நேசம் மறவா நெஞ்சம்
அத்தியாயம்-12
மறுநாள் காலை அனைவரும் மூன்று வேனில் புறப்பட்டு கோவிலுக்குச் சென்றார்கள். அனைவரும் அங்கிருந்த நீண்ட படிக்கட்டுகளில் ஏறி மலைமீது இருக்கும் முருகன் சன்னதியை அடைய காந்திமதியோ மெதுவாக தன் பேத்தி கயல் கையைப்பிடித்துக்க கொண்டு ஏறிக்கொண்டிருந்தாள்..........
“என்னப்பத்தா.........உனக்கு இன்னைக்கு என்னாச்சு........?எப்பவும் கோயிலுக்கு வரும்போது நீதான் முன்னாடி ஏறுவ..............இன்னைக்கு என்னாச்சு..........?”
“ஒன்னுமில்லத்தா..........”
“சீக்கிரம் வா அப்பத்தா எல்லாரும் ஏறிப் போயிட்டாங்க...............நாமதான் கடைசி................”
“இல்லத்தா இன்னும் நேரமிருக்கு.........செத்தநேரம் இப்புடி உங்காந்துட்டு போவமா............”
“என்னாச்சு அப்பத்தா…….? உடம்புக்கு என்ன பன்னுது அம்மாவ போன்பண்ணி வரச்சொல்லவா...........?”என்று பதறியபடி......அவள் போனை எடுக்க..........
“இல்ல கயலு ஒன்னும்பண்ணல செத்தநேரம் நீயும் இப்புடி உக்காருத்தா............”என்றபடி அவளை தன் அருகில் அமரவைத்தாள்..........
“சரி…….” என்று உட்கார்ந்தவள்.......
.தன் கையில் இருந்த வாட்டர்கேனை கொடுத்தவள்
.” இந்த தண்ணீய கொஞ்சம் குடிங்கப்பத்தா .....................”என்று கொடுத்தவள்,தன் கையில் இருந்த கர்சீப்பால்அவர் முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்து விட்டாள்.........
தன்பேத்தியை வாஞ்சையுடன் பார்த்தவர்.........அவளை மேலிருந்து கீழாக பார்த்தார்..............கண்ணன் எடுத்துக் கொடுத்த அந்த மெரூன் வண்ணப் பட்டுடித்தி காதில் அடுஅடுக்கான சிமிக்கிப்போட்டு, இருபக்கமும் அன்னம்வைத்த டாலர் போட்ட நீண்ட சங்கிலி போட்டு கழுத்தில் அழகான சிறிய நெக்லஸ் கையில் நான்கு காப்போடு அந்த சேலைக்கு மேட்சாக கண்ணாடி வளையல் அணிந்திருந்தாள்............அவள் கையை தூக்கும்போதெல்லாம் அது அழகான ஒலி எழுப்பியது...........தலையின் இருபக்கமும் முடி எடுத்து கிளிப்குத்தி அழகாக பின்னியிருந்தாள்.................... தன் நீண்ட ஜடையில் மல்லிகையும் கனகாம்பரமும் சூடி கண்ணுக்கு கண்மை இட்டு தன் சேலைக்கு மேட்சாக அடர்ந்த மெரூன் வண்ண பொட்டிட்டு நெற்றியில் திருநீறும் குங்குமமும் வைத்து பார்க்க அழகான மகாலெச்சுமியை போலிருந்தாள்..............
“என்னபத்தா இன்னைக்கு என்னமோ புதுசா பாக்குறமாதிரி பாக்குற................. ?”
“ஏத்தா உன்கிட்ட ஒன்னு கேக்கனுமே...........”
“கேளுப்பத்தா.......... என்கிட்ட கேக்க இப்புடி யோசிக்குற..........”
“அது ஒன்னுமில்லத்தா......நீயும் நாங்க சொல்லுற மாப்புளய தானத்தா கட்டுவ.........இல்ல ஒனக்கும் வேற ஏதாச்சும் நினப்பு இருக்கா............?”
“என்னாச்சு அப்பத்தா…..? நேத்துல இருந்து எல்லாரும் இந்த கேள்வியவே கேக்குறீங்க..........இல்ல நம்ம வீட்டுல யாரு நீஙக சொல்வுறத மீறீயிருக்கா......?”
“இல்ல கயலு இந்த அப்பத்தா என்ன செஞ்சாலும் அதுல ஒரு நியாயம் இருக்கும்னு தெரியுமில்லத்தா..................”
“ஆமா அதுல என்ன டவுட்டு.......... “
“சரித்தா அத மட்டும் என்னைக்கும் ஞாபகத்துல வச்சுக்க..................”என்று பேசிக்கொண்டிருக்கும் போது மல்லிகா வேகமாக படிக்கட்டுகளில் இறங்கி வந்தவள்...........
“என்னக்கா உங்கள எங்கயெல்லாம் தேடுறது...........?அம்மா உங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு வரச்சொன்னாங்க................ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா.............. கோயிலுக்குள்ள என்ன கூட்டங்குற.................இன்னைக்கு இங்க நிறைய கல்யாணம் நடக்குதுக்கா..........
நிறைய பொண்ணு மாப்புள இருக்காங்க........ யாரு நம்ம சொந்தகாரங்க யாரு வேற கல்யாணத்துக்கு வந்தவுகன்னு தெரியலக்கா.............நானும் குத்துமதிப்பா எல்லாரையும் பாத்து கையெடுத்து கும்புட்டு சிரிச்சுவச்சேன்கா.............
எல்லாரும் என்னய லூசுன்னு நினைக்கப்போறாங்க.............பெரிய கார்த்திகைக்கு இங்க வருவோம்ல அப்ப எவ்வளவு கூட்டம் வரும் அதுமாதிரி இருக்குக்கா...................நம்ம மாமா வேற பொண்ணுகழுத்துல தாலி கட்டிராம பாத்துக்கணும்க்கா.............( உன்மையிலயே நீ கயல் தங்கச்சி தாம்மா............அவள மாதிரியே இப்படி பேசுற)................என்னக்கா நான் இம்புட்டு பேசுறேன்......... நீயும் அப்பத்தாவும் ஒன்னும் பேசாம இருக்கீங்க.............
கயலு இன்று ஏதோ நடக்கப்போகிறதோ என்று மனதிற்குள் சிறு சலனம் தோன்றியது..............
”ஒன்னுமில்லடி..........ஏதோ யோசனை சரி சரி வா போகலாம்.............”
கோயிலுக்கு மேலே ஏறியவர்கள் மாணிக்கம் சகுந்தலாவிடம் சென்றார்கள்......... சன்னதி முன்பு கண்ணனும் அவன் சொந்தகாரர்களோடு நின்று கொண்டிருந்தான்...............
“பொண்ண கூட்டிகிட்டு வாங்க.....”...என்ற சாவித்திரியின் குரல் கேட்டு மல்லிகாவும் சகுந்தலாவும் சுதாவை அழைத்துக்கொண்டுச்செல்ல.................. காந்திமதி கயலின் கையைப் பிடித்து அவர்களின் பின்னால் சென்றார்.........
கண்ணனின் முகம் இருகிப்போயிருந்தது. கண்ணனின் அருகில் சுதாவை நிறுத்திய சகுந்தலா தன் கணவரை அழைத்துவரச் சென்றார்.........
கண்ணனின் வலதுபுறம் சுதாவும் அவளுக்கு பக்கத்தில் கயலும் காந்திமதியும் நின்றிருந்தனர்..............ஐயரிடம் தாலியை கொடுக்க அவர் அதை சன்னதி உள்ளே கொண்டு சென்றார்..............
அப்போது இன்னொரு ஜோடி பொண்ணுமாப்பிள்ளை வர அவர்களோடு சேர்ந்து கூட்டமும் நெருக்கியது.........அந்த கூட்டத்தோடு கூட்டமாக வாசுவும் அந்த கூட்டத்தில் நெருக்கியடித்து வந்து கண்ணனின் முதுகுக்கு பின்னால் நின்றான்...............
அங்கிருந்த கயலோ சுதாவையும் கண்ணனையும் விட்டுவிட்டு அங்குள்ள மற்ற பொண்ணு மாப்பிள்ளைகளை கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்...........
அங்கிருந்த ஐயர் ஒவ்வொரு மாப்பிள்ளையிடமும் தாலியை கொடுத்துக் கட்டச்சொல்ல அங்கிருந்த இளைஞர்கள் சீட்டி அடித்து கைதட்டி ஆரவாரம் செய்ய அங்கு நின்றிருந்த சுதாவோ மெதுவாக பின்னால் நகர்ந்து வாசுவின் அருகில் செல்ல காந்திமதி தன் பேத்தி கயலை கூட்டத்தோடு கூட்டமாக கண்ணன் அருகில் நகர்த்தியிருந்தார்...............
மாப்பிள்ளை கோலத்தில் வந்திருந்த வாசு சட்டென தன் பையில் இருந்த தாலியை எடுத்து கண்ணனை செறுக்குடன் பார்த்துக்கொண்டே சுதாவின் கழுத்தில் கட்டினான்............
ஐயர் வந்து கண்ணன் கையில் தாலியை கொடுக்க அதை பார்த்த வாசு “இது தான் உனக்கு இனி தேவபடாதுல்ல...........அப்படியே இந்த உண்டியல்ல போடு” என்றான்..........
கண்ணனின் முகத்தில் ஒன்றையும் காட்டிக்கொள்ளாவிட்டாலும் அவன் உள்ளே ஒரு பிரளயமே வெடித்துக்கொண்டிருந்தது...............கையில் தாலியை வாங்கிய கண்ணன் நிமிர்ந்து தன் அம்மாவையும் அப்பத்தாவையும் பார்க்க அவர்கள் தலையை அசைத்து தன் சம்மதத்தை தெரிவித்தனர்............
அதுவரை அங்கிருந்த மற்ற பொண்ணு மாப்பிள்ளைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கயல் ஐயர் கண்ணன் கையில் தாலியை கொடுக்கவும் பக்கத்தில் திரும்பிப்பார்த்தாள்..................தன் அக்காவை காணாமல் திகைத்தவள்..................நம்ம எப்படி இவரு பக்கத்தில் என்ற யோசித்தபடி கண்ணனை நிமிர்ந்து பார்க்க அதுவரை கையில் தாலியோடு நின்றிருந்தவன் அவளை பார்த்துக்கொண்டே தாலியை அவள் கழுத்தில் கட்டினான்....................தாலியை கட்டியவன் வாசுவிடம் திரும்பி
” நீ இப்ப என்னமோ சொன்னியே அது எனக்கு சரியா கேக்கல...............இப்ப திரும்பச்சொல்லு....................... “என்று கேட்க.................அங்கு கயல் மயங்கி சரிந்திருந்தாள்.................

Last edited: