தீராத் தீஞ்சுவையே...21 .

Advertisement

Yazh Mozhi

Active Member
தீராத் தீ____21

மித்ரன் இருதலைக் கொல்லி எறும்பாக தவித்தான்.. தன் தாயிடம் கூட அனுமதி வாங்காமல் திடீரென துணிமணிகளை பேக் செய்து கொண்டு கிளம்பினான்....

வசந்தா மகனின் நடவடிக்கையில் பதட்டமும் பயமும் கொண்டு என்னடா இப்போது தான் உடல்நிலை தேரியுள்ளது... மீண்டும் எங்கே செல்கிறாய் என்று கேட்க...

பெங்களூர் என்றான்...

எத்தனை நாள்....????

நாள் கணக்கில்லை .... மாசக் கணக்கில்...... மூன்று மாதம் என்றான்...

வசந்தா அதிர்ந்தார்... ஏன்டா... உனக்கு இங்கே என்ன குறை... ஏன் அத்தனை தூரம் செல்ல வேண்டும்...

நீ எங்கேயும் போக வேண்டாம்... நான் சொல்வதைக் கேள் என்று அறிவுருத்தினார்...

அவனோ யார் சொல்வதையும் காதில் வாங்குவதாக இல்லை ஒரு சில வார்த்தைகளுக்கு மேலே பேசுவதாகவும் இல்லை. ..

அவனிடம் கேள்வி கேட்டு ஓய்ந்து போன வசந்தி கோவமாக திரும்பிக் கொண்டார் ..

அவனோ எதையுமே கவனிக்கும் நிலையில் இல்லை....

இதுவரை இவையெல்லாம் அறியாத மித்ரனின் தந்தை கணேசன் மகனின் நடவடிக்கைகளை கண்காணித்த வரையில் ஏதோ புரிந்தும் புரியாமலும் இருந்தார்....

இப்போது அவன் முடிவைக் கேட்டு பதரியவர் மனைவியை பார்க்க வசந்தா சொல்ல முடியாத பதைப்போடு இருந்தார்...

கணேசனுக்கு வசந்தாவின் மீது சந்தேகம் வலுத்தது.. தனியே பேசிக் கொள்ளலாம் எனக் காத்திருந்தார்..

அங்கே நேத்ராவோ....

கடந்த ஒரு மாதமாக மித்ரனிடம் எப்படியெல்லாமோ சொல்லி புரியவைக்க முனைந்தாள். ...

இறுதியில் இவனிடம் பேசி காதலைக் கேட்டு அழுவதும் தவிப்பதும் கெஞ்சுவதும் அவமானம் எனக் கருதினாள்..

அவனுக்கு இறுதியாக ஒரு மெயிலை மட்டுமே அனுப்பினாள் ...

அவனிடம் பேசியதெல்லாம் செவிடானவன் காதில் ஊதிய சங்காக ஆனது ..

எந்த உபயமும் இல்லை... உலகில் உள்ள அனைவரும் ஜோசியத்தையும் ஜாதகத்தையும் பார்த்தா கல்யாணம் செய்கிறார்கள்...

உங்களுக்கு ஜாதகம் தான் பிழை என்றால் நாம் ஜாதகத்தை நம்பாத வேறு மதத்திற்கு மாறிவிடலாம்...

ஆனால் என்னை ஒதுக்காதீர்கள் மித்து என எத்தனையோ கெஞ்சினாள் ...

சண்டையிட்டாள்... புரிய வைத்தாள்... விளக்கம் கொடுத்தாள்... எந்த மாற்றமும் மித்ரனிடம் இல்லை..

அன்றே தன் தோழி படித்து படித்து சொன்னதைக் கேட்காமல் இப்படி அனுபவைக்கிறோமே என்று அவள் மீது அவளுக்கே சுய பச்சாதாபம் எழுந்து மனதை உலுக்கிப் பிழிந்தது...


அவளுடைய மெயிலை அவனுக்காக எழுதிய ஒரு ஒரு வார்த்தைதைக்கும் அவளுடைய கண்ணீர் கணக்கற்று வழிந்தது....

மனம் கனத்து இதயம் இருகி வாழ்க்கையே வெறுத்தது...

ஒட்டுமொத்த வலியையும் இந்த சில வரிகள் மட்டும் அவனுக்கு புரிய வைத்துவிடுமா என்ன.
ஏதோ அவளுடைய நட்பாசைக்கு.... இறுதி முயற்சி....

என்னை ஏன் காதலித்தாய்...

ஏன்டா என் வாழ்வில் வந்தாய்..

இப்படி பாதியில் ஏமாற்றி செல்லவா வார்த்தைக்கு வார்த்தை அம்மு செல்லம் எனக் கொஞ்சினாய்...

விட்டு விலகிச் செல்லவா வாய்நிறைய பொண்டாட்டி.... என்றாய்...

நீ பொய்யாக நடித்திருக்கலாம். ஏமாற்றியிருக்கலாம் .....

நான் உன் மீது கொண்ட உண்மையான அன்பை எப்படி இன்னொருத்திக்கு விட்டுக் கொடுப்பேன்...

உன்னருகில் நான் கை கோர்த்து... தோள் சாய வேண்டிய இடத்தில் இன்னொருத்தியை எப்படி அனுமதிப்பாய் ...நீ...

உன்னை கணவனாக நினைத்து கனவில் வாழ்ந்த வாழ்க்கையில் இன்னொருவனை நிருத்திப் பார்க்க உனக்கு எப்படி மனம் வந்தது.

உனக்கும் எனக்குமான காதலை என்னைவிட உன் மீது இன்னொருத்தியால் ஒரு போதும் காட்ட முடியுமா....

உன் மீது நான் கொண்ட காதலை இன்னொருன் மீது நான் எப்படி காட்ட முடியும் .

என்னைக் காதலித்த நீ இதேப் போல இன்னொருத்தியை மீண்டும் காதலிப்பாயா...

அப்படி காதலித்தால் அவளிடமாவது உண்மையாக இருக்க முயற்சி செய்....

என் உணர்வுகளைக் கொன்று என் கனவுகளை இருக்கி... என் காதலைப் பிடுங்கிக் கொண்டு .....நடைப் பிணமாக என்னை மாற்றிவிட்டாயே...

உன்னைத் தவிர எனக்கு யார் இருக்கிறார்கள்... உன்னைப் போல அம்மு செல்லம் என வார்த்தைக்கு வார்த்தை அன்பு காட்ட யார் இருக்கிறார்கள்...

உன்னைப்போல யார் இனி என்னை காதலிக்க முடியும்...
என் அன்பை ஒரு சாதாரன கட்டம் போட்ட காகிதம் சிதைத்ததை நான் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்...

மனம் சார்ந்த விஷயத்தில் யார் படைத்தது இந்த ஜாதகமும் ஜோசியமும்...

இனி நீ தூக்கி எறிந்த எண்ணையும் என் காதலையும் இன்னொருவனை வஞ்சித்தி வாழ நான் அத்தனை கீழ்த்தரமான ஜடமாக இறங்கிப் போய்விடவில்லை...

நான் பலருக்கு முன் உதாரணமாக வாழவே என் படிப்பை தேர்ந்தெடுத்தேன்... இன்று என் முட்டாள் தனமான வாழ்க்கையே பலருக்கும் பாடமாகிடப் போகிறது...

தற்கொலை கோழைத்தனம் தான்... ஆனாலும் அதை தேர்ந்தெடுக்க நிறைய மன தைரியம் வேண்டும்...

அதை இன்று நீ எனக்கு கற்பித்துவிட்டாய்...

என்னால் ஏமாற்றங்தளோடு இந்த உலகில் என் மீதி நாட்களை கடக்க முடியாது .....

நான் நிம்மதியற்ற இந்த காதலை மட்டுமே இங்கே பத்திரமாக விட்டுவிட்டு செல்கிறேன்...

ஆனால் உன்னை விட்டு ஒருபோதும் போக மாட்டேன்....


இதை நீ படித்து முடிக்கையில் நான் உன் அருகில் உன் தலைக் கோதும் காற்றாகி உனைத் தாலாட்டி உறங்க வைப்பேன்...

என்று தனது கடைசி மெயிலை எழுதி மித்ரனுக்கு அனுப்பிவிட்டாள்......

பெங்களூர் சென்ற மித்ரன் திரும்ப அவளிடம் பேச முயற்சிக்கவில்லை...

ஆனால் அவளுடைய அனைத்து மேசேஜ்களையும் படித்தான்... கண்டிக்க ஆள் இன்றி குடித்தான்... குடித்தான்..... குடித்தே அவனும் சாகவே நினைத்தான்..

இவள் தொடர்ந்து கால் செய்தும் எதையும் எடுப்பதில்லை... எடுத்தும் எதையும் கேட்பதில்லை... அவள் மீது அமிலம் தோய்த்த வார்த்தைகளை வீசி கண்களைக் கண்ணீரால் குளமாக்கினான்....

எத்தனை கால் செய்தாலும் அவன் எடுப்பதே இல்லை... எந்த பதிலும் இல்லை... பழைய அன்புக் காதல் எல்லாம் வரண்டு போய் நிம்மதியற்று தன் முடிவுக்கு உரமாக நேத்ரா அந்த முடிவை எடுத்தாள்...

இது என்ன சினிமாவா நினைத்த உடனே தூக்க மாத்திரைகள் கிடைப்பதற்கு... கடைக்கடையாக வேறு வேறு மெடிக்கல்களில் கடுமையான சளி.. இருமல் என்று பொய்கூறி நிறைய கோல்டிற்கான மாத்திரைகளை சேகரித்தாள்...

சாவதற்கு ஏன் சளி மாத்திரை....

நமக்கு சளிபிடித்த நேரத்தில் சளிக்கான ஆன்டிபயாடிக் நமது உடலில் இயல்பாக சுரக்கத் துவங்கும்... ஆனால் அவை நாம் தூங்கும் போது தான் நிகழும்...

அதனால் தான் கடுமையான சளி ஜூரத்தின் போது போதிய ஓய்விற்காகவும்... போதிய ஆன்டிபயாடிக் உருவாகவும் நமக்கு சளிக்கான மாத்திரைகளோடு சிறிய தூக்க மாத்திரை கொடுக்கப்படும்...

அப்படி பலக்கடைகளில் ஒருவாரமாக சேகரித்த மொத்த மாத்திரையில் ஒரு இருபத்தி ஏழு தூக்க மாத்திரைகள் தான் தேரியது...

அவற்றை தனியே சேமித்துக் கொண்டு மற்ற மாத்திரைகளைத் தூக்கி வீசிவிட்டாள்..

அவளுடைய முடிவை எழுத சரியான நேரம் பார்த்து காத்திருந்தாள்....
அதற்கு ஏற்ற தருணம் சரியாக அமைந்தது....

மித்ரன் கிளம்பிய உடன் கணேசன் வசந்தியம்மாளிடம் தனியே சென்று கேள்விகளால் திணறடித்தார்... தாக்கு பிடிக்க முடியாத வசந்தா... கணவனிடம் உண்மையை சொல்லி அதற்கு அவர் தரப்பு நியாயங்களை முன் வைத்தார்...

எத்தனையோ எடுத்துச் சொல்லியும் கணேசனுக்கு கோவம் அடங்கவில்லை...

என்ன தைரியம் வசந்தா உனக்கு நம் பிள்ளை எப்படி வளரவேண்டும் என நாம் தீர்மானிக்கலாம்..

ஆனால் நம்பிள்ளை யாரோடு எப்படி வாழவேண்டும் என்பது நம் கையில் இல்லை...

அவன் மட்டுமா அந்த பெண்ணை விரும்புகிறான்.....

அந்த பெண்ணும் தானே மித்ரனை விரும்புகிறாள்..

நீ செய்த காரியத்தின் விபரீதத்தைப் பார்த்தாயா...நம் பிள்ளை சிரிப்பைத் தொலைத்து ....சந்தோஷத்தை இழந்து .....எங்கோ நாடோடியாக உணவுக்கும் உரைவிடத்திற்கும் தனியே தங்கி தவிக்கவா இத்தனை பொய் சொல்லி அவனை ஏமாற்றினாய்......

அவனுடைய சந்தோஷத்தைவிட உனக்கு பணமும் பகட்டும் முக்கியமாகிவிட்டதா...

அவனிடம் நீயாக இறங்கிப் போய் பேசி இந்த பிரச்சினையை முடித்துவிட்டாள் உனக்கு ரொம்பவும் நல்லது...

தானாக அவனேக் கண்டறிந்தாலோ அல்லது நானே சொல்ல நேர்ந்தாலோ... உன் மீது அவன் கொண்ட அன்பை நீயேக் கெடுத்துக் கொள்ளாதே...

எனக்கு என் மகனின் சந்தோஷமே பிரதானம்..

உனக்கு எது முக்கியம் என நீயே தீர்மாணித்துக் கொள் எனப் பொரிந்துவிட்டு போனார்...

வசந்தாவோ எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை... நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என மும்முரமாக மகனுக்கு வேறு வரண் தேடும் வேட்டையில் இறங்கிவிட்டார்.

நேத்ரன் அங்கே வழக்கம் போல குடித்து குடித்து உடலையும் மனதையும் கெடுத்துக் கொண்டு கடைசியாக அவள் அனுப்பிய மெயிலைப் பார்த்தான்...


படிக்க படிக்க மனம் பதறியது...

இதயம் வேகமாகத் துடித்தது... ஐயோ கடவுளே அவளுக்கு ஏதும் ஆகியிருக்கக் கூடாதே எனப் பதறியது...

அவளுக்கு கால் செய்தான் எடுக்கப்படவில்லை... அளிடமிருந்து ஒரு வாரமாக எந்த தகவளும் வரவில்லை...
என்பதை அப்போது தான் கவனித்தான் திலகாவைப் பற்றி நேத்ரா நிறைய சொல்லி கேட்டிருக்கிறான்...

அவளுக்கு ஏதாவது தகவல் தெரிந்திருக்கலாம் என்று பெங்களூரில் இருந்து உடனடியாகக் கிளம்பினான்...

திலகா திருச்சியிலிருந்து மூன்று மணி நேர பயண தூரத்தில் இருக்கும் ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு பெயர்போன தனியார் பள்ளிக்கே சென்றான்...

நேத்ராவும் அங்கே ஆரம்பத்தில் பயிற்சிக்காக வேலை செய்தாலும் அது பெயர்போன பள்ளி என்பதாலும் விரைவாக கண்டறிய முடிந்தது..

பள்ளிக்கு நேரடியாக சென்று திலகாவின் உறவினன் என்று கூறிக் காத்திருந்து அவளைக் காண நின்றிருந்தான்...

வெளியே வந்த திலகாவிற்கு இவனைக் கண்டதும் அடையாளமும் தெரிந்தது... ஆத்திரமும் வந்தது.

இருப்பது பள்ளி வளாகத்தில் என்பதை உணர்ந்து வெளியேச் சென்றாள்.

அவனும் பின் தொடர அங்கிருந்து நகர்ந்து ஒரு கோவிலுக்கு சென்று மித்ரனைக் கண்டு முறைத்தாள் மானாவாரியாக வசைமொழியால் விளாசி கண் கலங்கினாள்...

அவள் கூறியதைக் கேட்ட மித்ரனுக்கு தலையில் இடியே இறங்கியது. கண்கலங்க அங்கேயே உரைந்து நின்றவன் முகத்தை மூடியவண்ணம் முட்டியிட்டு அழுதான்...

கண்ணங்களை மாறி மாறி அறைந்து கொண்டான். அவனைக் கண்டு திலகாவின் கோவம் அதிகமாகியதேத் தவிர குறையவில்லை..

அவனை மேலும் மேலும் வார்த்தைகளால் வசைப்பாடி குற்றவுணர்வில் தள்ளி கதரவைத்துவிட்டு சில சாபங்களை வாரி வழங்கிவிட்டு நகர முற்பட்டவள் ..

மித்ரனின் வார்த்தைகளில் சுடுதண்ணிர் கொடுடியதைப் போல பதறிப்போய் திரும்பினாள்....
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி வினோத்குமார் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top