தீராத் தீஞ்சுவையே...24

Advertisement

Yazh Mozhi

Active Member
தீராத் தீ____24

ஒருவழியாக நேத்ராவின் கண்ணீரை புன்னகையாக மாற்றும் வரை பேசிப் பேசி அவளை பழைய நேத்ராவாக மாற்றினான்... மித்ரன்..

இனியும் அவளைக் காணாமல் இருக்க முடியாது என்ற தவிப்பு உள்ளத்தை அரிக்கத் தொடங்கியது...

முதலில் அவளுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்க வேண்டும் என்று ஆசைக் கொண்டான்...

யார் கண் பட்டதோ உருகி உருகி வழிந்த காதல் இந்த மூன்று மாதம் பாலையாக வறண்டு வாட்டியெடுத்து கன்னங்களை உப்புப் பூக்கச் செய்து கரித்துக் கொட்டியது...

இனியும் இந்த பிரிவை ஏற்க முடியாது என்று உறுதி கொண்டவன் வேகமாக அலுவலக தலைமையகத்துக்கு மெயிலை அனுப்பினான்...

இல்லாத சித்தப்பாவிற்கு நெஞ்சுவலியை வரவைத்தான்.... அவசர அவசரமாக வேலையை முடித்துவிட்டு மூட்டையைக் கட்டிக் கொண்டு.. விடியும் முன்பே வீட்டுக் கதவைத் தட்டிவிட்டு காத்திருந்தான்....

வந்து கதவை திறந்த வசந்தியம்மாளுக்கு தலைகால் புரியவில்லை.... புதிதாக நிறைய நல்ல வரண்களை தேர்வு செய்துவிட்டு பிள்ளைக்காக வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தவராயிற்றே....

மித்ரனைக் கண்ட பூரிப்பில் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.... வாடா .... வாடா... என்று வாஞ்சையாக வரவேற்று....
உள்ளேக் கூட்டிச் சென்றார்...

உள்ளேச் சென்றவன் அசதியோடு படுத்துவிட்டான் ..

வசந்தாவோ விடிந்ததும் மகனுக்கு பிடித்த வண்ணம் சமைத்து அசத்திவிட்டு..... தான் தேர்ந்தெடுத்த வரண்களை அமலுக்கு கொண்டுவரக் காத்திருந்தார்...

விடியல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக விடிந்தது....

விடிந்தும் விடியாத காலைப்பொழுது மித்ரனின் உறக்கத்திற்கு தடை சொல்லி எழுப்பி விட்டது.... காதல்....

அதற்கு மேல் எத்தனை முறைப் புறண்டும் உறக்கம் வருவதாக இல்லை...

நேரத்தைக் கடத்தி ஒருவழியாக ஆறு மணிக்கு நேத்ராவை அழைத்தான்...

அம்மு நாம நேர்ல மீட் பன்னலாமா பிளீஸ்...

நேத்ரா முடியவே முடியாதென ஒற்றைக்காலில் நின்றால்...

நீங்க நினைச்சா பேசுவீங்களாம் இல்லைனா ஜாதகம் ஜோசியம் னு காரணம் சொல்லிட்டு போவீங்களாம்...

எல்லாத்துக்கும் நான் ஏமாளி மாதிரி தலைய ஆட்டனுமா... என்னால எங்கையும் வர முடியாது... என்று கராராக சொல்லிவிட்டு ஃபோனை கட் செய்தாள்..

மித்ரனுக்கு முகத்தில் அறை வாங்கிய உணர்வு....
அமைதியாக அமர்ந்திருந்தான் ....

நேத்ராவகற்கு ஃபோனை கட் செய்த பிறகு தான் புரிந்தது அவன் ஏதும் பேசாமல் மௌனமாக இருந்ததும்... தான் படபடவென பேசிவிட்டு ஃபோனைக் கட் செய்ததும்...

நேற்று மாலை வரை நன்றாகப் பேசி சிரிக்க வைத்தவனை இன்று இத்தனைக் கோவமாக பைசிவிட்டோமே என்று அவளுக்கே மனம் ஒரு மாதிரியாக உள்ளுக்குள் தொய்வடைந்தது....

அவன் பதிலுக்கு பதில் பேசியிருந்தால் கூட ஒன்றும் தெரிந்திருக்காது... ஆனால் அவனுடைய மௌனம் அவளையும் ஏதோ செய்ததது.... ஓவரா பேசிட்டமோ....

மெல்ல கைப்பேசியை எடுத்து அவனுக்கு அழைக்க எண்ணை அழுத்தினாள்.... மீண்டும் மீண்டும் முயற்சித்து கால் செய்யாமலே கட் செய்தாள்....

இம்முறை தானாகவே அவளுடைய மொபைல் வைப்ரேட்டர் மோடில் துள்ளிக் குதித்தது...

மெல்ல எடுத்து காதில் வைத்தாள்...
சாரி அம்மு...
..........
உன்னை இத்தனை நாள் எவ்ளோ கஷ்டபடுத்திட்டேனு இப்போதான்டி புரியிது...

நான் வேணும்னு பன்னல அம்மு என்னால உனக்கு ஒன்னும் ஆகிடக் கூடாதுனு தான் பன்னேன்

ஆனாலும் அது எவ்ளோ பெரிய தப்புனு நீ அவாய்ட் பன்னும் போது தான் புரியிது...

நீ முடியாதுனு சொன்ன ஒரு வாராத்தையே எனக்கு இவ்ளோ வலிக்கிதுனா...

நான் வேண்டாம்னு சொன்னது உனக்கு எவ்வளவு வலிச்சிருக்கும்... இனி உன்ன ஹர்ட் பன்ன மாட்டேன் செல்லம்...

சாரி..அம்மு... லட்சம் டைம் சாரி... நான் அப்றம் பேசுறேன்....

டேய்..டேய்... ஒரு நிமிஷம்...
என்ன அம்மு...
அது....நானும் சாரி....
ஏன்....
ஏதோ ஒரு டென்ஷன் ல ஓவரா பேசிட்டேன்... சாரி....
பரவாயில்லை... அம்மு... என்னோட தப்ப நானும் ரியலைஸ் பன்னனும் ல...
நான் முன்னாடி மாதிரி வேலைக்கு போகல.... சீக்கிரமே எனக்கு வேலை கெடைக்கும்... அப்றமா மீட் பன்லாமே.... பிளீஸ்....
பன்லாமே..
அதுக்கு முன்னாடி பார்கனுமா....
முடியுமா....
ம்ம்ம்ம்ம்ம்..... அடுத்த மாசம்....????
எப்படி...???
எனக்கு புரைசவாக்கம் அழகப்பா ஸ்கூல் ல எம். ஏ எக்ஸாம்ஸ்.... இருக்கும்....
டபிள் ஓ.கே....
சரி நான் வைக்கிறேன்... ..
ஹம்ம்...
அவள் இந்த மட்டும் இறங்கி வந்ததே பெரியதாத் தோன்றியது... மித்ரனுக்கு...
பெட்டில் எகிறி குதித்தான்...
சந்தோஷமாக குளிக்கச் சென்றான்...
தண்ணீரின் குளிர்ச்சி அவனுடைய சந்தோஷத்தை இரட்டிப்பாக்கியது..
வேகமாக அலுவலகத்திற்கு தயாராகி கீழே வந்தவனுக்கு தடபுடலாக உணவு மணத்து.... வா... வா... என பழிப்பு காட்டியது....
வேகமாக சாப்பிட்டு கிளம்பிச் சென்றவனை அங்கே அலங்காரமாய் வீற்றிருந்த பூரியும் கிழங்கும் விடுவேனா என்றது.. கேசரி... இட்லி கொசுராக மசால்வடை வரை விதவிதமாக மணம் பரப்பி அவனை விடுவேனா என்றது...
சந்தோஷத்திற்கு மேல் சாப்பாடும் சேர்ந்து அவனை திணறடித்தது....
வேக வேகமாக... அலுவலகம் கிளம்ப கைக்கழுவியவனை... அம்மா அடுப்படியிலேயே அரஸ்ட் செய்துவிட்டார்...
மித்து உன்கிட்ட கொஞ்சம் பேசனும்...
எனம்மா...
உனக்கு....
ஐயோ... ம்ம்மா... டைம் ஓவர் ... ம்மா...
நான் சாபுட்ற இன்ட்ரெஸ்ட் ல டைம் ஆ பாக்கவே மறந்துட்டேன் ம்மா...
எதுவா இருந்தாலும் ஈவ்னிங் பேசிக்கலாம்மா.... பிளீஸ்... பிளீஸ்மா....
மனதில் ஏமாற்றம் பரவினாலும் வசந்தா புன்னகையோடு வழியனுப்பிவிட்டு மாலையை எதிர்நோக்கி காத்திருந்தார்....
மித்ரன் முதல் வேலையாக வெளியூரில் கிடைத்த புதிய ப்ராஜெக்ட் ஐ வேறு ஒருவருக்கு கைமாற்றிவிட்டு வேகமாக மத்த வேலைகளை ஆராய்ந்து ....முடித்தான்...
அவனுக்கு இன்றைய நாள் அருமையாகவேப் போனது... மாலை வீட்டிற்கு செல்லும் வரை....
வீட்டிற்கு நுழைந்தவன் சாவகாசமாக அம்மாவிடம் காஃபி கேட்டுவிட்டு சோஃபாவில் சரிந்தான்.. .
அம்மா கஃபி வித் பஜ்ஜியோடு வந்து தரிசனம் தந்தார்...
பசிக்கும் அலுப்பிற்கும் இடையே ஏற்பட்ட போராட்டத்தில் தட்டும் ... டம்ளரும் காலி ஆனது....
வசந்தா மெதுவாக ஒரு கவரை மித்துவின் முன்பு நீட்டினார்.. புன்னகை முகமாக.
என்னம்மா... என்று வாங்கிப் பிரித்து பார்த்தவனுக்கு புரிந்தது
அம்மாவை பார்த்து ஒரு பெருமூச்சு விட்டவன்... மெல்ல எழுந்து அறைக்கு நடந்தான்...
வசந்தாவிற்கு கோவம் எட்டிப்பார்க்க சில கணங்களே இருந்தது....
மெல்ல மகனிடம்.... என்னப்பா... பதில் சொல்லாம போனா என்ன அர்த்தம்... என்றார்... குரலில் கண்டிப்பைக் காட்டி...

ம்மா.. நான் முன்னாடியே என் பதில சொல்லிட்டேன் மா... இன்னும் என்ன எதிர்பாக்குறீங்க...
என்ன டா நீ முட்டாள் மாதிரி பேசுர... அதான் கல்யாணம் நடந்தா அந்த பொண்ணுக்கு ஏதாவது ஆகிடும்னு சோன்னேனே...

ம்மா... ப்ளீஸ். ..என்ன ஆனாலும் பரவால்ல ம்மா...யார்தான் சாகாம வாழப்போறாங்க...

எல்லாருக்குமே ஒருநாள் இறப்பு வரதானேப் போகுது... அப்படியே வந்தாலும் நானும் அவளும் சேர்ந்தே அத ஃபேஸ் பன்றோம்...

என்னடா நீ இப்படி பேசுர ..... பத்துமாசம் உன்னை சுமந்து பெத்து வளர்த்த எனக்கு உன் வாழ்க்கை நல்லா இருக்கனும் னு ஆசை இருக்காதா... பாதியிலயே வீணாப் போகவா உனக்கு கல்யாணம் பன்னனும் னு சொல்றேன்...

ம்மா... தெரிஞ்சோ... தெரியாமலோ அவ மனசுல என்மேல நானே ஆசைய வளர்த்துட்டேன்....
அவளுக்கு என்ன ஆனாலும் சரி அவள தான் நான் கல்யாணம் பன்னிப்பேன்..
அவதான் உனக்கு மருமக... எனக்கு பொண்டாட்டி... இதுல யாருக்கும் விருப்பம் இல்லனா நான் கல்யாணமே பன்னிக்க விரும்பல ம்மா. . உனக்கு மட்டுமே பையனா இருந்தூட்டு போறேன்...

ஆனா மத்த பொண்ணு ஃபோடோஸ் காட்டி மறுபடியும் கல்யாணம் அது இதுனு என்ன மேல மேல கஷ்டபடுத்தாதீங்க ம்மா... பிளீஸ்...

அப்போ இந்த அம்மாக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை யா... போ... போ... கண்களை கசக்கி வராத கண்ணீரை வர வைத்தார்... வசந்தா...

இப்போ ஏன்டா வீட்டுக்கு வந்தேனு இருக்குமா...
பன்னுங்க.....
நான் நாளைக்கு குஜராத் போறேன். புது ப்ராஜெக்ட்... எப்போ வருவேனு எனக்கே தெரியாது இப்போ சந்தோஷமா....
சொன்னவன் கள்ளத்தனமாக சிரித்துக் கொண்டே அவனுடைய அறைக்குள் சென்று கதவடைத்தான்...
யாருகிட்ட.... நான் உங்க பையன் மா....
சிரித்துக் கொண்டே மெத்தையில் படுத்தவன் நிம்மதியாக தூங்கிவிட்டான்...
வசந்தாவிற்கு இருந்த நம்பிக்கை ஆட்டம் கண்டது... இவன் இத்தனை உறுதியாக இருக்கும் பட்சத்தில் எப்படி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைப்பது என நினைத்தார் . இல்லை... இல்லை... மைண்ட் வாய்ஸ் என நினைத்து சத்தமாகவேப் புலம்பினார்...

கணேசன் ருத்ர மூர்த்தியாக வசந்தாவை முறைத்துக் கொண்டு முன்னே நின்றார்...
வசந்தாவிற்கு வில்லன் வேறு எங்கும் இல்லை. ..... என்றேத் தோன்றியது...
இதெல்லாம் தேவையா... நீ திருந்தவே மாட்டியா... அவன் இதோட எங்கேயும் போகக் கூடாது...எப்படியாவது தடுத்து நிறுத்தகயே ஆகனும்...
இல்ல... நீ செஞ்சு வெச்ச வேலையெல்லாம் உனக்கு வினையாகிடும்... என்று அபாயக் கொடிபிடித்துவிட்டுப் போனார்....
வசந்தாவிற்கு லேசாக பயம் வயிற்றைப் பிரட்டத் தொடங்கியது....
சமையலை முடித்துவிட்டு மகனை எழுப்ப சென்றார்...
மித்து... மித்ரா... சாப்பிட வா
எனக்கு வேணாம்மா..
அப்போ அம்மாக்கும் வேணான்டா...
ம்மா எல்லாத்தையும் உங்க விருப்பப்படி தானே பன்றீங்க ...இதுலயுமா..... எனக்கு சாப்பாடு வேணாம்மா...
மீண்டும் கிளிசரின் இன்றி வசந்தாவிற்கு நாடக அழுகை நன்றாகவேக் கை கொடுத்தது...
மித்ரன் சாப்பிட வந்தான்...
உண்மையாகவே பசிக் கொடுமை...
வேக வேகமாக உள்ளேத் தள்ளிக்கொண்டு கோவமாக உள்ளே நகர எத்தனிக்கையில்.... அதாவது நடிக்கையில்....

வசந்தா...வெள்ளைக் கொடியின்றி மித்ரனோடு சமாதான உடன்படிக்கைக்குத் தயாரானார்..
அவனும் இல்லாத ப்ராஜெக்ட் ஐ பிடித்துக்கொண்டு பிகு செய்தான்...
வசந்தாவும் முடிந்தவரை கெஞ்சிக் கொஞ்சி மகனை வெளியூர் செல்லக் கூடாதென சத்தியம் கேட்டார்....
மகன் விடாக்கண்டனாக சத்தியத்தை சாக்காக வைத்து அன்னையை மடக்கினான்...
அப்போ நீங்களும் ஒரு சத்தியம் பன்னுங்க...

எதுக்கு...
தேவைப்படும் போது கேட்டு வாங்கிக்கிறேன்...
முடியாது...
அப்போ நான் நாளைக்கு கிளம்ப ட்ரஸ் பேக் பன்றேன்...
வேண்டாம்... வேண்டாம்... சத்தியம் பன்றேன்...
பன்னுங்க ம்மா...
ம்ம்ம... சத்தியம்...
குட் மம்மி... அப்போ போங்க நான் தூங்கனும்....
வசந்தாவிற்கு எதிலோ தோற்ற உணர்வு... ஆனாலும் தன் மகனுடைய பாசத்தை இழக்க விரும்பாதத் தாயாக ஒரு முடிவோடு வெளியேறினார்....
இங்கு மித்ரனின் ஃபோன் ஒலித்தது....
சரவணனிடமிருந்து கால்....
எடுத்து பேசினான்... இருவரும் சேர்ந்து எல்லாமே ப்ளான் செய்தனர்.
இப்போது மித்ரனுக்கு காலையில் தொலைந்த சந்தோஷம் மீண்டும் உள்ளே எட்டிப் பார்த்தது...
உடனே மித்ரனுக்கு ஒரு யோசனை வந்தது...

நேத்ராவிற்கு ஃபோன் செய்து காத்திருந்தான்...
சொல்லுங்க...
அம்மு...
என்ன...
நாம கல்யாணம் பன்னிக்கலாமா....???
பன்னதானேப் போறோம்... இப்போ என்ன....
ஆமா... ஆனா உடனே பன்னிக்கலாமா ..
எப்போ...
நாளைக்கு காலைல. ..
என்னது.....
சேம்... புரசைவாக்கம்... ரிஜிஸ்டர் ஆஃபிஸ்... .ஏதாவது காரணம் சொல்லிட்டு உன் ஃபரண்ட் திலகாவோட வந்துடு...
அவ எதுக்கு...
சாட்சி கையெழுத்து போட.... வேண்டாமா...
என்னால முடியாது....
நீ வர... இது என் மேல பாராமிஸ் ... பாய்..... குட் நைட்... ஐ ல்வ் யூ... உமம்மா....

சீக்கிரம் தூங்கு.... காலைல ...( 10.30--11.00)
கல்யாணம்... டைமுக்கு வந்துடு.... நோ...
மோர்.... எஸ்கியூஸ்... ஓ.கே...
பை...பை..
டேய்... டேய்....டேய்....
ஹலோ.... ஹலோ..... ....... ......
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி வினோத்குமார் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top