தீராத் தீஞ்சுவையே....1

Advertisement

Yazh Mozhi

Active Member
தீராத் தீ______1

முப்பத் திருபல் முனைவேல்
காக்க
செப்பிய நாவைச் செவ்வேல்
காக்க
கண்ணம் இரண்டும் கதிர்வேல்
காக்க
என் இளங் கழுத்தை இனியவேல்
காக்க.......
கந்த சஷ்டி கவசம் இசைக்க நேத்ரா காலைப் பொழுதிற்கே உரிய இரம்யமான தருணத்தை இரசித்து விட்டு மித்துவின் ஆசையின் பொருட்டு விளக்கேற்றி வணங்கினாள்...


அவளுடைய சாம்ராஜ்யமான சமையலறையில் நுழைந்து அன்னபூரணியை நினைத்து வணங்கி காலை உணவு தயாரிப்பிற்கு மனதை கலந்தாலோசித்துக் கொண்டே பாலை காய்ச்சி சுடச் சுட காஃபி தயாரித்தாள்

மித்ரனுக்கு தேனீர் தான் பிடிக்கும் அதில் இஞ்சியும் ஏலக்காயும் தட்டிப்போட்டு சுடச்சுட பிளாஸ்கில் ஊற்றி வைத்தாள்.

நேத்ராவிற்கு காஃபியின் மீது அலாதியான காதல் அதிலும் அதிகாலையில் ஒரு காதல் கவிதையோடு காஃபி குடித்தால் அவளுக்கு அன்றைய நாள் சொர்க்கமாக கழியும்...

அவள் காபியை பருகும் இடைவெளியில் நாம் அவளை அறிந்து கொண்டு வரலாம் வாருங்கள்...

நேத்ரா மைகரும்பும் இல்லை.... மஞ்சள் வெளுப்பும் இல்லை ... இதமான கோதுமை நிறம் அலங்காரங்களோடு பார்க்க அத்தனை அழகோவியமாக மிளிர்வாள்.

ஒரு தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு ஆசிரியை... குழந்தைகளுக்கு அவள் ஸ்டோரி மிஸ் அப்படித் தான் அழைப்பார்கள் ....மாணவர்கள் வகுப்பிற்கு ஏற்ப கதைகளை கூறி வகுப்பை தன்வசப்படுத்திக் கொள்பவர்...

சற்று பூசின உடல்வாகு தான் ஆனாலும் ஒரு குடும்பத்தலைவி என்பதை விட ஒரு ஆசிரியரின் பாங்கு தான் அவளை பார்க்கையிலும் அவளது நடை உடை பாவனைகளிலும் ஆதிக்கம் செலுத்தும்.

இடையளவு கூந்தல் ஆனாலும் கொண்டையிட்டு நெருங்க தைத்த மல்லிகை வேணி சூடிக்கொள்ளவே அவளுக்கு மிகவும் விருப்பம்...
மித்ரனின் விருப்பத்திற்காக திட்டமாக வெட்டி ஸ்ரெய்ட்னிங் செய்து மாடல் யுவதியாக பார்வைக்கு புருவம் ஏற பார்க்க வைக்கும் தோற்றம்...

கலகலவென பேசிக்கொண்டே இருக்கும் வாயாடி ரகம்.
கோவம் மட்டும் அதிகமாக வரும் பொய் சொன்னால் அறவே பிடிக்காது..

அன்பு காட்டுவதில் அளவுகோள் அற்றவள் பசியோடு யாரையும் பார்த்தால் கர்ணனின் ஹகுணம் தலைதூக்க இருப்பதை கொடுத்துவிட்டு பட்டினி கிடக்கும் புன்னியவதி..

அன்பிற்கு உரியவர்கள் எதை சொன்னாலும் ஆமாவா என அப்படியே கேள்வி கேட்காது நம்பும் வெள்ளந்தி...

(அய்யய்யோ மக்களே ஒரு ஆர்வத்துல அதிகமா புகழ்ந்துட்டேன்...

(நேத்ரா சமையலே முடிச்சிட்டா போல வாங்க நாம மத்தவங்கலயும் பாக்கலாம்)

காஃபி முடிந்து சாமை அரிசியில் வெண்பொங்களும் கொஞ்சம் சட்னி சகிதம் கத்தரிக்காய் சாம்பாரையும் அடுப்பின் மீது அமர்த்திவிட்டு தன் வீட்டு இரட்டை வால்களை எழுப்ப சென்றாள்.
முதல் அறையில் முகிலனை பத்து நிமிட போராட்டம் பல தாக்குதல்களுக்கு பிறகு எழுப்புவதற்குள் அடுத்த காஃபி தேவைப்பட்டது அவளுக்கு...
யாழிசை சமத்து பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதவிருப்பதால் காலையே எழுந்து படித்துக்கொண்டிருந்தாள்.

இருவருக்கும் அவளே வீட்டில் அரைத்த சத்துமாவு கொண்டு கஞ்சி தயாரித்து கொடுத்துவிட்டு அடுத்த அறைக்கு விரைந்தாள்.

அவளுடைய மூத்த குழந்தை சிவனே என சாந்த சொரூபியாக முகத்தைப் போர்த்திக் கொண்டு தூங்கிக்கொண்டு இருந்தது
மித்து எத்தனை முறை சொல்லி இருக்கிறேன் முகத்தை மூடாதேன்னு... அது தப்பு ஆக்ஸிஜன் இன்றி சுவாசிக்க சிரமமாக உணர வேண்டி வரும் என்று...தன் வழக்கமான ஆசிரியப் பணிக்கான அறிவுரையோடு துவக்கி வைத்தார் அன்றைய ந
எழுந்திரிடா நீ லேட் ஆ எழுந்துட்டு என்மேல பழி போட்டுட்டு சாப்பிடாம போகலானு பாக்காத எழுந்துக்கோ இல்லைனா தண்ணீர் ஆபிஷேகம் தான்...

அம்மு இன்னும் பத்தே பத்து நிமிஷம் டி பிளீஸ் டி உருள.... ( இவை மித்ரன் மட்டும் நேத்ராவை அழைக்கும் செல்லப் பெயர்கள்( அம்மு..உருள.... பட்டு..சிட்டு... தங்கம்....இன்னும் பல....)

ஏன் நடுவுல மானே ....தேனே.... பொன்மானே லா போடலையா...னு கேக்குற மைண்ட் வாய்ஸ் எனக்கு கேக்குது…. போகட்டும்….

நீ ரொம்ப கடுப்போத்துர... உனக்கு பனிஷ்மென்ட் கூட ஒரு கரண்டி பொங்கல் சாப்டே ஆகனும் என்று கட்டளை பிறப்பித்து மித்ரனின் கன்னத்திலும் நெற்றியிலும் முத்தமிட்டு நிமிர்கயிலே...

பொங்கலும் சாம்பாரும் கோவமாக நேத்ராவை விசிலடித்து ட்ரில்லுக்கு வா ரொமான்ஸ் போதும் என அழைத்தது…
அது எப்படியோ ஒரு குடும்பத் தலைவிக்கு மட்டும் வேலைகள் ஓய்வதில்லை...

இன்று முகிலனுக்கு கல்லூரிக்கு முதலாமாண்டு மாணவர் வருகை.... அவன் இப்போது நான்காம் ஆண்டு ஆர்கிடெக் படிக்கிறான்... இன்று பல வண்ண வண்ண புதிய வரவுகளை வாரி விழிகளில் நிரப்ப வேண்டி வேகமாகவே கல்லூரிக்கு தயாரானான்..
ஆறடி உயரம் அமைதியான தோற்றம் .. ஆனாலும் அடமும் பிடிவாதமும் அதிகம் மித்ராவைப் போல….

பாசக்கார புதல்லன் பொருப்பான அண்ணன்…. அரியர் சேர்க்காத படிப்பாளி…
தங்கை யாழிசை சுட்டிப் பெண்… கடைக்குட்டி… வீட்டுக்கு செல்லம்…. இன்னும் நிறைய…. நிரைவான குடும்பம் தான்…

இங்கே முகிலனோ…..

உள்ளே ஒரு கடுப்போடு புலம்பினான் என்ன முயற்சி பன்னாலும் நாம்ம கேரக்டர் ஆர்டிஸ்ட் தானே….
ஆனாலும் இந்த ரைட்டர் ரொம்ப மோசம் நாப்பது வயதிற்கு மேல் இவர்களுக்கு காதல்.... ரொமான்ஸ்.... ஓ மை காட்….

ஆமாங்க கதைல யாரு ஹீரோ யாரு ஹீரோயின்.... னு கேட்கிற உங்கள் மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்கிறது....

உங்கள் யூகம் சரிதான்.... காதலுக்கு அழகு வயது காலம் எல்லாம் ஒரு தடையா....

காதல் எல்லா கட்டத்திலும் உண்டு.... வயதுக்கும் அனுபவத்திற்கும் ஏற்ப அதில் பரிணாம வளர்ச்சியும் உண்டு..

காதலிப்பது சுலபம் தான்... அதை கடைசி வரை இழுத்துப் பிடித்து குடும்பம் என்ற தேரை நகர்த்த தேர்ந்த சாரதியாக ஒருத்தர் விட்டுக் கொடுத்து இறங்கி வந்து இயங்கவும் வேண்டும் இயக்கவும் வேண்டும்.....இல்லையா.....

அதற்கு அன்பும் பொருமையும் சகிப்புத்தன்மையும் சில பல இழப்புகளும் இணைந்த அச்சாணியாக காதல் சக்கரத்தை தொடர்ந்து சுழட்டவும் வேண்டும்....

இங்கே பயணம் தொடங்கி சுழண்டு எப்படி நகர்ந்தது என்று இவர்களோடு நாமும் பயணித்து தான் உணர முடியும்

வாருங்கள் தொடர்ந்து பயணிக்கலாம்....
மித்ரன் நேத்ராவோடு..



-- தொடரும்....
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "தீராத் தீஞ்சுவையே"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
காயத்ரி வினோத்குமார் டியர்
 

Priyarathees

Active Member
True Love 16.25.45.60.70.ella age layum love is beautiful sis epavum puthusa lv pannura feel tharum lovely story,sis super
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top