தீராத் தீஞ்சுவையே...25

Advertisement

Yazh Mozhi

Active Member
தீராத் தீ_____25

மித்ரன் விடிந்தால் கல்யாணம் என்றதும் நேத்ராவிற்கு உண்மையிலேயே பதட்டமாக இருந்தது...

ஒருவேளை நிஜமாகவே கல்யாணம் தானா என்று எதிர்பார்ப்பும் இருந்தது... என்ன சொல்லி இவர்களை வீட்டில் சம்மதிக்க வைத்து விட்டு நான் புரசைவாக்கம் வரை செல்ல.....

இந்த யோசனை எப்போது தூக்கத்தில் முடிந்தது என்று அவளுக்கேத் தெரியாது....
ஒருவழியாக....
விடிந்ததும் அம்மாவிடம் சென்று நின்றாள்... அம்மா...
என்னம்மா ...
இன்னைக்கு புரசைவாக்கம் வரைக்கும் போகனும்....
ஏன்
அது...நா... ஹ.ஹா...எனக்கு எம்.ஏ எக்ஸாம்ஸ்கு ஃபீஸ் கட்டனும்... அப்போ தா ஹால்டிக்கெட் வரும்மா..
அடுத்த மாசம் தானே எக்ஸாம்ஸ்... இப்போ என்ன..
ம்மா ... தெரியலம்மா... மொபைல் ல மெசேஜ் வந்தது மா.... அதான்...
சரி எத்தனை மணிக்கு....
அ... அது பத்... 10.00 மணிக்கு மா...
சரி கிளம்பி தயாரா இரு...
சரிம்மா....
அங்கே மித்ரன்.....
டேய்.... சரவணா சத்யா வந்துடுவாங்கல்ல...
வந்துடுவா ... டா...
ஆமா என் ஆளுக்காக நீ ஏண்டா ஆவளா காத்துகிட்டு இருக்க...
டேய்... நான் காத்துகிட்டு இருக்கேன் தா... ஆனா உன் ஆளுக்காக இல்ல . என் ஆளுக்காக...
அவங்க ஏன்டா இப்போ ...இங்க வரனும்...
டேய் மாங்கா.... நானும் கல்யாணம் பன்னிட்டு செட்டில் ஆக வேணாமா... எங்க அம்மா மறுமக வேணும்னு ஒத்த கால்ல நிக்கிராங்க டா மச்சி....
டேய்... மச்சி... சொல்லவே இல்ல பார்த்தியா...
ஆமா......உன் நேம் லிஸ்ட் ல வரவே இல்லையே....
டேய்... டேய்... நீ மாங்கா இல்ல டா .. சரியான மங்குனி அமைச்சரா இருக்க... இத சாக்கா வைச்சு என் ஆள பாக்கலாமேனு ஒரு ஆசைக்கு சாட்சி கையெழுத்துப் போட கூப்டேன் டா...
அதுக்காக சத்யாவும் அவளோட ஃபரண்ட்ஸ் ஆ கூட்டிட்டு வரா டா ..
வரட்டும் போடா ... எனக்கு என் ஆள் வந்தா போதும்... நீ மொக்க போடமா மாப்ள மாதிரி இரு போ....
மணியோ... 10.00... தாண்டி 11.30 .... வரை ஆகியும் நேத்ரா வரவில்லை...
மித்ரன் சோர்ந்து நொந்து... நூடுல்ஸ் ஆனான்...
இவளுக்கு வர விரும்பும் இல்லையா... இவள நம்பி நான் எதையுமே செய்ய முடியாது போலயே....
அந்த நேரத்தில் சரியாக மித்ரனின் ஃபோன் சட்டைப்பையில் கிச்சு கிச்சு மூட்டியது...
சாரிங்க... நான் இப்போ புரசைவாக்கம் ல தான் இருக்கேன்... ஆனா என்னால ரிஜிஸ்டர் ஆஃபிஸ் வர முடியாது கூட அம்மாவும் இருக்காங்க மித்து...

என்னது.......... அம்மாவா....
இப்போ எங்கடி அம்மு இருக்க...

நாங்க இன்னும் ஒரு அரை மணி நேரத்ல எம்.ஏ செகண்ட் இயர் பீஸ் கட்டிட்டு புக்ஸ் வாங்கிட்டு கிளம்பிடுவோமே....
மித்ரனுக்கு கடுப்பாக வந்தது...
இருந்தாலும் பொறுமையை இழுத்துப் பிடித்துக்கொண்டு சரி முடிஞ்ச வரைக்கும் லேட் ஆ கிளம்பு நான் கல்யாணம் முடிஞ்சதும் உடனே ஸ்டேஷன் வரேன்...
கல்யாணமா... யார் கூட...

சத்யாக்க சரவணன் கூட டி.. என் மக்கு பொண்டாட்டி...
அப்போ நமக்கு....
ஆமான்டி...
நீ வராமா நான் என்ன இங்க பெருக்குர ஆயாக்கா தாலி கட்ட முடியும்...
ஏன் திட்ரீங்க...
ச்சா .. ச்சா... இல்லடா செல்லம் .. சும்மா விளையாட்டு க்கு தங்கம்... நீ முடிஞ்ச வரைக்கும் கொஞ்சம் லேட் பன்னும்மா... பிளீஸ்... மாமா வந்ததுக்கு கல்யாணம் தான் ஆகல... கண்ணுலயாவது பார்த்துட்டு போறேன் டி பிளீஸ் ...

ம்ம்ம் ம்ம்ம்... சரி..
குட் ....
அங்கயே ஸ்டேஷன் ல வெயிட் பன்னு நான் வந்துர்ரேன்...

சரி.. .
..........
நான்கு மணி நேரத்திற்கு முன்பு நேத்ராவின் வீட்டில்....
ம்மா.... நான் கிளம்பிட்டேன் மா..
இரு ஒரு பத்து நிமிஷத்துல நானும் வரேன்..
நீ சாப்டுகிட்டு இரு..
நீங்க எதுக்கு....
அப்பாவும் வேலைக்கு போய்ட்டாங்க...
அன்புச் செழியனும் காலேஜ் போய்ட்டான். .

நீ எப்போ டி அவ்வளவு தூரம் தனியா போன...
அப்பாக்கு தெரிஞ்சா திட்டுவாரு அதான் நான் வரேன் இரு ..
ம்மா... நானே போறேன் மா...
நான் தான் சொல்றேன் ல போ... சாப்டு ..
சரிங்க ம்ம்மா....
நேத்ராவுடனே அவளுடைய அம்மா லலிதாவும் கிளம்பிவிட்டார் .
நேத்ராவிற்கு ஒன்றுமே புரியவில்லை... கட்டிய சாதாரண மெரூன் கலர் சில்க் காட்டனுடன் கனவுகளை மூட்டை கட்டிவிட்டு மித்ரனிடம் பேச முயற்சி செய்தாள்..
ஆனால் அம்மா படிக்க தெரிந்தவர்.... மாட்டினால் அவ்வளவு தான்...
அதை விட நேத்ரா நல்ல பயந்தாகோலி... போனை எடுத்தவள் மெசேஜ் அனுப்பலாமா... வேண்டாமா என்ற யோசனைக்கு நடுவே இரயிலின் தாலாட்டில் அமைதியாக தூங்கிவிட்டாள்..
விழித்து எழுந்ததும் தான் அவளுக்கு நினைவு வந்தது இன்னமும் மித்ரனிடம் எதையுமே தெரிவிக்கவில்லை என்று ...
ஒரு வழியாக பஸ் பிடித்து சென்றவர்கள் புரசைவாக்கத்தை அடைந்து அழகப்பா பல்கலைக் கழகத்துள் நுழைந்து... காத்திருந்தனர்..
நேத்ராவிற்கு கோவம் கோவமாக வந்தது...
மித்ரனை நம்பி வந்ததற்கு இப்போது பொய்மேல் பொய்யாக சொல்ல வைத்துவிட்டானே...
இப்போது என்ன சொல்லி சமாளிப்பது என்று யோசித்தவள் அவர்கள் வந்து அழைக்கும் முன் அவளே வேகமாக சென்று இரண்டாவது ஆண்டிற்கு தேவையான பீஸை கட்டிவிட்டு புத்திங்களைப் பெற்று வருவதாக அன்னைக்கு சைகை செய்துவிட்டு வேக வேகமாக மித்ரனுக்கு மெசேஜ் ல் நிலைமையை தெரிவித்தாள்...
அவனுக்கு அவனை நினைத்தே பரிதாபமாக இருந்தது... சரி முடிந்தவரை தாமதிக்க முயற்சி செய் என்று கூறிவிட்டு வேகமாக கல்யாண நிகழ்வுகளுக்கு தயாரானான்...
அங்கே ரிஜிஸ்டர் ஆஃபிஸ்சில் சத்யாவகற்கும் சரவணனுக்கும் வெற்றிகரமாக காதல் திருமணம் அரங்கேரி கேளிக்கை கொண்டாட்டங்கள் தொடங்கியது...
அடையார் ஆனந்த பவனில் மாலை ட்ரீட் என நண்பர்களிடம் அழைப்பு விடுத்துவிட்டு எல்லோரும் மணமக்களை கேளி பேசி கலைந்தனர்...
மிதாரன் வேக வேகமா கிளம்ப முயற்சி செய்தும் தாமதம் ஆனது .
கடைசி நிமிஷத்தில் இரயில் நிலையம் வந்து சேர்ந்தான்...
நேத்ராவோ அவனுக்காக காத்திருந்து காத்திருந்து ஃபோனும் செய்ய முடியாமல்... மெசேஜ் லும் தகவல் தெரிவகக்க முடியாமல் அம்மாவின் கண்ட்ரோலில் கட்டுண்டு திருதிருவென முழித்துக்கொண்டு நின்றாள்..
இரயிலும் இதோ .. இதோ... இதோ.... என வந்துவிட்டது..

மித்ரன் ஓடி வந்து இரயில் ஏறுவதைப்போல நெருங்கினான்..
ஆனாலும் பாவம் நேத்ராவும் அவள் அன்னையும் நின்றது பெண்களுக்கான பெட்டி..

அவனில் நெருங்கவும் முடியவில்லை... அவளை பார்க்காமல் போகவும் முடியவில்லை...
இரண்டு பெட்டிகள் தூரமாக நின்று யாரோ போல ஏக்கமும் தவிப்பும் நிரம்ப பார்த்தான்
அவளும் தேடித் தேடி ஒரு வழியாக வண்டியில் ஏறும்போது தான் அவனைப் பார்த்தாள்... ஒரு நொடி... ஒரே ஒரு நொடி... இருவருக்கும் கண் கலங்கியது...

இவர்களின் வேதனைப் புரிந்தோ என்னவோ.... இரயில் ஒரு சில நிமிடம் தாமதித்து கிளம்பியது...
இருவரும் பார்வையில் ஒருவரை ஒரு செல்லமாக சாடிக் கொண்டனர்....

அடுத்தடுத்து இரயில்கள் கிளம்ப நேர்ந்தது...

மித்ரன் ஒரு புறமும் நேத்ரா ஒரு புறமும் இரயில்கள் இட வளமாக எதிரேதிர் திசையில் நகர்ந்து எதையோ இருவருக்கும் உணர்த்த முயன்றது.
இருவரும் உணர முயன்று தோற்றனர்..

அன்று இரவு இருவரும் மாறி மாறி உன்னால் தான்... உன்னால் தான்... என சண்டையிட்டுக் கொண்டனர்.... கடைசியில் பல ஐ லவ் யூக்களும்... சில சாரிகளும் சண்டையை சமாதானம் செய்து வைத்தது..

நேத்ராவின் தேர்வு நாள் வந்துவிட்டது. .. ஆனாலும் இருவரும் சந்திக்க கூடாது என்றே விதி இருந்ததோ என்னவோ...

வழக்கம் போல நேத்ராவின் துணைக்கு தம்பி... அம்மா.... அப்பா... என்று மாறி மாறி.. ஆளுக்கு ஒருநாள் துணையாக சென்றனர்...
மித்ரன் நொந்து போய் .... மாமனார் வீட்டை கழுவிக்கழுவி ஊற்றினான்.
ஒருவழியாக நேத்ரா இறுதித் தேர்வுக்கு தனியை செல்கிறேன் என அடம் பிடித்தாள்..
எனக்கு வழி தெரியும் நானே செல்கிறேன் என்று போராடி ஒரு வழகயாக தேர்வுக்கு செல்ல கிளம்பினாள்...
அவளுடைய புதிய தனிய பயணம் அவளை மேலும் மேலும் அச்சுருத்தியது.
அதற்கு மேல் மித்ரன் ஃபோனை எடுக்காமலே அச்சுருத்தினான்...
அவளுக்கு பயம் நெஞ்சை அழுத்தியது...முதல் முறை எப்படி தனியே செல்வது என்ற பயமே படித்ததெல்லாம் மறந்தே போனது...
மித்ரன் ஒரு காலையும் அட்டர்ன் செய்யவில்லை... ஒரு மெசேஜ் யும் எடுக்கவில்லை
பரிச்சைக்கான தளத்திற்குள் நுழைந்தும் அவன் ஃபோன் எடுக்காததால் ஏமாற்றத்திலும் தனிமையிலும் கண்ணைக் கரித்தது.....
கண்கலங்க புத்தித்தை விரித்து வைத்திருந்தவளின் கண்களுக்கு நேரே .....
ஒரு கை கைகுட்டையை நீட்டி கேளிப் புன்னகையோடு நின்றிருந்தது..
கைகுட்டையை பார்த்து நிமிர்ந்த நேத்ராவிற்கு கண்ணீர் அதிகமாகியது….
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி வினோத்குமார் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top