கொலுசொலி மயக்குதடி - 16

Advertisement

வாசு தன் மோனநிலையில் இருந்து கலைந்தவாறு கதவை திறக்க போனான்... கதவைத் திறந்தவன் எதிரில் நின்றிருந்த பெண்ணைப் பார்த்ததும் தெரியாத பாவனையை முகத்தில் காட்டினான்...

ஹலோ சார் என்னோட பேரு மேக்னா... ஆப்போசிட் ப்ளாட்டுக்கு குடி வந்திருக்கேன்.. உள்ளே வரலாமா...?

எஸ் ப்ளீஸ்... வாசு நாகரீகமாக ஒதுங்கி வழிவிட்டான்.... அவளோடு உடன் ஒரு பெண்ணும் வர... முதல் பார்வையிலேயே வாசுவிற்கு உடன் வந்த பெண்ணை பிடிக்கவில்லை...

உட்காருங்க... என இருக்கையை காட்டியவன் அவனும் அமர்ந்து கொண்டான்....

எதிரில் இரண்டு பெண்களும் அமர்ந்தனர்... சார் இவங்க பேரு மகா... என்னோட ப்ளாட்டை ஷேர் பண்ணப் போறாங்க என அவளோடு வந்த பெண்ணை அறிமுகப் படுத்தினாள்...

ஹாய்..... என்றவாறு மகா அவனிற்கு கைகொடுக்க வரவும்... வாசு அவசரமாக வணக்கம் என கைகளை குவித்தான்...

அலட்சியமாக அவனைப் பார்த்து தலையை குலுக்கிக் கொண்டாள்... அதே நேரம் உள்ளே நுழைந்த சக்தி ஏற்கனவே இருந்த இரு பெண்களையும் பார்த்தவாறு வாசுவின் அருகில் அமர்ந்து கொண்டான்...

சக்தியைக் கண்ட மகா அவனை விழுங்குவதைப் போல பார்த்து வைக்க... சக்தி நெற்றிக் கண்ணை திறந்து அவளை முறைத்து வைத்தான்... அவள் பொசுங்காமல் இருந்ததே அதிசயம் தான்....

வாசுவோ நிலா எனவும்... சக்தியோ சிவா எனவும் ஒரே சமயத்தில் அவள் இருந்த அறையை நோக்கி குரல் கொடுத்தனர்...

நிலா வெளியே வரவும் அவளைக் கண்ட மற்ற இரு பெண்களுக்கும் வயிறு எரிந்தது.. மகா பொறாமையாக பார்த்தாள் என்றால் மேக்னாவோ அவளை வன்மத்துடன் பார்த்தாள்....

இது எதுவும் அறியாத நிலாவோ வாசுவின் அருகில் வந்து நின்று கொண்டாள்... அதைப் பார்த்த சக்தி பல்லைக் கடித்தான்...

என்ன சிவா நேத்தே சொல்லிட்டு போனேனே இன்னும் பேக் பண்ணலையா போ போய் லக்கேஜ் எடுத்துட்டு வா..

சக்தி அதிகாரமாய் அவளை ஏவவும்.. அதை ஒருவித அலட்சியத்துடன் பார்த்தாள் நிலா..

என்ன நான் சொல்லிட்டே இருக்கேன்.. நீ பாட்டுக்கு மரம் மாதிரி நிக்கற.. சக்தியின் பொறுமை காற்றில் பறக்கத் தொடங்கியது...

ஷ்ஷ்ஷ்.. சத்தம் போடாதே... காது எல்லாம் வலிக்குது... அவனை அடக்கியவாறு... வாசு இவங்க இரண்டு பேரும் யாரு என மிருதுவாக கேட்டாள்....

அவள் கேட்ட பின்பே புதிதாக இருந்தவர்களின் முன்னால் அவளை பேசியது நினைவிற்கு வந்தது... மொத்த கோபமும் வாசுவின் மேல் திரும்ப அவனை உறுத்து விழித்தான்...

சக்தியின் முறைப்பை கூட பார்க்காமல்.... இவங்க எதிர் ப்ளாட்டிற்கு குடி வந்திருக்காங்க... மேலே என்னனு கேட்கறதுக்குள்ள சக்தி வந்துட்டான் என்றவாறு அவனைத் திரும்பி பார்த்தான்..

சக்தி முறைப்பதை பார்த்த வாசு அதை சிறிதும் சட்டை செய்யாமல் திரும்பி நிலாவை பார்த்தான்...

ஓஓஓ.. அப்படியா வாசு... என்றவள் அவர்களை பார்த்து சொல்லுங்க என்ன விசயமாக எங்க வீட்டிற்கு வந்திருக்கீங்க என கேட்டாள்....

எங்க வீடு என நிலா சொல்லவும் சக்தியின் காதில் கொதிக்கும் எண்ணெய்யை கொட்டியது போல இருந்தது. அதற்கு பின்பே இருவரின் நெருக்கத்தையும் அவன் கவனித்தான்...

நேற்று நான் பேசியபிறகு வாசு குழப்பத்தில் தானே இருந்தான்... நிலா கூட பயந்திருந்தாள்... அதே வேகத்தோடு அவளை அழைத்துப் போயிருக்க வேண்டுமோ...நிலைமை நம் கைமீறிப் போய் விட்டதோ என தன் பாட்டுக்கு யோசனையில் இருந்தான்....

நிலா கேட்டதும் மேக்னா தான் வாயை திறந்தாள்... மேடம் நீங்க என அவளை கேள்வியாய் கேட்டாள்...

இவரோட வருங்கால மனைவி... கூடிய சீக்கிரமாக கல்யாணம் ஆகப் போகுது... வாசுவைப் பார்த்தபடியே காதலாய் நிலா பேசவும் சக்திக்கும் அவனோடு மேக்னாவுக்கும் பயங்கர அதிர்ச்சியாகி போனது...

அதற்கு பின்பு அடுத்த வார்த்தை மேக்னாவால் பேச முடியவில்லை... நீங்க இன்னும் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவே இல்லையே... நிலா நினைவு படுத்தினாள்..

பொறுமை இழந்த மகாவோ.. லுக் நாங்க இங்க வந்தபோது ஆப்போசிட்ல தமிழ்காரங்க இருக்காங்கனு அசோசியேட்ல சொன்னாங்க.. அதனால தான் பார்த்து ஒரு ஹாய் சொல்லிட்டு போலாம்னு வந்தோம்...

மகாவின் திமிரில் மற்றவருக்கு கோபம் வரவும்...ஷ்ஷ் அமைதியாக பேசு மகா என மேக்னா அவளைக் கண்டித்தாள்...

நிலா அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல்... நைஸ் டூ மீட் யூ போத்.. என்ன ஹெல்ப் வேணுனாலும் தயங்காமல் கேளுங்க... கண்டிப்பாக வாசுவோ இல்லை நானோ பண்ணுவோம்...

அவள் பேசி முடித்து காபி இல்லை டீ என்ன குடிப்பீங்க... அவள் பேசிக்கூட முடிக்கவில்லை... அதற்குள் மகா முந்திக் கொண்டு நாங்க க்ரீன்டீ தான் குடிப்போம் நோ தேங்க்ஸ்..நாங்க கிளம்பறோம் என எழுந்து விட்டாள்..

வேறு வழியின்றி மேக்னாவும் அவளோடு எழுந்தவாறு...ரொம்ப தேங்க்ஸ் நாங்க அப்புறமாக வரோம் என சொல்லிக் கொண்டு இருவரும் கிளம்பினார்கள்..

நிலா அவர்களை அனுப்பி விட்டு கதவைத் லாக் பண்ணி விட்டு வந்தாள்...

வாசு ரொம்ப டைம் ஆயிருச்சு... டைரக்டா ப்ரேக்பாஸ்ட் பண்ணிடறேன் இருபது நிமிஷத்துல சாப்பிடலாம்...

அவளிற்கு வாசு தலையை ஆட்டி சம்மதம் சொல்லவும்... நிலா கிச்சனிற்கு போய் விட்டாள்...

டேய் என்ன நடக்குது இங்கே... நான் சொன்னதை மதிக்காமல் இவள் பாட்டுக்கு சமைக்கறேன்னு கிச்சனிற்கு போறா... சக்தியோ சலங்கை கட்டாத குறையாக குதித்தான்....

வாசு சக்தியை பார்த்து... உனக்கும் நிலாக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததா.. நிலா உன்னை விரும்புவதாக அட்லீஸ்ட் திருமணத்திற்கு சம்மதம் என்றாவது சொன்னாளா... நிறுத்தி நிதானமாக கேட்டான்....

சக்தியால் பதில் சொல்ல முடியாமல் போகவும்... அவனின் அமைதியைக் கண்டு திருப்தியுடன் வாசுவே தொடர்ந்தான்...

என்கிட்ட நீ முழுதாக சொல்லாமல் மறைத்து நேற்று பேசியது நல்லதுதான்.. ஏன்னு கேட்கறியா..நேற்று தான் நாங்க இரண்டு பேரும் ஒருத்தர் மேல் மற்றவருக்கு உள்ள காதலை உணர்ந்து கொண்டோம்...

வாசுவின் பதிலால் சக்தியின் ஒட்டுமொத்த சக்தியும் வடிந்து போனது... மேலே பேச எதுவுமே இல்லை என்பதைப் போல தளர்ந்து போய் எழுந்து கொண்டான்...

அவனின் அமைதி வாசுவை ஏதோ செய்ய.. அவனது கையை பிடித்து மீண்டும் அமர வைத்தான்....

ஐம் சாரி டூ சே திஸ்.. அவள் நிலா மட்டும் தான்... என்னோட நிலா.. எனக்கு மட்டுமே சொந்தமானவள்.. இதை நீ புரிஞ்சுக்கனும்... அவளிற்கு உன்மேல் எந்த எண்ணமும் இல்லை... வாசு அழுத்தமாக உண்மையை புரிய வைக்க முயன்றான்...

சக்திக்கு அதற்கு மேல் எதுவும் கேட்க முடியாமல் போக கையை காட்டி போதும் என சைகை செய்தான்... வாசுவும் அதற்கு மேல் பேசவில்லை...

மௌனமே அங்கு சில நிமிடங்கள் நீடிக்க.. நிலா சமையலை முடித்து டைனிங் டேபிளின் மேலே வைத்தாள்...

வாங்க சக்தி சாப்பிடலாம்... வாசு வாங்க... நிலா முதலில் அவனை அழைப்பதை சக்தி அதிர்ச்சியாக பார்க்க.. வாசு இயல்பாய் பார்த்து புன்னகைத்தவாறு வீட்டிற்கு வந்தவங்களை தான் முதலில் சாப்பிட அழைக்க வேண்டும்...

வாசுவின் புரிதலை நிலா பெருமையாக பார்த்தாள்.. அவனோ அவளைப் பார்த்து கண்களை சிமிட்டி சரிதானா என கேட்கவும்.. சூப்பர் என கைகளால் காட்டினாள்.. இதை எல்லாம் சக்திதான் நம்ப முடியாமல் திகைப்பாக பார்த்தான்..

வாடா... அவனை கையோடு அழைத்தவாறு வாசு செல்ல நிலா அவர்களை தொடர்ந்தாள்...

இருவரும் அமரவும்.. தட்டை வைத்து தோசைகளை வைத்து சாம்பார் ஊற்றினாள்...

சக்தி மனமே இல்லாமல் வாயில் ஒருவாய் வைத்தான்.. அதற்குபின்பு இருவரும் சாப்பிடும் வேலையை தொடர்ந்தார்கள்...

சாப்பிட்டு கையை கழுவிய வாசு.. நிலாவை அமரச்சொல்லி அவனே பரிமாறினான்... வாசு அப்புறமாக சாப்பிடறேன் என நிலா மறுத்ததை எல்லாம் அவன் சட்டையே செய்யவில்லை..

அதற்கு மேலும் இருக்க முடியாமல் சக்தி கிளம்புவதாய் சொல்லிக் கொண்டு வேகமாக கிளம்பி விட்டான்..

இருவரும் அவனைப்பற்றி பிறகு பேசலாம் என நினைத்தவாறு விட்டுவிட்டனர்... நிலா மறுக்க மறுக்க மூன்று தோசைகளை சாப்பிட வைத்த பின்னரே வாசு விட்டான்...

சக்தி கிளம்பி போவதையே கோபத்துடன் பார்த்தபடியே பால்கனியில் நின்று கொண்டிருந்தாள் மகா...

மயக்குவாள்..
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கோகுலப்பிரியா டியர்

இதென்ன புதுத் தலைவலி
எதிர் பிளாட்காரிக்கு வாசுவை இத்தனை நாள் கண்ணுக்கு தெரியலையோ
இவளுக இரண்டு பேரும் என்ன நினைத்து இங்கே வந்தாளுங்க?
அந்த மகாவுக்கு எதுக்கு சக்தியைப் பார்த்து கோபமா வருது?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top