நேசம் மறவா நெஞ்சம் -24Nesam Marava Nenjam

Advertisement

muthu pandi

Well-Known Member
நாட்கள் அதன் போக்கில் செல்ல.... அன்று ஏழு மணியிருக்கும் கயல் டியூசன் முடித்து டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போது யாரோ கதவை திறக்கும் சத்தம் கேட்டு திரும்பியவள் கண்ணன் கால் கையில் கட்டுப்போட்டு நொன்டியபடி வருவதை கண்டவள்.... அவனை நோக்கி ஓடி....

“என்னங்க..... என்னாச்சு..... கால்ல இவ்வளவு பெரிய கட்டுப் போட்டு இருக்கிங்க.... கையிலயும் கட்டு போட்டுருக்கிங்க.....”.அவள் வாய்தான் பேசியது கைகாலெல்லாம் வெடவெடக்க கண்ணில் இருந்து கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது.... மெதுவாக அவன் கட்டை வருடியவள்..... அவனை நிமிர்ந்து பார்க்க.......



“ஏய் ஏண்டா அழுகுறா.... எனக்கு ஒன்னுமில்ல.... நான் வண்டியில வரும்போது நாய் ஒன்னு குறுக்க வந்திருச்சு அதுமேல மோதக்கூடாதுன்னு வண்டிய திருப்புனேன்.... கொஞ்சம் சறுக்கிருச்சு..... வேற ஒன்னுமில்ல.... நீ மொதல்ல அழுகுறத நிப்பாட்டு....” என்று அவள் கண்ணைத் துடைக்க... அவள் ஓடிச் சென்று அவனுக்கு உட்கார சேர் எடுத்துப் போட்டவள்.....

“ இருங்க இந்தா வாரேன் ……”என்றபடி வெளியே ஓடியவள் வரும்போது உப்பு மிளகாய் எடுத்து வந்து அவனுக்கு சுற்றிப் போட்டவள்.......



“ஏய் என்ன பண்ணுற.... இப்ப ஏன் வெளிய ஓடுன....”



“அது இங்கன சிமெண்ட் தரையா இருக்குல... அதான் வெளிய மண்ணுல போய் நின்னு என்னோட காலடி மண்ணெடுக்க போனேன்..... நான் ரெண்டுமூனு நாளா உங்களையே பாத்து கண்ணு வச்சுட்டேன் அதாங்க நீங்க இப்புடி கீழ விழுந்திட்டீங்க......”



கண்ணனோ கிழுஞ்சிச்சு..... நம்ம பொண்டாட்டி எப்படா நம்மள நிமிந்து பாப்பான்னு காத்திருந்தேன்..... இப்பதான் ரெண்டு மூனு நாள் பாத்தா போல அது கடவுளுக்கே பொருக்கலயா......” ஏய் நீ பாத்ததால ஒன்னும் நான் கீழ விழுகல.......”



“இல்லங்க.... எங்க அப்பத்தா சொல்லும் எதுல வேணும்னாலும் தப்புச்சிரலாம்.... ஆனா கண்ணடியில இருந்து தப்பிக்க முடியாதுன்னு...... அதாங்க உங்களுக்கு இப்புடி நடந்திருச்சு..(.இந்த அப்பத்தாவோட நீ சேராம இருக்குறதுதான் நல்லது சொல்லிட்டேன்) ஆமா டாக்டர் என்ன சொன்னாங்க.....எக்ஸ்ரே எல்லாம் எடுத்து பாத்தீங்களா.....”



“ம்ம்ம் ...பாத்துட்டேன்.... ஒன்னும் பயமில்ல.... கைல ஒன்னும் பிரச்சனை இல்லை..... காலுக்குதான் ரொம்ப வேலை குடுக்காம ஒரு வாரம் ரெஸ்ட் எடுக்க சொன்னாரு.... அதான் ராமனுக்கும் லீவுதானே.... அவன இருக்கச் சொல்லிட்டு வந்திட்டேன்......அம்மாவும் முத்துவும் எங்க.....”



“அத்த யாரையோ பாக்க போயிட்டாங்க ....முத்து பிரண்ட பாக்க போயிருக்கான்..... நீங்க கீழ இருக்குற ரூமுலயே இருக்கிங்களா.....”



“வேணாம் நான் மெதுவா மாடிக்கே போயிருறேன்.....”

கயல் அவன் தோளை பிடித்து மாடிக்கு கூட்டிச் சென்றாள்.....அன்றிலிருந்து கயல் கண்ணனை விட்டு ஒரு நிமிடமும் விலகவில்லை...... இரவு படுக்கும் போது

“ ஏங்க நான் கீழயே படுத்துக்கவா.......”



“ஏன்....... கட்டில் என்னாச்சு....”



“இல்ல நான் எப்புடி படுத்தாலும் ராத்திரில தலகாணி கீழ விழுந்திருது....நான் உங்க மேல கால போட்டுறுரேன்.... இப்ப கால்ல வேற அடிப்பட்டிருக்கு...நான் கால போட்டு ரொம்ப அடிப்பட்டிருச்சுனா...... அதாங்க....”



“அதால்லாம் பரவால்ல நீ படு...... “மனதிற்குள் நான்தான்டி அந்த தலகாணிய கீழ தூக்கிப் போட்டேன்..... எப்பொழுதும் படுத்தால் இடையில் எழாதவள்.......கண்ணனுக்கு அடிபட்டதிலிருந்து அவன் லேசாக அசைந்தால் கூட படக்கென்று எழுந்து என்னங்க என்ன வேணும்....என்று கேட்க.... கண்ணனுக்கு ஆச்சரியமாக இருக்கும் எப்புடி இவ லேசாக அசைந்தால் கூட முழிச்சிடுறா..... கண்ணனை கீழே விடாமல் எல்லா பொருளையும் மேலேயே கொண்டு வந்து கொடுத்தாள்......



கண்ணனுக்கு கையில் அடிப்பட்டிருப்பதால் கயலே அவனுக்கு சாப்பாடு ஊட்டுவதிலிருந்து தலை சீவுவது வரை அவளே செய்தாள்......அன்று அவன் கை கட்டை அவிழ்த்ததால் மருந்தை அவனுக்கு மெதுவாக தேய்த்து கொண்டிருந்தாள் ....கண்ணன் அவளை நேசத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவன்.....



“ராத்திரியில ........எப்புடி நான் முழிச்சவுடன நீயும் முழிச்சிருர.........”



“தெரியல.......... ஆனா இதே மாதிரிதான் எங்க தாமரை அக்காவுக்கு குழந்தை பொறந்திருந்துச்சுல.... அப்ப அது குழந்தை லேசாதான் அசையும் உடனே டக்குன்னு எந்திருச்சுருவா...... எப்புடிக்கான்னு கேட்டா... அது உள்மனசு சொல்லும்னு சொல்லுவா.... அதுமாதிரிதாங்க எம்மனசு சொல்லும் நீங்க எந்திரிக்க போறிங்கன்னு..... உடனே எனக்கும் முழிப்பு வந்திடும்.... ஆனா எனக்கு ஒரு டவுட்டுங்க இம்புட்டு நாளும் ஏங்க எனக்கு முழிப்பு வரல........”



கண்ணனோ ........ கடவுள் ஒவ்வொரு குழந்தையையும் தனித்தனியா கவனிக்கத்தான் தாய்மைங்குற ஒரு வரத்தை பெண்களுக்கு கொடுத்திருக்கானோ......பெரும்பாலான ஆண்கள் மனைவி இறந்தவுடன தன்னோட குடும்பத்துக்காக மறு கல்யாணம் பண்ணிக்கிறாங்க ஆனா நூத்துக்கு தொன்னூறு சதவித பெண்கள் கணவர் எந்த நிலையில விட்டாலும் கஷ்டப்பட்டு முன்னேறி தன்பிள்ளைகளை முன்னுக்கு கொண்டு வந்திருராங்க..... பாக்க ஆண்கள் உடம்பால் வலிமை உடையவர்கள் என்றால்..... பெண்கள் மனதால் வலிமை உடையவர்கள்தான்.... ஆதே தாய்மை உணர்வு எம்மேல இவளுக்கு வருதுன்னா நான் அவ மனசுக்குள்ள எடம்பிடிச்சிட்டேன்தானே அர்த்தம் என்று நினைத்தவனுக்கு மனதிற்குள் குப்பென சந்தோசம் பெருகியது.....



“என்னங்க....” என்றபடி அவளை நிமிர்ந்து பார்க்க..... அவளை மெதுவாக தன் அருகில் இழுத்தவன்.... கயல் உச்சியில் முத்தமிட்டவன்.... அவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.......



“ஏங்க கையெல்லாம் மருந்தாயிருக்கு கைய போய் கழுவிட்டு வரவா......”



“இல்லடா..... எனக்கு தூக்கம் வருது கொஞ்சநேரம் அப்புடியே படு ....நான் தூங்குனவுடன நீ போகலாம் ..... சரியா....” சின்ன குழந்தைக்கு சொல்வதுபோல் சொன்னதை கேட்டவுடன்..... கயலும் அவன் நெஞ்சில் கண்ணயர்ந்தாள்........கண்ணனுக்கு மனம் நிறைந்திருந்தது..... இவளவிட வேற பொண்ணு வந்திருந்தா.... நம்ம வாழ்க்கையில நாம மகிழ்ச்சியா இருந்திருப்போமாங்கிறது சந்தேகம்தான்.....என்று நினைத்தவன் சந்தோசமாக கயலை இறுக்கி அணைத்தபடி தூங்கினான்.......



அங்கு வாசு வீட்டில் வாசுவுக்கு தன் தம்பி மேல் சந்தேகமாக இருந்தது.... இவ ஏன் வீட்லயே இருக்கான் ... நம்ம பொண்டாட்டிய பாக்குறது சரியில்லயே..... பாம்பின் கால் பாம்பு அறியும் என்பதுபோலதன் தம்பியின் பார்வை சரியில்லை என்பதை கண்டவன்...

“..சுதா இனிமேல் நீ நைட்டி போடுறதா இருந்தா நம்ம ரூமுக்குள்ள மட்டும் போடு ......வெளிய சேலைய கட்டிப் பழகு.....”.



“ஏன் இம்புட்டு நாளும் பேசாம தானே இருந்தீங்க .... இப்ப என்ன புதுசா.....”



“என்னமாச்சும் ஒரு காரணம் இருக்கும் எல்லாத்தையும் உங்கிட்ட சொல்லமுடியாது.....”

“என்ன..... புதுசா.... என்னமோ மாதிரி பேசுறீங்க.... என்னாலயெல்லாம் போட முடியாது....”



“நான் சொல்றத கேட்டு இங்க இருக்குறதா இருந்தா..... இரு அதுக்கும் மேல உன்னோட விருப்பம்.....” என்றபடி குப்புற படுக்க.....

திருமணத்திற்கு பிறகு முதல் முறையாக வாசு சுதாவின் துணையில்லாமல் படுக்கிறான்..... சுதாவுக்கு ஒன்றுமே புரியவில்லை...... இப்ப என்ன பண்ணுறது...... மறுநாளில் இருந்து சுதா......... சேலையில் இருந்தாள்.......



இங்கு கண்ணனுக்கு கால் சற்று குணமாகியிருக்க...... அவன் லேசாக காலை ஊன்றி நடக்க ஆரம்பித்திருந்தான்..... இன்று கடைக்கு போவதாக சொல்ல..... கயல் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு ...காலையில் இருந்து மாடிக்கு வராமல் கீழேயே சுற்றிக் கொண்டிருந்தாள்......



“கயலு.......கயலு....”

“ஆத்தா உன்னைய கண்ணன் கூப்புடுமாதிரி இருக்குத்தா.....”

“இல்லத்தே.... அடுப்புல கொஞ்சம் வேலையிருக்கு.... முத்து.... மாடியில உங்க அண்ணன் கூப்புடுறாங்களாம் என்னன்னு கேட்டுட்டுவா......”



மாடி ஏறி திரும்பி வந்தவன்.... “அண்ணி உங்களதான் கூப்புடுறாங்க..... ஏதோ மாத்திரை போடனும்மாம்.....நீங்களே போங்க அண்ணி.....”



“ம்ம்ம் .....” என்றபடி மாடி ஏறியவள் மாத்திரையை தேட அது வைத்த இடத்தில் காணவில்லை.... இங்கதானே வச்சோம்.... எங்க போச்சு.... அவளை பின்னால் இருந்து அணைத்தவன்….

“ மாத்திரைய தேடுறியா..... அது இந்தா இருக்கு....” என்றபடி தன் கையை காட்ட.....



“அப்புறம் எதுக்கு என்னைய மேல வரச்சொன்னிங்க.............” என்றபடி முகத்தை சுழிக்க....



“இங்க பாரு உங்கிட்ட முதல்லயே சொல்லியிருக்கேன்.... இப்புடி முகத்தை உம்முன்னு வச்சிருக்க கூடாதுன்னு ...... நான் கடைக்கு போயி பத்து நாளாச்சுடி..... இத்தன நாளு ராமன் இருந்தான்..... இன்னைக்கு அவனுக்கு காலேஜ்..... அதான்டி நான் போறேன்.... இப்ப எனக்கு கால்ல எந்த பிரச்சனையும் இல்லடி...” என்றபடி கயலை தூக்கியவன் ரூமுக்குள்ளேயே நடக்க ஆரம்பிக்க.....

“ ஸ்ஸ்ஸ் ……விடுங்க கைலயும் கால்லயும் அடிபட்டிருக்கு ரொம்ப வெயிட் தூக்காதிங்க.....”



“நான் எங்கடி வெயிட் தூக்கியிருக்கேன்.... நீ அப்புடியே மயில் இறகு மாதிரி தான் இருக்க.... கொஞ்சம் சிரி....” என்றவன் அவளை கட்டிலில் விட்டு அவள் மேம் படர்ந்து அவள் முகம் எங்கும் முத்தமிட்டு முத்த ஊர்வலம் நடத்தியவன்.... அவள் இதழில் வந்து நிற்க இருவரும் தங்களை மறந்தனர்.....அவள் இதழிலேயே ஆழப்புதைந்தவன்.... மெதுவாக அவள் கழுத்திற்கு வரவும் கயல் ஒரு மாதிரி பதற்றம் அடைந்தாள்.... அவள் இதயம் படபடவென்று அடித்தது...... அவள் இதயதுடிப்பில் பதற்றத்தை உணர்ந்தவன் மெதுவாக அவளை விட்டு விலகி அவள் முகத்தை பார்க்க கயல் கண்ணை மூடியிருந்தாலும் அவள் முகத்தில் பயம் தெரிந்தது...... முழுதாக தன் உணர்விற்கு வந்தவன்..... மெதுவாக அவளை விட்டு விலகி.... அவள் கன்னத்தை தட்டியவன்....



“என்னடா.... என்னாச்சு....... ஏன் இப்புடி உன்னோட இதயம் படபடங்குது.... என்னைய பாத்தா உனக்கு பயமாயிருக்கா........... சொல்லுடா........”



இருபக்கமும் தலையை ஆட்டியவள்.....” பயமில்லயே.... “என்று சொன்னாலும் அவள் முகத்தில் அப்பட்டமாக பய உணர்வு தெரிந்தது......

“ சரி வா... எனக்கு கடைக்கு நேரமாச்சு வந்து சாப்பாடு வை.....”

அவள் முகத்தில் குற்றவுணர்வு தெரியவும்....”.லூசு...நான் உன்னோட புருசன்... அத எப்பவுமே உன்னோட மனசுல வச்சிக்க..... நான் உன் மனச புரிஞ்சுதான் நடப்பேன்.... வா” என்றபடி அவள் தோளில் கை போட்டு கூட்டிச் சென்றான்......


மறு வாரத்தில் கயலும் காலேஜ்க்கு செல்ல கண்ணன் கண்டிப்பாக ஸ்கூட்டியில்தான் செல்ல வேண்டும் என்று சொன்னவன்..... ஒரு வாரம் அவள் பின்னே தன் வண்டியில் வந்து அவள் பயத்தை போக்கியிருந்தான்......



பத்து நாட்கள் சென்றிருக்கும்.... அவன் கடையில் இருக்கும் போது... மாலை ஆறு ஆறரை இருக்கும்..... சாவித்திரி...கண்ணனுக்கு பதட்டத்துடன் போன் செய்தவர்..... “கண்ணா....மருமக எப்பவும் அஞ்சு மணிக்கெல்லாம் வந்திரும்பா.... இன்னைக்கு இம்புட்டு நேரமாச்சு இன்னும் ஆளக்காணோம்பா.....” என்று அழுதபடி போன் பண்ண கண்ணன் அதிர்ச்சியில் தன் போனை தவறவிட்டிருந்தான்......................



இனி.................. ?



தொடரும்........
Nice
 

NithyaSriram

Active Member
ஆத்தா கயலு, கண்ணனுக்கு உடம்பு முடியலன்னா நல்லா பாத்துக்குற தானே..... அப்புறம் ஏன் மத்த நேரத்துல கண்ணன்ன சுத்தல்ல விடுற.... கொஞ்சம் பாவம் பாத்து விட்டுருமா....
சுதாக்கு அவங்க அப்பா சொல்றது கூட புரிஞ்சுக்கலனா, ரொம்ப கஷ்டம் தான்.... வாசுவால சுதாவ சரிப்பன்ன முடியுமா????? கயலு, எங்கமா போன ? எதுவா இருந்தாலும் கண்ணனுக்கு ஒரு போன் போட்டு சொல்லிருக்கலாமே.....?
Nice epi sis...
 

mila

Writers Team
Tamil Novel Writer
கடவுள் ஒவ்வொரு குழந்தையையும் தனித்தனியா கவனிக்கத்தான் தாய்மைங்குற ஒரு வரத்தை பெண்களுக்கு கொடுத்திருக்கானோ......பெரும்பாலான ஆண்கள் மனைவி இறந்தவுடன தன்னோட குடும்பத்துக்காக மறு கல்யாணம் பண்ணிக்கிறாங்க ஆனா நூத்துக்கு தொன்னூறு சதவித பெண்கள் கணவர் எந்த நிலையில விட்டாலும் கஷ்டப்பட்டு முன்னேறி தன்பிள்ளைகளை முன்னுக்கு கொண்டு வந்திருராங்க..... பாக்க ஆண்கள் உடம்பால் வலிமை உடையவர்கள் என்றால்..... பெண்கள் மனதால் வலிமை உடையவர்கள்தான்



arumai
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top