சவீதா முருகேசனின் அரும்பனி - அறிமுகம்

Advertisement

Saroja

Well-Known Member
புதிய கதைக்கு வாழ்த்துக்கள்
சவீதா :love:
அபி அதிகாரம் இருக்க
நினைக்கிறான்

இந்திரா எப்படினு பாக்கனும்
 

RIYAA

Well-Known Member
Interesting (y)(y)(y)

எதிரெதிர் துருவம் ஒன்றையொன்று ஈர்க்குமா :unsure::unsure:
 

Nirmala senthilkumar

Well-Known Member
தலைப்பு : அரும்பனி

தலைவன் : அபராஜிதன்

தலைவி : இந்திரசேனா

வணக்கம் தோழமைகளே, புதிய கதையோட திரும்ப வந்திருக்கேன். இன்னைக்கு அறிமுகம் மட்டும் தான். கதையோட பதிவுகள் அடுத்த வருடம் தான் போடப்படும், அதாவது ஜனவரி ஒண்ணாம் தேதி முதல் பதிவுகள் வரும். சீக்கிரமே பதிவுகளை எழுதி முடிச்சுட்டு வந்து உங்களை சந்திக்கறேன்.

ஒரு சின்ன அறிமுகம் “ஹாவ்” என்று இந்திரசேனா கொட்டாவி விட அருகிருந்தவர் அவளைப் பார்த்து முறைத்தார். அதையெல்லாம் கண்டுக்கொள்ளாதவளாக அவள் வேறுபுறம் திரும்பிக் கொண்டாள்.

சற்று நேரத்தில் அவள் தூங்கி அவர் மீதே விழ “இந்திரா” என்று அடிக்குரலில் அவர் குரல் கொடுக்க திடுக்கிட்டு விழித்தவள் அவரைப் பார்த்து அசடு வழிந்தாள்.

“என்ன பண்ணிட்டு இருக்கே நீ?? ஆர்கியூவ்மெண்ட்ஸ் போயிட்டு இருக்கு. நீ தூங்கிட்டு இருக்க. இதெல்லாம் பார்த்து நோட்ஸ் எடுத்துக்கோ” என்றார் அவர்.

“சார் போங்க சார் நீங்க வேற நான் காலேஜ் முதல் வருஷம் சேர்ந்தப்போ ஆரம்பிச்ச கேசு. நான் லா முடிச்சு உங்ககிட்ட ஜூனியரா சேர்ந்தே வருஷம் ஒண்ணு ஓடிப்போச்சு. இன்னும் கேசு போயிட்டு இருக்கு. இதெல்லாம் பார்த்தா எனக்கு தூக்கம் தான் சார் வருது. சட்டுப்புட்டு கேசை முடிக்கிறதைவிட்டு” என்று அவள் மீண்டும் கொட்டாவி விட நன்றாகவே முறைத்தார் அவர்.

“சாரி சார்” “உன் மேல நான் ரொம்ப நம்பிக்கை வைச்சிருக்கேன் இந்திரா. நல்லா படிச்சு முதல் வகுப்பில பாஸ் பண்ண பொண்ணாச்சே, புத்திசாலியா இருப்பேன்னு நினைச்சுட்டு இருக்கேன். என் நம்பிக்கையை கெடுத்திடாதே”

“அப்படியெல்லாம் செய்ய மாட்டேன் சார்” என்றாள்.

“சரி கேசை கவனி” “ஹ்ம்ம்” என்றவள் ஒரு நோட்டையும் பேனாவையும் கையில் எடுத்துக்கொண்டு குனிந்து எழுதிக் கொண்டிருந்தாள்.

‘பரவாயில்லை நம்ம சொன்னதை கேட்டு நோட்ஸ் எடுக்க ஆரம்பிச்சுட்டா, நல்ல பொண்ணு தான் ஆனா கொஞ்சம் குறும்பு’ என்று எண்ணிக்கொண்டு அவளின் சீனியர் மாணிக்கவாசகம் அங்கு நடக்கும் வாத பிரதிவாதங்களை கவனிக்க ஆரம்பித்தார். மதிய நேரமாகிப் போனதால் நீதிபதி அங்கு நடக்கும் விவாதத்திற்கு இடைவேளை விட்டுச்செல்ல ஒவ்வொருவராய் கலைந்து செல்ல ஆரம்பித்தனர்.

“இந்திரா நீ எடுத்த நோட்ஸ் எல்லாம் எடுத்திட்டு என்னோட சேம்பர்க்கு வந்திடு” என்றாவறே எழுந்த மாணிக்கவாசகத்திற்கு அவள் பதில் கொடுக்காது குனிந்துக் கொண்டிருக்க “இன்னும் என்னமா நோட்ஸ் எடுத்திட்டு இருக்க, கிளம்பும்மா போதும்” என்றார் அவர்.

அப்போதும் அவள் எழாது போக “இந்திரா” என்று அவர் தன்னையும் மறந்து சத்தமாய் அழைத்திட “சார்” என்றவாறே உறக்கத்தில் இருந்து எழுந்தவளை என்ன செய்ய என்று பார்த்திருந்தார் அவர். -----------

“அபி இன்னைக்கு நீ பொறுப்பெடுத்துக்கற நாள். சாமி கும்பிட்டு அம்மாகிட்டயும் ஆசி வாங்கிட்டு சீக்கிரம் வந்திடு, நான் முன்னாடி கிளம்பறேன்” என்றார் அபராஜிதனின் தந்தை கரிகாலன்.

“ஞாபகமிருக்குப்பா கொஞ்சம் வெயிட் பண்ணுங்கப்பா நானும் உங்ககூடவே வந்திடறேன்

“நோ அபி எனக்கு ஒரு முக்கியமான மீட்டிங் ஒண்ணு இருக்கு. அதை முடிச்சுட்டு நான் நேரா அங்க வந்திடுவேன், நீயும் அங்க வந்திடு நான் கிளம்பறேன்”

“ஓகேப்பா” என்ற அபராஜிதனின் வயது இருபத்தியெட்டு.

உடன்பிறந்தது ஒரு தமக்கையும் தங்கையும். தமக்கை உமையாள் திருமணமாகி சிவகாசியில் வசிக்கிறாள். தங்கை அகல்யாவிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. அவனின் அன்னை அவன் தங்கை பிறந்த சில நாட்களிலேயே உடல் நலம் குன்றி இறந்துவிட்டிருந்தார்.

அகல்யாவின் திருமணம் முடிந்ததும் அபராஜிதனுக்கும் முடித்துவிட கரிகாலன் எண்ணம் கொண்டிருக்கிறார். அவனுக்காய் புதிதாய் சென்று பெண் தேடத் தேவையில்லையே. அவரின் தங்கை மகள் விண்ணரசி தயாராய் இருக்கிறாள்.

அபராஜிதன் எதையும் இப்படித்தான் செய்ய வேண்டும், இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அதன் வழி மட்டுமே சிந்திக்கவும் செயல்படவும் கூடியவன், அவனுக்கு சோம்பேறித்தனம் என்பது அறவே பிடிக்காது. அவன் தந்தையை கொண்டே அவன் பிறந்திருந்தான்.

கரிகாலன் கூட சமயத்தில் விட்டுக்கொடுத்து நடந்துக் கொள்வார், சூழ்நிலையை பொறுத்து. அந்த விஷயத்தில் அவன் அவருக்கு நேரெதிர், எதற்காகவும் யாருக்காவும் விட்டுக்கொடுக்காதவன், விட்டுக்கொடுக்கவும் விரும்பாதவன் அவன். நேரம் எட்டை தாண்டவும் சரியாய் வீட்டிலிருந்து கிளம்பியிருந்தான்.

ஒன்பது மணிக்கு அவன் பொறுப்பேற்க வேண்டும், அடுத்த அரைமணியில் அங்கிருந்தான். ஒன்பது மணி அடிக்க இரண்டு நிமிடங்கள் இருந்தது. இன்னமும் அவன் தந்தை கரிகாலன் வந்திருக்கவில்லை. அபராஜிதனின் முகம் மெல்ல மாற ஆரம்பித்திருக்க சரியாய் உள்ளே நுழைந்தார் அவர்.

“ஹாய் ஆல், சாரி பார் தி டிலே. ப்ளீஸ் சிட் டவுன் ஜென்டில்மேன்ஸ், ப்ளீஸ் மேடம்” என்று அனைவரையும் பார்த்து சொன்னவர் தன் மகனை பார்த்தார். அவன் முகம் கோபத்தில் இருப்பது புரிந்தது, இருந்தாலும் அதை கண்டுக்கொள்ளாதவராய் தான் வந்த வேலையை பார்க்க ஆரம்பித்தார்.

“உங்க எல்லாருக்கும் தெரியும் நினைக்கிறேன், பிரின்சிபால் உங்ககிட்ட சொல்லியிருப்பார். அபராஜிதன் இன்னையில இருந்து இந்த ஸ்கூலோட பொறுப்பை ஏத்துக்க போறான். இனிமே நம்மோட கரெஸ்பான்டன்ட் நம்மோட சிஇஓ ரெண்டுமே அவர் தான்” என்று அனைவருக்கும் தன் மகனை அறிமுகம் செய்தும் அவன் பொறுப்பு குறித்தும் தெரிவித்தார்.

“சார் அப்போ நீங்க??”

“நானும் இருப்பேன் என் மகனுக்கு துணையா... தவிர நான் சிவகாசிக்கு போறேன், அங்க இருக்க நம்மோட ஸ்கூல் பொறுப்பை நான் எடுத்துக்க இருக்கேன். என் பெரிய பொண்ணு கூடவும் இருக்க பிரியப்படறேன். எனக்கு எப்படி எல்லாரும் ஒத்துழைப்பு கொடுத்தீங்களோ அதே ஒத்துழைப்பை அபிக்கும் நீங்க கொடுக்கணும்” என்றவர்

“அபி யூ கேரி ஆன், அதுக்கு முன்ன இதுல சைன் பண்ணிடு...” என்று அவர் ஒரு கோப்பை மகன் முன் நீட்டினார். அபராஜிதன் கடுங்கோபத்தில் இருந்தான்,

‘அதென்ன அவங்க ஒத்துழைப்பு கொடுக்கறது, நம்மகிட்ட அவங்க வேலை செய்யறாங்க, செய்ன்னா அவங்க செய்யணும். நாம அதிகாரம் தான் செய்யணும், பணிஞ்சி போகக்கூடாது. இந்தப்பாக்கு இதெல்லாம் எப்போ தான் தெரியுமோ’ என்று எண்ணியவன் தன்
Nirmala vandhachu
Best wishes for your new story
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top