தீராத் தீஞ்சுவையே...44

Advertisement

Yazh Mozhi

Active Member
தீராத் தீ____44

அன்று பல வருடங்களுக்கு முன்பு எப்படி மருத்துவ மனையில் தன் அம்முவிற்காக காத்திருந்தாரோ இன்றும் அதே போல் தான் காத்திருக்கின்றார் மித்ரன்....

வயது கூடி அருமை புரிந்து காதலிக்கவும் ஒரு வயதும் முதிர்வும் தேவைப்படும் போல... அது இன்று நிறையவே உள்ளது மித்ரனுக்கு....

ஆனால் நேத்ரா ..????? அவர் திரும்பி வருவாரா... ????வர வேண்டும் என்று அவருக்கு நம்பிக்கை வேண்டுமே....

வருவாரா... வர வேண்டுமே... பார்ப்போம் ....

இதோ முகிலன் தன் போக்கில் குற்றவுணர்வோடு கலங்கி தன் அன்னையை எதிர்நோக்கி காத்திருக்கிறான்....

அன்பும் செல்வமும் அவனுக்கு ஆதரவு... இங்கே இடிந்துபோய் அமர்ந்திருக்கும் மித்ரனுக்கு யார் இருக்கிறார்கள் அவருடைய அம்முவைத் தவிர. .

நீ வா அம்மு திரும்பி வந்துடு.... அன்னைக்கு எனக்காக நீ எடுத்த முடிவ இன்னைக்கு உனக்காக என்னை எடுக்க வச்சிடாத அதுவும் இத்தனை வருஷம் கழிச்சு பிளீஸ். ..

அவருடைய அழைப்பும் வேதனையும் புரிந்தோ என்னவோ இரண்டு நாட்கள் நான்கு மணி நேரங்களுக்கு பின் நேத்ரா சுயநினைவு திரும்பி மீண்டும் மயக்கம் அடைந்து உறக்க நிலைக்கு சென்றார்.....

வெளியே வந்த மருத்துவர் இனி அதிகம் மன அழுத்தம் தர மாதிரி எந்த யோசனையும் வராம பாத்துக்கனும் பேஷன்ட் ரொம்ப ஸ்ட்ரெய்ன் பன்னா அவங்களுக்கு நல்லது இல்லை.. ஆல்ரெடி கொலஸ்ட்ரால் சுகர் லெவல் அதிகம் இருக்கு... இப்போ பிளட் பரஷர் இன்க்ரீஸ் ஆகி ஓவரா ஸ்ட்ரைன் பன்னா அவங்க இருக்க கன்டிஷன் கிரிடிகல் ஆகலாம்...
சீக்கிரமே ஆப்ரேஷன் பன்னனும் லேட் பன்னாதீங்க…. அதுவும் அவங்க ரெகவர் ஆன உடனே….
இப்போவே பார்க்க வேண்டாம் அவங்க மைண்ட் க்கு ரெஸ்ட் தேவை. தூங்குறாங்க கண்ணு முழிச்சதும் விசிட்டிங் டைம்ல தனித்தனியா போய் பாருங்க...

த்ரீ டேய்ஸ் அப்சர்வேஷன் ல இருக்கட்டும்... அப்றம் நீங்க டிஸ்சார்ஜ் பன்னிக்கலாம். .

செல்வமும் அன்பும் முன்னின்று எல்லாவற்றையும் கவனித்தனர் .....முகிலனுக்கு இப்போது தான் இயல்பான ஸ்வாசம் திரும்பியது ... மித்ரன் மௌனமான மனதோடு நிம்மதியா நடக்கும் நிகழ்வுகளை உள்வாங்கிக் கொண்டு அமர்ந்திருந்தார்.


அவருடைய நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தது.... அன்று மருத்துவ மனையில் கட்டு போட உள்ளே சென்றதும் நேத்ரா அடுத்த இரகளையை ஆரம்பித்தார்...

உயிர் போகும் போதும் தனக்கு துரோகம் செய்த கணவரான போதும் அவரும் கூட இருந்தால் தான் அடுத்த கட்ட சிகிச்சைக்கு சம்மதிப்பேன் என அடம்பிடித்து ஆர்ப்பாட்டம் செய்தாள்...

அதற்கு ஒரு காரணம் உண்டு....

எப்படி கையில் காயம் ஏற்பட்டது என கேட்ட மருத்துவரிடம் மித்ரனைப் பார்த்துவிட்டு தொலைக்காட்சி பார்த்தபடி பழம் வெட்டினேன் கவனிக்கவில்லை கையில் கத்தி கிழித்து விட்டது என்றாள்....

ஆயிரம் பேருக்கு வைத்தியம் பார்ப்பவருக்குத் தெரியாதா இது தற்கொலை முயற்சி என்று மித்ரனை சந்தேகமாகப் பார்த்தார்..

அவன் வாயைத் திறக்கும் முன் இவள் மீண்டும் மீண்டும் அதையே புலம்பினாள் மருத்துவர் செவிலியருக்கு கண்காட்டி விலகினார்....

தையல் போட வந்த நர்சும் டாக்டரும் இவள் இம்சை தாங்காமல் மித்ரனை உள்ளே அனுமதிக்க இரத்த்தை உரைய வைக்க முதலுதவி செய்து அவள் கைகளில் நரம்புகள் பினைத்து தையல் போடப்பட்டது அவள் கொஞ்சம் மயங்கவும் பின்பு தான் மித்ரன் வெளியேறினான்...

வெளியே வந்து நர்ஸ் விசாரித்த போதும் மித்ரனும் நேத்ரா கூறியதையேக் கூறவும் தான் கணேசனுக்கும் வசந்தாவிற்கும் மூச்சு வந்தது... எங்கே பெரிய விபரீதமாகி விடுமோ என்று பயந்து போயினர்...

எல்லாம் முடிந்து நேத்ரா இரண்டு நாள் மருத்துவமனையில் தங்க வேண்டி இருந்தது... நேத்ராவின் தந்தைக்கு வந்த கோவத்தில் போலிஸ் வரை போனதோடு மட்டுமல்லாமல் மித்ரன் மீதும் கைநீட்டிவிட்டார்.... இரண்டு நாட்கள் அனைத்து சொந்தமும் கூடி ஆலமரமின்றி பஞ்சாயத்து நடந்தது தான் மிச்சம்... மித்ரன் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை .

மூர்த்தியும் ருத்ர மூர்த்தியாக மாறிப் போனார்....

இரண்டாம் நாள் மருத்துவ மனையில் போலிஸ் வந்து விசாரிக்கவுமே நேத்ரா நொந்து போனாள் ....எது நடக்கக் கூடாது என்று பொய் சொன்னாலோ அதற்கான பிரயோஜனம் இன்றி எல்லாம் கை மீறிவிட்டது.

தனக்கு ஏதும் ஆனாலம் தன் பிள்ளைக்கு தந்தையாவது வேண்டும் என்று தான் எல்லோரிடமும் அதே பொய்யை தயங்காமல் கூறினால்….
அவள் நினைத்திருந்தால் உண்மையை உடைத்துக் கூறி இருக்க முடியும்… அப்படி கூறி இருந்தால் அன்றோடு அவளைப் பிடித்த எல்லாம் ஒழிந்திருக்கும்… அந்த பெயர் தெரியாத பாவி யார் இருவருக்கும் என்ன உறவு என்று எல்லாம் வெளிச்சம் ஆகி இருக்கும்… அவளுடைய வாழ்கையும் தெளிந்த நீரோடையாக மாறி இருக்கும்…

ஆனால் அவளுக்கு அன்று மனதில் இருந்தது எல்லாம் மரணம் மட்டுமே.. தன் கணவன் தன்னை காதலிக்காமல் இருந்திருக்கலாம்… அவள் தான் அவனை உயிர்வரை நேசிக்கிறாளே எப்படி அவளால் அவனை விட முடியும்..
முடியவில்லை அவனை அப்படியே போ தண்டனை அனுபவை என்று அவளால் அவனுடைய குற்றத்தை காட்டிக்கொடுக்க முடியவில்லை…

அவனை நம்பினால் அவனுடைய கண்ணீரை மீண்டும் நம்பினால் முதலைக் கண்ணீர் என்று தெரியாமலே நம்பினால்… சூடு கண்ட பூனை தான் அடுப்பன்டை சேராது என்பதை மறந்துவிட்டாள்…

அவன் தண்டனை அனுபவைப்பதையோ சிறைச் செல்வதையோ அவள் விரும்பவில்லை… எந்த மாதிரியான சட்டத்தால் குற்றவாளி யை கண்டறிந்து தண்டித்து தன் வாழ்கையை காப்பாற்றுவது என்று எந்த வித சட்டப்பூர்வமான அறிவும் தெளிவும் அன்றைக்கு அவளுக்கு இல்லை…

அவளுக்காக நியாயமாக பேசி வாதாடி நடந்ததை சரிசெய்து தரவும் நம்பிக்கையானவர் ஒருவரும் இல்லை…

பெற்றவர்களுக்கு பெண்ணின் உயிர் மட்டுமே பிரதானமாக தெரிந்தது வேறு ஒன்றும் யாருக்கும் புரியவில்லை.. மொத்தத்தில் எல்லாம் மித்ரனுக்கு சாதகமான சூழ்நிலையாக இருந்தது….

ஒரு வழியாக காவல் துறையிடமும் அதையே அடித்துக் கூறி அவள் கணவனை வெளியேற்றி தந்தையை சமாதானம் செய்து கேசை வாபஸ் வாங்கி என்று எல்லாம் சேர்ந்து அவளை ஒரு வழியாக்கியது...

அத்தனை நடந்து முடிந்த பின்பும் நேத்ரா மூர்த்தியோடு அவர் அத்தனை முறை அழைத்தும் வீட்டுக்கு செல்ல மறுத்து மித்ரனோடே இருந்தாள்...

இருந்த கோவத்தோடு வசந்தா நடந்த நிகழ்வைப் புனைத்து மித்ரனுக்கு மேலும் மேலும் தூபம் போட்டார்...

மித்ரன் யாரோடும் ஒன்றும் பேசவில்லை... அவனுடைய தவறுக்கு தண்டனை போதாது... அவள் இறந்திருந்தால் அந்த இழப்பை எதைக் கொண்டு ஈடுகட்ட... அவள் இந்த நிலைக்கு ஆளாகிட நான் தானே காரணம்.... என்னை காக்கவே இந்த தருணத்திலும் பொய் சொல்லி எல்லாவற்றையும் சமாளித்து எனக்காகவே இந்த நொடியும் விட்டுக் கொடுத்த இவளுக்கு நான் செய்தது எத்தனை கொடிய நம்பிக்கை துரோகம் ...

இதில் மட்டுமே அவன் எண்ணம் உழன்றது...

அவளை நல்லபடியாக வீட்டிற்கு அழைத்து சென்று பழையபடி கலகலப்போடும் காதலோடும் காக்க வேண்டும் இதிவே அன்றும் இதோ இன்றும் ஒன்று போல மனதில் ஓடியது.....

இப்போதும் அன்று போல் அவள் கைகளை இருக்கமாக பினைத்துக் கொண்டால் பழைய தைரியம் திரும்பாதோ என்றேத் தோன்றியது...

சில மணி நேர ஓய்விற்கு பிறகு கண்விழித்த நேத்ரா தேடியது மித்ரனைத் தான் ... ஆனால் அருகில் இருந்ததோ முகிலன்....
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
யாழ் மொழி @ காயத்ரி வினோத் குமார் டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top