நீயே என் ஆதியும் அந்தமும்

Advertisement

Kavya Narasimman

New Member
சிட்டில இது தான் no.1 ஹாஸ்பிடல் அதுவும் அவன் தந்தையின் மருத்துவமனை.... இவன் வந்தத பார்த்த உடனே பரபரப்பான அந்த மருத்துவமனை மருத்துருவர்கள் உடனடியாக அவளை பரிசோதிக்க.... இவனோ வெளியில் தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று புரியாமல் தவித்து கொண்டிருந்தான்....


அதற்குள் அங்கு விக்ரம் வந்து விட்டான், விக்ரம் தான் இவனுக்கு எல்லாமே..... தீரன் விக்ரம்ம மட்டும் தான் தன்னோட பக்கத்துல வெச்சுக்குவான்... தீரன் தொழில்துறையின் முடி சூடா மன்னன் அப்டி இருக்கும் போது எதிரிகளும் அதிகம் தான்.... ஆனா பாவம் யாருக்கும் அவனை நேருக்கு நேர் மோதி பாக்க தைரியம் இல்லை....


விக்ரம்- சார் நீங்க போங்க நான் இங்க இருந்து பாத்துக்கற, அந்த பொண்ணோட வீட்லயும் தகவல் குடுத்தாச்சு, அவங்களும் வந்துட்டு இருக்காங்க... அவன் முழுசா சொல்லி முடிக்கறதுக்குள்ள அவன் மறுப்பாய் தலை ஆட்ட பாவம் விக்ரமிற்கு தான் என்ன பண்றதுனே தெரில...


அவளை பரிசோதித்து மருத்துவர் வெளிய வர சார் அவங்களுக்கு பயப்பட ஒன்னும் இல்லை ஆனா...

ஒருவித தயக்கத்துடன் அவர் நிறுத்த என்ன என்பது போல் இவன் பாக்க... அவங்க பிளட் சாம்பிள்ஸ்ஸ செக் பண்ணதுல ரொம்ப பவர் புல்லான ஏதோ ஒரு மாத்திரை இருக்கறது கண்டுபுடுச்சுருக்காங்க.... இதை கண்டுபுடிக்கறது ரொம்ப கஷ்டம்...


நோயாளிக்கு நார்மலா புட் பாய்சன் ஆனா மாறி தான் எல்லா அறிகுறியும் இருக்கும்... அது என்னனு கண்டு புடிக்க தாமதம் ஆனா அவங்க உடல் உறுப்பு ஒன்னு ஒண்ணா செயல் இழந்து கடைசீல அவங்க மூளையும் செயல் இழந்துரும்...

இதை கேக்க கேக்க அவனுக்கு ஆத்திரம் அடக்க முடியாமல் வந்தது... விக்ரம்..... அவன் அழைத்த உடன் அருகில் வந்தவனிடம் எனக்கு இதை யார் பண்ணாங்கனு ஒடனே தெரியணும் ..

ஓகே சார் என்று அவன் விடை பெற்றுக்கொள்ள... இப்ப அவங்கள பாக்கலாமா... கேட்பது தீரன் ஆச்சே மறுக்க முடியுமா, அவங்க மயக்கத்துல தான் இருக்காங்க... நீங்க போய் பாருங்க சார்....

ஏனோ எல்லார் முன்பும் விரைப்பா இருப்பவனுக்கும் ஒரு வித கலக்கம் உள்ளுக்குள்... அந்த அரை நோக்கி நடக்க அவனின் இதயம் தாறு மாறாக துடிக்க ஒருவாராக சமாதானம் பண்ணிட்டு உள்ள வந்தவன் அவளின் அருகில் ஒரு முடிவு எடுத்தவனாய் அமர்ந்தான்....

இவள் யார், எதற்கு என் வாழ்வில் வருகிறாள், ஏன் என் மனம் ஒரு வித பதட்டதை உணர்கிறது எதுவும் புரிய வில்லை அவனுக்கு.... யாரு டி நீ எங்க இருந்து வந்துருக்க உன் பேரு என்னனு கூட தெரில ஆனா என்னையவே சாச்சுட்ட டி நீ....

உன்ன இப்டியே தூக்கிட்டு போயிரலாம் போல இருக்கு... நீ சரியான மாயக்காரிதான், இந்த தீரனையே அசச்சுட்ட.... அவன் இதழ்கள் மெல்லியதாய் புன்னகை புரிந்தது அதில் ஒரு அர்த்தம் இருந்தது...


அங்கு அதற்குள் ஆதிராவின் பெற்றோர் வந்துவிட அவளின் அம்மாவிற்கு தான் அழுகை முட்டி கொண்டு வந்தது, அவரின் கணவர் தான் அவரை கை தாங்களாக தாங்கி பிடித்து கொண்டிருந்தார்.

தன் மகளை இவர் தான் ஹாஸ்பிடல்ல சேத்திருக்கார்னு தெரிஞ்சு இருவரும் தீரனை நன்றி தெருவிக்கும் விதத்தில் பார்த்து இதற்க்கு நாங்க என்ன கைமாறு செய்ய போறோம்னு தெரில... டாக்டர் சொன்னாரு நீங்க மட்டும் சரியான நேரத்துக்கு என் பொண்ண இங்க கொண்டு வரலைனா அவளை.... அதர்க்கு மேல் சொல்ல முடியாமல் தவித்தது அந்த தாய் உள்ளம்.

இதுக்கு நீங்க கைமாறு செய்யணும்னு நெனச்சா உங்க பொண்ண எனக்கு கல்யாணம் பண்ணி குடுங்க. அவனின் சொற்கள் நிதானமாக அதே சமயம் அழுத்தமாகவும் ஒலித்தது..

ஆதிராவின் பெற்றோருக்கு என்ன சொல்வது என்று தெரிய வில்லை.. இப்பதான் தன் மகள் மரணத்தின் பிடியில் இருந்து தப்பித்து வந்திருக்கிறாள் அப்படி இருக்கும் போது அவனின் இந்த திடீர் கேள்வி அவர்கள் இருவரையும் திக்கு முக்காட செய்தது...


உடனே அவனுக்கு விக்ரமிடம் இருந்து அழைப்பு வர யா விக்ரம், என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.... அவன் அங்கு இருந்து விலகும் முன் அவர்கள் இருவரிடமும் பார்வை ஒன்றை வீசி சென்றான்.... இது எந்த மாதிரியான பார்வை என்று இருவருக்கும் புரியவில்லை.......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top