தேவதையிடம் வரம் கேட்டேன் P18

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
images (24).jpg


வண்டியில் வரும் பொழுதே அக்ஷையோடு பேசிய மதி தனக்கு எழுந்து சந்தேகங்களையும் தான் அஜய்யிடம் பேசி தெளிவு படுத்தியதையும் கூறினாள்.



"என்ன சொல்லுற மதி சிம்ரன்தான் அஜய் லவ் பண்ண பொண்ணுன்னு சந்தேக பட்டியா? எத வச்சி உனக்கு அப்படி ஒரு சந்தேகம் வந்துச்சு" மதி சந்தேகப்பட்டால் அதில் விஷயமிருக்கும் என்று நம்பிய அக்ஷய் வண்டியை ஓட்டிவாறே நிதானமாகத்தான் கேட்டான்.



"அஜய் மாமாக்கு தான் பேசின பொண்ணோட முகம் கூட தெரியாது. ஏன் பேர் கூட தெரியாது. குரல் மட்டும்தான் தெரியும்"



இடையில் குறுக்கிட்ட அக்ஷய் "சிம்ரன் தான் அஜையோடு நேரில் பல தடவை பேசி இருக்கானே! அப்பொழுது கண்டு பிடித்திருப்பானே!"



"ஒருவேளை போனில் பேசும் பொழுது வேறு மாதிரி கேட்டிருந்தால்"



"அப்படியும் கேட்குமா?" அக்ஷய் குழப்பமான முகத்தோடு மதியை நோக்காக



"கேட்டிருந்தால்" குறும்பாக சிரித்தாள் மதி.



சதா முறைத்துக் கொண்டிருக்கும் மதியின் இந்த புதிய அவதாரம் அக்ஷையின் காதல் நெஞ்சை தடம் புரளச் செய்ய வண்டியை ஓர் வளைவில் நிறுத்தியவன் அவளை இழுத்து அணைத்து இதழோடு இதழ் பொருத்தி இருந்தான்.



அந்த முத்த தாக்குதலை எதிர்பார்க்காத மதி நிலை குலைந்து அக்ஷையின் மீதே சாய அவளை அவள் விலகி விடாதவாறு இடது கையை இடையோடு சேர்த்து அணைத்து மேலும் தன்னுள் இறுக்கியவன் வலது கையால் அவள் கழுத்தை வளைத்து முத்தமிட வசதியாக தன் புறம் திருப்பி இருந்தான்.



அக்ஷையின் அருகில் தன்னிலை மறக்கும் மதியழகி அவன் கொடுத்த முத்தத்தில் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து தன்னை தொலைத்துக்கொண்டிருக்க, அக்ஷையின் வண்டியின் கண்ணாடி தட்டப்பட்டது.





அந்த மெல்லிய சத்தமெல்லாம் இருவருக்கும் நன்கு பழக்கப்பட்டதுதான். அக்ஷய் தன்னை சுற்றி உள்ள ஆபத்தை எண்ணி சதா எச்சரிக்கை உணர்வோடு இருப்பவன். மதியும் போலீஸ் என்பதால் சின்ன சத்தத்துக்கும் செவியை கூர்மையாக்குபவள்.
images (27).jpg



ஆனால் மதியழகி இன்று உலகம் மறந்து அக்ஷையின் கைகளில் மதிமயங்கி சொக்கி நிற்க, அக்ஷய் தான் தன்னை மீட்டுக்கொண்டவன் வலுக்கட்டாயமாக தன்னிடமிருந்து அவளை பிரித்து அமர்த்த, மாயவலை அறுபட்டு, தான் கண்ட அழகான சொப்பனம் களைந்து விழித்தது போல் முழிக்கலானாள் பெண்ணவள்.



"மதி மதி இங்க பாரு.. ரிலேக்ஸ்" அக்ஷய் மதியின் கன்னம் தட்டி பேச சுயநினைவுக்கு வந்தவள் என்னவென கண்களாலே கேட்க தண்ணீர் பாடிலை அவளுக்கு எடுக்கொடுத்து விட்டு கண்ணாடியையும் திறந்தான்.



"சார் ஏதாவது பிரச்சினையா? இல்ல ஏதாவது தேவையா?" மெய்ப்பாதுகாவலன் கேட்க மதியை திரும்பி பார்த்த அக்ஷய் அமைதியாக, புரிந்து கொண்ட விதமாக பாதுகாவலன் சென்று விட முற்றாக தன்னை மீட்டிருந்தாள் மதி.



அக்ஷய் கண்ணாடியை மூடியவாறே விசிலடித்தவன் வண்டியை கிளப்ப அவன் புறமிருந்தவளோ! அவனை முறைக்க ஆரம்பித்தாள்.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top