தீராத் தீஞ்சுவையே....3

Advertisement

Yazh Mozhi

Active Member
தீராத் தீ____3

முகிலன் கல்லூரிப் பேருந்திலிருந்து இறங்கி வேக எட்டுகளுடன் கல்லூரிக்குள் புத்துணர்ச்சியோடு நுழைந்தான்...

பசிக்கூட அவனைக் கூப்பிடவில்லை... ஏனோ இன்று மனம் இறகு போல பலுவற்று மெல்ல பறப்பதாகத் தோன்றியது...

ஆனால் இரவுக்குள் மீண்டும் பெரிய குழப்பங்கள் சூழ்ந்து மனம் பதைக்ககப்போவதை அந்தக் கணம் முகிலனின் உள்ளுணர்வு உரைக்கவில்லை... போல...

எதிர்பாராத கூட்டு நிகழ்வுகளின் சங்கமம் தானே வாழ்க்கை... வாருங்கள் முகிலன் வகுப்பிற்கே போய்விடப் போகிறான்.....

முகிலனின் கண்கள் நட்புகளின் வட்டத்தை தேடியது....

அதோ அங்கே பெரிய ஆலமரத்தினைச் சுற்றி அமைந்த திண்டின் மீது நான்கு பேரும் முகிலனுக்கு முன்பே காத்திருந்தனர்.

முகிலன் நண்பர்களை நெருங்கும் முன் நாம் முகிலனையும் அவன் நண்பர்களையும் பார்த்து விட்டு வரலாம் வாருங்கள்...

முகிலன் அப்பா அம்மாவின் நிறப் பிழம்பு... அப்பா மித்ரனைப் போல உயரமான உடல்வாகு.

குணம் , நிறம் எல்லாம் அன்னை நேத்ரா போல...

பாசம் ..நட்பு....படிப்பு... அனைத்திலும் வெகு தாராளம்......

அம்மா வெயிட்டு.... அப்பா ஹயிட்டு.... நம்ம பய ஹயிட் அண்ட் வெயிட்டு.... ஆ பக்காவா இருக்கான் போங்க....

தன் தாய் தந்தையின் வாழ்வை பார்த்து வளர்ந்ததால் இயல்பிலேயே அவர்களைப்போல அந்யோன்யமான வாழ்வை வாழ மனதின் அடி ஆழத்திற்குள் பதித்து வைத்தே வாழ்பவன்.

காதல் திருமணம் அவனுடைய கனவு... ஆனால் காதல் எப்போது பிறக்கிறதோ அப்போது தனக்கான தேவதை வரும்போது அவள் மீது கூடைக் கூடையாய் கொட்ட அன்போடு காத்திருக்க்கிறான்… இந்த காதல் மன்னன்..

அப்போ எலிஜிபில் பேட்சுலர்.... ஸ்டில் ஸிங்கிலா.....

மூகிலனின் நண்பர்கள் நான்கு பேர் சுதன் , பிரேம், அனு, மற்றும் சிந்து...

முகிலன் ... அனு.... சுதன் மூவரும் பள்ளிக் காலம் முதலே உற்ற நண்பர்கள்....

பிரேமும் சிந்துவும் கல்லூரி முதலாமாண்டில் ஒரே எண்ணம் பகிர்தல்... குணநலன்களால் ஐவருமாக ஒன்று சேர்ந்துவிட்டனர்....

சிந்துவிற்கு மட்டும் சுதன் மீது ஒருதலைக் காதல் உண்டு அவளாக சொல்லி அவன் ஏற்காவிடில் என்ன செய்வது என தயக்கம்.

( ஓகே மக்களே இந்த தகவலே அதிகம் இனி கதையின் வழியே யாருக்கு யார் ..... ? யார் மனதில் யார். . எல்லாம் பின்வரும் அத்யாயங்களில...

முகிலன்: ஏய் அனு ..சிந்து இவங்க தான் பசங்க சைட் அடிக்க வெயிட் பன்றாங்க நீங்க ஏன் சீக்கிரமா வந்து இவங்க கூட இருக்கீங்க...?

அனு : ஏன் முகில் எங்களுக்கு கண் இல்லையா? இது கோ--எட் பா பசங்களும் வருவாங்கல நாங்கலாம் சைட் அடிக்க கூடாதா...???, என்ன...

பிரேம்: டேய் முகில் சத்தமா இப்டி வெளில பேசாதடா இப்போவே சபரிமலைக்கு போராங்க அடுத்து அலங்கா நல்லூருக்கும் காளைய அடக்க வருவாங்க டா .... நிறைய வாய்ப்பு இருக்கு..... மச்சி. இப்படியெல்லாம் பயம் இல்லாம பப்ளிக் ல டாகுமெண்ட் கிரியேட் பன்னக்கூடாது மச்சி...

அனு : அதுக்கு தான் முகில் அம்மா குடுக்குற சத்துமாவு கஞ்சி மட்டும் பத்தாது டா...எனக்கூறி கண்ணடித்தாள்....

பிரேம் : அனுமா.......

அனு : டேய்... நா காம்ப்ளான் குடிக்க சொன்னேன் டா......

பிரேம் : நம்பனுமா.... ஓகே அனு... விடு விடு பொண்ணுங்க இப்படி ஈசி கோயிங்கா இருந்த ஃபியூச்சர் ஹஸ்பண்ட்ஸ் கு கொண்டாட்டம் தான்.... குடும்பம் குடியும் குடித்தனமுமா சிறப்பா இருக்கும் டா...

அனுவும் சிந்துவும் ஒன்றாக குரல் கொடுத்து கையை மடக்கினர்.....ஓய்ய்ய்ய்

சுதன்: ரொம்ப கரெக்ட் மச்சி... கண்டிப்பா நடக்கும் டா..

முகில்: அது சரி என்னடா இப்டியே மொட்ட வெயில்ல காயலாம்னு முடிவு பன்னிட்டீங்கலா.... நானுமவந்து ஜோதில ஐக்கியமாகிடறேன்.

சிந்து: புன்னகையோடு மௌனம் காத்திருந்தாள். அவள் மனம் மட்டும் விடாது வேண்டிக் கொண்டே இருந்தது...

கடவுளே வரப்போகும் நியூ அட்மிஷன் கேர்ள்ஸ் ல சுதனுக்கு யாரையும் பிடிக்கக் கூடாது. யாரும் சுதனை கரெக்ட் பன்ற அளவுக்கு அழகா இருக்க கூடாது..

அவன் கண்ணுக்கு எல்லாரையும் படிக்காதவன் படத்துல வர அருக்காணி மாதிரி தான் தெரியனும்... பிளீஸ்... பிளீஸ்... உனக்கு பால் குடம் கூட எடுக்கிறேன் ...

சுதனோ... ஓரக்கண்ணால் சிந்துவின் முக மாற்றத்தையும் புன்னகைக்கு பின்னே மறைந்திருக்கும் அவஸ்தையையும் ரசித்துக்கொண்டே அமர்ந்திருந்தான்...
நாம் ஒருவரால் ஆழமாக காதலிக்கப் படுகிறோம் என்பது எத்தனை சுகமானது….

முகிலனே எதிர்பார்க்காத ஒரு நிகழ்வு அங்கே நிகழ்ந்தது....

ஒரு கருநீலச் சல்வார் அணிந்த புன்னகைப் பூ ஒன்று மருண்ட விழிகளுடன் பதட்டமாக விழிகளை சுழற்றிக் கொண்டே பயத்தாலும் அதை முகத்தில் காட்டாது முக பாவங்களை மாற்றியபடியே மெல்ல முன்னே நடந்து வந்து கொண்டிருந்தது.

பாதாம் நிறத்து முகத்தினில் குட்டி பொட்டு.. சந்தனம்... குங்குமம்... திருனீரு என வரிசை படுத்திய வேண்டுதல் திலகங்கலோடு எழில் கலந்த கலையான கன்னத்துக்குழியுடன் ஒரு தென்றல் நகர்ந்து வருவதைப்போல உணர்ந்தான்...

முகிலன் மற்றதை மறந்து அங்கேயே பார்த்திருந்தான்...குழந்தைப் புன்னகை கலையான முகம் அதுதான் அவனுக்குள் தோன்றியது... பெயர் என்னவாக இருக்கும்...
எங்கேயோ பார்த்து பரிட்சையமான முகம்…..
நான் முதல்ல கேட்டா எல்லாரும் நம்மல வேற மாதிரி டார்கெட் பன்னிடுவாங்களே என அவன் தவித்துக் கோண்டிருந்த தருணம்.....

அதை திசைத் திருப்பும் விதமாக முகிலனின் கைப்பேசி வைப்ரேட்டர் மோடில் அதிர்வலையைக் கொடுத்தது அந்த கைப்பேசியில் வந்த செய்தி அவன் புருவங்களை கசங்க வைத்து மனதை பதைக்கச் செய்தது....

வகுப்பு தொடங்க நேரமிருந்ததால் உடனே நண்பர்களிடம் அவசரம் என சொல்லிவிட்டு வேகமாக நேத்ராவின் பள்ளிக்கு கிளம்பினான்....முகிலன்….



__ தொடரும்.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி வினோத்குமார் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top