நான் இனி நீ எபிலாக் - Shanisha

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
சக்கரவர்த்தி இல்லத்தில் விழா கொண்டாட்டங்கள் நடை பெற்றுக் கொண்டு இருந்தது.

மேலே மாடியறையில் ராகாவோ “தீப்ஸ்ஸ்ஸ்…. இங்கே பாரு உன் பொண்ணு தலை சீவ விடாம படுத்தி எடுக்கிறா…
ராகா “என் ஆது பேபிய ஏண்டி திட்டுர…பேபிக்கு அழகா தலை சீவி பூ வச்சா மம்மிய விட அழகா இருப்பீங்க என கூறவும்…

டேய் ராஸ்கல் என ராகா தீபனின் முதுகில் ஒரு போடு போட்டாள்
பாட்டீடீடீடீ …..அனும்மா அப்பாவ ஆஸ்கல் சொல்தா….என கத்திக் கொண்டே படியில் இறங்கி ஓடினாள் ரெண்டு வயது ஆதிரா சக்கரவர்த்தி…..

அய்யோ !டேய் உன் பொண்ணு என் மானத்த வாங்குறா..

என்னடி புதுசா மானத்தப் பத்தி எல்லாம் கவலைப்படுற …அதெல்லாம் D -வில்லேஜோட போயிடுச்சுடி என் ராட்சசி என்று கூறி கொண்டே காதல் மன்னனாய் அவளது கழுத்தை வளைத்து வேம்பயர் முத்தமிடப் போக .….
அம்மா என்னோட டிரெஸ் எடுத்து வச்சாச்சா…என குளித்து விட்டு பெரிய மனுஷன் தோரணையுடன் கேட்டுக்கொண்டே வந்தவனை ராகா ஆசையாத் தூக்கி தலை துவட்டப் போக …அப்பா தான் எனக்கு டிரெஸ் போட்டு விடணும் என்று கூறிவிட்டான் ஐந்து வயது அதிரூபன் சக்கரவர்த்தி.
அதிரூபன், ஆதி இருவருமே சரியான அப்பாச் செல்லம் அதில் அனுராகா மற்றும் தீபனுக்கும் பெருமையே…
இன்றும் என்றும் தீபனுக்கும் அப்பா சொல்லே வேதம்…..
*********
கீழே ஹாலில்
உஷாவோ “மெதுவாடா செல்லம் என்ன ஆச்சு”…என ஆது பேபியக் கேக்க….

அனு அப்பாவ அடிச்சா ஆஸ்கல் சொன்னா ..என ஆது போட்டுக் கொடுக்க
ரெண்டு பிள்ள பெத்தாச்சு…இன்னும் இதுக திருந்தல என புலம்பி விட்டு பேத்தியை செல்லம் கொஞ்சிக் கொண்டே ரெடி செய்ய ஆரம்பித்தார்.
சக்கரவர்த்தி ஹாலில் அமர்ந்து கொண்டு விருந்தினர்களை கவனிக்க நாகாக்கும் தர்மாக்கும் உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருந்தார். காதர் பாய் விருந்து ஏற்பாட்டைக் மேற்பார்வையிட என வீடே அதிர்ந்ததது.

மேலிருந்து தீபனும், ராகாவும் அதிரூபச் சக்கரவர்த்தியுடன் இறங்கி வந்தனர்.

உஷாவோ “டேய் தீபன் எங்கடா மிதுன இன்னும் ஆளக் காணோம்.. என்க

அம்மா மிதுன் தான் இன்னிக்கு ஹீரோ …..அவன் ஹீரோயினோட ரெடியாகி வருவான்மா…
ஆம் ,மிதுன் கோமாவில் இருந்து குடும்பத்தின் முழு முயற்சியுடன் மீண்டு வந்து இரு வருடங்களாகி விட்டது.

மிதுன் தவறை உணர்ந்து திருந்தி கிட்டத்தட்ட ஆறு மதங்களாக யாரிடமும் பேசாமல் கூனி குறுகி தனித்து இருந்தவனை அனைவரும் பேசி பேசி வழிக்கு கொணர்ந்தனர்.
அனுவோ “மிதுன் செத்து பிழைச்சு வந்தது கூட புது பிறவி போலத்தான் தீப்ஸ்…சோ…..

அப்போ “மிதுன மன்னிச்சிட்டியா”…என்ற தீபனிடம்

அப்படியில்ல… ஒரே வீட்டில் இருந்து கொண்டு பேசாம எதிரி போல இருக்கறது கஷ்டம்….சோ மன்னிக்கிறத விட மறக்கறது நல்லது என்ற டைட்டன் ராகாவின் முடிவுக்கு தீபனிடம் மறுப்பில்லை.

அதிரூபனுக்கும்,ஆது பேபிக்கும் தாத்தா தான் ஹீரோ அண்ட் பிரெண்ட்…லோகேஸ்வரனும், தாராவும் பேரப் பிள்ளைகளின் பாசத்தில் தங்களது வியாபார ரீதியான அணுகுமுறையை
மாற்றியிருந்தனர்.

மிதுன் படிக்கும் காலத்தில் கூட லவ் என்று எந்த பெண்ணின் பின்னாலும் சுத்தியதுகிடையாது.ஆனாலும் மந்திரியின் மகன் என்ற செல்வாக்கைப் பாக்காமல் அவனுக்காகவே அவனை ஒரு தலையாக காதலித்தவள் மித்ரா.

மிதுனோ எப்பவும் தனிமை,தாழ்வு மனப்பான்மை மற்றும் பதவி ஆசை இதெல்லாம் கூட குரோதம் மற்றும் சகோதரனையே கொலை செய்யும் அளவு உருவாக காரணமும் என்று கூறி தொடர்ந்து ஆறு மாதங்களாக அவனுக்கு மிகச்சிறந்த மனநல மருத்துவரால் சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனாலும்கல்லூரிக் காலத்திலேயே மந்திரியின் மகன் என்ற செல்வாக்கைப் பாக்காமல் அவனுக்காகவே அவனை ஒரு தலையாக காதலித்தவள் மித்ரா.மிதுனைத் தேடி பார்க்க விரும்பி வந்த மித்ராவையே அவள் பெற்றோர் சம்மதத்துடன் மணமுடித்து வைத்தனர்.

இன்று மிதுன் மித்ரா தம்பதியின் பெண்குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா…

மித்ரா குழந்தையுடன் நிற்க… மிதுவின் தோளில் ஆது பேபி இருக்க ….
சக்கரவர்த்தி தம்பதியின் அருகில் வருங்கால சக்கரவர்த்தி தோரணையில் அதிரூபச் சக்கரவர்த்தி நின்றிருக்க..
அனைவரும் சூழ்ந்திருந்த வேளையில் குழந்தைக்கு மஹிஷா என பேர் சூட்டப்பட்டது.
சக்கரவர்த்தி அனைத்து அரசியல் பிரமுகர்கள் மற்றும் கட்சி மூத்த உறுப்பினர்கள் முன்னிலையில் மிதுனை தனது அடுத்த வாரிசாக அறிவித்திருந்தார்.

ஏனெனில் ராகா பதவியினால் தான் தீபனுக்கு புகழ் ,செல்வாக்கு என்றில்லை எனவும், தீபனோ என்றுமே “கிங் மேக்கராக” இருப்பதே பிடித்தமான விசயம் என்று கூறி விட சக்கரவர்த்திக்கு அன்று போல் இன்றும் தன் பசங்களை நினைத்து பெருமைபட்டுக் கொண்டார்.
தீபன் ராகாவை பார்த்து உதட்டைக் குவித்து பறக்கும் முத்தத்தை பறக்கவிட….ராஸ்கல் என உதட்டசைவில் முணுமுணுத்தாள்.

தீபன்: செல்ல ராட்சசியே
அனுராகா: டேய் ராஸ்கல்
காதல்: போங்கடா போய் புள்ளகுட்டிகள படிக்க வைங்கடா ………..

****சுபம்*****

woooowwwwwww அழகான பதிவு...

ஒரு ஸ்மைலோட படிச்சேன்...

அதிலும் கடைசியா காதல் சொன்னது.. "போங்கடா போய் புள்ளகுட்டிகள படிக்க வைங்கடா..."

ஹா ஹா.. கதை இறுதி பதிவு கொடுக்கிறப்போ இதைத்தான் போடணும்னு நான் நினைச்சிருந்தேன்...

"கதை முடிஞ்சிடுச்சு.. போங்க போங்க... எல்லாம் போய் புள்ள குட்டிகளா படிக்க வைங்கன்னு...":p:p:D:D
 

fanishaa

Member
woooowwwwwww அழகான பதிவு...

ஒரு ஸ்மைலோட படிச்சேன்...

அதிலும் கடைசியா காதல் சொன்னது.. "போங்கடா போய் புள்ளகுட்டிகள படிக்க வைங்கடா..."

ஹா ஹா.. கதை இறுதி பதிவு கொடுக்கிறப்போ இதைத்தான் போடணும்னு நான் நினைச்சிருந்தேன்...

"கதை முடிஞ்சிடுச்சு.. போங்க போங்க... எல்லாம் போய் புள்ள குட்டிகளா படிக்க வைங்கன்னு...":p:p:D:D
Tnqqqq sooooo muchhhhhhh..... Yesterday as i had told u i had never seen like this characterization to love
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top