தீராத் தீஞ்சுவையே...28

Advertisement

Yazh Mozhi

Active Member
பாகம்_2

தீராத் தீ_____27

கல்லூரியில் சிம்போசியம் என்று கதை விட்டுவிட்டு நண்பர்களோடு காலேஜ் கட்டடித்துவிட்டு... சுற்றிய நம் நேத்ராவின் உடன்பிறப்பு அன்புச் செழியன் சென்ட்ரலில் அக்காவை இன்னொரு ஆடவனுடன் பார்த்து முறைத்த தவிப்பை சொல்லில் அடக்கிட முடியாது...

சிறிது காலமாக அக்காவிடம் அவனுக்கு தெரிந்த மாற்றமும் அவள் செய்த தற்கொலை முயற்சியும் சொல்லாமல் தெரிந்தது அவள் காதலில் விழுந்துவிட்டாள் என்று...

அவள் தற்கொலை முயற்சி மேற்கொண்டு போதே அன்பு அத்தனை கோவமாக இருந்தான்...

இத்தனைக்கும் காரணமாக இருப்பவனை ஏதாவது செய்ய வேண்டும் என்று ... ஆனால் நேத்ராவின் மீது இருந்த அன்பினால் அதை பொறுத்துக் கொண்டு அமைதி காத்திருந்தான்...

ஆனால் இன்று தேர்வு என்று கூறிச் சென்ற அக்காவை அடுத்த ஆண் வண்டி ஏற்றிவிட்டு வழியனுப்பியதைக் கண்டும் அன்புச் செழியன் இருக்கும் இடம் பொருள் ஏவல் அறிந்து அமைதி காத்திருந்தான்....

நண்பர்கள் முன்னிலையில் தன் குடும்ப இரகசியங்கள் வெளிப்படுவதோ... அக்காவை அவமரியாதை செய்வதோ... அவனுக்கே எதிர்மறையாகத் திரும்பும் வாய்ப்பு இருந்ததால் அவன் கோவ விழிகளில் காட்சிகளை பதிவிரக்கம் செய்துகொண்டு வேக வேகமாக அதே இரயிலில் ஏறிக்கொண்டு கல்லூரி செல்லும் நிருத்தத்தில் இறங்கிக் கொண்டான்....

நேத்ரா நிம்மதியாக வீடு வந்து சேர்ந்தாள்...
வழமை போல அவளுடைய வேலைகளைப் பார்த்துவிட்டு அறைக்குள் அடைந்து கொண்டு செல்லை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்....

நம்ம நம்பியார் சும்மா இருப்பாரா....

வீட்டிற்குள் நுழைந்த அன்பு நேராக அம்மாவிடம் சென்று சிடுசிடுத்தான்... அக்காவை இன்று யார் தேர்வுக்கு அழைத்துச் சென்றது என்று கேட்டான்....

ஒருவேளை வீட்டினர் யாருக்காவது தெரிந்த ஆளாக இருந்தால் .... என்ற எண்ணத்தில்...

அந்த எண்ணத்தில் கேட்க... அம்மாவின் பதில் அவனுக்கு ஏற்புடையதாக இல்லை...

அவ இன்னைக்கு தனியா தான்டா போனா... கடைசி எக்ஸாம் தானேன்னு தனியாவே போறேனு கேட்டா....

கேட்டா ... நீங்க அனுப்பிடுவீங்களா....

ஏன்டா இப்படி கால்ல சுடுதண்ணி கொட்டின மாதிரி காத்துர....இப்போ என்ன ஆச்சு...

ஆ... ஒன்னும் இல்ல... நேத்ரா எங்க...

அவ ரூம்ல இருக்கா...

சரி எனக்கு காஃபி குடுங்க தலை வலிக்கிது....

ஹாலில் அமர்ந்து ஏதேதோ யோசித்து ஒரு வழியைக் கண்டு பிடித்தான் ...

ஃபேஸ் புக்கில் ஒரு வாரமாக வலைவீசி பிடிக்க முயன்றும் அன்று பார்த்த முகத்தை மீண்டும் பார்க்க முடியவில்லை....

ஒருநாள் நேத்ரா அசந்து தூங்கிய நேரம்
மெதுவாக அவளுடைய ஃபோனை கையோடு எடுத்து வந்துவிட்டான் அன்பு..

கால் லிஸ்ட் அனைத்தும் நீக்கப் பட்டிருந்தது...

இன் பாக்ஸ்... சென்ட் பாக்ஸ் அனைத்தும் எம்டி. . கேலரிக்கு தனியே லாக் போடப்பட்டிருந்தது..

கூகுள் பிளேஸ்டோர் மீதும் இந்த மாதிரியான ஆப்கள் மீதும் கோவமாக வந்தது அன்புவிற்கு...

என்ஜினியரிங் மூலையைக் குடைந்து நேத்ராவின் மெமரிக் கார்டை கழட்டி கவனுடைய மொபைலில் போட்டு அதை இலவச லேப்டாப் உதவியோடு காப்பி செய்துவிட்டு மீண்டும் நேத்ராவின் மொபைலை பழைய மாதிரி அவளுடைய இடத்தில் வைத்து விட்டு பூனையாக நகர்ந்துவிட்டான்.. .

வீட்டில் யாரும் இதை பெரிதுபடுத்துவதில்லை.. மொபைலுக்கு பாஸ்வேர்ட் போட்டால் சந்தேகம் வருமே என்று தனித்தனியே பாஸ்வேர்ட் போட்டு கேலரியை மறைத்தவளுக்கு மெமரி கார்டை பற்றி எப்படி யோசனை எழும்....

இப்படியெல்லாம் அன்புவிடம் மாட்டி முழிக்க நேரிடும் என அவள் என்ன கனவாக் கண்டாள்.....

அன்று அடுத்த நாள் காலையே நேத்ரா பள்ளிக்கு கிளம்பும் போது அன்புச் செழியன் வழிமறித்தான்...

நில்லு நேத்ரா...

என்ன அன்பு...

யாராது....

யாரு.... யாரது....

அன்னைக்கு உன்ன சென்ட்ரல் ல இரயில் ஏத்திவிட்டு டாட்டா காட்டினது....

நேத்ரா முழித்துக்கொண்டு நின்றாள்...

என்ன தைரியம் இருந்தா அவன் ஃபோடோஸ் ஆ ஃபோன்ல வைச்சிருப்ப...

அப்பாவுக்கு தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா... இதுவே முதலும் கடைசியுமா இருக்கட்டும்....

ஒழுங்கா ஒரு டீச்சர் னா... டீச்சர் மாதிரி பிஹேவ் பன்னு.

இனி உன் ஃபோன்ல அவனோட நம்பரோ... போட்டோஸோ... இருந்தா... நான் என்ன பன்னுவேன்னு எனக்கேத் தெரியாது...

(இப்போ சொல்லுங்க இவன நம்பியார் னு சொன்னது தப்பா...... தப்பா...... தப்பா...... தப்பா........)

என்று இயல்பான முக பாவனையோடு யாருக்கும் கேட்காத குரலில் புன்னகை முகமாக சிரித்தபடி வில்லத்தனமாக மிரட்டிவிட்டுச் சென்றான் ..

நேத்ராவிற்கு பகீரென்றானது. மெல்ல நடந்து அவளும் இரயில் நிலையம் சென்றாள்... மித்ரனுக்கு கால் செய்து அவனிடம் நடந்ததைக் கூறினாள்..
மித்து...
சொல்லு அம்மு...
அன்புவிற்கு நம்ம விஷயம் தெரிஞ்சிடுச்சி
ஐயோ.. எப்படி டி....
தெரியல...ஆனா நம்மல நேர்ல பாத்திருக்கான் போல....
எப்படி...
அன்னைக்கு லாஸ்ட் எக்ஸாம்கு போயிட்டு வரும்போது நீங்க ட்ரைன் ஏத்திவிட்டத சரியா சொல்லி தான் கேள்வி கேட்டின்.
அப்றம்...
என்ன அப்புறம்....விழுப்புரம் னு... விளையாட்டு... என் மொபைல் ஃபோன் ல உங்க ஃபோட்டோஸ் இருக்குறது வேற பார்த்துட்டான்...
மச்சான் என்ன அம்மு சொன்னான்... மாமா அழகா இருக்கேனு சொன்னானா
விளையாடாதீங்க நானே பயந்து போயிருக்கேன்....

பயப்படாத அம்மு... நமக்கு ஒரு வேலை மிச்சம்... உன் தம்பி... என் அரும மச்சானே எல்லாத்தையும் வீட்ல சொல்லிட்டா இன்னும் நமக்கு வேலை ஈசி ஆகிடும்ல....

டேய்... நான் சீரியசா பேசுரேன்...

அட... நானும் சீரியஸா தான்டி உருள பேசுரேன்... விடு நீ ஒரு பயந்தாகோலியாச்சே எப்போ இவ வீட்டில சொல்லி... நாப எப்போ ஃபேமிலி மேன் ஆகுரதோனு நானே கடுப்புல இருந்தேன்...
உன் தம்பியே அதுக்காக பிள்ளையார் சுழி போட்டுட்டான் ....

இனி எல்லாம் தானா நடக்கும் அம்மு பயப்படாத நான் இருக்கேன்....

ம்ம்ம்.....
என்னடி நான் அரை பேஜ் அளவுக்கு கட்சி மீட்டிங் மாதிரி பேசுனா நீ அல்ப்பமா அரை இன்ச் ல ம்ம்ம் கொட்ர....

நீ பேசுன பேச்சுக்கு இதுவே ஓவர் போடா.

சரி இப்போ எங்கடி இருக்க

என் பழைய ஸ்கூல் ல டியூப்லிகேட் மெடிக்கல் சர்டிஃபிகேட் கொடுத்துட்டு ரீ_ஜாயின் பன்னப் போறேன்...

ஓ.கே தங்கம் பார்த்து போ...மாமா ஈவ்னிங் கால் பன்றேன்.

ம்ம்ம்....

இதுக்கும் வெரும் ம்ம்ம் தானா. ..

வேற...

ஆடித் தள்ளுபடி மாதிரி ஏதாவது காதல் தள்ளுபடி பன்னக் கூடாதா...

காதலையே தள்ளுபடி பன்னிடலாமா...

ஹலோ.... ..... ஹ.....ஹ... லோ..... .......ஹலோ.... அம்மு டவர் கெடைக்கல நான் அப்றம் பேசுறேன்... பை செல்லம்....

ஹா....ஹா....ஹா.... சரி... சரி... ரொம்ப நடிக்காம ஃபோன வைங்க... பை...

நேத்ராவின் சர்டிஃபிகேட்களை பார்த்து ஒரு ஒப்புக்கு அதை வாங்கிக் கொண்ட நிர்வாகம் உண்மை காரணத்தை கேட்டது...


அதற்கும் நேத்ராவிடம் காரணம் இருந்தது...
தனக்கு டைஃபாய்ட்... மலேரியா... என்று ஏதேதோ கதை சொல்லி மீண்டும் வேலையை வாங்கிவிட்டாள்...

அவளுடைய இணக்கமும் வேலையில் அவளுடைய அர்ப்பணிப்பும் அவர்களை மீண்டும் வேலை தர வைத்தது...

இப்படியே நேத்ரா ஒரு வாரம் அமைதியாக வேலைக்கு செல்வதும் வருவதுமாக இடையே காதலைக் கன்டினியூ செய்து கொண்டிருந்தாள்...

அன்று மிரட்டி விட்டு சென்ற அன்பு... இப்போது மெமரி கார்டில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில்.. மித்ரனை ஃபேஸ் புக்கில் கண்டறிந்து அவனை பற்றிய முழு தகவல்களைத் திரட்டினான்...

நேத்ராவிற்காக மித்ரன் போட்ட புகைப்படங்கள் சிலவற்றை பதிவிரக்கம் செய்து கொண்டு ருத்ர மூர்த்தியாக வீட்டிற்கு சென்றான்...

சமையலறையில் பிசியாக இருந்த லலிதாவை வேகமாக அழைத்து வந்து அவளிடம் அதாரப் பூர்வமாக ஃபோடோஸ் மற்றும் நேத்ராவின் மொபைலில் கண்ட ஆதாரங்கள் அனைத்தையும் காட்டி... கலகம் செய்தான்....

அவன் காட்டிய புகைப்படம் மற்றும் சில ஆதாரங்களில் லலிதா ஒருகணம் அதிரந்து நின்று விட்டார்....

((வந்த வேலைய சிறப்பா முடிச்சிட்டியே கண்ணா..)

நாராயண.........
நாராயண......
__தொடரும்…
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி வினோத்குமார் டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
என்னப்பா உங்கள் பெயரை மாத்திட்டீங்களா, காயத்ரி டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top