாம்.... நான் இங்க வந்ததுக்கு ஒரு முக்கியமான காரணம்... உங்க தம்பிய....உடனே போன் பண்ணி கொஞ்சம் வரச்சொல்லுங்க.... நான் தனியா.... பேச வேண்டியது இருக்கு.....”



“இல்லையே ........ இப்பத்தான் வார வழியில அம்மாவ பாத்தேன்... அவன் எங்கயோ ஊருக்கு போயிட்டானாம் வர ரெண்டு மூனுநாளு ஆகும்னு சொன்னாங்க....என்னாச்சு எதுக்கு அவன்கிட்ட தனியா பேசனும்......”.



கண்ணன் கோவிலில் நடந்ததை சொல்ல..... வாசுவுக்கு.. ச்சை...நம்ம தம்பின்னு சொல்றதுக்கே அசிங்கமாயிருக்கே......நம்ம பொண்டாட்டியைதான் தப்பா பேசுனான் நினைச்சா...... இவன் அவுக குடும்பத்துக்கிட்டயே அவனோட வேலையை காட்டப் பாக்குறான்னா.....



“நான் அவன் வந்தவுடனே உங்களுக்கு போன் பண்ணி சொல்றேன்......நானும் அவனை கொஞ்சம் கவனிக்கிறேன்..... நம்ம தோப்பு இளநி ஒன்னு வெட்டுறேன் குடிச்சுப் பாருங்க உங்க தோப்பு இளநி மாதிரி இருக்கான்னு......”



“இல்லண்ணே.... வேணாம்... அவுகல்லாம் வரட்டும்.... உங்ககிட்ட ஒன்னு கேக்கனும்.... என்னோட பிரண்ட் ஒருத்தன்....படம் எடுக்குறான்.... என்னோட தோப்புலத்தான் எடுத்துக்குறதா சொன்னான்.... ஆனா என்னோட தோப்பைவிட உங்களோட நல்ல பெரிசா இருக்கு.... இங்க வேணா எடுக்கச் சொல்லவா...... எத்தனைநாள் எடுக்குறாங்களோ... அத்தன நாளுன்னு கணக்குப் போட்டு ஒரு அமவுண்ட் குடுத்துருவாங்க......”



வாசுவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.....இப்ப இருக்குற நிலைமைக்கு அது ரொம்ப உதவியா இருக்கும்..... வாசுவும் உடனே ஒத்துக் கொள்ளவும் போனில் விவரத்தை சொல்லவும்.......



“அவனும்... அந்த படத்தோட தயாரிப்பாளரும் இங்க பக்கத்துலதான் இருக்காங்களாம்.... வரவான்னு கேக்குறாங்க.....”



“ம்ம்... வரச்சொல்லுங்க...” வாசுவுக்கு கண்ணனின் நல்ல மனது புரிந்தது... இங்க வந்தவுடனே நம்ம நிலைமைய பாத்துட்டு அவருக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பை நமக்கு குடுக்குறாரே..... நமக்கு வாழ்க்கைன்னா என்னன்னு இப்பத்தான் புரியுதுன்னு நினைக்கிறேன்.... இவ்வளவுநாளும் எம்பின்னாடியே திரிஞ்ச கூட்டாளி பயலுக எல்லாம் நாம கொஞ்சம் கஷ்டப்படுறோம்னு தெரிஞ்சவுடனே... ஒரு பயகூட போன் பண்ணா எடுக்க மாட்டேங்குறாங்க.....



அவர்களும் வர ஒரு தொகை பேசப்பட்டு.... அடுத்த நாளில் இருந்து சூட்டிங் ஆரம்பம் என முடிவுசெய்யப்பட்டது.....



தயாரிப்பாளர் வந்ததிலிருந்து செயற்கை பூச்சு பூசிய நடிகைகளை பார்த்திருந்தவருக்கு இங்கிருந்த அந்த சகோதரிகளின் இயற்கை அழகில் வியந்து போயிருந்தார்..... கயலிடமும்... மல்லிகாவிடமும் மீண்டும் மீண்டும் பேச முயற்சிக்க....கண்ணனுக்கு என்னடா.... இது எங்க போனாலும் பெரிய தொல்லையா இருக்கு..... ஒரு பொம்பள புள்ளைக வெளிய சுதந்திரமா..வெளியே வரதுக்கு கூட சுதந்திரம் இல்லாம போச்சு.....

கயல் வந்து மெதுவாக கண்ணன் கையை பிடித்தவள்....” ஏங்க... வீட்டுக்கு போவமா...??”



“கிளம்புங்க....”.மல்லிகாவை முதலில் காரில் ஏறச் சொன்னவன்... வாசுவை கூப்பிட்டு சூட்டிங் முடியுற வரைக்கும் சுதாவை அவுக அம்மாவீட்டுக்கு போக சொல்லி சொன்னான்...... காந்திமதியும் தன் மகனிடம் சொல்வதாக சொல்லியிருந்தார்.....



அனைவரும் வீட்டிற்கு வந்தவுடன் கண்ணன் மாணிக்கத்திடம்.... தனியாக கூப்பிட்டு வினோத்தின் செயலை கோடிட்டு காட்டியிருந்தான்....

“நீங்க உள்ளுருல இருக்குறதால அவுகள அடிக்கடி பாக்கனும் மாமா... இந்த பிரச்சனைய விடுங்க.... நான் பாத்துக்குறேன்.... அவன என்ன செய்யனுமோ பாத்துக்கலாம்... மல்லிகாவ கொஞ்சம் கவனமா பாத்துக்கங்க.... உள்ளுர் ஸ்கூல படிச்சாலும் போக்குவரத்துல உங்க கண்ண வச்சுக்குங்க மாமா....”



அருண்கிட்டயும் கொஞ்சம் எடுத்து சொன்னான்....” நீதான் இனி உங்க அக்காவையெல்லாம் பாத்துக்கனும்.... “மாணிக்கத்திற்கு கண்ணனை நினைத்து ரொம்ப பெருமையாக இருந்தது.... தன் தாயிடம்....” எனக்கு ஒரு மூத்த மகனா கயலு மாப்புள்ளை இருப்பாருத்தா...... கடவுள் கயலுக்கு தங்கம் மாதிரி ஒரு மாப்பிள்ளை குடுத்திருக்காரு....”



“அது உனக்கு இப்பத்தான் புரியுதா... எனக்கு பாத்தவுடனே புரிஞ்சிருப்பா....”



“இல்லத்தா...... காலையில இந்த அறுவடையில வந்த பணத்துல கொஞ்சம் நகைவாங்கி வச்சிருந்தோம்லத்தா அத குடுக்குறேன்... எம்பொண்டாட்டிக்கு நான் சம்பாரிச்சு வாங்கி குடுப்பேன் மாமா... இத உங்க மத்தபுள்ளைகளுக்கு வச்சுக்குங்க சொல்றாரு.... என்னமும் வேணும்னாலும் எந்த நேரமும் என்னைய கூப்புடுங்க.... சங்கடப்படாதிங்கன்னு சொன்னாருத்தா.... சுதாவையும் மன்னிக்க சொல்றாரு.... பெரிய மனசுதான் இந்த புள்ளைக்கு......”



கண்ணனும் கயலும் காரில் ஊருக்கு கிளம்பிவர...... “ஏங்க....எனக்கு ரொம்ப சந்தோசமா ... இருக்கு....உங்கள எங்க வீட்ல எல்லாருக்கும் ரொம்ப புடிச்சிருக்கு... எல்லாரும் உங்கள பத்தியே பெருமையா பேசுனாங்க.....அப்பத்தா சொன்னுச்சு போகவும் உங்களுக்கு சுத்தி போடனும்னு.....”



“ஆமாடி ஆரம்பிச்சுட்டுடியா உங்க அப்பத்தா புராணத்த.... அவுகளும் நம்ம குடும்பம்தான்டி... நாங்க அக்கா தங்கச்சியோட பொறக்காதவங்க....எங்க அம்மா சின்னபுள்ளையில இருந்தே சொல்லிக்கிட்டே இருப்பாங்க....கட்டுன பொண்டாட்டிய தவிர அம்புட்டு பேரும் அக்கா தங்கச்சின்னு.... அது எப்பவும் நினைப்புல இருக்கும்டி... ... அப்புறம் ஒன்னு ஞாபகத்துல வச்சுக்க..... எனக்கு ஒரு பொம்பள புள்ளையாச்சும் பெத்துக்குடுத்துரு....சொல்லிட்டேன்.....”



அதுவரை அவன் முகம் பார்த்து பேசிக் கொண்டிருந்தவள்.... கண்ணனின் இந்த பேச்சை கேட்கவும் காரின் கதவுபுறமாக திரும்பி உட்காரவும் கண்ணன் ஒரு ஓரமாக காரை நிப்பாட்டினான்.....”என்ன அங்கிட்டு திரும்பிக்கிட்ட...”.என்றவன் அவள் முகத்தை தன்புறமாக திருப்பவும் கயலின் முகம் வெட்கத்தால் சிவந்து போயிருந்தது.....

“என்னடி ஒன்னும் சொல்லாம இருக்க...... சொல்லு....”என்றபடி அவள் கையை பிடித்து அவள் முகத்தை தன்னை பார்க்க செய்ய....



“இல்ல ...... அத்தையும் ஊருக்கு வரும் போது சொன்னாங்க.... இந்த சாமிக்கிட்ட நல்லா வேண்டிக்கிட்டு வரச்சொன்னாங்க.... நானும் நல்லா வேண்டிக்கிட்டேன்.....நமக்கு பொம்பளபுள்ள கண்டிப்பா பொறக்கும்ங்க.....”

“ஆமாமா..சாமிகிட்ட வேண்டிக்கிட்டயில இனி பொறந்துரும்...என்று கேலி செய்தவன்..... ஆனா அதுக்கு இனிமே நீ என்னைய விட்டுட்டு தனியா உங்க ஊருக்கு வரணும்னு நினைக்காத..... புரியுதா......”

“ம்ம்ம்.....”

கண்ணனும்... கயலும்... வாழ்க்கையில் இணைவார்களா......????



இனி.....................???
தொடரும்.................
lovelyyyyy sema kayal kannan sema pairrr
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top