தீராத் தீஞ்சுவையே...26

Advertisement

Yazh Mozhi

Active Member
தீராத் தீ_____26

ஒவ்வொரு முறையும் சந்தித்த போதும் அருகருகே பார்க்க முடியாத ஏக்கத்தோடு தவித்தனர் இருவரும்..

இரு முறை இயல்பாக சொதப்பியது.. இம்முறை மித்ரன் ஃபோனை எடுக்காமலே சொதப்பினான்....
நேத்ராவின் கண்கள் கண்ணீரை புத்தகங்களின் பக்கங்களில் சொட்டிக் கொண்டு இருந்தது..
இதை எதிர்பாராத மித்ரன்... இன்ப அதிர்ச்சி தரலாம் என வந்தவன்.. நேத்ராவின் குழந்தைத் தனமான அழுகையைக் கண்டு சிரித்தான்...
அவனுடைய புன்னகை அவளை மேலும் வாட்டியது.....
கண்களை துடைக்க மறந்து அவன் செய்த இந்த விளையாட்டுத் தனத்தை இரசிக்க முடியாமல் மேலும் தேம்பினாள்...
ஏய்... வாய மூடு டி . இப்படி அழுதா... பாக்குறவங்க நம்மல தப்பா நினைபாங்க டி...
அதோட... நீ எக்ஸாம்கு பயந்து அழுகுறதா நினைச்சி உன்னகிட்ட பிட் இருக்கானு செக் பன்ன போறாங்க பாரு... என்று கூறிக் கொண்டே...
அவளை நெருங்காமல் சற்றே தள்ளி அமர்ந்தான் ..
அவன் கூறியதில் மூக்கில் வேர்த்த நேத்ரா... புத்தகத்தை அவன் மடி மீது வீசினாள் .
நேத்ராவிற்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டு... டென்ஷன் ஓ ... கோவமோ வந்தால்... பசியும் கூடவே வந்துவிடும் ...
பசி வந்துவிட்டது..... அவளுடைய கைப்பையைக் குடைந்து கண்டுபிடித்துவிட்டாள் ..
வேகமாக புத்தகத்தை வீசியவளுக்கு முதல் முறை மித்ரனை இத்தனை நெருக்கத்தில் பார்த்தது. . இப்போது தான் நினைவுக்கு வந்தது...
அந்த அழுகையிலும் ஒரு சில இல்லை.... இல்லை... பல துளி வெட்கம் கலந்து தலையை குனிந்து கொண்டால்...
மெசேஜ் ல் காதலித்து .. மொபைலில் பேசினாலும்... முதன் முதலாக நேரில் சந்தித்து நெருக்கத்தில் பேசிட வாய்ப்பு கிடைத்தது இருவருக்கும் இதுவே முதல் முறை என்பதால்... இருவருக்கும் பேச வார்த்தைகளே வரவில்லை...
மெல்லிய ஒரு புன்னகையும் மௌனமும் தான் ஆட்சியாளர்களாகவும்.... காட்சியாளர்களாகவும் இருந்தது அங்கே...
இருவருக்கும் நேரில் பேச ஆயிரம் இருந்தது... ..ஆனால் வெட்கமும் மௌனமும் தான் மீன்கடையாய் கூச்சலிட்டுக் கூப்பிட்டுக் கொண்டிருந்தது.
அந்த டென்சனில் நேத்ரா வேகமாக வெட்கத்தை மறைக்க நேரத்தை பயன்படுத்திக் கொண்டாள்... எழுந்து கை கழுவினாள்...

கொண்டுவந்து நான்கு இட்லிகளையும் காரச்சட்னியையும் வெளுத்துக் கட்டினாள்..
மித்ரனை ஒரு வார்த்தைக் கூட சாப்பிடுகிறாயா என கேட்கவில்லை... மறதியா அல்லது பதட்டமா.... அதை அவளே கவனிக்கவில்லை ...
ஆனாலும் இதை மித்ரன் கவனிக்க தவறவில்லை...புன்னகையோடு அவள் சாப்பிடும் அழகை இரசித்துக் கொண்டான்.... அவனது பசி அவனுக்கு மறந்தே போனது. அவளை பார்த்த மகிழ்ச்சியில் பறந்தே போனது ..
அவள் தூக்கி வீசிய புத்தகத்தில் அவனுடைய பெயரை எழுதி வைத்தான்..
குட்டி குட்டி எழுத்துகளாக அவை இன்று ம் நேத்ராவிடம் பத்திரமாய்....
சாப்பிட்டு கை கழுவியவள்... மௌனமாக அவனிடமிருந்து புத்தகத்தைப் பெற்றுக்கொள்ள... அவன் ஒன்றுமே பேசவில்லை... அவளும் படிக்கிறேன் பேர்வழி என பக்கங்களை வேக வேகமாக புறட்டி... பயத்தில் மறந்த பாடத்தை மெல்ல நினைவில் மீள்பதிவு செய்தாள்... திடீரென நினைவு வந்தவளாக நீங்க சாப்டீங்களா .... எனக் கேட்டாள்..
அவளுடைய நினைவாற்றலை நினைத்து மித்னனுக்கு இம்முறை பலமாகவே சிரிப்பு வந்தது... சத்தமாக சிறிதாக சிரத்தவன் இல்லை என்று தலையை மட்டுமே ஆட்டினான்..
((என்ன செய்வது நேத்ரா தான் தரமான டியூபாலைட் ஆச்சே... லேட்டா தான் எரியும்

இவளுக்கு ஐயோ... என்றானது.காலைல.... என்றாள்... அதற்கும் மித்ரன் தலையை மட்டுமே ஆட்டினான்… இல்லை என்று...

நேத்ராவிற்கு அவள்மீதே கோவம் வந்தது...நீங்க சாப்டு வாங்க நான் வெயிட் பன்றேன்...
அவன் மாறாத புன்னகையோடு அவளிடம் வேண்டாம் என தலையை ஆட்டிவிட்டு. அவளை விழிகளால் தின்றுகொண்டிருந்தான்...

நேத்ராவிற்கு தேர்வுக்கான நேரமும் நெருங்கிட.

மிதரனே எந்த அறையில் அவளுக்கான தேர்வு நடைப்பெறுகிறது என பார்த்து வழியனுப்பினான்...

நீ வர வரைக்கும் நான் தியேட்டர் போகட்டுமா...
இவளுக்கு மீண்டும் பயம் தொற்றிக் கொண்டது... திரும்பி நின்று பார்வையாலேயே வேண்டாம்... என்னை தனியே விட்டுப் போகாதே எனக் கெஞ்சினாள்...
அவள் கூறும் முன்பே அவளுடைய வார்த்தைகளை உணர்ந்த மித்ரன்.. நான் இங்கேயே உனக்காக வெயிட் பன்றேன்.... எனக் கூறிப் புன்னகை மாறா முகத்துடனே அவளை ஆல் தி பெஸ்ட் சொல்லி அனுப்பினான் ..
அறைக்கு சென்றவளுக்கு பதட்டமாகவே இருந்தது... மித்ரன் போய்விடுவானோ.. வாயத் திறந்து ஒரு வார்த்தை சொல்லிட்டே வந்திருக்கலாமோ... என மனதாரப் புலம்பித் தவித்தாள்...

தேர்வு தொடங்கி வேக... வேகமாக இரண்டு மணி நேரத்திற்குள்ளாகவே காக்காய் கிருக்கலாக கிருக்கித் தள்ளிவிட்டு மித்ரனை காண வெளியே வநாதாள்..
கைப்பேசியைத் தேடி எடுத்தவள் முதலில் மொபைலை எடுத்து கால் செய்து எங்க இருக்கீங்க என்றாள். ....

இங்கே தான்...
இங்கேன்னா... எங்க..
நீ எங்க விட்டுட்டுப் போனியோ அங்கேயே தான் டி இருக்கேன் ... வா...
வேக வேகமாக சென்று பார்த்தாள்...
அவள் கடைசியாக எங்கே அவனை அமர்ந்திருக்க ..... பார்த்துவிட்டு சென்றாளோ... அங்கேயே தான்....அவளுக்காக நகராமல்.....அமர்ந்திருந்தான்..
பச்சப்புள்ள சாப்பிடக் கூடப் போகாம கொலப் பட்னியா... சேம் ப்ளேஸ்.... சேம் சிட்டிங்...
நேத்ராவிற்கு சங்கடமாகப் போனது... ஐயோ... சாப்பிடக் கூடப் போகாம இப்படியே இங்கயே இருக்காரே... என்று வேகமாக பக்கத்தில் நெருங்கியவள் எந்த தயக்கமும் இன்றி அவன் அருகில் அமர்ந்து கொண்டாள்...

அவனுக்கு மிச்சம் மீதி இருந்த சோர்வும் காணாமல் போனது..
இருவரும் சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்தனர்..... இம்முறை மித்ரன் வாயைத் திறந்தான்...
பேசு .... அம்மு... ஃபோன் ல மட்டும் என்ன போட்டுத் தாக்குற...
நேர்ல வாயே தெரக்க மாட்ர. .
அவளுக்கு மௌனமாக புன்னகைக்க மட்டுமே தெரிந்தது ..
என்ன பேசுவது... எப்படி பேசுவது எதுவுமே புரியாத நிலையில் சிக்குண்டு வேட்கி வழிந்தாள்..
இருவரும் மெல்ல தேர்வு வளாகத்தை விட்டு நகர்ந்தனர். வெளியே வந்தனர்... மித்ரன் சாலையைக் கடக்கும் சாக்கில் அவளுடையக் கைகளைப் பற்றிக் கொண்டான்.
மித்ரன் கைகளை பிடித்து பத்திரமாக சாலையைக் கடந்தது...
அவளுக்கு பிடித்திருந்தது. ஆனால்......அவளுடைய பெண்மைக்கும்... வெட்கத்திற்கும் பிடிக்கவில்லை.. சாலையை கடந்தவுடனே விரல்களை விடுவித்துக் கொண்டு மித்ரனை விட்டு ஒரு அடி பின்னே நடந்தாள்..

அவன் கோவம் காட்டவில்லை... புரிந்து கொண்டு புன்னகை மட்டுமே பேசினான்..
அவளை பத்தகரமாக பஸ் ஏற்றி அவன் தனி இருக்கையில் அமர்ந்து கொணாடு அவளை கவனித்துக் கொண்டே வந்தான்...
அவளோ... அவன் இடமிருந்தும் தன் பக்கத்தில் அமரவில்லையே என மனதிற்குள் ஏங்கிக் கொண்டிருந்தாள்..
இறங்கி இரயில் நிலையம் சென்றனர்...
அவளை சற்றே பயம் காடாட எணாணிய மித்ரன்..பஸ்ஸில் வைத்த அலாரப்படி ஃபோன் ஒலித்தது...
அவன் அலாரத்தை தான் அணைத்தான்... ஆனால் கால் வந்ததைப்போல பேசி நேத்ராவை பயங்காட்டிட எண்ணினான்...
அதே போல அவளும் அப்படியே நின்று விழிவிரிப்பாள்... எனக் காத்திருக்க...... அவளோ நிதானமாக நடந்து வந்தாள்...
அதாகபட்டது...
மித்ரன் இரயில் நிலையம் செல்லும் வழியில் அடிக்கும் படி நிமிடத் தவணையில் அலாரம் செட் செய்து அடிக்க விட்டான்.
அதை எடுத்து அவனே தானாகப் பேசினான்... ஹலோ ஆ... சொல்லு மச்சான்... சரிடா.. ஓ.கே ..டா.. எல்லாம் ரெடி டா... நீ டிக்கெட் ஓட.. வெயிட் பன்னு மத்தத அப்றமா பார்த்துக்கலாம்....நாங்க வரோம்......
சரி டா... ஓ.கே. டா... கல்கத்தா..தானே டபிள் ஓகே.. டா... சரி டா வை .. நான் பத்து நிமிஷத்துல ஆளோடட வரேன்...
ஓரக்கண்ணால் அவள் என்ன செய்கிறாள் என நோட்டம் விட்டான்..அவள் தலை குனிந்து புன்னகையோடு அவன் அருகில் வந்து கொண்டிருந்தாள்...
என்ன இவ பயப்படாம வராளே .... என்று மீண்டும் ஏதாவது செய்யலாமா என யோசிக்கும் முன் அவள் வேகமாக முன்னே நடந்தாள்..
இப்போது அவன் பின் தொடர்ந்தான் .. அவளா டிக்கெட் கவுண்டர் இல் அவனுக்கு டிக்கெட் எடுத்தாள்...

அவன் ஏன் வேஸ்ட்டா டிக்கெட் எடுக்குர செல்லம்.....நமக்கு ஆல்ரெடி டிக்கெட் எடுத்துட்டு என் ஃபிரண்ட் வெயிட் பன்றான்.. டியர்... டைம் வேஸ்ட் பன்னாம வா வா...
அது எப்படிங்க உங்களுக்கு மட்டும் லோக்கல் ட்ரைன் போற பிளாட்ஃபார்மா ல கல்கத்தா க்கு எஸ்ப்ரஸ் போகுமா..

நான் பயந்தாகோலிதா. ஆனா மக்கு சாம்பிராணி இல்ல...வீணா மொக்க வாங்காம வந்து சேருங்க...
அவள் சொல்லிவிட்டு புன்னகையோடு கடந்து சென்றாள் .... அவன் பல்ப் வாங்கிய மகிழ்ச்சியில் தலையை கோதிக் கொண்டு காலை தரையில் தட்டி வேக எட்டுகளோடு அவளைப் பின் தொடர்ந்தான்...
க்க்ம்ம்....ம்ம்... தொண்டையைக் கனைத்துக் கொண்டு முன்னே வந்தவனோ... நீ... நீ .. உஷாரா இருக்கியானு செக் பன்னேன் ... என்றான்...
(கீழ விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலயாமா.....
இம்முறை இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து பலமாகவே சிரித்தனர்...
பிரியும் நேரம் விரைவாக வந்து கொண்டே இருந்தது.. நேத்ராவிற்கான இரயில் அங்கே வருவதற்கான செய்தியை கம்ப்யூட்டர் பெண்மணியின் குரல் அழகாக எடுத்துரைத்தது. .
மித்ரனுக்கான இரயில் முன்பே வந்து நின்று .... காந்திருந்து .....கிளம்பியும் போய்விட்டது...

இவளை வழியனுப்பிவிட்டு அடுத்த இரயிலில் செல்ல மௌனமாக காத்திருந்தான் ...
நேத்ராவின் இரயில் தண்டவாளத்துடன் போட்டி போட்டு அவளை நெருங்கிக் கொண்டிருந்தது..
மித்ரன் மெதுவாக பனித்த குரலில் கேட்டான்.... அம்மு....

ம்ம்ம்.... நிமிர்ந்து பார்த்தாள்...
அடுத்து மாமாவ பார்க்க எப்போ வருவ....

அவளுக்கு தெரியவில்லை...சில நொடிகள் முழித்துக்கொண்டு நின்றாள். . தெரியவில்லை என உதடு பிதுக்கி நின்றாள்...
அவனுக்கு புன்னகையோடு வருத்தமும் கலந்தே வந்தது.. ஃபோன்ல மணிக்கணக்கா பேசுவ... இப்போ நேர்ல இந்த ஆறு மணி நேரத்துல உனக்கு என்கிட்ட பேச ஒன்னுமே இல்லையா...

அமைதியாக தலைகுனிந்து நின்றாள் பிரிவின் வர்ணம் அவளையும் பூசிக்கொண்டது....
தெரியலையே என்றாள்... அவன் அவளுடைய விரல்களை பத்திரமாக பிடித்துக்கொண்டான்... அந்த பிடித்தத்திலே அன்பு... ஆறுதல்... தவிப்பு... பாதுகாப்பு... அனைத்தும் இருந்தது...

இரயில் வந்து நின்றதும் அவளை ஏற்றிவிட்டு கிளம்பும் வரை காத்திருந்தான்.

இரயில் மெல்ல நகர்ந்தது...இருவரையும் வெறுமை சூழ்ந்து கொண்டது...
கையசைத்து இருவரும் பிரிந்தனர்.
இவருக்குள்ளும் மீண்டும் எப்போது சந்திப்போம் என்ற தவிப்பில் பிரிந்தவர்களை....... குரோதமாக முறைத்த அந்த இரு விழிகள்...அதை இவர்கள் கவனிக்கவில்லை....

அந்த விழிகளுக்கான நாரதர் கலகத்தின் விளைவு.... நடுக்கமா.... நன்மையா...

இவர்கள் காதல் எப்படி சேர்ந்து பின் இருவரது வாழ்விலும் ஏற்பட்ட அந்த தழும்பிற்கான திருப்பங்கள் என்ன… முகிலன் யாழினி என்ன ஆனார்கள் அவர்கள் காதல் சேர்கிறதா அல்லது வினைப்பயனால் பிரிகிறதா… எல்லாம் அடுத்த பகுத___2 ல்… உங்களுக்காக….

___ தொடரும்…
 

banumathi jayaraman

Well-Known Member
யாரும்மா அது ஸ்டேஷன்ல இரண்டு பேரையும் முறைச்சு பார்த்தது?
வசந்தாவா?
ஆனால் அந்தம்மா எங்கே இங்கே வந்துச்சு?
இந்த மித்ரன் நேத்ரா ஜோடியே ஊருப்பட்ட சொதப்பல் பண்ணுதுங்க
இதிலே இன்னொரு ஆள் வேற முறைக்குறதா?
அடுத்த லவ்லி அப்டேட் சீக்கிரமா கொடுங்க, காயத்ரி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top