கொலுசொலி மயக்குதடி - 17

Advertisement

பால்கனியில் நின்றவாறு சக்தி கிளம்பி போவதை பார்த்தபடியே நின்று கொண்டிருந்தாள் மகா....

அவளின் அருகில் வந்த மேக்னா... என்ன பார்த்துட்டு இருக்க மகா.. எதுக்கு வாசுவோட வீட்டுக்கு வந்தவங்களை நீ அப்படி பார்த்து வச்ச.. மேக்னாவின் குரலில் கோபம் தெரிந்தது...

உனக்கு தெரியாதா ஏன்னு... அதுதான் சக்தி.. அதைக்கூட உன்னால புருஞ்சுக்க முடியலயா... அவளை என்னால பார்க்கவே முடியல.. அவ்வளவு கோபம் எனக்கு... அநத இரண்டு பேரும் அவ மேல அவ்வளவு அன்பை வச்சிட்டு இருக்காங்க டேம் இட்... காலை எட்டி தரையில் உதைத்தாள்...

இவ்வளவு கோபமும் வன்மமும் வெளிப்படையாக காட்டறது நல்லதுக்கில்ல மகா... எதையும் யோசிச்சு பண்ணனும்... எனக்கும் அவ மேல அவ்வளவு கோபமிருக்கு... இப்ப நான் இருக்க வேண்டிய இடத்தில் அவ இருக்கறதை பார்க்கும் போது எனக்கு எவ்வளவு ஆத்திரம் வருது தெரியுமா...

மேக்னாவை நக்கலாகப் பார்த்து சிரித்தபடியே... எனனை சொல்லிட்டு இப்போ நீயும் அதைத்தான் பண்ணிட்டு இருக்க... சுவருக்கும் காது இருக்கும் மறந்துட்டியா.. அவள் கேலியாக கேட்கவும் மேக்னா வாயை இழுத்து மூடிக் கொண்டாள்... இருவரும் அடுத்து என்ன செய்வதென திட்டம் தீட்டத் தொடங்கினார்கள்...

சக்தி கிளம்பி போனதும் உண்டு முடித்து ஹாலில் வந்து அமர்ந்தனர் வாசுவும் நிலாவும்... நிலாவிற்கும் வாசுவிற்கும் தெளிவு படுத்த ஆயிரம் விசயங்கள் இருந்தது...

அன்று அவனது ஆபிஸ் லீவ் என்பதால் வசதியாக போய்விட அன்றே பேசி விடும் எண்ணத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்...

முதலில் சக்தி என்ன பேசுனாங்கனு சொல்லுங்க... எனக்கு தெருஞ்சு அவரு பேசுனதுக்கு அப்புறமாகத்தான் நீங்க எனமனை தப்பாக நினைச்சுட்டு நேத்து என்ன என்னமோ நடந்திருச்சு...நிலா சரியாக பிரச்சனையின் நூலிலையை பற்றியிருந்தாள்...

வாசுவும் நடந்ததை நிலாவிடம் சொல்லத் தொடங்கினான்....

முந்தைய நாள் சக்தி இருவரையும் கோவில் ஒன்றாக பார்த்ததும் நிலா ஏதோ சொல்லி முன்னால் கிளம்பிவிட அவளை அழைத்துச் செல்ல வாசுவும் உடனே கிளம்பி விட்டான்...

சக்திக்கு அதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாமல் போக... எப்படி இருந்தாலும் வாசு ஆபிசிற்கு தானே வர வேண்டும் அங்கு பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவுடன் கிளம்பினான்...

வாசுவும் நிலாவை க்ளாசில் விட்டுவிட்டு ஆபிசிற்கு வந்து சேர்ந்தான்.. அவனை எதிர்பார்த்து சக்தி தயாராக வாசுவின் கேபினில் இருந்தான்....

அவனைக் கண்டவாறே இருக்கையில் அமர்ந்த வாசு.. எதுவாக இருந்தாலும் மதியம் பேசலாம் இப்போ வேலையை பார்க்கலாம்... அவன் அவ்வாறு சொன்ன பின்பு வேறு எதுவும் பேச முடியாமல் அவனது வேலைகளை பார்க்க சக்தி கிளம்பி விட்டான்...

வரவே கூடாது என வாசுவும்... சீக்கிரமாக வர வேண்டும் என சக்தியும் காத்திருந்த மதியமும் வந்துவிட....வாசுவை பார்த்து பேசுவதற்காக சக்தி வேகமாக அவனது அறைக்கு வந்தான்....

இதற்கு மேல என்னால காத்திட்டு இருக்க முடியாது... சிவானி உன்கூடவா இருக்கா.. அதுவும் உன் வீட்டில் நீங்க இரண்டு பேர் மட்டும்....

அவன் கேட்க வருவது வாசுவிற்கு எரிச்சலையே தந்தது... அதோடு நிலாவின் பேரு சிவானியா.. அதுகூட நமக்கு இவ்வளவு நாளாக தெரியலயா... நாம அந்த அளவுக்கு நிலாக்கு முக்கியமான ஆள் இல்லையா... இவங்க இரண்டு பேருக்கும் எப்படி சம்பந்தம் இருக்கும்...

ஆயிரம் விசயங்களை யோசித்து வாசுவின் மண்டையே வெடிக்கும் போல இருந்தது..அதை எதுவும் உணராமல் சக்தி அவனே பேசத் தொடங்கினான்....

நான் பாட்டி பாட்டினு சொல்றப்போ எல்லாம் வாயை மூடிட்டு இருந்திருக்க.. என்ன ஒரு திருட்டுத்தனம்... எனக்கு கல்யாணம் பண்ண இருந்த பொண்ணு உன்கூட இருக்க.. என்னால இதை தாங்கிக்கவே முடியல... நான் இரண்டு தடவை பார்த்து பேசியும் எதையும் சொல்லவே இல்லை...

வாசு அதிர்ச்சியாகி... நிலா நீ கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணா..... என்ன சொல்ற... அவனிற்கு உலகமே தட்டாமலை சுற்றியது.

என்ன தெரியாத மாதிரி கேட்கற.. இதைக்கூட உன்கிட்ட சொல்லாமயா இவ்வளவு நாளாக ஒரே வீட்டில் இருக்கீங்க...

சக்தியின் ஒவ்வொரு கேள்விக்கும் வாசுவின் நிலை பரிதாபமாய் மாறிக் கொண்டே போனது...

வாசு நீ இப்படி பண்ணுவனு நினைக்கவே இல்லை.... நடந்த எதையும் மாத்த முடியாது.. அதைப்பத்தி பேசியும் எதுவும் ஆகப் போறது இல்லை... நான் இன்னைக்கு வீட்டுக்கு வரேன் சிவாவை கூட்டிட்டு ஊருக்கு போகப் போறேன்....

சக்தி அறிவிப்பாய் மட்டுமே வாசுவிடம் கூறினான்... நிலாவை பற்றி எதுவும் தெரியாத பட்சத்தில் அவளை ஏற்கனவே தெரிந்த ஒருவர் அவளை அழைத்துப் போவதாய் சொல்லும் போது தன்னால் எப்படி தடுக்க முடியும்... எந்த உரிமையும் தனக்கு இல்லையா... மனம் ஊமையாய் ஓலமிட்டது....

நான் சொல்றது புரியதுல்ல... சிவா பத்தி எதுவும் தெரியாது உனக்கு.. ஏதோ கெட்ட நேரம் அவ ஊரை விட்டு வந்து இங்கு இருந்து... இனிமேல் என்னை மீறி நடக்காது... நான் போய் வேலையை பார்க்கறேன்... சாயங்காலம் உன்னோட வீட்டுக்கு வர கொஞ்சம் லேட்டாகும்... ஓகேவா.. நான் போய் வேலையை பார்க்கிறேன் என்றாவாறு சக்தி கிளம்பி விட்டான்...

வாசு அமைதியாக கண்களை மூடி அமர்ந்து கொண்டான்... இனிமேல் நிலா தன்னோடு இருக்க மாட்டாள் என்ற நினைவே அவனை உயிரோடு கொன்றது...

வேலையை முடித்துக் கொண்டு வீட்டிற்கு போகவும்... நிலா வேறு அறைக்கு மாறியது அவனை இன்னும் வேதனைக்கு உள்ளாக்கியது...

நிலா நிலானு.... நாம தான் அவ மேல உயிராக இருக்கோம்... அவ பேரு தான் நிலாவே இல்லையே... சக்தியோட சிவானி... இவ்வளவு நாளாக நம்ம கூட வேற வழியே இல்லாம இருந்திருக்கா.. இப்போ தான் சக்தி வந்து விட்டானே.. அதனால் அவனோடு அனுப்புவது தான் சரி என்று தனக்குத்தானே தவறாக அனுமானம் செய்து கொண்டான்...

அனைத்தையும் வாசு சொல்லிவிட்டு அதற்கு பின்பு தான் சக்தி வந்தது.. அப்புறமாக நடந்த எல்லாம் உனக்கே தெரியுமே... வாசுவின் முகம் வருத்தத்தில் வாடிப் போனது...

அட மக்கு மாமா... உன்னை என்ன பண்றது.. இவ்வளவு அப்பாவியாக நீ இருந்திருக்க வேண்டாம்... ஆனால் என்ன பண்றது உனனைத் தான் எனக்கு பிடிச்சு தொலையுதே...

நிலா செல்லமாக சலித்துக் கொள்ளவும்... அப்போ என்னை மக்குனு சொல்றியா... வாசு முகத்தை சுருக்கி கேட்க அதில் மயங்கிய நிலாவோ என்னோட அழகு செல்லமே... அவனது கன்னம் கிள்ளி கொஞ்சினாள் நிலா..

ரியலி... நான் அழகா... வாசு அவளிடம் திரும்பி அவளது கன்னம் பற்றி கேட்டான்... முன்பே இருவரும் அருகருகில் தான் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்...

வாசு அவளது கன்னத்தை கிள்ள மேலும் அருகில் வந்திருக்க.... அவனது நெருக்கத்தில் நிலாவின் முகம் அந்தி வானமாய் சிவந்து போனது...

வாசுவின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் நிலா சற்று தள்ளி அமர்ந்து கொண்டாள்.. இதை கவனிக்காத வாசு ஏன் நிலா தள்ளிப் போற.. நான் நிஜமாவே அழகா சொல்லு... அவனோ அது ஒன்றே முக்கியம் என்பது போல காரியத்தில் கண்ணாக கேட்டான்....

ஆமா நீங்க நெஜமாகவே அழகுதான்... அதுல என்ன சந்தேகம் உங்களுக்கு என்றாள் அவனது முகம் பார்க்காமல்..

என்னை எதுக்கு மக்குனு சொன்ன... அதுக்கு மொதல்ல பதில் சொல்லு.. ஆனால் சக்தி சொன்னதை நான் சரியாக விசாரிக்காமல் பண்ணிட்டேன்.. நீ என்கிட்ட உன்னோட காதல் எனக்கு மட்டும்தான் சொன்ன போதுதான் எனக்கே ஓரளவு புருஞ்சுது... வாசு வருத்தமாக அவளிடம் பேசினான்..

உங்க மேல தப்பில்லை வாசு.. நான் ஆரம்பத்தில் சொல்லாமல் விட்டாலும் அப்புறமாக சொல்லி இருக்கனும்.. எல்லாம் நட்க்கனும்னு இருக்கு.. இனிமேல் இது எல்லாம் உங்ககிட்ட சொல்லாமல் விடக்கூடாது..

நிலா நினைவு வந்தவளாய்.. உங்ககிட்ட இன்னைக்கு காலையில் கிளம்பும் போது ஒரு லெட்டர் கொடுத்தேனே... அது எங்கே படிக்கவே இல்லைனு சொன்னீங்களே...

வாசுவும் அதற்கு பின்பே ஆமா நிலா.. நீ போயிட்டு இருக்கப்போ ஆறஅமர லெட்டரா படிப்பாங்க... அதை பாக்கெட்டில் போட்டுட்டு உன்னை தடுக்க ஓடி வந்துட்டேன்.. அதுக்கு அப்புறமாக நம்ம வீட்டுக்கு வந்த பின்னாடி தான் முக்கியமானது எல்லாம் நடந்துச்சு...

வாசு எதைச் சொல்கிறான் என தெரிந்த நிலா.. போங்க வாசு என அவனது தோளில் அடித்தாள்.. பார்றா.. வாசு அவளை கேலி செய்தவாறு அந்த லெட்டரை வெளியில் எடுத்தான்...

மயக்குவாள்...

 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top