தீராத் தீஞ்சுவையே...22

Advertisement

Yazh Mozhi

Active Member
தீராத் தீ____22

திலகவதியின் ஒட்டுமொத்த கோவமும் வடியும் வரை திட்டுவாங்கி பின் தேம்பினான்... மித்து....

திலகவதி மித்ரனை எதிர்பார்க்கவில்லை..
ஆனால் அவனை கால் செய்து திட்டித்தீர்க்கத்தான் காத்திருந்தாள்...

ஆனால் நமது நேத்ரா திலகவதியின் குணமறிந்து அவளிடம் மித்ரனை இனி தொடர்பு கொள்ளக் கூடாது... அவனுக்கு எந்த உண்மையும் தெரியக்கூடாது..

என் வீட்டுக்கு அவனைப் பற்றிய எந்த தகவலும் தெரியக்கூடாது என வேண்டினாள்...

அதன் பொருட்டு அமைதியாக இருந்த திலகவதி இன்று மித்ரனே நேரில் வந்து நிற்கிறது அத்தனை ஆங்காரத்தோடு பொங்கிவிட்டாள்...

அவளுடைய தோழிக்கு நேர்ந்ததை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை..

எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தாள்... எவ்வளவு நேசித்தாள்.. அத்தனையையும் ஒரு சாதாரண கட்டம் போட்ட காகிதத்தகற்கு பின்னால் உள்ள மூடநம்பிக்கையில் தூக்கிப்போட்டு விலக நினைக்கும் நீயெல்லாம் என்ன ஒரு மனிதன் என்ற வெறுப்பு அவளை அத்தனை கொந்தளிக்க வைத்தது மித்ரனிடம்...

என்ன சார் பிரச்சனை உங்களுக்கு... உங்களுக்கு டைம் பாஸ்க்கு உலகத்தில் வேறு பெண்ணா கிடைக்காமல் போனாள்...

அத்தனை தைரியமானப் பெண் அவள்...
அத்தனை மென்மையானவள் சார்... முகம் தெரியாமல் காதலித்த உங்களுக்கு அவளுடைய தோற்றமோ... நிறமோ ஒரு பிரச்சினையாக தெரியவில்லை...

ஆனால் ஒரு ஜாதகம் என்ற நம்பிக்கை பெரிதாதிவிட்டதா..????
இதே உங்கள் அம்மாவிற்கோ .. அப்பாவகற்கோ பிடிக்கவில்லை என்றால்... வேறு வேறு காரணங்கள் இருந்திருந்தாள்... அப்போதும் இப்படித்தானே செய்திருப்பீர்கள்...????

பாவம் அவள்... ஒரு நல்ல முட்டாள்... அப்போதே படித்து படித்து சொன்னேன். என் வார்த்தைகளை தூக்கி எறிந்துவிட்டு உங்கள் மீது எத்தனை நம்பிக்கை கொண்டிருந்தாள்...

அதற்கு அவளுக்கு நீங்கள் கற்பித்த பாடம் துரோகம்… அதைத் தாங்க முடியாத கோழை அவள்...

உங்கள் வார்த்தைகளை தாங்க முடியாமல் உங்களை மறந்துவிட்டு வீட்டில் பார்த்த வரண்களை ஏற்கவும் முடியாமல் அந்தக் கோழைப்பெண் தப்பிக்க தேர்ந்தெடுத்த வழி. தற்கொலை....

கைநிறைய தூக்க மாத்திரைகளை விழுங்கிவிட்டாள் ..

அவள் உயிர் அபாய கட்டத்தை எட்டும் முன்பே மருத்துவமனை சென்றும் கூட மூன்று நாட்கள் சுயநினைவற்று நடைபிணமாக கிடந்திருந்தாள்...

அவளை பெற்றவர்களுக்கு தேவையான அவப்பெயரோடு தற்கொலை முயற்சியை கதை கட்டி பேசும் ஊரின் முன்பும் கூணிக் குறுகி இன்று வேலைக்கு கூட செல்ல முடியாமல் சித்தபிரமை பிடித்தவள் போல வீட்டோடு அடைந்து கிடக்கிறாள்....

பெற்றவர்களைக் காயப்படுத்திய குற்ற உணர்ச்சியோடு இழந்த காதலையும் சேர்த்து வைத்து சாக வேறு நல்ல வழி கிடைக்காதா எனக் காத்திருக்கிறாள்...

ஒருமாதமாக இருக்கிறாளா....??? செத்தாளா...???? என்று கூட பார்க்கத் தோன்றாத உங்களுக்கெல்லாம் என்ன ம***** சார் காதல்...

அம்மா முக்கியம்... அப்பா முக்கியம்... ஜாதகம் முக்கியம்.....ஜாதி முக்கியம்.... லவ் பன்னாலும் மதம் மாறுமா காதலி முக்கியம் அப்போ என்ன ***** உங்களை மாதிரி கோழைகள் காதலிக்கிறீங்க ...

இதே ஒரு பொண்ணு இதே காரணத்தால் உன்னையோ உன் தோழனையோ விட்டுப் போனாள்... அவளுகஞ உங்கள் அகராதியில் பெயர் என்ன....???.

பெண் செய்தால் துரோகம் ... ????ஆண் செய்தால் தியாகமா....????

நீங்களாவது திருமணத்திற்கு பிறகு உங்களுக்கு ஒரு கடந்த காலக் காதல் இருந்ததை உங்கள் மனைவியிடம் சொல்வீர்கள்....... உங்கள் முன்னாள் காதலியை ஒரு பணத்தாசை பிடித்தவளாக...... ஏமாற்றுக் காரியாக ... வேஷ தாரியாக... ஏன் தாசியாகக் கூட கதைகட்டி உங்களை மகானாக்கி உங்கள் மனைவியிடம் சிம்பத்தி கிரியேட் செய்து ஒரு அக்மார்க் கணவனாக வாழ்வீர்கள்....

ஆனால் ஒரு பெண் தன் முதல் காதலை சொன்னால் .......

அதுவும் திருமணத்தன்றோ... அதற்கு பின்போ சொன்னாள் உங்களால் அப்படியே ஏற்றுக்கொண்டு குத்திக்கட்டாமலோ.... குறை பேசாமலோ... சந்தேகம் இல்லாமலோ வாழ முடியுமா...

ஆனால் இதையெல்லாம் ஒருநாள் சந்திக்க நேருமே என்ற குற்றவுணர்விலும் ஏமாற்றத்திலும் தான் என் தோழி இப்படி ஒரு கோழைதாலனமான முடிவைத் தேர்ந்தெடுத்துவிட்டாள்...

என்னைப் போல வேறு தைரியமானப் பெண்ணாக இருந்திருந்தால் உன்னைப் போன்றவர்களை சும்மா விட்டிருக்க மாட்டாள்....

நேத்ராவிற்கு மட்டும் ஏதாவது ஆகியிருந்தால் நிச்சயமாக நான் உன்னை சும்மா விட்டிருக்க மாட்டேன்...

அவளைக் கொன்றுவிட்டு நீ இன்னொருத்தியோடு நிம்மதியாக வாழ்ந்துவிடலாம் என நினைப்பா.......

உங்களுக்கு ஒரு பெண் இருந்து அவளை இப்படி ஒருவன் ஏமாற்றினால்....????

உன் தங்கையையோ .. அக்காவையோ இப்படி ஒருவன் ஏமாற்றினால்...

உன் வருங்கால மனைவியே இப்படி ஒருநிலையில் உன்னை திருமணம் செய்துகொண்டால்.....

நீ அப்போது சாதாரணமாக ஏற்றுக் கொள்வாயா....

இதே ஜாதகத்தில் தான் சாகவேண்டிய நிலைமை வந்திருந்தால் கூட என் தோழி உன்னைவிட்டு பிரிந்திருக்கமாட்டாள்...
ஆனால் நீ....

உன்னைப்போல இருக்கும் கோழைகளுக்கு காதல் தான் கேடா... ....???அவள் கேட்டுக்கொண்ட காரணத்தினால் தான் உன்னை இத்தோடு விடுகிறேன்...

தயவு செய்து அவளை இனி தொந்தரவு செய்யாதே... அவளை உயிரோடு பிணமாக நடக்கவிட்டுவிட்டாய்...

இனியும் அவளால் ஏமாற்றங்களைத் தாங்க முடியாது தயவு செய்து அவள் வாழ்க்கையை விட்டு போய்விடு. எனக் கத்தினாள் ..

நேத்ரா தற்கொலைக்கு முயன்றதாக திலகா கூறியக் கணமே மித்ரன் உடைந்துவிட்டான்

யாருக்காக அவனுடையக் காதலைப் புதைத்துக் கொண்டு தலைமறைவாக வாழ்ந்தானோ .... அவளே இன்று தற்கொலைக்கு முயன்றதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை...

தன்னுடைய முட்டாள் தனமான நம்பிக்கையில் அவளை இழந்திருந்தால் .... அவளே இப்போது இறந்திருந்தால்...

நினைக்கவே அவனுக்கே அவன்மீது அத்தனை வெறுப்பும் குற்றவுணர்வும் மிச்சமின்றிக் கொன்று தின்றது...

திலகாவின் உச்சகட்ட சாபங்களையும்... ஆதங்கத்தையும் கேட்டு....கேட்டு தாள முடியாமல் கத்தினான்....

ஐயோ.... என்னை கல்யாணம் செய்துகொண்டால் அவள் உயிருக்கு தான் ஆபத்து சிஸ்டர்...

உண்மையைச் சொன்னாலும் அவள் இந்த பிரிவை ஏற்க மாட்டாள் என்று தானே பொய் சொல்லி விலக நினைத்தேன் என்று கன்னங்களை அறைந்து கொண்டு கண் கலங்கினான்....

திலகாவிற்கு அவனுடைய அழுகையில் பொய் தெரியவில்லை... ஆனால் அவன் சொன்ன காரணமும் ஏற்புடையதாகத் தோன்றவில்லை.. .

அவனை சந்தேகப் பார்வையில் அமைதியாக பார்த்தாள்... மித்ரன் தன் வீட்டில் நடந்த அனைத்தையும் கூறினான்....

அவளுக்கு இதில் ஏதோ சரியில்லை என்று தோன்றியது...

ஆனாலும் நேத்ராவின் உயிர் என்ற நம்பிக்கையில் அவனுடைய எண்ணம் நியாயமாகவேப் பட்டது...

அப்படியும் விடாமல் கேள்விகள் கேட்டு காயத்தின் ஆழத்தை பதம் பார்த்தால்....

ஏன் சார் நடிக்கிறீங்க. ......லவ் பன்னும்போது ஒருநாள் வாழ்ந்தாலும் உன்கூட தான் வாழ்வேனு டயலாக் பேசுறீங்கல.... நீ செத்தா நானும் செத்துடுவேனு சொல்றீங்கல....

அவளை நான் உயிருக்கு உயிரா காதலிக்கிறேனு சொல்றீங்கல... அப்போ இருக்குற வரைக்கும் கூட வாழ்ந்துட்டு சாகலாமே ....

அதவிட்டுட்டு இதெல்லாம் ஒரு காரணமா.... சார்.... அம்மா ஜாதகம் பார்த்தாங்கலாம்... இவர் பிரிஞ்சி போக நினைச்சாராம். என்னம்மா... சப்ப கட்டு கட்ரீங்க சார்...

ஏதோ... இந்த நேத்ரா மாதிரி சில முட்டாளுங்க.... இருக்குறது உங்களுக்கு வசதியா போச்சுல....

பிளீஸ் சிஸ்டர் என்ன சொன்னா நீங்க என்னை நம்புவீங்கனு எனக்கு தெரியல... ஆனா இப்போ சொல்றேன் சிஸ்டர் சத்தியாமா இனி எந்த சூழ்நிலையிலும் எந்த காரணத்துக்காகவும் நேத்ராவ விட்டு போக மாட்டேன்....

என்ன ஆனாலும் எங்க ரெண்டுஜபேருக்கும் சேர்ந்தே ஆகட்டும் சிஸ்டர் பிளீஸ் சிஸ்டர்...

அவளுக்கு கால் பன்னா போகல .. அவகிட்ட நான் பேசனும் சிஸ்டர்... பிளீஸ்... எப்படியாவது எனக்கு ஒரே ஒரு சான்ஸ் குடுங்க....

அவகிட்ட நான் ஒருமுறை பேசனும் சிஸ்டர்... தயவுசெய்து அவகிட்ட எனக்காக பேசுங்க.... இல்ல ... இல்ல.... என் நேத்ரா என்ன புரிஞ்சிகிட்டு ஏத்துப்பா சிஸ்டர்...

நீங்க அவ நம்பர் மட்டும் தாங்க பிளீஸ்.... எனக் கெஞ்சினான்... திலகாவிற்கு கோவம் குறையவில்லை... அனுதாபமும் தோன்றவில்லை.... ஆனால் தன் தோழியின் வாழ்க்கையாவது நன்றாக இருக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது...

நீண்ட யோசனைக்கு பிறகு சரி... அவ கிட்ட நீங்க பேச ஏற்பாடு செய்றேன் ......என வாக்கு கொடுத்துவிட்டு நகர்ந்தாள்....

மித்ரன் திலகவதியின் தொலைப்பேசி எண்ணை பெற்றுக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்...

விரைவில் அவளிடமிருந்து ஏதாவது தகவல் வரும் எனக் காத்திருந்தான்...
இன்னமும் ஒரு மாதம் ஓடியது....

ஒரு மாதத்திற்கு முன்பு....
அங்கே நேத்ராவோ....


கைநிறைய மாத்திரைகளோடு அமர்ந்தவள்.... வீட்டில் யாரும் இல்லாத தனிமை அவளுக்கு வரமாய் ஆனது...

மித்ரனை குறித்த அனைத்து தகவல்கள் எண்கள் .... புகைப்படங்கள் என அனைத்து தடயங்களையும் அழித்தாள்...

தன் இறப்புக்கு பின் அவனாவது நன்றாக வாழட்டும் என்னை காதலித்து விட்டுப் பிரிந்தவன்.... என் இறப்புக்கு பின்னும் என்னை நினைத்து வெறுக்கவும் கூடாது.... வேதனைப் படவும் கூடாது என அனைத்தையும் அழித்துவிட்டு... அமைதியாக மாத்திரைகளை அள்ளிக் கொண்டாள்..

அவன் புகைப்படத்தில் ஒன்றை மட்டும் மொபைலில் வைத்திருந்தாள் . அதை முன்னே வைத்துவிட்டு அவனது புகைப்படத்திடம் தனியேப் பேசினாள்...

எனக்கு மாத்திரை என்றால் எவ்வளவு பயம் தெரியுமா... மித்து....

ஒரு மாத்திரையை வகழுங்கவே அத்தனை அழுவேன்... இன்று...இன்று .... உன்னால் ... உனக்காக இதோ பார்... கை நிறைய எத்தனை மாத்திரைகளை வைத்திருக்கிறேன் என்று குலுங்கி குலுங்கி அழுதாள்......

ஏன்டா ஏன்டா.... என்னை ஏமாத்துன.... உனக்கு வேற யாரும் கிடைக்கலையா..... சின்ன வயசுல இருந்தே நான் அன்லக்கி தெரியுமா....

நீ எனக்கு கடவுள் குடுத்த கிஃப்ட் னு நினைச்சேன்.... ஆனா என் லவ் தா என்னோட சாபம்னு நிரூபிச்சிட்டு நீ விட்டுட்டு போயிட்டியே...

நா....நா.... நான் உனக்கு டார்ச்சரா.... நானா உன்ன உயிரோட சாகடிக்கிறேன்......

என்ன இப்படியெல்லாம் பேச உனக்கு எப்படி டா மனசு வந்தது... இனி.... இனி நான் உன்ன டாராச்சர் பன்ன மாட்டேன்.... ஓ.கே . நீ... நீ ... சந்தோஷமா இரு.... என்று அழுது அழுது கண்கள் வீங்கித் தேம்பியவள் ஒவ்வொரு மாத்திரையாக விழுங்கத் தொடங்கினாள்......

தன் தாய் தந்தை படப்போகும் அவமானத்தையும் வருத்தத்தையும் எண்ணி அடித்துக்கொண்டு அழுதாள்...ஒவ்வொரு மாத்திரைகளாக விழுங்கிவிட்டு... மித்ரனின் கடைசி புகைப்படத்தில் முத்தமிட்டு ஐ லவ் யூ... சொல்லி அழுதாள்... அதையும் அழித்துவிட்டு சிம்மை உடைத்தாள்... தொலைப்பேசியை வீட்டிற்கு பின்னே உள்ள நீண்ட கால்வாயில் தூக்கி வீசினாள்....

நிம்மதியாக சென்று படுத்துவிட்டாள்...

மாலை வீட்டிற்கு வந்த தம்பிக்கு நேத்ராவை இந்த நேரத்தில் இங்கே பார்த்ததும் சந்தேகம் வர எழுப்பினான். நேத்ரா எழவில்லை... தலை சரிந்தது... சோஃபாவில் இருந்து...

பயந்து போன அன்புச் செழியன் அப்பாவின் செல்லுக்கு அழைத்து கூறிவிட்டு அருகே ஆட்டோ பிடிக்கப்போனான்...

வந்தவன் ட்ரைவரின் உதவியோடு அவளை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தான்...

உண்மை வெளிவராமல்... போலிஸ் கேஸ் ஆகாமல் தடுக்க கட்டுக்கட்டாய் பணம் விநியோகிக்கப் பட்டது....

மூன்று மணிநேரம் அபாய கட்டத்தில் இருந்து...

மூன்று நாள் அன்கான்ஷியஸ் ஆக இருந்து ......

ஒருவாரம் மருத்துவமனையில் ஏன்டா பிழைத்தேன்..... என ஏங்கி ஏங்கி மனதிற்குள் மௌனமாக குமைந்துகொண்டிருந்தவள்.....

வீட்டிற்கு வந்து மௌனமாக நாட்களைக் கடத்தினாள்....

வீட்டில் காரணம் கேட்டதற்கு தன்னை கல்யாணம் செய்ய கட்டாயப்படுத்தியது பிடிக்கவில்லை என்ற் தாராளமாக பூ சுற்றினாள்...

அவராகளும் அதற்கு மேல் துருவித் துருவிக் கேட்காமல் புரிந்துகொண்டு மௌனம் காத்தனர்...

திலகாவிற்கு ஏதாவது தெரியுமா என கால் செய்த போதுதான் அவளே அதிர்ச்சி அடைந்தாள்....

நேரில் வந்து அவளை விசாரித்தும் வாயை திறக்காதவள்... கால் செய்து நடந்ததைக் கூறி கதறினாள் கேட்ட திலகா கொதித்து போனாள்...

இதோ... இன்று விளையாட்டாக இரண்டு மாதங்கள் ஓடிவிட்டது...

மித்ரன் வந்து சென்று ஒரு மாதம் ஓடிய நிலையில்.....
திலாக நேத்ராவை பார்க்க இன்று வந்திருந்தாள்...

இருவரும் கோவிலுக்கு சென்றனர்... திலகா மித்ரன் தன்னை சந்தித்ததையும் கூறியதையும் சொன்னாள்...

நேத்ரா அமைதியாக இருந்தாள் கண்களில் நீர் வடிந்த வண்ணம் இருந்தது...

திலகா அவளை தோளோடு அனைத்து தேற்றினாள் அவனிடம் பேசிப் பார்க்க அறிவுருத்தினாள்....

அவழுடைய எண்களை கொடுக்க அனுமதி பெற்றுக் கொண்டு அவளிடம் நிறைய செய்திகளைப் பேசி அவளை நிதானப்படுத்திவிட்டு மித்ரனின் எண்ணைக் கொடுத்துவிட்டு.... நேத்ராவின் எண்ணை பெற்றுக் கொண்டு கிளம்பினாள்....

நேத்ரா பேசவே மாட்டேன் என பிடிவாதம் பிடித்தாள்....

திலகாவும் அவள் போக்கில் விட்டுவிட்டு மித்ரனை சிறிது காலம் காத்திருக்கும் படி பணித்தாள்....

மித்ரன் பெங்களூர் சென்றவன் வீடு திரும்பவே இல்லை.... நேத்ராவின் காலுக்காக காத்திருந்தான்...

வீட்டில் யாரிடமும் பேசுவதைக் கூட தவிர்த்து நேத்ராவின் குரலைக் கேட்க மாதக் கணக்கில் தவமிருந்தான்....

பொருத்து பொருத்து பார்த்தவன்... அசிங்க பட்டாலும் பரவாயில்லை... அவள் குரலையாவதுக் கேட்டாள் போதூம் எனத் துணிந்து எண்களை டயல் செய்துவிட்டு காத்திருந்தான்.....

நேத்ராவிற்கு அன்று மாலை திலகவதி கொடுத்த மித்ரனின் எண்ணிலிருந்து கால் வந்தது....

எடுத்தாள்....ஆன் செய்தாள்....
அந்தப்பக்கமிருந்து என்ன கேட்டதோ....
நேத்ரா அதற்கு மேல் முடியாமல் கதறிக் கதறிஅழத்துவங்கினாள்....
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி வினோத்குமார் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top