தர்ம சூக்ஷ்மம்

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
உண்மையை சொல்வது தர்மத்துக்கு ஆபத்து ஏற்படுமானால் அந்த உண்மையை மறைக்கலாம் என்று தர்மம் சூக்ஷ்மமாக சொல்கிறது
இந்த சூக்ஷ்மத்தை க்ருஷ்ண பரமாத்மா பாரதப் போரில் காண்பித்தார்
த்ரேதா யுகத்திலேயே சீதா தேவி இதை எடுத்துக்காட்டி இருக்கிறாள்.

ஹனுமான் கடலைத் தாண்டி யாரும் பார்க்க முடியாத கட்டை விரல் ரூபத்துடன் சீதா தேவியை தரிசித்து பேசி ராமபிரான் அடையாளங்களை சொல்லி ராம தூதன் என்ற நம்பிக்கையை பெற்று ராமபிரான் கொடுத்த மோதிரத்தை காண்பித்து சீதையை சந்தித்ததற்கு அடையாளமாக சூடாமணியும் பெற்று சீதாதேவியிடம் விடைபெற்று கிளம்ப தயாரானார்.

கடலைக் கடந்து ராமபிரான் பார்ப்பதற்கு முன் இராவணனின் படை பலத்தை அறிய நினைத்தார்.
பின் அசோகவனத்தின் ஒரு பகுதியை நாசம் செய்து ராக்ஷஸிகளின் கவனத்தை தன்னிடம் திருப்பினார்.
மரங்கள் உடைக்கப்பட்டு குளங்கள் கலங்கி, அங்கிருக்கும் விலங்குகள் சிதறி ஓட அதிகாலை உறக்கத்திலிருந்து ராக்ஷஸிகள் எழுந்தனர்.
அசோகவனம் தரைமட்டமாகி கிடக்க அங்கே மலை போல ஓர் வானரன் நிற்பதை கண்டனர்.
அவனைக் கண்டு அவர்கள் சீதையிடம் "யார் இவன்? அவனிடம் என்ன பேசினாய்? பயப்படாமல் இப்பொழுது சொல் " என்றனர்.

இதற்கு சாத்வீகமே உருவான சீதை "ராக்ஷசர்கள் பற்றி எனக்கு என்ன தெரியும்? உங்களுக்குத்தான் தெரியும்.
பாம்புக்குத்தானே எலி போன பாதை தெரியும்.
எனக்கு அவன் யாரென்றே தெரியாது
எனக்கும் இவனைக் கண்டால் பயமாக உள்ளது" என்று சீதை சொல்ல ராக்ஷசிகள் அலறியடித்து நாலாபுரமும் ஓடினார்கள்.
விஷயம் ராவணனையும் எட்டியது.

*இப்படி சீதை தர்மத்துக்காக கடல் கடந்து வந்த ஹனுமனைக் காக்க உண்மையை மறைத்து தர்ம சூஷ்மத்தை நமக்கு காட்டினாள்*
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top