காதல் தீபம் ஏற்றினாள் அறிமுகம்

ஓம் நமச்சிவாய..


ஹாய் டியர்ஸ் நான் உங்கள் தோழி பிரியதர்ஷினி ரதீஸ்..


இன்று எனது பிறந்தநாள்.. இன்றுடன் நான் எழுத்து உலகத்திற்கு வந்து இரண்டு வருடம் முடிந்து விட்டது..


முழுதாக ஐந்து கதைகளை நிறைவு செய்துள்ளேன்..


1 என்னருகில் நீ இருந்தால்.

2 உன் நினைவே என் சுவாசமானது..

3 முள்ளில் மலர்ந்த காதல்.

4 மூங்கில் காற்றில் இசைக்கும் வீணை.

5 நெஞ்சுக்குள்ளே ஒரு சுகவேதனை.


தொடர்கதைகள்

1 நேச நெஞ்சத்தின் தேடல் சுகமானது onhold

2 மூங்கில் காற்றில் பாகம் 2 onhold

3 சைவமோ காதல் அசைவமோ onhold

4 அழைத்தால் வருவாயோ அன்பே

5 மலரே மன்னிப்பாயா ongoing

6 தேடல் ஒரு கண்ணில் ஊடல் ஒரு கண்ணில் [சுக வேதனை பாகம் 2]

6 காதல் தீபம் ஏற்றினாள்..


இதில் இடையில் நிறுத்தி வைக்கப்பட்ட கதைகள் 3 ம் புது வருட ஆரம்பத்தில் இருந்து ஆரம்பித்து முடித்தபின். பாகம் ஒன்றின் இரண்டாம் பாகத்தினை தொடர்ந்து எழுதுவேன்..


தற்பொழுது மலரே மன்னிப்பாயா முடிந்ததும்


தை திருநாள் அன்று காதல் தீபம் ஏற்றினாள்.. கதை ஆரம்பமாகும்..காதல் தீபம் ஏற்றினாள் அறிமுகம்..


உறவுகளின் சூழ்ச்சியால் மனம் நொந்து இனி இந்த உடலில் உயிரே தேவையில்லை என்று விரக்தி நிலையை அடைந்த பாவை வீட்டை விட்டு மரணத்தை தேடி வெளியேறுகிறாள்..


ஆனால் காலமோ அவள் ஆண்டு அனுபவிக்க வேண்டிய இன்ப துன்பங்கள் இவ்வுலகில் இன்னும் உள்ளது என்பதை அறிவுறுத்தியது..


தாய் தகப்பனை விபத்தில் இழந்து அதன் அதிர்ச்சி தாங்காமல் 28 வயதுக்கு ஏற்ற முதிர்ச்சி இல்லாத ஆண்மகன் அவன்..


அவன் அந்த ஊரில் அனைவரும் கூறும் வேலையை அவன் ஒருவனாகவே செய்து அவர்கள் கொடுக்கும் உணவை உண்டு விட்டு அவனுக்கு என அவன் அமைத்திருக்கும் ஓலை குடிசைக்குள் இரவை தனிமையில் கழிக்கும் அவனையும் காலன் அழைக்க இருந்ததோ..! என்னவோ?..வீதியில் ஓரத்தில் சென்ற அவனை வேகமாக வந்த லாரி ஒன்று இடிப்பது போன்று வந்ததை கண்டாள் பாவை..


எதில் எவ்வாறு தற்கொலை செய்து உயிரை மாய்க்கலாம் என்று சிந்தனையில் ஊர் விட்டு ஊர் வந்தவள் இக்காட்சியை கண்டதும் இலகிய பேதை மனம் கொண்டவள் அவனைக் காப்பாற்ற துடித்து எதையும் யோசிக்காமல் வீதியின் குறுக்கே ஓடி வந்து அவனை வீதியில் இருந்து சற்று தள்ளி விட்டு அவள் விலகுவதற்கு முன்பு. அந்த லாரியின் உருவில் வந்த காலன் அவளை இடித்து வீசிவிட்டே சென்றது..


அவள் யார்?.. அவள் எவ்வாறு பிழைத்தாள்?..


யார் ஹீரோ?..

அழகாக செல்ல ஆரம்பித்தவர்களின் வாழ்க்கையில் வீசிய புயல் யார்?. என்ன என்று தெரிந்து கொள்ள காத்திருங்கள் இன்னும் ஒரு மாத காலம் தைத்திருநாள் வரும் வரை
இன்று எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லிய அன்பு நட்புகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள். ..


தொடர்ந்து என்னுடன் இணைந்திருங்கள் நான் உங்கள் அன்பு தோழி பிரியதர்ஷினி ரதீஸ்.. ❤


 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , mallikamaniv[email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top